TPE 2

கஜேந்திரனுக்கு அருளியவனே! பள்ளியெழுந்தருள்

918 கொழுங்கொடிமுல்லையின்கொழுமலரணவிக்
கூர்ந்ததுகுணதிசைமாருதமிதுவோ *
எழுந்தனமலரணைப் பள்ளிகொள்ளன்னம்
ஈன்பனிநனைந்ததமிருஞ்சிறகுதறி
விழுங்கியமுதலையின்பிலம்புரைபேழ்வாய்
வெள்ளெயிறுறவதன்விடத்தனுக்கனுங்கி *
அழுங்கியவானையினருந்துயர்கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.
TPE.2
918 kŏzhuṅkŏṭi mullaiyiṉ kŏzhu malar aṇavik *
kūrntatu kuṇa-ticai mārutam ituvo *
ĕzhuntaṉa malar aṇaip pal̤l̤ikŏl̤ aṉṉam *
īṉpaṇi naṉainta tam iruñ ciṟaku utaṟi **
vizhuṅkiya mutalaiyiṉ pilam purai pezhvāy *
vĕl̤ ĕyiṟu uṟa ataṉ viṭattiṉukku aṉuṅki *
azhuṅkiya āṉaiyiṉ aruntuyar kĕṭutta *
araṅkattammā pal̤l̤i ĕzhuntarul̤āye (2)

Ragam

Būpāḷa / பூபாள

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

918. The breeze from the east blows and spreads the fragrance of mullai flowers blooming on vines. The swans sleeping on flowers wake up and shake the wet dew from their wings. O lord, when the elephant Gajendra was suffering and called you in his distress, you came and saved him, killing the crocodile whose mouth with white teeth was as deep as a cave. O dear god of Srirangam, wake up and give us your grace.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TPE.2

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குண திசை மாருதம் கிழக்குக் காற்றானது; கொழுங்கொடி செழுமையாக வளர்ந்துள்ள; முல்லையின் முல்லைக் கொடியின்; கொழு மலர் அழகிய மலர்களை; அணவி தழுவிக்கொண்டு; கூர்ந்தது இதுவோ இதோ வீசுகின்றது; பள்ளிகொள் உறங்குகின்ற; அன்னம் ஹம்ஸப் பறவைகள்; ஈன்பனி கடும் பனியாலே; நனைந்த தம் நனைந்த தங்களுடைய; இருஞ் சிறகு அழகிய இறகுகளை; உதறி உதறிக் கொண்டு; மலர் அணை உறக்கத்திலிருந்து; எழுந்தன எழுந்தன; விழுங்கிய காலைக் கடித்து விழுங்கின; முதலையின் முதலையின்; பிலம் புரை குகை போன்ற; பேழ்வாய் பெரிய வாயிலுள்ள; வெள் வெளுத்த; எயிறு உற கோரப்பற்கள் ஊன்ற; அதன் முதலையினுடைய; விடத்தினுக்கு அனுங்கி பல்லின் விஷத்தால்; அழுங்கிய வலி ஏற்பட்ட; ஆனையின் கஜேந்திரனின்; அருந்துயர் பெரும் துயரத்தை; கெடுத்த போக்கியருளினவனே!; அரங்கத்தம்மா! ஸ்ரீரங்கநாதனே!; பள்ளி எழுந்தருளாயே பள்ளி எழுந்தருளாயே
guṇadhisai mārutham Wind from the east; kozhu kodi Well nourished creeper; mullai jasmine plant; kozhu malar beautiful flowers; aṇavi touching; ithuvŏ this; kūrnthathu blowing; malar aṇai flower-bed; pal̤l̤i kol̤ sleeping; annam swans; īn pani nanaintha became wet due to the falling snow/fog (like rain); tham their; iru chiṛagu beautiful wings; udhaṛi shaking; ezhundhana waking up; vizhungiya swallowed/held (the legs of elephant); mudhalaiyin crocodile’s; pilamburai like a cave; pĕzhvāy big mouth; vel̤l̤eyiṛu uṛa bitten by white and sharp/hard teeth; athan that elephant’s; vidaththinukku for the poison (from those teeth); anungi azhungiya suffered greatly in pain; ānaiyin elephant’s (gajĕndhrāzhwān’s); aru thuyar big sorrow; keduththa dispelled; arangaththammā ŏh lord/master who is lying down in srīragangam!; (ādhalāl) pal̤l̤i ezhundhu arul̤āyĕ (ṭhus,) you kindly wake up and give your blessings

Detailed WBW explanation

**The Eastern winds have heralded their arrival, caressing the well-nourished jasmine creeper en route. The swans, nestled within the flower beds, are now awakening, shaking their wings and feathers, moistened by the mist that descends like rain. You, the Divine Rescuer who alleviated the profound sufferings of Gajendrāzhvān, tormented by the venom from the crocodile’s

+ Read more