PT 4.7.4

குவலயாபீடத்தின் தந்தத்தை முறித்தவனே! அருள்புரி

1311 கானார்கரிகொம்பது ஒசித்தகளிறே! *
நானாவகைநல்லவர் மன்னியநாங்கூர் *
தேனார்பொழில்சூழ் திருவெள்ளக்குளத்து
ளானாய் * அடியேனுக்கு அருள்புரியாயே.
PT.4.7.4
1311 kāṉ ār karik kŏmpu * -atu ŏcitta kal̤iṟe *
nāṉāvakai * nallavar maṉṉiya nāṅkūr **
teṉ ār pŏzhil cūzh * tiruvĕl̤l̤akkul̤attul̤
āṉāy * aṭiyeṉukku arul̤puriyāye-4

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1311. Strong as an elephant, you broke the tusks of the forest elephant Kuvalayābeedam. You stay in Thiruvellakkulam temple in Nāngur surrounded by groves dripping with honey where people of good families live. I am your slave. Give me your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கான் ஆர் காட்டிலே திரிந்த குவலயாபீட; கரிக் கொம்பு யானையின் கொம்பை; அது ஒசித்த முறித்த; களிறே! ஆண் யானையான எம்பெருமானே!; நானாவகை குலம் கல்வி போன்ற பலவகைகளிலும்; நல்லவர் மன்னிய நல்லவர்களாக வாழும்; தேன் ஆர் தேன் நிறைந்த; பொழில் சூழ் சோலைகளால் சூழந்த; நாங்கூர் திருநாங்கூரின்; திருவெள்ளக்குளத்துள் திருவெள்ளக்குளத்தில்; ஆனாய்! இருப்பவனே!; அடியேனுக்கு அடியேனுடைய; அருள் துன்பங்களைப் போக்கி; புரியாயே அருள்புரிய வேண்டும்
kān in the forest; ār youthful (and roaming around in the forest); kari kuvalayāpīdam-s; adhu kombu great, matching tusk; osiththa broke; kal̤iṛĕ ŏh wild elephant!; nānā vagai complete in all manner; nallavar distinguished, noble persons; manniya residing firmly; nāngūr in thirunāngūr; thĕn ār filled with beetles; pozhil by gardens; sūzh surrounded; thiruvel̤l̤ak kul̤aththul̤ mercifully present in thiruvel̤l̤ak kul̤am; ānāy ŏh you who are like a wild elephant!; adiyĕnukku towards me, the servitor; arul̤ puriyāy kindly shower your mercy.