PT 8.9.4

சர்க்கரைக் கனியாம் கண்ணனை நான் அடைந்தேன்

1731 மிக்கானை மறையாய்விரிந்தவிளக்கை * என்னுள்
புக்கானைப் புகழ்சேர்பொலிகின்றபொன்மலையை *
தக்கானைக் கடிகைத்தடங்குன்றின்மிசையிருந்த *
அக்காரக்கனியை அடைந்துய்ந்துபோனேனே. (2)
1731 ## mikkāṉai * maṟai āy virinta vil̤akkai * ĕṉṉul̤
pukkāṉaip * pukazh cer pŏlikiṉṟa pŏṉmalaiyai **
takkāṉaik kaṭikait * taṭaṅ kuṉṟiṉmicai irunta *
akkārak kaṉiyai- * aṭaintu uyntupoṉeṉe-4

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1731. The matchless, highest one, the bright light, sweet as a fruit, the creator of the Vedās who (lord of kannapuram) shines like a golden hill entered my heart. I came to the god of large Thirukkadigai hills, who is sweet as a fruit and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மிக்கானை சிறந்தவனும் உயர்ந்தவனும்; மறையாய் வேதத்தாலே; விரிந்த விளக்கப்பட்டவனும்; விளக்கை விளக்கு போல் பிரகாசிப்பவன்; என்னுள் என்னுள்; புக்கானை புகுந்திருப்பவனும்; புகழ்சேர் புகழுடையவனும்; பொலிகின்ற ஒளிமயமாக பொலிகின்ற; பொன் பொன்; மலையை மலை போன்றவனும்; தக்கானை கிருபை உடையவனும்; கடிகை திருக்கடிகை என்னும்; தடங் குன்றின் பெரிய மலையின்; மிசை சிகரத்தின் மீது; இருந்த இருக்கும்; அக்காரக் கனியை இனிய பெருமானை; அடைந்து அடைந்து; உய்ந்து போனேனே உய்ந்து போனேனே