PT 4.4.2

பேய்ச்சி பாலுண்டவன் வாழுமிடம் இது

1279 பொற்றொடித்தோள்மடமகள்தன்வடிவுகொண்ட
பொல்லாதவன்பேய்ச்சிகொங்கைவாங்கி *
பெற்றெடுத்ததாய்போலமடுப்பஆரும்
பேணாநஞ்சுண்டுகந்தபிள்ளைகண்டீர் *
நெல்தொடுத்தமலர்நீலம்நிறைந்தசூழல்
இருஞ்சிறையவண்டொலியும்நெடுங்கணார்தம் *
சிற்றடிமேல்சிலம்பொலியும்மிழற்றுநாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
PT.4.4.2
1279 pŏṟṟŏṭit tol̤ maṭa makal̤- taṉ vaṭivu kŏṇṭa *
pŏllāta vaṉ peycci kŏṅkai vāṅki *
pĕṟṟu ĕṭutta tāypola maṭuppa * ārum
peṇā nañcu uṇṭu ukanta pil̤l̤ai kaṇṭīr **
nĕl tŏṭutta malar nīlam niṟainta cūzhal *
iruñ ciṟaiya vaṇṭu ŏliyum nĕṭuṅ kaṇār tam *
ciṟṟaṭimel cilampu ŏliyum mizhaṟṟum nāṅkūrt *
tiruttĕṟṟiyampalattu ĕṉ cĕṅ kaṇ māle-2

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1279. See, our lovely-eyed Nedumal who drank poisonous milk from the devil Putanā when she came as if she were the mother who bore him, wearing golden bangles on her hands, stays in Thiruthetriyambalam in Nāngur where neelam flowers bloom abundantly in the midst of paddy lands and the music of dark-winged bees and the tinkling of the anklets on women’s small feet sound softly together.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெல் நெற்கதிர்களின்மேல்; தொடுத்த தொடுக்கப்பட்ட; மலர் நீலம் நீல பூக்களாலே; நிறைந்த சூழல் நிறைந்த சுற்றுபுறங்களில்; இருஞ் சிறைய அழகிய சிறகுகளையுடைய; வண்டு ஒலியும் வண்டுகளின் ஆரவாரமும்; நெடுங் கணார் நீண்ட கண்களையுடையரான; தம் மாதர்களின்; சிற்றடி மேல் சிறிய பாதங்களிலணிந்த; சிலம்பு ஒலியும் சிலம்பு ஒலி; மிழற்றும் சப்திக்கும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருத்தெற்றியம்பலத்து திருத்தெற்றியம்பலத்திலிருக்கும்; என் செங்கண் சிவந்த கண்களையுடைய; மாலே! எம்பெருமானே!; பொற்றொடித் பொன் வளைகளணிந்த; தோள் தோள்களையுடைய; மட மகள் தன் யசோதையின்; வடிவு கொண்ட வடிவழகுடன் வந்த; பொல்லாத வன் பேய்ச்சி மிகவும் பொல்லாத பூதனை; கொங்கை வாங்கி தன் மார்பகத்திலிருந்து பாலை; பெற்று எடுத்த தாய்போல பெற்று எடுத்த தாய்போல; மடுப்ப இவன் வாயில் கொடுக்க; ஆரும் பேணா ஒருவரும் அறியாதவாறு; நஞ்சு உண்டு விஷம் உண்டு; உகந்த பிள்ளை மகிழ்ந்த பிள்ளையை; கண்டீர்! கண்டீர்களோ!
nel on paddy grains; thoduththa tied in rows; neelam malar by karuneydhal flowers; niṛaindha complete; sūzhal in the surroundings; irum beautiful; siṛaiya having wings; vaṇdu beetles-; oliyum sound; nedum wide; kaṇār tham ladies who are having eyes; siṛu small; adi mĕl worn on the feet; silambu anklets-; oliyum sound; mizhaṝu sounding in an incoherent manner; nāngūr in thirunāngūr; thiruththeṝi ambalaththu mercifully residing in the dhivyadhĕṣam named thiruththeṝi ambalam; en being my lord; sem kaṇ māl sarvĕṣvaran who is having reddish eyes; pon golden; thodi having bangles on the forearm; thŏl̤ having shoulders; madam filled with noble qualities; magal̤ than yaṣŏdhāp pirātti-s; vadivu form; koṇda one who came accepting; pollādha evil; van cruel-hearted; pĕychchi pūthanā; kongai (her) bosom; vāngi pulled out from the cloth which was covering it; peṝu eduththa one who gave birth; thāypŏla like the mother; maduppa placed (in his mouth) (at that time); ārum anyone; pĕṇā not desired; nanju poison (in that bosom); uṇdu mercifully consumed; ugandha became joyful; pil̤l̤ai kaṇdīr this is the child.