PT 4.4.3

கண்ணனே திருத்தெற்றியம்பலத்து ஐயன்

1280 படலடைந்தசிறுகுரம்பைநுழைந்துபுக்குப்
பசுவெண்ணெய்பதமாரப்பண்ணைமுற்றும் *
அடலடர்த்தவேற்கண்ணார்தோக்கை பற்றி
அலந்தலைமைசெய்துழலும்ஐயன்கண்டீர் *
மடலெடுத்தநெடுந்தெங்கின்பழங்கள்வீழ
மாங்கனிகள்திரட்டுருட்டாவருநீர்ப்பொன்னி *
திடலெடுத்துமலர்சுமந்துஅங்குஇழியும்நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
PT.4.4.3
1280 paṭal aṭaitta ciṟu kurampai nuzhaintu pukkup *
pacu vĕṇṇĕy patam ārap paṇṇai muṟṟum *
aṭal aṭartta vel kaṇār tokkai paṟṟi *
alantalaimai cĕytu uzhalum aiyaṉ kaṇṭīr **
maṭal ĕṭutta nĕṭun tĕṅkiṉ pazhaṅkal̤ vīzha *
māṅkaṉikal̤ tiraṭṭu uruṭṭā varu nīrp pŏṉṉi *
tiṭal ĕṭuttu malar cumantu aṅku izhiyum nāṅkūrt *
tiruttĕṟṟiyampalattu ĕṉ cĕṅ kaṇ māle-3

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1280. See, Thirumāl with beautiful eyes who entered the small palm-leaf huts of the sharp spear-eyed cowherd women, stole and ate the good butter that they had churned and kept and stole and hid their clothes and upset them stays happily in Thiruthetriyambalam in Nāngur where the Kaveri river brings and piles up mangoes that have dropped from their trees when coconuts have fallen on them, and its water, covered with flowers and flowing between the mounds, is split into small channels.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மடல் எடுத்த பாளைகள் நிறைந்து; நெடும் உயர்ந்துள்ள; தெங்கின் தென்னை மரங்களினின்று; பழங்கள் வீழ காய்கள் கீழே விழ; மாங்கனிகள் திரட்டு மாம்பழத் திரள்களை; உருட்டாவரு உருட்டிக்கொண்டும்; மலர் பல வகைப் பூக்களையடித்து; சுமந்து கொண்டும் பெருகுகின்ற; நீர்ப் பொன்னி காவேரி நதி; திடல் எடுத்து மணல் மேடுகளை; அங்கு இழியும் அழித்துப் பாயும்; நாங்கூர் திருநாங்கூரின்; திருத்தெற்றியம்பலத்து திருத்தெற்றியம்பலத்திலிருக்கும்; என் செங்கண் சிவந்த கண்களையுடைய; மாலே! எம்பெருமானை!; பசு அப்போது கடைந்து வைத்த; வெண்ணெய் வெண்ணெயை; பதம் ஆர அமுது செய்வதற்காக; படல் அடைத்த தட்டியால் அடைத்த; சிறு குரம்பை சிறு குடில்களிலே; நுழைந்து புக்கு நுழைந்து உள்ளே புகுந்து; அடல் அடர்த்த வேற்படைபோன்ற; வேல் கணார் கண்களையுடைய பெண்களின்; தோக்கை சேலையை; பற்றி பிடித்திழுத்து; அலந்தலைமை செய்து துன்பப் படுத்தி; பண்ணை முற்றும் இடைச்சேரி எங்கும்; உழலும் திரிகின்ற; ஐயன் கண்டீர்! ஐயனைக் கண்டீர்களோ!
madal eduththa with abundant branches; nedu tall; thengin from coconut trees; pazhangal̤ fruits; vīzha as they fall (on the mangoes, dropping off due to that); mānganigal̤ mangoes; thirattu as a bunch; uruttā pushing along; varu coming; nīr having water; ponni river kāviri; thidal dunes; eduththu eliminated; angu in those places where there were dunes; malar flowers; sumandhu carrying and arriving; izhiyum flowing; nāngūr in thirunāngūr; thiruththeṝi ambalaththu mercifully residing in the dhivyadhĕṣam named thiruththeṝi ambalam; en being my lord; sem kaṇ māl sarvĕṣvaran who is having reddish eyes; pasu veṇṇey freshly churned butter; padham in the well formed state (before it loses its freshness); āra to mercifully consume; padal adaiththa closed with the door; siṛu small; kurambai in the huts; pukku carefully analysed and entered inside; adal adarththa set out to fight; vĕl sharp like spear; kaṇār the cowherd girls who are having eyes, their; thŏkkai top end of sari (near border); paṝi held (and pulled); alandhalamai torment; seydhu caused; paṇṇai muṝum everywhere in the town of the cowherds; uzhalum roaming around; aiyan kaṇdīr is the lord.