PT 4.7.5

திருவெள்ளக்குளத்தாய்! என் வினையை அகற்று

1312 வேடார்திருவேங்கடம் மேயவிளக்கே! *
நாடார்புகழ்வேதியர் மன்னியநாங்கூர் *
சேடார்பொழில்சூழ் திருவெள்ளக்குளத்தாய்! *
பாடாவருவேன் வினையாயினபாற்றே. (2)
PT.4.7.5
1312 ## veṭu ār * tiruveṅkaṭam meya vil̤akke *
nāṭu ār pukazh * vetiyar maṉṉiya nāṅkūr **
ceṭu ār pŏzhil cūzh * tiruvĕl̤l̤akkul̤attāy *
pāṭā varuveṉ * viṉai āyiṉa pāṟṟe-5

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1312. O lord who shine as a light on the Thiruvenkatam hills, you stay in the Thiruvellakkulam temple in Nāngur surrounded by thick groves where Vediyars live, praised by all in all lands. I come to you singing your praise. Remove all my karmā and save me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேடு ஆர் வேடர்கள் மலிந்த; திருவேங்கடம் திருமலையிலிருக்கும்; மேய விளக்கே! விளக்குப்போன்றவனே!; நாடு ஆர் நாடெங்கும் நிறைந்த; புகழ் புகழையுடைய; வேதியர் மன்னிய அந்தணர் வாழும்; சேடு ஆர் சூழ் தளிர்களால் சூழ்ந்த; பொழில் சோலைகளையுடைய; நாங்கூர் திருநாங்கூரின்; திருவெள்ளக் குளத்து திருவெள்ளக் குளத்தில்; ஆய்! இருப்பவனே!; பாடா உன்னைப் பாடிக்கொண்டு; வருவேன் வரும் அடியேனின்; வினை ஆயின பாவங்கள் அனைத்தையும்; பாற்றே சிதறடிக்க வேணும்
vĕdu ār filled with hunters; thiruvĕngadam on thiruvĕngadam mountain; mĕya eternally residing; vil̤akkĕ you who are self-illuminous!; nādu ār spread all over the nation; pugazh having glories; vĕdhiyar manniya nāngūr in thirunāngūr which is firmly inhabited by brāhmaṇas; sĕdu ār filled with sprouts; pozhil sūzh surrounded by gardens; thiruvel̤l̤akkul̤aththāy ŏh you who are mercifully residing in thiruvel̤l̤akkul̤am!; pādā ṣinging (about you); varuvĕn ī, who am coming; vinai āyina all the sins; pāṝu you should mercifully drive away (destroy).