35

Thiru Thevanār Thogai

திருத்தேவனார்தொகை

Thiru Thevanār Thogai

Thiru Nāngur

ஸ்ரீ கடல்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ தெய்வநாயகாய நமஹ

Thayar: Sri Kadal Magal Nāchiyār, Mādvanāyaki
Moolavar: Deivanāyakan
Utsavar: Mādhava Perumāl
Vimaanam: Sobhana
Pushkarani: Sobhana, Dhevasabha
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Chozha Nādu
Area: Seerkaazhi
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Timings: 8:00 a.m. to 1:00 p.m. 3:00 p.m. to 8:00 p.m. (Please take the archaga from their home for darshan.)
Search Keyword: Thiruthevanarthohai
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 4.1.1

1248 போதலர்ந்தபொழிற்சோலைப் புறமெங்கும் பொருதிரைகள் *
தாதுதிரவந்தலைக்கும் தடமண்ணித்தென்கரைமேல் *
மாதவன்றானுறையுமிடம் வயல்நாங்கை * வரிவண்டு
தேதெனவென்றுஇசைபாடும்திருத்தேவனார்தொகையே. (2)
1248 ## போது அலர்ந்த பொழில் சோலைப் * புறம் எங்கும் பொரு திரைகள் *
தாது உதிர வந்து அலைக்கும் * தட மண்ணித் தென் கரைமேல் **
மாதவன்-தான் உறையும் இடம் * வயல் நாங்கை * வரி வண்டு
தேதென என்று இசை பாடும் * திருத்தேவனார் தொகையே-1
1248. ##
POthalarntha PozhilsOlaip * puRaMengum PoruthiraigaL *
Thāthuthiravanthalaikkum * thadamaNNith then_karaimEl *
Māthavan thāNn_uRaiyumidam * vayaln^āngai *
VariVanduthEthenavenRu isaipādum * ThiruththEvaNnAr_thogaiyE (4.1.1)

Ragam

பைரவி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1248. Our lord Madhavan stays in Thiruthevanārthohai on the southern bank of the Mannai river where waves dash on the groves blooming with flowers, making pollen fall and float on the water while lined bees sing “thee tena” in the flourishing fields.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
போது அலர்ந்த மலர்ந்த பூக்கள் நிறைந்த; புறம் எங்கும் நெருங்கிய; பொழில் சோலை சோலைகள் முழுதும்; தாது உதிர பூக்களிலிருந்து மகரந்தப் பொடி உதிர; பொருதிரைகள் செறிந்த அலைகள்; வந்து அலைக்கும் வந்து வீச; தட மண்ணி மண்ணியாற்றின்; தென் கரைமேல் தென் கரைமேல்; மாதவன் தான் மாதவப்பெருமான்; உறையும் இடம் இருக்குமிடம்; வயல் நாங்கை கழனிகள் சூழ்ந்த திருநாங்கூரில்; வரிவண்டு வரிவண்டுகள்; தேதென என்று தெனாதெனா என்று; இசை பாடும் இசைபாடும்; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகையே தொகையே
pOdhu flowers; alarndha blossomed; pozhil sOlai filled with dense gardens; puRam engum in all of the surroundings; thAdhu pollen; udhira to fall down; poru hitting each other; thiraigaL vandhu waves come; alaikkum throwing up; thadam vast; maNNi the river named maNNi, its; then karai mEl on the southern banks; mAdhavan thAn sarvESvaran who is the divine lord of SrI mahAlakshmi; uRaiyum eternally residing; idam being the abode; vayal surrounded by fertile fields; nAngai in thirunAngUr; vari striped; vaNdu beetles; thEdhena as in -thenna thenna- (head-swaying tune); in isai beautiful song; pAdum singing; thiruththEvanAr thogai the divine abode named thiruththEvanAr thogai.

PT 4.1.2

1249 யாவருமாயாவையுமாய் எழில்வேதப்பொருள்களுமாய் *
மூவருமாய்முதலாய மூர்த்தியமர்ந்துறையுமிடம் *
மாவரும்திண்படைமன்னைவென்றிகொள்வார் மன்னுநாங்கை *
தேவரும்சென்றிறைஞ்சுபொழில் திருத்தேவனார்தொகையே.
1249 யாவரும் ஆய் யாவையும் ஆய் * எழில் வேதப் பொருள்களும் ஆய் *
மூவரும் ஆய் முதல் ஆய * மூர்த்தி அமர்ந்து உறையும் இடம் **
மா வரும் திண் படை மன்னை * வென்றி கொள்வார் மன்னு நாங்கை *
தேவரும் சென்று இறைஞ்சு பொழில் * திருத்தேவனார் தொகையே-2
1249
yāvarumāy yāvaiyumāy * ezhilvEthap poruLkaLumāy *
moovarumāy muthalāya * moorththi_amarn^thu uRaiyumidam *
māvarumthiN padaimannai * venRikoLvār Mannun^āngai *
thEvarum senRiRainchuPozhil * ThiruththEvaNnAr_thogaiyE (4.1.2)

Ragam

பைரவி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1249. Our lord who is everyone and everything, all the three gods and the meaning of the divine Vedās stays in Thiruthevanārthohai, surrounded with beautiful blooming groves dripping with honey where kings with strong armies, conquerers of their enemies, and the gods from the sky come and worship him.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யாவரும் ஆய் சித்தாகவும்; யாவையும் ஆய் அசித்தாகவும் தானாய்; எழில் வேத அழகிய வேதங்களின்; பொருள்களும் ஆய் அர்த்தமும் தானாய்; மூவரும் ஆய் பிரமன் விஷ்ணு ருத்ரன் மூவரும் ஆய்; முதலாய மூர்த்தி முழுமுதற் கடவுளான எம்பெருமான்; அமர்ந்து உறையும் இடம் அமர்ந்து இருக்குமிடம்; மா வரும் குதிரை மேல் ஏறிவருகிற; திண்படை திடமான ஆயுதங்களையுடைய; மன்னை ராஜகுலத்தை; வென்றி கொள்வார் வெற்றிபெறும் அந்தணர்கள்; மன்னு நாங்கை வாழும் இடம் திருநாங்கூரில் உள்ள; தேவரும் சென்று தேவர்களும் சென்று; இறைஞ்சு வணங்கும்; பொழில் சோலைகளை யுடைய; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகையே தொகையே
yAvarumAy having all chEthanas (sentient beings) as his prakAram (form); yAvaiyumAy having all achEthanas (insentient objects) as his prakAram; ezhil beautiful; vEdham shown in vEdhams; poruLgaLumAy having entities as his prakAram; mUvarumAy being the antharyAmi of brahmA and rudhra who perform creation and annihilation, and incarnating as vishNu who sustains; mudhalAya being the cause for such brahmA and rudhra; mUrththi sarvESvaran who is supreme; amarndhu firmly placed; uRaiyum eternally residing; idam being the abode; mA riding the horse; varum arriving; thiN firm; padai having weapons; mannai royal kings; venRi koLvAr brAhmaNas who can defeat; mannu residing firmly; nAngai in thirunAngUr; dhEvarum dhEvathAs such as indhran et al; senRu approach; iRainjum remaining to be prayed to; pozhil having gardens; thiruththEvanAr thogai dhivyadhESam named thiruththEvanAr thogai.

PT 4.1.3

1250 வானாடும்மண்ணாடும் மற்றுள்ளபல்லுயிரும் *
தானாய எம்பெருமான் தலைவன்அமர்ந்துஉறையுமிடம் *
ஆனாதபெருஞ்செல்வத்து அருமறையோர்நாங்கை தன்னுள் *
தேனாரும்மலர்ப்பொழில்சூழ் திருத்தேவனார்தொகையே.
1250 வான் நாடும் மண் நாடும் * மற்று உள்ள பல் உயிரும் *
தான் ஆய எம் பெருமான் * தலைவன் அமர்ந்து உறையும் இடம் **
ஆனாத பெருஞ் செல்வத்து * அரு மறையோர் நாங்கை தன்னுள் *
தேன் ஆரும் மலர்ப் பொழில் சூழ் * திருத்தேவனார் தொகையே 3
1250
VāNnādum maNNādum * MaRRuLLa palluyirum *
thāNnāya emperumān * thalaivaNn_amarn^thu uRaiyumidam *
ANnātha Perunchelvaththu * arumaRaiYOr nāngaithannuL *
thEnāruM malarPozhilsoozh * ThiruththEvaNnAr_thogaiyE (4.1.3)

Ragam

பைரவி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1250. Our lord who is the king of the sky and of the people and creatures of the earth and is within everything stays in Thiruthevanārthohai surrounded with beautiful blooming groves dripping with honey in Nāngai where Maraiyoor live, skilled in the wealth of knowledge that is the Vedās.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வான் நாடும் வானுலகிலும்; மண் நாடும் பூலோகத்திலும்; மற்று உள்ள வாழும் பல வகைப்பட்ட; பல் உயிரும் உயிர்களுக்குள்ளும்; தான் ஆய தானே அந்தர்யாமியாய்; எம்பெருமான் இருக்கும் எம்பெருமானான; தலைவன் அமர்ந்து உறையும் இடம் அந்த தலைவன் இருக்குமிடம்; ஆனாத அழிவில்லாத; பெருஞ்செல்வத்து பெருஞ்செல்வமுடைய; அரு மறையோர் அருமையான வேதங்களை; நாங்கை தன்னுள் ஓதும் அந்தணர்கள் வாழும்; தேன் ஆரும் மலர் தேன் பாயும் மலர்களையுடைய; பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்த; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகையே தொகையே
vAn nAdum paramapadham which is located in the supreme sky; maN nAdum leelA vibhUthi (samsAram) which has the earth; maRRu uLLa further, present in those worlds; pal uyirum different types of AthmAs; thAn Aya having these as his prakAram, and being antharAthmA for all of these; thalaivan the lord; emperumAn sarvESvaran; amarndhu uRaiyumidam firmly residing abode; AnAdha imperishable; perum endless; selvaththu having wealth; aru difficult to learn; maRaiyOr where brAhmaNas, who have completely learnt vEdham, are residing; nAngai thannuL in thirunAngUr; thEn Arum filled with honey; malar having flowers; pozhil by gardens; sUzh surrounded; thiruththEvanAr thogai dhivyadhESam named thiruththEvanAr thogai.

PT 4.1.4

1251 இந்திரனும்இமையவரும் முனிவர்களும் எழிலமைந்த *
சந்தமலர்ச்சதுமுகனும் கதிரவனும்சந்திரனும் *
எந்தை! எமக்கருளெனநின்று அருளுமிடம், எழில் நாங்கை *
சுந்தரநற்பொழில்புடைசூழ் திருத்தேவனார்தொகையே.
1251 இந்திரனும் இமையவரும் * முனிவர்களும் எழில் அமைந்த *
சந்த மலர்ச் சதுமுகனும் * கதிரவனும் சந்திரனும் **
எந்தை! எமக்கு அருள் என நின்று * அருளும் இடம் எழில் நாங்கை *
சுந்தர நல் பொழில் புடை சூழ் * திருத்தேவனார் தொகையே-4
1251
inthiraNnum imaiyavarum * munivargaLum ezhilamaintha *
santhamalarch chathumuganum * kathiravanum santhiranum *
enthai! emakkaruL_eNnan^inRu * aruLumidam ezhiln^āngai *
suntharan^al Pozhilpudaisoozh * ThiruththEvaNnAr_thogaiyE (4.1.4)

Ragam

பைரவி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1251. The place where Indra, the gods in the sky, sages, the four-headed Nānmuhan on a beautiful fragrant lotus, the sun and moon, all join together and worship him saying, “Our father, give us your grace!” is Thiruthevanārthohai in Nāngur, surrounded with fragrant beautiful flourishing groves.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இந்திரனும் இந்திரனும்; இமையவரும் தேவர்களும்; முனிவர்களும் முனிவர்களும்; எழில் அமைந்த அழகு பொருந்தியவனாய்; சந்த வேதங்களை நன்கு கற்றவனாய்; மலர் தாமரை மலரில்; சதுமுகனும் தோன்றினவனான பிரமனும்; கதிரவனும் ஸூரியனும்; சந்திரனும் சந்திரனும் ஆகியவர்கள்; எந்தை எமக்கு ஸ்வாமியானவனை; எமக்கு எங்களுக்கு; அருள் என அருள வேண்டும் என்று; நின்றருளும் அதற்காக காத்துக் கொண்டு; இடம் நிற்குமிடம்; எழில் நாங்கை திருநாங்கூரில்; சுந்தர நல் மிகவும் அழகிய; பொழில் புடை சூழ் சோலைகளால் சூழ்ந்த; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகையே தொகையே
indhiranum dhEvEndhra; imaiyavarum (other) dhEvathAs; munivargaLum great sages (such as sanaka et al); ezhil amaindha having beauty which fits in him (due to always reciting vEdham); sandham having learnt vEdham (fully); malar having lotus flower as birth place; sadhumuganum four-headed brahmA; kadhiravanum sun; chandhiranum moon; endhai -Oh my lord!; emakku In our matter; aruL ena You should shower your mercy- – as they pray this way; ninRu aruLum idam (to fulfil their desires) the abode where he is mercifully present; ezhil beautiful; nAngai in thirunAngUr; sundharam beautiful; nal distinguished; pozhil by gardens; pudai all the surroundings; sUzh surrounded; thiruththEvanAr thogai dhivyadhESam named thiruththEvanAr thogai.

PT 4.1.5

1252 அண்டமும்இவ்வலைகடலும் அவனிகளும்குலவரையும் *
உண்டபிரான்உறையுமிடம், ஓளிமணிசந்தகில்கனகம் *
தெண்திரைகள்வரத்திரட்டும் திகழ்மண்ணித் தென்கரைமேல் *
திண்திறலார்பயில்நாங்கைத்திருத்தேவனார்தொகையே.
1252 அண்டமும் இவ் அலை கடலும் * அவனிகளும் குல வரையும் *
உண்ட பிரான் உறையும் இடம் * ஒளி மணி சந்து அகில் கனகம் **
தெண் திரைகள் வரத் திரட்டும் * திகழ் மண்ணித் தென் கரைமேல் *
திண் திறலார் பயில்-நாங்கைத் * திருத்தேவனார்தொகையே-5
1252
andaMum ivvalaikadalum * avaNnikaLum kulavaraiyum *
undapirāNn uraiyumidam * oLiMaNi san^thakilkanakam *
theNdhiraigaL varaththirattum * thigazhmaNNith then_karaimEl *
thiNthiRalār payiln^āngaith * ThiruththEvaNnAr_thogaiyE (4.1.5)

Ragam

பைரவி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1252. Our highest lord who swallowed the sky, the oceans with rolling waves, all the seven worlds and the ancient hills stays in Thiruthevanārthohai in Nāngur where the clear waves of the Mannai river bring shining diamonds and fragrant akil and leave them on its southern bank where heroic people live.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அண்டமும் ஆகாசமும்; இவ் அலை கடலும் அலை கடலும்; அவனிகளும் தீவுகளும்; குலவரையும் மலைகளும் ஆகிய அனைத்தையும்; உண்ட பிரளயகாலத்தில் வயிற்றில் கொண்ட; பிரான் எம்பெருமான்; உரையும் இடம் இருக்குமிடம்; ஓளி மணி ஒளிபொருந்திய ரத்நங்களையும்; சந்து அகில் சந்தன அகில் மரங்களையும்; கனகம் பொன்னையும்; தெண் திரைகள் தெளிந்த அலைகளின்; வர வழியே வரும்படியாக; திரட்டும் கூட்டம் கூட்டமாக குவியும்; திகழ் மண்ணி தெளிந்த மண்ணி ஆற்றின்; தென் கரைமேல் தென் கரைமேல்; திண் திறலார் மிக்க பலசாலிகள்; பயில் நாங்கை வாழும் திருநாங்கூரிலுள்ள; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகையே தொகையே
aNdamum sky; alai waves agitating; ikkadalum these oceans; avanigaLum the islands (such as jambUdhvIpam); kula varaiyum anchoring mountains (such as himavAn); uNda mercifully consumed (these during praLayam); pirAn benefactor; uRaiyum idam the abode where he resides; oLi having radiance; maNi precious gems; sandhu sandalwood trees; agil dhEvadhAru (eagle wood) logs; kanagam gold; theL pure, flawless; thiraigaL waves-; vara in the arrival; thirattum bringing and making a heap of collections; thigazh shining; maNNi river maNNi-s; then karai mEl on the southern banks; thiN firm; thiRalAr those who are strong; payil densely living; nAngai in thirunAngUr; thiruththEvanAr thogai thiruththEvanAr thogai .

PT 4.1.6

1253 ஞாலமெல்லாம்அமுதுசெய்து நான்மறையும் தொடராத *
பாலகனாய்ஆலிலையில் பள்ளிகொள்ளும்பரமனிடம் *
சாலிவளம்பெருகிவரும் தடமண்ணித்தென்கரைமேல் *
சேலுகளும்வயல்நாங்கைத் திருத்தேவனார்தொகையே.
1253 ஞாலம் எல்லாம் அமுது செய்து * நான்மறையும் தொடராத *
பாலகன் ஆய் ஆல் இலையில் * பள்ளி கொள்ளும் பரமன் இடம் **
சாலி வளம் பெருகி வரும் * தட மண்ணித் தென் கரைமேல் *
சேல் உகளும் வயல்-நாங்கைத் * திருத்தேவனார்தொகையே-6
1253
NYālamellām amuthuseythu * nānmaRaiyum thodarātha *
pālaganāy ālilaiyil * paLLikoLLum Paramanidam *
sālivaLam perugivarum * thadamaNNith then_karaimEl *
sElugaLuM vayaln^āngaith * ThiruththEvaNnAr_thogaiyE (4.1.6)

Ragam

பைரவி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1253. Our highest lord who swallowed the whole world and lay on a banyan leaf when he was a baby and whom the Vedās could not follow and find stays in Thiruthevanārthohai in Nāngai where fish frolic in the large Mannai river and paddy fields flourish on its southern banks.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நான்மறையும் நான்கு வேதங்களாலும்; தொடராத அணுக முடையாத பெருமை உடையவனும்; பாலகன் ஆய் இளங்குழந்தையாய்; ஞாலம் எல்லாம் பூமிமுழுவதையும்; அமுது செய்து விழுங்கி; ஆலிலையில் ஆலந்தளிரில்; பள்ளி கொள்ளும் பள்ளி கொள்ளும்; பரமனிடம் எம்பெருமான் இருக்குமிடம்; தடமண்ணித் தெளிந்த மண்ணி ஆற்றின்; தென் கரைமேல் தென் கரைமேல்; சாலி வளம் செந்நெல் பயிர்களின்; பெருகி வரும் செழிப்பானது பெருகி வரும்; சேல் உகளும் சேல் மீன்கள் துள்ளி விளையாடும்; வயல் நாங்கை வயல்களையுடைய திருநாங்கூரில்; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகையே தொகையே
nAl maRaiyum vEdhams which are best among the pramANams [authentic texts] and are of four types; thodarAdha having greatness of not being able to be aptly spoken by; pAlaganAy being a young child; gyAlam ellAm the whole world; amudhu seydhu swallowed; Al ilaiyil in a tender banyan leaf; paLLi koLLum mercifully resting; paraman supreme lord; idam the abode where he eternally resides; thadam vast; maNNith then karai mEl on the southern banks of maNNi river; sAli of the reddish paddy crops; vaLam richness; perugi varum growing; sEl sEl (carp) fish; ugaLum jumping; vayal having fertile fields; nAngai in thirunAngUr; thiruththEvanAr thogai dhivyadhESam named thiruththEvanAr thogai.

PT 4.1.7

1254 ஓடாத வாளரியின் உருவாகிஇரணியனை *
வாடாதவள்ளுகிரால் பிளந்தளைந்தமாலதிடம் *
ஏடேறுபெருஞ்செல்வத்து எழில்மறையோர்நாங்கை தன்னுள் *
சேடேறுபொழில்தழுவு திருத்தேவனார்தொகையே.
1254 ஓடாத வாளரியின் * உரு ஆகி இரணியனை *
வாடாத வள் உகிரால் * பிளந்து அளைந்த மாலது இடம் *
ஏடு ஏறு பெருஞ் செல்வத்து * எழில் மறையோர் நாங்கை-தன்னுள் *
சேடு ஏறு பொழில் தழுவு * திருத்தேவனார்தொகையே-7
1254
Odātha vāLariyiNn * uruvāgi iraNiyanai *
Vādātha VaLLugirāl * PiLanthaLaintha mālathidam *
EDERu perunchelvaththu * ezhilmaRaiyOr nāngaithannuL *
chEdERu Pozhilthazhuvu * ThiruththEvaNnAr_thogaiyE (4.1.7)

Ragam

பைரவி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1254. Our Thirumāl who took the form of a shining lion that never retreats and went to Hiranyan and split open his chest with his sharp claws stays in beautiful Thiruthevanārthohai in Nāngai where flowers bloom in the groves and divine, famous Brahmins have an abundant wealth of knowledge of the sastras.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓடாத முதுகு காட்டி ஓடாத; ஆளரியின் அபூர்வமான நரஸிம்ம; உரு ஆகி மூர்த்தியாக அவதரித்து; வாடாத வள் வளையாத கூர்மையான; உகிரால் நகங்களினால்; இரணியனை பிளந்து இரணியனை பிளந்து; அளைந்த அளைந்த; மாலது இடம் எம்பெருமான் இருக்குமிடம்; ஏடு ஏறு ஏடுகளிலே பதிவு செய்யத் தக்க; பெருஞ்செல்வத்து பெருஞ்செல்வச் செழிப்போடு; எழில் மறையோர் அழகிய வைதிகர்கள் வாழும்; நாங்கைதன்னுள் திருநாங்கூரில்; சேடு ஏறு பொழில் தழுவு இளஞ்சோலைகளோடு கூடிய; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகையே தொகையே
OdAdha (new) not usually seen (in this world); AL ariyin narasimha-s; uruvAgi assuming the form; vAdAdha not bending (remaining firm); vaL sharp; ugirAl with the nails; iraNiyanai hiraNyAsuran; piLandhu tore; aLaindha stirring (the limbs); mAladhu sarvESvaran who has great love towards his devotees, his; idam abode; Edu in the book; ERu to be seen after writing; perum being incomprehensible; selvaththu having wealth; ezhil having beauty of revealing bhagavAn-s svarUpam etc; maRaiyOr the eternal residence of SrIvaishNavas who are experts in vEdhams; nAngai than uL in thirunAngUr; sEdu youthfulness; ERu growing; malar of the flowers; pozhil by gardens; sUzh surrounded; thiruththEvanAr thogai thiruththEvanAr thogai.

PT 4.1.8

1255 வாராருமிளங்கொங்கை மைதிலியைமணம்புணர்வான் *
காரார்திண்சிலையிறுத்த தனிக்காளைகருதுமிடம்
ஏராரும்பெருஞ்செல்வத்து எழில்மறையோர்நாங்கை தன்னுள் *
சீராரும்மலர்ப்பொழில்சூழ் திருத்தேவனார்தொகையே.
1255 வார் ஆரும் இளங் கொங்கை * மைதிலியை மணம் புணர்வான் *
கார் ஆர் திண் சிலை இறுத்த * தனிக் காளை கருதும் இடம் **
ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து * எழில் மறையோர் நாங்கை-தன்னுள் *
சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ் * திருத்தேவனார்தொகையே-8
1255
Vārārum iLankongai * maithiliyai maNampuNarvān *
Kārār_thiN silaiyiRuththa * thanikkāLai karuthumidam *
Erārum perunchelvaththu * ezhilmaRaiyOr nāngaithannuL *
cheerārum malarPozhilchoozh * ThiruththEvaNnAr_thogaiyE (4.1.8)

Ragam

பைரவி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1255. Our lord, mighty as a bull, who broke the strong bow to marry Mythili whose young breasts were held with a band stays in Thiruthevanārthohai in Nāngai surrounded with beautiful blooming groves where divine Vediyars, learned in the Vedās, live.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வார் ஆரும் கச்சணிந்த; இளம் கொங்கை மைதிலியை ஸீதையை; மணம் புணர்வான் திருமணம் செய்து கொள்ள; கார் ஆர் திண் கறுத்த திடமான; சிலை இறுத்த வில்லை முறித்தவனான; தனிக்காளை யௌவநபுருஷன்; கருதும் இடம் இருக்குமிடம்; ஏடு ஏறு ஏடுகளிலே பதிவு செய்யத் தக்க; பெருஞ்செல்வத்து பெருஞ்செல்வச் செழிப்போடு; எழில் மறையோர் வைதிகர்கள் வாழும்; நாங்கை தன்னுள் திருநாங்கூரில்; சீர் ஆரும் மலர் அழகிய பூக்களையுடைய; பொழில் சூழ் சோலைகளால் சூழந்த; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகையே தொகையே
var by cloth; Arum held; iLam kongai having youthful bosoms; maidhiliyai pirAtti, the daughter of the ruler of mithilA; maNam puNarvAn to marry; kAr Ar very black; thiN strong; silai bow; iRuththa being the one who broke; thani distinguished; kALai youthful chakravarthith thirumagan; karudhum idam the abode where he is desirously residing; Er Arum very beautiful; perum unbounded; selvaththu wealthy; ezhil maRaiyOr filled with SrIvaishNavas who analyse the beautiful vEdhams; nAngai thannuL in thirunAngUr; sIr Arum very beautiful; malar having flowers; pozhil by gardens; sUzh surrounded; thiruththEvanAr thogai thiruththEvanAr thogai.

PT 4.1.9

1256 கும்பமிகுமதயானை பாகனொடும்குலைந்துவிழ *
கொம்பதனைப்பறித்தெறிந்த கூத்தனமர்ந்துறையுமிடம் *
வம்பவிழும்செண்பகத்தின் மணங்கமழும்நாங்கை தன்னுள் *
செம்பொன்மதிள்பொழில்புடைசூழ் திருத்தேவனார்தொகையே.
1256 கும்பம் மிகு மத யானை * பாகனொடும் குலைந்து வீழ *
கொம்பு-அதனைப் பறித்து எறிந்த * கூத்தன் அமர்ந்து உறையும் இடம் **
வம்பு அவிழும் செண்பகத்தின் * மணம் கமழும் நாங்கை-தன்னுள் *
செம் பொன் மதிள் பொழில் புடைசூழ் * திருத்தேவனார்தொகையே-9
1256
Kumbamigu mathayānai * pākanodum kulainthuvIzha *
kombathanaip paRiththeRintha * kooththan amarn^thuRaiyumidam *
vambavizhum seNbagaththin * MaNangamazhum nāngaithannuL *
chemPonmathiL Pozhilpudaichoozh * ThiruththEvaNnAr_thogaiyE (4.1.9)

Ragam

பைரவி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1256. Our god who fought the rutting elephant Kuvalayābeedam, killed it and its mahout and danced on a pot stays in Thiruthevanārthohai in Nāngai surrounded with precious golden walls and groves where shenbaga flowers dripping pollen spread their fragrance.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கும்பம் மிகு குவலயாபீடம் என்னும்; மத யானை மத யானை; பாகனொடும் பாகனோடு பயந்து; குலைந்து வீழ நடுங்கி கீழே விழ; கொம்பு அதனை அந்த யானையின் தந்தத்தை; பறித்து எறிந்த பறித்து எறிந்த; கூத்தன் அமர்ந்து மாயாவி கண்ணன்; உறையும்இடம் இருக்குமிடம்; வம்பு அவிழும் அப்போதலர்ந்த; செண்பகத்தின் செண்பகத்தின்; மணம் கமழும் மணம் கமழும்; நாங்கைதன்னுள் திருநாங்கூரில்; செம் பொன் பொன்னாலான; மதிள் மதில்களை உடைய; பொழில் புடை சூழ் சோலைகளால் சூழ்ந்த; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகையே தொகையே
migu huge; kumbam having head; madham fleshy [being fat]; yAnai kuvalayApIdam, the elephant; pAganodum with its mahout; kulaindhu shivered; vIzha to fall; adhan kombai its tusk; paRiththu plucked; eRindha threw down; kUththan krishNan who has beautiful leelAs; amarndhu firmly; uRaiyumidam abode where he is eternally residing; seNbagaththin sheNbaga flower-s; vambu freshness; avizhum spreading; maNam fragrance; kamazhum smelling nicely; nAngai thannuL in thirunAngUr; sem pon made with reddish gold; madhiL fortified streets; pozhil gardens; pudai to have them within it; sUzh being vast; thiruththEvanAr thogai thiruththEvanAr thogai .

PT 4.1.10

1257 காரார்ந்ததிருமேனிக் கண்ணனமர்ந் துறையுமிடம் *
சீரார்ந்தபொழில்நாங்கைத் திருத்தேவனார்தொகைமேல் *
கூரார்ந்தவேற்கலியன்கூறுதமிழ்பத்தும்வல்லார் *
ஏரார்ந்தவைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே. (2)
1257 ## கார் ஆர்ந்த திருமேனிக் * கண்ணன் அமர்ந்து உறையும் இடம் *
சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத் * திருத்தேவனார் தொகைமேல் **
கூர் ஆர்ந்த வேல் கலியன் * கூறு தமிழ்ப் பத்தும் வல்லார் *
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து * இமையவரோடு இருப்பாரே-10
1257. ##
kārārntha thirumEnik * kaNNan amarn^thuRaiyumidam *
cheerārntha pozhiln^āngaith * thiruththEvaNnār thogaimEl *
koorārnthavERkaliyaNn * kooRuthamizh paththumvallār *
erārntha vaikunthaththu * imaiyavarOdu iruppārE (4.1.10)

Ragam

பைரவி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1257. Kaliyan, the poet with a sharp spear, composed ten Tamil pāsurams on the dark cloud-like divine Kannan, god of Thiruthevanārthohai in Nāngai surrounded with beautiful groves. If devotees learn and recite these ten pāsurams they will reach lovely Vaikundam and stay with the gods.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் ஆர்ந்த மேகத்தை ஒத்த; திருமேனி திருமேனியுடைய; கண்ணனமர்ந்து கண்ணன் அமர்ந்து; உறையும் இடம் இருக்குமிடம்; சீர் ஆர்ந்த சிறந்த அழகிய; பொழில் சோலைகளையுடைய; நாங்கை திருநாங்கூரிலிருக்கும்; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகைமேல் தொகையில்; கூர் ஆர்ந்த கூர்மையான; வேல் வேலையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வார்; கூறு அருளிச்செய்த; தமிழ்ப் பத்தும் தமிழ்ப் பாசுரங்களை; வல்லார் கற்க வல்லார்; ஏர் ஆர்ந்த நன்மை மிக்க; வைகுந்தத்து வைகுண்டத்தில்; இமையவரோடு நித்யஸூரிகளோடு; இருப்பாரே கூடி இருப்பர்
kAr with cloud; Ar matching; thirumEni having divine form; kaNNan krishNan; amarndhu firmly; uRaiyum residing; idam being the abode; sIr Arndha beautiful; pozhil having gardens; nAngai in thirunAngUr; thiruththEvanAr thogai on the dhivyadhESam named thiruththEvanAr thogai; kUr Arndha very sharp; vEl having the weapon, spear; kaliyan thirumangai AzhwAr; kURu mercifully spoke; thamizh in the dhivya prabandham in dhrAvida (thamizh) language; paththum these ten pAsurams; vallAr those who have learnt; Er Arndha very noble; vaigundhaththu in SrIvaikuNtam; imaiyavarOdu being united with nithyasUris; iruppAr will eternally reside there.