PT 4.7.2

எம் தந்தையே! என் துன்பத்தைக் களை

1309 கொந்தார்துளவமலர்கொன்டு அணிவானே! *
நந்தாதபெரும்புகழ் வேதியர்நாங்கூர் *
செந்தாமரைநீர்த் திருவெள்ளக்குளத்துள்
எந்தாய்! * அடியேனிடரைக்களையாயே.
PT.4.7.2
1309 கொந்து ஆர் துளவ * மலர் கொண்டு அணிவானே *
நந்தாத பெரும் புகழ் * வேதியர் நாங்கூர் **
செந்தாமரை நீர்த் * திருவெள்ளக்குளத்துள்
எந்தாய் * அடியேன் இடரைக் களையாயே 2
1309 kŏntu ār tul̤ava * malar kŏṇṭu aṇivāṉe *
nantāta pĕrum pukazh * vetiyar nāṅkūr **
cĕntāmarai nīrt * tiruvĕl̤l̤akkul̤attul̤
ĕntāy * aṭiyeṉ iṭaraik kal̤aiyāye-2

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1309. O father, adorned with a thulasi garland strung together with bunches of flowers you stay in Thiruvellakkulam temple filled with beautiful ponds where red lotuses bloom, where Vediyars recite the Vedās, living with undying fame. I am your slave. Take away my troubles.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கொந்து ஆர் பூங்கொத்துக்கள் நிறைந்த; துளவ திருத்துழாய்; மலர் கொண்டு மலர்களின் மாலையை; அணிவானே! அணிந்தவனே!; நந்தாத அழிவில்லாத; பெரும் புகழ் பெரும் புகழையுடைய; வேதியர் அந்தணர் வாழும்; செந்தாமரை செந்தாமரைகளோடு கூடின; நீர் நீர்நிலைகளையுடைய; நாங்கூர் திருநாங்கூரின்; திருவெள்ளக்குளத்துள் திருவெள்ளக்குளத்தில் இருக்கும்; எந்தாய்! அடியேன் என் தந்தையே! அடியேனுடைய; இடரைக் களையாயே துன்பங்களைப் போக்கவேண்டும்
kondhu ār filled with flower bunches; thul̤avam thul̤asi-s; malar koṇdu stringing flowers as garland; aṇivānĕ you who are mercifully adorning (on the divine crown)!; nandhādha imperishable; perum inconceivable; pugazh having glories; vĕdhiyar best of brāhmaṇas, their; nāngūr in thirunāngūr; sendhāmarai having reddish lotus flowers; nīr surrounded by ponds; thiruvel̤l̤ak kul̤aththul̤ mercifully residing in thiruvel̤l̤ak kul̤am; endhāy ŏh my lord!; adiyĕn ī, who have no refuge, my; idarai sorrows (viś. connection with prakruthi (this body)); kal̤aiyāy you should mercifully sever.