Amalanādipirān

அமலனாதிபிரான்

Amalanādipirān
Thiruppāṇ Āzhvār, being born in the Panar clan, was unable to enter the temple, adhering to the customs of his time. Despite that, he devoted himself completely to Lord Ranganathar. As per the belief 'Gopura darisanam papa vimosanam’ (meaning 'a divine sight of the temple tower will cleanse one's sins'), he stood every day on the bank of the river Cauvery + Read more
திருப்பாணாழ்வார் வாழ்ந்த காலத்தை அனுசரித்து தான் பாணர் குலத்தில் பிறந்தவராதலால் திருக்கோயிலுக்குச் சென்று பகவானை தரிசிக்க முடியவில்லையானாலும் முக்கரணங்களையும் பகவத் சிந்தனையிலேயே செலுத்தியவர். 'கோபுர தரிசனம் பாப விமோசனம்' என்ற வசனத்தை முழு மனதுடன் நம்பி அனுதினமும் காவேரி கரையில் நின்று + Read more
Group: 1st 1000
Verses: 927 to 936
Glorification: Sri Ranganāthar (திருவரங்கன்)
  • தனியன் / Taniyan
  • AAP 1
    927 ## . அமலன் ஆதிபிரான் * அடியார்க்கு என்னை ஆட்படுத்த
    விமலன் * விண்ணவர்கோன் * விரையார் பொழில் வேங்கடவன் **
    நிமலன் நின்மலன் நீதி வானவன் * நீள் மதில் அரங்கத்து அம்மான் * திருக்
    கமல பாதம் வந்து * என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே (1)
  • AAP 2
    928 உவந்த உள்ளத்தனாய் * உலகம் அளந்து அண்டம் உற *
    நிவந்த நீள் முடியன் * அன்று நேர்ந்த நிசாசரரை **
    கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் * கடியார் பொழில் அரங்கத்து அம்மான் * அரைச்
    சிவந்த ஆடையின் மேல் * சென்றதாம் என் சிந்தனையே (2)
  • AAP 3
    929 ## மந்தி பாய் * வட வேங்கட மா மலை * வானவர்கள்
    சந்தி செய்ய நின்றான் * அரங்கத்து அரவினணையான் **
    அந்தி போல் நிறத்து ஆடையும் * அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில் *
    உந்தி மேலது அன்றோ * அடியேன் உள்ளத்து இன்னுயிரே (3)
  • AAP 4
    930 சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் * தலை பத்து
    உதிர ஓட்டி * ஓர் வெங்கணை உய்த்தவன் * ஓதவண்ணன் **
    மதுர மா வண்டு பாட * மா மயில் ஆட அரங்கத்து அம்மான் * திரு வயிற்று
    உதர பந்தம் * என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே (4)
  • AAP 5
    931 பாரமாய * பழவினை பற்றறுத்து * என்னைத் தன்
    வாரம் ஆக்கி வைத்தான் * வைத்தது அன்றி என் உள் புகுந்தான் **
    கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் * அரங்கத்து அம்மான் * திரு
    ஆரமார்ப தன்றோ * அடியேனை ஆட்கொண்டதே (5)
  • AAP 6
    932 துண்ட வெண் பிறையன் * துயர் தீர்த்தவன் * அஞ்சிறைய
    வண்டு வாழ் பொழில் சூழ் * அரங்க நகர் மேய அப்பன் **
    அண்டரண்ட பகிரண்டத்து * ஒரு மா நிலம் எழு மால் வரை * முற்றும்
    உண்ட கண்டம் கண்டீர் * அடியேனை உய்யக் கொண்டதே (6)
  • AAP 7
    933 கையின் ஆர் * சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரைபோல்
    மெய்யனார் * துளப விரையார் கமழ் * நீள் முடி எம்
    ஐயனார் ** அணி அரங்கனார் * அரவின் அணைமிசை மேய மாயனார் *
    செய்ய வாய் ஐயோ * என்னைச் சிந்தை கவர்ந்ததுவே (7)
  • AAP 8
    934 பரியனாகி வந்த * அவுணன் உடல் கீண்ட * அமரர்க்கு
    அரிய ஆதிப்பிரான் * அரங்கத்து அமலன் முகத்து **
    கரிய ஆகிப் புடை பரந்து * மிளிர்ந்து செவ்வரி ஓடி * நீண்ட அப்
    பெரிய ஆய கண்கள் * என்னைப் பேதைமை செய்தனவே (8)
  • AAP 9
    935 ## ஆல மா மரத்தின் இலைமேல் * ஒரு பாலகனாய் *
    ஞாலம் ஏழும் உண்டான் * அரங்கத்து அரவின் அணையான் **
    கோல மா மணி ஆரமும் * முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில் *
    நீல மேனி ஐயோ * நிறைகொண்டது என் நெஞ்சினையே (9)
  • AAP 10
    936 ## கொண்டல் வண்ணனைக் * கோவலனாய் வெண்ணெய்
    உண்ட வாயன் * என் உள்ளம் கவர்ந்தானை **
    அண்டர் கோன் அணி அரங்கன் * என் அமுதினைக்
    கண்ட கண்கள் * மற்று ஒன்றினைக் காணாவே (10)