PT 4.7.3

மலையால் மழை தடுத்தவனே! இடர்களை நீக்கு

1310 குன்றால்குளிர்மாரி தடுத்துஉகந்தானே! *
நன்றாயபெரும்புகழ் வேதியர்நாங்கூர் *
சென்றார்வணங்கும் திருவெள்ளக்குளத்துள்
நின்றாய்! * நெடியாய்! அடியேனிடர்நீக்கே.
PT.4.7.3
1310 kuṉṟāl kul̤ir māri * taṭuttu ukantāṉe *
naṉṟu āya pĕrum pukazh * vetiyar nāṅkūr **
cĕṉṟār vaṇaṅkum * tiruvĕl̤l̤akkul̤attul̤
niṉṟāy * nĕṭiyāy aṭiyeṉ iṭar nīkke-3

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1310. O Thirumāl, you carried Govardhanā mountain as an umbrella and protected the cows from the cold rain. You, the tall one, stay in Thiruvellakkulam temple in Nāngur where famous Vediyars live and recite the Vedās and devotees come to worship you. I am your slave. Take away my trouble.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்றால் மலையைக் கொண்டு; குளிர் மாரி குளிர் மழையை; தடுத்து உகந்தானே! தடுத்து மகிழ்ந்தவனே!; நன்று ஆய நல்ல பெருமைப்படத்தக்க; பெரும் புகழ் பெரும் புகழையுடைய; வேதியர் அந்தணர் மற்றும்; சென்றார் வணங்கும் அனைவரும் வணங்கும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருவெள்ளக்குளத்துள் திருவெள்ளக்குளத்தில்; நின்றாய்! நெடியாய்! நிற்கின்றவனே! எம்பெருமானே!; அடியேன் அடியேனுடைய; இடர் நீக்கே துன்பங்களைப் போக்கவேண்டும்
kunṛāl lifting up gŏvardhana mountain; kul̤ir māri rain which made everyone freeśe; thaduththu stopped; ugandhānĕ oh you who became joyful!; nanṛāya distinguished; perum pugazh great glories; vĕdhiyar nāngūr of brāhmaṇas in thirunāngūr; senṛār those who go; vaṇangum worshipping; thiruvel̤l̤ak kul̤aththul̤ in thiruvel̤l̤akkul̤am; ninṛāy oh you who are mercifully residing!; nediyāy ŏh you who are having inconceivable svarūpam, guṇam etc!; adiyĕn idar nīkku you should mercifully eliminate my sorrows.