Thiruppaḷḷiezhuchi

திருப்பள்ளியெழுச்சி

Thiruppaḷḷiezhuchi
Just like the Sage Vishvamitra Maharishi, who sought the assistance of Sri Rama to protect his Yagna and during their journey sang “kowsalyā suprajā rāmāpoorvā” to wake the Lord up from his divine sleep ('nithirai'), Thoṇḍaraḍippoḍi Āzhvār desired to wake up Sri Ranganāthan.

From Thirumālai prabandam, it is clear that Periyaperumāl made Thoṇḍaraḍippoḍi + Read more
ஸ்ரீ ராமபிரானை யாகத்தை காக்கும் பொருட்டு விசுவாமித்திர மகரிஷி அழைத்துப் போகையில், ஸ்ரீராமர் நித்திரை செய்யும் அழகை கண்டு அனுபவித்து, "கௌசல்யா சுப்ரஜா ராமா" என்று திருப்பள்ளி உணர்த்தியபடியே (எழுப்பியபடியே) தொண்டரடிப்பொடி ஆழ்வார் கைங்கரியம் (தொண்டு) புரிய ஆசைப்படுகிறார்.

ஆழ்வாரை, + Read more
Group: 1st 1000
Verses: 917 to 926
Glorification: Sri Ranganāthar (திருவரங்கன்)
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TPE 1

917 கதிரவன்குணதிசைக் சிகரம்வந்தணைந்தான்
கனவிருளகன்றது காலையம்பொழுதாய் *
மதுவிரிந்தொழுகினமாமலரெல்லாம்
வானவரரசர்கள் வந்துவந்தீண்டி *
எதிர்திசைநிறைந்தனரிவரொடும்புகுந்த
இருங்களிற்றீட்டமும்பிடியொடுமுரசும் *
அதிர்தலிலலைகடல்போன்றுளதெங்கும்
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (2)
917 ## கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான் *
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய் *
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் *
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி **
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த *
இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் *
அதிர்தலில் அலை கடல் போன்றுளது எங்கும் *
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (1)
917 ## katiravaṉ kuṇaticaic cikaram vantu aṇaintāṉ *
kaṉa irul̤ akaṉṟatu kālai am pŏzhutāy *
matu virintu ŏzhukiṉa mā malar ĕllām *
vāṉavar aracarkal̤ vantu vantu īṇṭi **
ĕtirticai niṟaintaṉar ivarŏṭum pukunta *
iruṅ kal̤iṟṟu īṭṭamum piṭiyŏṭu muracum *
atirtalil alai-kaṭal poṉṟul̤atu ĕṅkum *
araṅkattammā pal̤l̤i ĕzhuntarul̤āye (1)

Ragam

Būpāḷa / பூபாள

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

917. When the sun rises in the east from the peak of the mountain and darkness has gone and it is morning and all the beautiful flowers that drip honey bloom, the gods of the sky all come before you to worship you. Elephants, male and female, come and, as drums are beaten, it seems the sound of a roaring ocean spreads everywhere. O dear god of Srirangam, wake up and give us your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரங்கத்தம்மா! திருவரங்கத்து எம்பெருமானே!; கதிரவன் ஸூரியன்; குணதிசை கிழக்குத் திக்கிலே; சிகரம் வந்து மலையின் உச்சியிலே வந்து; அணைந்தான் உதித்தான்; கன இருள் அடர்ந்திருந்த இருள்; அகன்றது நீங்கியது; காலை அம் அழகிய காலை; பொழுதாய் பொழுது வர; மா மலர் எல்லாம் சிறந்த புஷ்பங்களெல்லாம்; மது விரிந்து ஒழுகின பூத்து தேன் துளிர்க்கின்றது; வானவர் அரசர்கள் தேவர்களும் அரசர்களும்; வந்து வந்து ஈண்டி திரண்டு வந்து உன்னை வணங்க; எதிர்திசை தெற்குத் திக்கிலே; நிறைந்தனர் நிறைந்து நின்றார்கள்; இவரொடும் இவர்களோடு; புகுந்த கூடவந்த வாஹனங்களும்; இருங் களிற்று பெரிய ஆண்யானை; ஈட்டமும் கூட்டங்களும்; பிடியொடு பெண் யானை கூட்டங்களும்; முரசும் பேரி வாத்யங்களும்; அதிர்தலில் சப்திக்கும்போது; எங்கும் எல்லா இடங்களிலும்; அலைகடல் அலைகளையுடைய கடலின் கோஷத்தை; போன்றுளது போன்று இருந்தது; பள்ளி நீ படுக்கைய விட்டு; எழுந்தருளாயே எழுந்து அருள்வாயாக
arangaththammā ŏh lord/master who is lying down in srīragangam!; kathiravan sun; guṇadhisai in the eastern side; chikaram at the peak (on the udhayagiri); vandhu aṇainthān arrived and positioned himself; kana irul̤ heavy darkness (of the night); aganṛathu dispelled and driven out; am beautiful; kālai pozhuthu āy as the morning arrived; mā malar ellām all the best flowers; virinthu blossomed; madhu ozhugina lots of honey dripped; vānavar dhĕvas; arasargal̤ kings; vandhu vandhu arriving quickly pushing each other; īṇdi in groups; ethirdhisai south side where bhagavān’s divine vision will reach; niṛainthanar stood there filling the entire place; ivarodum pugundha arrived along with them; iru kal̤iṛu īttamum Big groups of male elephants (which are the vehicles for some the dhĕvas, kings, etc); pidiyodu (Big groups of) female elephants; murasum musical bands; adhirthalil when this crowd makes noise (happily); engum in all directions; alai kadal pŏnṛu ul̤athu alai (waves). resembles the sound of ocean with fierce waves; (ādhalāl) pal̤l̤i ezhundhu arul̤āyĕ (ṭhus,) you kindly wake up and give your blessings

TPE 2

918 கொழுங்கொடிமுல்லையின்கொழுமலரணவிக்
கூர்ந்ததுகுணதிசைமாருதமிதுவோ *
எழுந்தனமலரணைப் பள்ளிகொள்ளன்னம்
ஈன்பனிநனைந்ததமிருஞ்சிறகுதறி
விழுங்கியமுதலையின்பிலம்புரைபேழ்வாய்
வெள்ளெயிறுறவதன்விடத்தனுக்கனுங்கி *
அழுங்கியவானையினருந்துயர்கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.
918 கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக் *
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ *
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம் *
ஈன்பணி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி **
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய் *
வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி *
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த *
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (2)
918 kŏzhuṅkŏṭi mullaiyiṉ kŏzhu malar aṇavik *
kūrntatu kuṇa-ticai mārutam ituvo *
ĕzhuntaṉa malar aṇaip pal̤l̤ikŏl̤ aṉṉam *
īṉpaṇi naṉainta tam iruñ ciṟaku utaṟi **
vizhuṅkiya mutalaiyiṉ pilam purai pezhvāy *
vĕl̤ ĕyiṟu uṟa ataṉ viṭattiṉukku aṉuṅki *
azhuṅkiya āṉaiyiṉ aruntuyar kĕṭutta *
araṅkattammā pal̤l̤i ĕzhuntarul̤āye (2)

Ragam

Būpāḷa / பூபாள

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

918. The breeze from the east blows and spreads the fragrance of mullai flowers blooming on vines. The swans sleeping on flowers wake up and shake the wet dew from their wings. O lord, when the elephant Gajendra was suffering and called you in his distress, you came and saved him, killing the crocodile whose mouth with white teeth was as deep as a cave. O dear god of Srirangam, wake up and give us your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குண திசை மாருதம் கிழக்குக் காற்றானது; கொழுங்கொடி செழுமையாக வளர்ந்துள்ள; முல்லையின் முல்லைக் கொடியின்; கொழு மலர் அழகிய மலர்களை; அணவி தழுவிக்கொண்டு; கூர்ந்தது இதுவோ இதோ வீசுகின்றது; பள்ளிகொள் உறங்குகின்ற; அன்னம் ஹம்ஸப் பறவைகள்; ஈன்பனி கடும் பனியாலே; நனைந்த தம் நனைந்த தங்களுடைய; இருஞ் சிறகு அழகிய இறகுகளை; உதறி உதறிக் கொண்டு; மலர் அணை உறக்கத்திலிருந்து; எழுந்தன எழுந்தன; விழுங்கிய காலைக் கடித்து விழுங்கின; முதலையின் முதலையின்; பிலம் புரை குகை போன்ற; பேழ்வாய் பெரிய வாயிலுள்ள; வெள் வெளுத்த; எயிறு உற கோரப்பற்கள் ஊன்ற; அதன் முதலையினுடைய; விடத்தினுக்கு அனுங்கி பல்லின் விஷத்தால்; அழுங்கிய வலி ஏற்பட்ட; ஆனையின் கஜேந்திரனின்; அருந்துயர் பெரும் துயரத்தை; கெடுத்த போக்கியருளினவனே!; அரங்கத்தம்மா! ஸ்ரீரங்கநாதனே!; பள்ளி எழுந்தருளாயே பள்ளி எழுந்தருளாயே
guṇadhisai mārutham Wind from the east; kozhu kodi Well nourished creeper; mullai jasmine plant; kozhu malar beautiful flowers; aṇavi touching; ithuvŏ this; kūrnthathu blowing; malar aṇai flower-bed; pal̤l̤i kol̤ sleeping; annam swans; īn pani nanaintha became wet due to the falling snow/fog (like rain); tham their; iru chiṛagu beautiful wings; udhaṛi shaking; ezhundhana waking up; vizhungiya swallowed/held (the legs of elephant); mudhalaiyin crocodile’s; pilamburai like a cave; pĕzhvāy big mouth; vel̤l̤eyiṛu uṛa bitten by white and sharp/hard teeth; athan that elephant’s; vidaththinukku for the poison (from those teeth); anungi azhungiya suffered greatly in pain; ānaiyin elephant’s (gajĕndhrāzhwān’s); aru thuyar big sorrow; keduththa dispelled; arangaththammā ŏh lord/master who is lying down in srīragangam!; (ādhalāl) pal̤l̤i ezhundhu arul̤āyĕ (ṭhus,) you kindly wake up and give your blessings

TPE 3

919 சுடரொளிபரந்தனசூழ்திசையெல்லாம்
துன்னியதாரகைமின்னொளிசுருங்கி *
படரொளிபசுத்தனன்பனிமதியிவனோ
பாயிருளகன்றது, பைம்பொழில்கமுகின் *
மடலிடைக்கீறிவண்பாளைகள்நாற
வைகறைகூர்ந்ததுமாருதமிதுவோ *
அடலொளிதிகழ்தருதிகிரியந்தடக்கை
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.
919 சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் *
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி *
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ *
பாயிருள் அகன்றது பைம் பொழில் கமுகின் **
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற *
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ *
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை *
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (3)
919 cuṭar-ŏl̤i parantaṉa cūzh ticai ĕllām *
tuṉṉiya tārakai miṉṉŏl̤i curuṅki *
paṭar ŏl̤i pacuttaṉaṉ paṉi mati ivaṉo *
pāyirul̤ akaṉṟatu paim pŏzhiṟ kamukiṉ **
maṭaliṭaik kīṟi vaṇ pāl̤aikal̤ nāṟa *
vaikaṟai kūrntatu mārutam ituvo *
aṭal-ŏl̤i tikazh taru tikiri am taṭakkai *
araṅkattammā pal̤l̤i ĕzhuntarul̤āye (3)

Ragam

Būpāḷa / பூபாள

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

919. The sun with its rays makes all the directions bright, the darkness goes away, dawn appears, the bright light of the moon and the dew go away, the buds on the branches of the kamuhu trees in the green groves split open spreading their fragrance and the morning breeze blows. O dear god of Srirangam with a shining discus in your strong hand, wake up and give us you grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சூழ் திசை எல்லாம் எல்லா இடங்களிலும்; சுடர் ஒளி பரந்தன ஸூர்ய ஒளி பரவி விட்டன; துன்னிய ஆகாசத்தில்; தாரகை நக்ஷத்திரங்களின்; மின்னொளி பிரகாசமான ஒளியானது; சுருங்கி மங்கியதும் இன்றி; படரொளி மிக்க ஒளியையுடைய; பனி மதி இவனோ குளிர்ந்த சந்திரனும்; பசுத்தனன் ஒளி மழுங்கினான்; பாயிருள் பரந்த இருட்டானது; அகன்றது நீங்கிற்று; பைம் இந்த விடியற்காற்றானது பசுமை தங்கிய; பொழில் சோலைகளிலுள்ள; கமுகின் பாக்குமரங்களின்; மடலிடைக் கீறி மடலைக்கீற; வண் பாளைகள் அழகிய பாளைகளானவை; நாற மணம் கமழ; வைகறை கூர்ந்தது! அந்த மணத்தோடு கூடின; மாருதம் இதுவோ காற்றானது வீசுகின்றது; அடல் பெருத்த பலத்தையுடைய; ஒளி திகழ் தரு பிரகாசமான; திகிரி அம் அழகிய சக்கரத்தை; தடக்கை கையிலுடையவனே!; அரங்கத்தம்மா! ஸ்ரீரங்கநாதனே!; பள்ளி எழுந்தருளாயே பள்ளி எழுந்தருளாயே
sūzhdhisai ellām everywhere (in all directions); sudar ol̤i sun’s rays; paranthana have spread/permeated; thunniya closely located (in the sky); thārakai stars; min ol̤i the bright light/shine; surungi reduced/diminished; padar ol̤i well spread light (of); pani madhi ivan even this cool moon; pasuththanan lost his shine; pāy irul̤ well spread darkness; aganṛathu removed; vaigaṛai mārutham idhu this early morning breeśe; pai greenish; pozhil gardens/groves; kamugin betel-nut trees; madalidaik kīṛi cutting through the leaves (flaps); vaṇ pāl̤aigal̤ nāṛa Beautiful spathes giving out nice fragrance; kūrnthathu blowing (carrying that fragrance); adal very strong; ol̤i thigazhtharu radiantly shining; thigiri thiruvāzhiyāzhwān (chakkaraththāzhvār sudharasana chakram); am thada kai (the one with) beautiful big divine hand; arangaththammā ŏh lord/master who is lying down in srīragangam!; (ādhalāl) pal̤l̤i ezhundhu arul̤āyĕ (ṭhus,) you kindly wake up and give your blessings

TPE 4

920 மேட்டிளமேதிகள்தளைவிடுமாயர்கள்
வேய்ங்குழலோசையும்விடைமணிக்குரலும் *
ஈட்டியவிசைதிசைபரந்தனவயலுள்
இரிந்தினசுரும்பினம், இலங்கையர்குலத்தை *
வாட்டியவரிசிலைவானவரேறே!
மாமுனிவேள்வியைக்காத்து * அவபிரதம்
ஆட்டியவடுதிறல்அயோத்தியெம்மரசே!
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.
920 மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் *
வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும் *
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் *
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை **
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே *
மா முனி வேள்வியைக் காத்து * அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே *
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (4)
920 meṭṭu il̤a metikal̤ tal̤ai viṭum āyarkal̤ *
veyṅkuzhal ocaiyum viṭai maṇik kuralum *
īṭṭiya icai ticai parantaṉa vayalul̤ *
irintaṉa curumpiṉam ilaṅkaiyar kulattai **
vāṭṭiya varicilai vāṉavar eṟe *
mā muṉi vel̤viyaik kāttu * avapiratam
āṭṭiya aṭu tiṟal ayotti ĕm arace *
araṅkattammā pal̤l̤i ĕzhuntarul̤āye (4)

Ragam

Būpāḷa / பூபாள

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

920. The cowherds untie their buffaloes for grazing and the music of their bamboo flutes and the sound of the cowbells spread in all directions as swarms of bees fly all over the fields. You who carry a bow, the strong king of Ayodhya, bull among the gods, destroyed the clan of Rakshasās in Lankā and you, the strong one, helped the pure sages do sacrifices and protected them. O dear god of Srirangam, wake up and give us your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மேட்டு இள உயரமும் இளமையும் உடைய; மேதிகள் எருமைகளை; தளை விடும் அவிழ்த்து விடுகிற; ஆயர்கள் இடையர்களின்; வேய்ங்குழல் புல்லாங்குழலின்; ஓசையும் ஓசையும்; விடை எருதுகளின் கழுத்திலுள்ள; மணிக் குரலும் மணியின் ஓசையும்; ஈட்டிய இசை இவ்விரண்டும் கூடின ஓசை; திசை எல்லா திசையிலும்; பரந்தன பரவி விட்டது; வயலுள் வயலிலுள்ள; சுரும்பினம் வண்டுகளின் கூட்டம்; இரிந்தின ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின; இலங்கையர் குலத்தை அசுரகுலத்தை; வாட்டிய உருவழித்த; வரிசிலை அழகிய சார்ங்கத்தையுடைய; வானவர் ஏறே! தேவாதி தேவனே!; மாமுனி விச்வாமித்ர முனிவரின்; வேள்வியை காத்து யாகத்தை காத்து; அவபிரதம் அவப்ருதஸ்நானம்; ஆட்டிய செய்வித்தருளினவனே!; அடு திறல் விரோதிகளை அழிக்கவல்ல பலமுடைய; அயோத்தி எம் அரசே! அயோத்திக்கு அரசனே!; அரங்கத்தம்மா! ஸ்ரீரங்கநாதனே!; பள்ளி எழுந்தருளாயே பள்ளி எழுந்தருளாயே
mĕdu il̤a mĕdhigal̤ tall and young buffaloes; thal̤ai vidum letting them (buffaloes) loose (for graśing); āyargal̤ cowherds (who are blowing); vĕynguzhal ŏsaiyum the sound/music from the flute; maṇi (of the) bells; kuralum sound; īttiya isai the sound of the two (cowherds flutes and bells tied on the buffaloes); dhisai paranthana spread in all directions; vayalul̤ in the green-fields; surumbu inam group of beetles; irinthana started with cheerful sound; ilangiyar kulaththai rākshasa clan; vāttiya destroyed; vari silai (one who holds) Beautiful bow named sārngam; vānavar ĕṛĕ! dhĕvādhi dhĕva! ṅod of gods!; māmuni visvāmithra maharishi; vĕl̤viyai yāga – fire sacrifice; kāththu protected; avabiratham āttiya facilitated the holy dip/bathing after successful completion of the yāgam; adu thiṛal one who has great valour which can destroy enemies; ayŏththi emmarasĕ ṃy lord! due to you are being the ruler of ayŏdhyā; arangaththammā ŏh lord/master who is lying down in srīragangam!; pal̤l̤i ezhundhu arul̤āyĕ (ṭhus,) you kindly wake up and give your blessings

TPE 5

921 புலம்பினபுட்களும்பூம்பொழில்களின்வாய்
போயிற்றுக்கங்குல்புகுந்ததுபுலரி *
கலந்ததுகுணதிசைகனைகடலரவம்
களிவண்டுமிழற்றியகலம்பகம்புனைந்த *
அலங்கலந்தொடையல்கொண்டடியிணைபணிவான்
அமரர்கள் புகுந்தனராதலிலம்மா! *
இலங்கையர்கோன்வழிபாடுசெய்கோயில்
எம்பெருமான்! பள்ளியெழுந்தருளாயே.
921. புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய் *
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி *
கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம் *
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த **
அலங்கல் தொடையல் கொண்டு அடியிணை பணிவான் *
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா *
இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில் *
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. (5)
921 .pulampiṉa puṭkal̤um pūm pŏzhilkal̤iṉ vāy *
poyiṟṟuk kaṅkul pukuntatu pulari *
kalantatu kuṇaticaik kaṉaikaṭal aravam *
kal̤i vaṇṭu mizhaṟṟiya kalampakam puṉainta **
alaṅkal tŏṭaiyal kŏṇṭu aṭiyiṇai paṇivāṉ *
amararkal̤ pukuntaṉar ātalil ammā *
ilaṅkaiyarkoṉ vazhipāṭu cĕy koyil *
ĕmpĕrumāṉ pal̤l̤i ĕzhuntarul̤āye. (5)

Ragam

Būpāḷa / பூபாள

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

921. Birds chirp in the groves blooming with flowers, the darkness goes away and morning arrives. In the east, the ocean roars and the gods in the sky carry many flower garlands swarming with bees and come to garland you and worship your feet. This (Srirangam) is the temple where Vibhishanā, the king of Lankā, worshiped you. O dear god, wake up and give us your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூம் பூத்திருக்கும்; பொழில்களின் வாய் சோலைகளிலுள்ள; புட்களும் பறவைகளும்; புலம்பின ரீங்காரம் செய்கின்றன; போயிற்றுக் கங்குல் இரவானது கழிந்தது; புகுந்தது புலரி காலைநேரம் வந்தது; குணதிசை கிழக்கு திசையிலே; கனைகடல் சப்திக்கும் கடலின்; அரவம் கலந்தது ஒசை பரவியது; களி தேனைப்பருகிக் களிக்கும்; வண்டு வண்டுகள்; மிழற்றிய சப்திக்கின்ற; கலம்பகம் பலவகைப் பூக்களாலே; புனைந்த தொடுக்கப்பட்ட; அலங்கல் அம் தொடையல் அழகிய மாலைகளை; கொண்டு எடுத்துக் கொண்டு; அடியிணைபணிவான் உன் திருவடிகளில் வணங்க; அமரர்கள் புகுந்தனர் தேவர்கள் வந்து நின்றனர்; ஆதலில் அம்மா! ஆகையாலே ஸ்வாமியே; இலங்கையர்கோன் இலங்கை அரசன் விபீஷணன்; வழிபாடு செய் வணங்கிய ஸ்ரீரங்கத்தில்; கோயில் இருப்பவனே!; எம்பெருமான்! ஸ்ரீரங்கநாதனே!; பள்ளி எழுந்தருளாயே பள்ளி எழுந்தருளாயே
blossomed; pozhilgal̤in vāy in the gardens/groves; putkal̤um birds; pulambina (woke up and) made cheerful sounds; kangul the night; pŏyiṝu gone; pulari early morning time; pugunthathu arrived; guṇadhisai in the eastern direction; kanai noisy; kadal sea/ocean; aravam sound; kalanthathu spread; kal̤i joyful (due to drinking of honey); vaṇdu beetles; mizhaṝiya by the humming sound; kalambagam punaintha prepared with different flowers; am beautiful; alangal thodaiyal koṇdu having the garlands; amarargal̤ dhĕvas; adi iṇai paṇivān to worship (your) divine lotus feet; pugunthanar arrived; āthalil thus; ammā ṃaster of all!; ilangaiyarkŏn vazhipādu sey kŏyil temple served by vibhishaṇāzhwān who is the king of lankā; emperumān ŏh my lord/master!; pal̤l̤i ezhundhu arul̤āyĕ (ṭhus,) you kindly wake up and give your blessings

TPE 6

922 இரவியர்மணிநெடுந்தேரொடுமிவரோ!
இறையவர்பதினொருவிடையருமிவரோ *
மருவியமயிலினனறுமுகனிவனோ
மருதரும்வசுக்களும்வந்துவந்தீண்டி *
புரவியோடாடலும்பாடலும் தேரும்
குமரதண்டம்புகுந்தீண்டியவெள்ளம் *
அருவரையனையநின்கோயில்முன்னிவரோ
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.
922 இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ *
இறையவர் பதினொரு விடையரும் இவரோ *
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ *
மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி **
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் *
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் *
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ *
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (6)
922 iraviyar maṇi nĕṭun terŏṭum ivaro *
iṟaiyavar patiṉŏru viṭaiyarum ivaro *
maruviya mayiliṉaṉ aṟumukaṉ ivaṉo *
marutarum vacukkal̤um vantu vantu īṇṭi **
puraviyŏṭu āṭalum pāṭalum terum *
kumara-taṇṭam pukuntu īṇṭiya vĕl̤l̤am *
aruvarai aṉaiya niṉ koyil muṉ ivaro *
araṅkattammā pal̤l̤i ĕzhuntarul̤āye (6)

Ragam

Būpāḷa / பூபாள

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

922. Is this the host of suns riding on tall chariots decorated with bells? Is it the troupe of eleven Rudras riding on bulls? Is that the six faced-god riding a beautiful peacock? All these gods and the celestial physicians and the Vasus are here, while the other divine gods come on horses and chariots singing and dancing. The crowd of gods is like a flood and they have gathered in front of your temple that looks like a huge mountain. O dear god of Srirangam, wake up and give us your grace

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மணி நெடு பெரிய சிறந்த; தேரொடும் தேரோடுகூடின; இரவியர் பன்னிரண்டு ஆதித்யர்கள்; இவரோ! இவர்களோ; இறையவர் உலகத்தை நிர்வஹிக்கும்; பதினொரு பதினொரு; விடையரும் இவரோ! ருத்ரர்களிவர்களோ; மருவிய மயிலினன் மயிவாஹனனான; அறுமுகன் இவனோ! முருகன் இவனோ; மருதரும் மருத் கணங்களான நார்பத்தொன்பது பேர்களும்; வசுக்களும் எட்டு வசுக்களும் ஆகிய அனைவரும்; வந்து வந்து ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு; ஈண்டி நெருங்கி வர; புரவியோடு வாஹனங்களான குதிரைகளும்; தேரும் ரதங்களும்; ஆடலும் பாடலும் பாட்டும் கூத்துமாய்; குமர தண்டம் கணக்கிடமுடியாதஅளவு; புகுந்து தேவர்கள் கூட்டம் புகுந்து; வெள்ளம் வெள்ளமென; ஈண்டிய கூடியிருக்கும் கூட்டமானது; அருவரை பெரிய மலை; அனைய நின் போன்ற உன்னுடைய; கோயில் முன் கோயிலில் உன் கண்; இவரோ எதிரில் இதோ நிற்கின்றனர்; அரங்கத்தம்மா! ஸ்ரீரங்கநாதனே!; பள்ளி எழுந்தருளாயே பள்ளி எழுந்தருளாயே
maṇi best; nedu big; thĕrodum with the chariot; iraviyar dhvādhasa (12) ādhithyas (suns); iṛaiyavar the contoller of samsāris; padhinoru vidaiyar ĕkādhasa (11) rudhras; maruviya most suitable; mayilinan one who has peacock as his vehicle; aṛumugan (the six headed) subrahmaṇya; marutharum the 49 marudhas (wind dhĕvathās); vasukkal̤um the eight vasus; vandhu vandhu arriving to the front pushing each other; īṇdī staying close together in a group; puraviyŏdu thĕrum (their – dhĕvas) chariots with the horses; pādalum ādalum singing and dancing; kumarathaṇdam pugundhu groups and groups of dhĕvas arrived; īṇdiya vel̤l̤am closely positioned crowd (like a flood of water); aru varai anaiya like a big mountain; kŏyil in the temple; ninmun in front of your divine vision; ivarŏ, ivanŏ they are present; arangaththammā ŏh my lord/master lying down in srīrangam!; pal̤l̤i ezhundhu arul̤āyĕ (ṭhus,) you kindly wake up and give your blessings

TPE 7

923 அந்தரத்தமரர்கள்கூட்டங்களிவையோ
அருந்தவமுனிவரும்மருதருமிவரோ *
இந்திரனானையும்தானும்வந்திவனோ
எம்பெருமானுன்கோயிலின்வாசல் *
சுந்தரர்நெருக்கவிச்சாதரர்நூக்க
இயக்கரும்மயங்கினர்திருவடிதொழுவான் *
அந்தரம்பாரிடமில்லைமற்றிதுவோ
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.
923 .அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ *
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ *
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ *
எம்பெருமான் உன் கோயிலின் வாசல் **
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க *
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் *
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ *
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (7)
923 .antarattu amararkal̤ kūṭṭaṅkal̤ ivaiyo *
aruntava muṉivarum marutarum ivaro *
intiraṉ āṉaiyum tāṉum vantu ivaṉo *
ĕmpĕrumāṉ uṉ koyiliṉ vācal **
cuntarar nĕrukka viccātarar nūkka *
iyakkarum mayaṅkiṉar tiruvaṭi tŏzhuvāṉ *
antaram pār iṭam illai maṟṟu ituvo *
araṅkattammā pal̤l̤i ĕzhuntarul̤āye (7)

Ragam

Būpāḷa / பூபாள

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

923. Is this the crowd of gods from heaven? Is this the throng of sages doing penance and the medicine men of the gods? Is that Indra coming on his elephant Airāvata? In front of your temple, Gandharvas, Vidyadharas and Apsarases are all gathered together to worship you and it seems as if there is no space left in the sky or on the earth. O dear god of Srirangam, wake up and give us your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம்பெருமான் எம்பெருமானே; உன் கோயிலின் வாசல் உன் கோயிலின் வாசலிலே; இந்திரன் தானும் இவனோ! இந்திரனும்; ஆனையும் அவன் வாஹனமான ஐராவத யானையும்; வந்து வந்ததும் அன்றி; அந்தரத்து அண்டத்துக்குள்; அமரர்கள் இருக்கும் தேவர்களும்; இவையோ! இவர்களுடைய; கூட்டங்கள் பரிவாரங்களும்; மருதரும் இவரோ! மருத்கணங்களும்; அருந்தவ தபஸ்விகளான; முனிவரும் ஸநகாதி மஹர்ஷிகளும்; இயக்கரும் யக்ஷர்களும்; சுந்தரர் நெருக்க கந்தர்வர்களும் நெருக்கவும்; விச்சாதரர் நூக்க வித்யாதரர்கள் தள்ளவும்; திருவடி தொழுவான் உன் திருவடிகளை வணங்க; மயங்கினர் வந்து மயங்கி நின்றனர்; அந்தரம் பார் ஆகாசமும் பூமியும்; இடம் இல்லை இடைவெளி இல்லாமல்; மற்று இதுவோ! இருக்கிறது; அரங்கத்தம்மா! ஸ்ரீரங்கநாதனே!; பள்ளி எழுந்தருளாயே பள்ளி எழுந்தருளாயே
emperumān my lord; un(a) kŏyilin vāsal at your divine temple’s entrance; indhiran thānum indhran (the leader of dhĕvas); ānaiyum airāvatham (his elephant vehicle); vandhu not only he has arrived; antharaththu amarargal̤ dhĕvas who reside in the svarga lŏkam (worldly heaven); kūttangal̤ their vehicles, family, assistants, etc; aru thavam munivarum very saintly persons such as sanaka, sanandhana, etc., rishis; marutharum maruthas with their assistants, etc; iyakkarum yakshas; sundharar nerukkavum gandharvas closely standing; vichchādharar nūkka vidhyādharas pushing each other (in the crowd); thiruvdi thozhuvān mayanginar standing there mesmeriśed in anticipation of worshipping your lotus feet; antharam sky; pār bhūmi (earth/land); idam illai no space; arangaththammā ŏh my lord/master lying down in srīrangam!; pal̤l̤i ezhundhu arul̤āyĕ (ṭhus,) you kindly wake up and give your blessings

TPE 8

924 வம்பவிழ்வானவர்வாயுறைவழங்க
மாநிதிகபிலையொண்கண்ணாடிமுதலா *
எம்பெருமான் படிமக்கலம்காண்டற்கு
ஏற்பனவாயினகொண்டுநன்முனிவர் *
தும்புருநாரதர்புகுந்தனரிவரோ
தோன்றினனிரவியும்துலங்கொளிபரப்பி *
அம்பரதலத்தில்நின்றகல்கின்றதிருள்போய்
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.
924 வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க *
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா *
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு *
ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர் **
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ *
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி *
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய் *
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (8)
924 vampavizh vāṉavar vāyuṟai vazhaṅka *
māniti kapilai ŏṇ kaṇṇāṭi mutalā *
ĕmpĕrumāṉ paṭimakkalam kāṇṭaṟku *
eṟpaṉa āyiṉa kŏṇṭu naṉ muṉivar **
tumpuru nāratar pukuntaṉar ivaro *
toṉṟiṉaṉ iraviyum tulaṅku ŏl̤i parappi *
ampara talattil ṉiṉṟu akalkiṉṟatu irul̤ poy *
araṅkattammā pal̤l̤i ĕzhuntarul̤āye (8)

Ragam

Būpāḷa / பூபாள

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

924. Some gods in the sky arrive with fragrances, some carry huge pots of treasure and shining mirrors and come to give them to you. Good sages bring things suitable for you to wear and Nārada comes with his Thumburu veena to play music. The sun god rises, spreading his bright light and darkness disappears from the sky. O dear god of Srirangam, wake up and give us your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வழங்க தங்களுக்கு ஸமர்ப்பிப்பதற்காக; வாயுறை மணம் மிக்க அறுகம்புல்; மாநிதி சிறந்த சங்கநிதி பத்மநிதி ஆகியவைகளும்; வம்பவிழ் மணம் மிகுந்த; வானவர் தேவர்கள்; காமதேனுவும் காமதேனுவுடன் வந்துள்ளனர்; எம்பெருமான் எம்பெருமானே! தாங்கள்; காண்டற்கு பார்ப்பதற்கு; கண்ணாடி ஓளி பொருந்திய கண்ணாடி; முதலா முதலியனவும்; ஏற்பன ஆயின பூஜைக்கு வேண்டிய; படிமக்கலம் கொணடு பொருள்களுடனும்; நன் முனிவர் சிறந்த முனிவர்களும்; தும்புரு தும்புரு; நாரதர் நாரதரும் இசைக்கருவிகளுடன்; புகுந்தனர் வந்திருக்கிறார்கள்; இவரோ! இவற்றைதவிர; துலங்கு தனது அளவு கடந்த; ஒளி பரப்பி ஒளியை பரப்பி கொண்டு; இரவியும் சூரியனும்; தோன்றினன் தோன்றியுள்ளான்; அம்பர தலத்தில் நின்று ஆகாசத்திலிருந்து; இருள்போய் இருளும்; அகல்கின்றது நீங்கிப்போயிற்று; அரங்கத்தம்மா! ஸ்ரீரங்கநாதனே!; பள்ளி எழுந்தருளாயே பள்ளி எழுந்தருளாயே
vazhanga to submit to your highness; vāyuṛai aṛugampul (bermuda grass); the best; nidhi sanga nidhi, padhma nidhi, etc – wealth (having them in their hands); vambu avizh with nice fragrance; vānavar dhĕvas; kapilai kāmadhĕnu (divine cow); oṇ radiantly shining; kaṇṇadi mudhalā ṃirror, etc; emperumān my lord who is the master; kāṇdaṛku to accept them and bless us; ĕṛpana āyina appropriate (to your stature); padimak kalam koṇdu bringing the materials; nalmunivar good/great saints; thumburu nāradhar thumburu, nāradhar, etc (divine musicians who constantly serve emperumān); pungundhanar arrived; iraviyum the sun too; thulangu ol̤i (his) bright radiance; parappi spreading everywhere; thŏnṛinan appeared; irul̤ the darkness; ambara thalaththil ninṛu from the sky; pŏy agalginṛathu disappeared; arangaththammā ŏh my lord/master lying down in srīrangam!; pal̤l̤i ezhundhu arul̤āyĕ (ṭhus,) you kindly wake up and give your blessings

TPE 9

925 ஏதமில்தண்ணுமையெக்கம்மத்தளி
யாழ்குழல்முழவமோடிசைதிசைகெழுமி *
கீதங்கள்பாடினர்கின்னரர்கெருடர்கள்
கந்தருவரவர்கங்குலுளெல்லாம் *
மாதவர்வானவர்சாரணரியக்கர்
சித்தரும்மயங்கினர்திருவடிதொழுவான் *
ஆதலிலவர்க்குநாளோலக்கமருள
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (2)
925 ## ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி *
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி *
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் *
கந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம் **
மாதவர் வானவர் சாரணர் இயக்கர் *
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் *
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள *
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. (9)
925 ## etam il taṇṇumai ĕkkam mattal̤i *
yāzh kuzhal muzhavamoṭu icai ticai kĕzhumi *
kītaṅkal̤ pāṭiṉar kiṉṉarar kĕruṭarkal̤ *
kantaruvar avar kaṅkulul̤ ĕllām **
mātavar vāṉavar cāraṇar iyakkar *
cittarum mayaṅkiṉar tiruvaṭi tŏzhuvāṉ *
ātalil avarkku nāl̤-olakkam arul̤a *
araṅkattammā pal̤l̤i ĕzhuntarul̤āye. (9)

Ragam

Būpāḷa / பூபாள

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

925. Faultless small drums, cymbals, yāzhs, flutes and big drums play music everywhere. Kinnaras, Garudās, Gandarvas and others sing. The sages, the gods in the sky, Saranars, Yaksas, and Siddhas are all fascinated by the music and come to worship your divine feet. O dear god of Srirangam, wake up and give us your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏதம் இல் தண்ணுமை குற்றமற்ற சிறு பறையும்; எக்கம் ஒற்றைத்தந்தியையுடைய வாத்யமும்; மத்தளி மத்தளமும்; யாழ் குழல் வீணையும் புல்லாங்குழல்களும்; முழவமோடு இவற்றின் முழக்கத்தோடு; திசை திக்குகளெங்கும்; இசை கெழுமி இசை நிறையும்படி; கீதங்கள் பாடினர் பாட்டுக்கள் பாடினர்; கின்னரர் கெருடர்கள் கின்னரர்களும் கருடர்களும்; கந்தருவர் அவர் கந்தர்வர்களும் மற்றுள்ளவர்களும்; மாதவர் வானவர் மஹர்ஷிகளும் தேவர்களும்; சாரணர் இயக்கர் சாரணர்களும் யக்ஷர்களும்; சித்தரும் ஸித்தர்களும்; திருவடி தொழுவான் தங்களை வணங்குவதற்காக; கங்குலுள் எல்லாம் இரவெல்லாம்; மயங்கினர் நெருக்கத்தில் துயருற்றனர்; ஆதலில் அவர்க்கு ஆகையாலே அவர்களுக்கு; நாள் ஒலக்கம் காட்சி தந்து; அருள அருளுவதற்காக; அரங்கத்தம்மா! ஸ்ரீரங்கநாதனே!; பள்ளி எழுந்தருளாயே பள்ளி எழுந்தருளாயே
ĕthamil blemishless (without any defect); thaṇṇumai small one sided drum; ekkam single string instrument; maththal̤i maththal̤am (a type of two-sided drum – like a mrdhangam/dŏlak); yāzh vīṇai (string instrument); kuzhal pullānguzhal (flutes); dhisai in all directions; muzhavamŏdu with their sound; isai kezhumi kīthangal̤ pādinar ones who are capable of singing with the music spreading (in all directions); kinnarar kinnaras; garudar garudas; gandharuvar avar gandharvas who are standing there; kangulul̤ellām all through the night; māthavar great rishis (sages); vānavar dhĕvas; chāraṇar chāraṇas; iyakkar yakshas; siththar sidhdhas; thiruvadi thozhuvān to worship your lotus feet; mayanginar became mesmeriśed (in the crowd/close proximity); āthalil thus; avarkku for them; nāl̤ŏlakkam arul̤a to bless them audience in the grand assembly in the morning; arangaththammā ŏh my lord/master lying down in srīrangam!; pal̤l̤i ezhundhu arul̤āyĕ (ṭhus,) you kindly wake up and give your blessings

TPE 10

926 கடிமலர்க்கமலங்கள்மலர்ந்தனவிவையோ
கதிரவன்கனைகடல்முளைத்தனன்னிவனோ *
துடியிடையார்சுரிகுழல்பிழிந்துதறித்
துகிலுடுத்தேறினர்சூழ்புனலரங்கா! *
தொடையொத்ததுளவமும்கூடையும்பொலிந்து
தோன்றியதோள்தொண்டரடிப்பொடியென்னு
மடியனை * அளியனென்றருளியுன்னடியார்க்
காட்படுத்தாய்! பள்ளிஎழுந்தருளாயே. (2)
926 ## கடி மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ *
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ *
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித் *
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா **
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து *
தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும்
அடியனை * அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய் * பள்ளி எழுந்தருளாயே (10)
926 ## kaṭi-malark kamalaṅkal̤ malarntaṉa ivaiyo *
katiravaṉ kaṉaikaṭal mul̤aittaṉaṉ ivaṉo *
tuṭiyiṭaiyār curi kuzhal pizhintu utaṟit *
tukil uṭuttu eṟiṉar cūzh puṉal araṅkā **
tŏṭai ŏtta tul̤avamum kūṭaiyum pŏlintu *
toṉṟiya tol̤ tŏṇṭaraṭippŏṭi ĕṉṉum
aṭiyaṉai * al̤iyaṉ ĕṉṟu arul̤i uṉ aṭiyārkku
āṭpaṭuttāy * pal̤l̤i ĕzhuntarul̤āye (10)

Ragam

Būpāḷa / பூபாள

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

926. Are these fragrant blooming lotuses? Is this the sun god rising over the roaring ocean? You are the god of Srirangam surrounded by a river where curly-haired women with waists as small as tudi drums bathe, squeeze their clothes, and come out of the water to dress. I am Thondaradippodi, your poor devotee. I brought thulasi garlands in baskets to decorate your body. I am your slave. Give me your grace. O dear god of Srirangam, wake up and give me your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புனல் சூழ் காவேரியாலே சூழப்பட்ட; அரங்கா! ஸ்ரீரங்கத்திலிருப்பவனே!; கடி மலர் மணமுள்ள; கமலங்கள் தாமரைப் பூக்கள்; மலர்ந்தன இவையோ! மலர்ந்தன; கதிரவன் ஸூரியன்; கனைகடல் சப்திக்கும் கடலில்; முளைத்தனன் உதயகிரியிலே வந்து; இவனோ! தோன்றினான்; துடி உடுக்கை போன்ற நுண்ணிய; இடையார் இடையையுடைய பெண்கள்; சுரி குழல் தமது சுருண்ட முடியை; பிழிந்து உதறி பிழிந்து உதறிவிட்டு; துகில் ஆடைகளை; உடுத்து உடுத்திக்கொண்டு; ஏறினர் கரை ஏறினர்; தொடை ஒத்த ஒழுங்காக தொடுத்த; துளவமும் துளசிமாலையுடனும்; கூடையும் பூக்குடலையுடனும்; பொலிந்து பொலிவுடன் நிற்கும்; தோன்றிய தோள் சிறந்த தோளையுடைய; தொண்டரடிப் பொடி தொண்டரடிப்பொடி; என்னும் என்ற; அடியனை தாஸனை; அளியன் கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்; என்று என்று திருவுள்ளம் பற்றி; அருளி அங்கீகரித்து; உன் அடியார்க்கு பாகவதர்களுக்கு; ஆட்படுத்தாய்! ஆளாக்க வேணும் அதற்காக; பள்ளி எழுந்தருளாயே பள்ளி எழுந்தருளாயே
punal sūzh surrounded by the sacred water of cauvery river; arangā oh srīranganātha who is lying down in srīrangam!; kadi fragrant; kamalam malargal̤ lotus flowers; malarnthana have blossomed (fully); kathiravan the sun (who can trigger the blossoming of the lotus); kanai kadal in the ocean which is by nature making huge noise; mul̤aiththanan appeared in the udhayagiri (eastern side); thudi idaiyār the women who have very small waist like a udukkai (hand held small drum which has a thin middle portion with two ends); suri kuzhal (their) curly hairs; pizhinthu udhari dried it fully (removing all water); thugil uduththu wearing (their) clothes; ĕṛinar climbed the bank (came out of the river); thodai oththa properly prepared; thul̤avamum thiruthtuzhāi (thul̤asi) garland; kūdaiyum flower basket; polindhu thŏnṛiya shiningly manifesting; thŏl̤ shoulder; thoṇdaradippodi ennum carrying the auspicious name – thoṇdaradippodi; adiyanai dhāsan – servant; al̤iyan enṛu arul̤i acknowledging that ī am a suitable candidate for your blessings; un adiyārkku bhāgavathas who are the servants of your holiness; āl̤ paduththāy engage me in their service; (athaṛkāga) pal̤l̤i ezhuntharul̤āy (for that purpose) kindly wake up and bless me