66

Thiru VithuvakkOdu

திருவித்துவக்கோடு

Thiru VithuvakkOdu

ThiruvichikkOdu, ThiruvanjikkOdu

ஸ்ரீ வித்வகோட்டுவல்லீ ஸமேத ஸ்ரீ உய்ய வந்தான் ஸ்வாமிநே நமஹ

### Thiruvithuvakkodu - About this Place

Thiruvithuvakkodu, also known as Thirumittacode, Thiruviikkode, Thiruveechikkode, and Thirumittacode, is situated near Pattambi in the Palakkad district of Kerala. It is about 3.5 kilometers from the Pattambi railway station on the Shoranur-Kallikkottai route. From Shoranur, travel 16 kilometers towards Guruvayur, + Read more
கேரளாவில் பாலக்காட்டு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு
அருகில் அமைந்துள்ளது. ஷோரனூர் கள்ளிக்கோட்டை மார்க்கத்தில் பட்டாம்பி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஷோரனூரிலிருந்து குருவாயூர் செல்லும் பாதையில் 16 கிலோமீட்டர் சென்று அங்கிருந்து + Read more
Thayar: Sri VithuvakkOttu Valli (Padmapāni Nāchiyār)
Moolavar: Uyya Vandha Perumāl, Abhayapradhan
Utsavar: Abhayapradhan
Vimaanam: Thatvakānchana
Pushkarani: Chakra Theertham
Thirukolam: Nindra (Standing)
Direction: South
Mandalam: Malai Nādu
Area: Kerala
State: Kerala
Sampradayam: Common
Timings: 5:00 a.m. to 9:00 a.m. 4:00 p.m. to 7:00 p.m.
Search Keyword: Vithuvakkodu
Mangalāsāsanam: Kulasekhara Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PMT 5.1

688 தருதுயரம்தடாயேல் உன்சரணல்லால்சரணில்லை *
விரைகுழுவுமலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே! *
அரிசினத்தாலீன்றதாய் அகற்றிடினும் * மற்றவள்தன்
அருள்நினைந்தேயழும் குழவிஅதுவேபோன்றிருந்தேனே. (2)
688 ## தரு துயரம் தடாயேல் உன் * சரண் அல்லால் சரண் இல்லை *
விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ் * வித்துவக்கோட்டு அம்மானே **
அரி சினத்தால் ஈன்ற தாய் * அகற்றிடினும் * மற்று அவள்தன்
அருள் நினைந்தே அழும் குழவி * அதுவே போன்று இருந்தேனே (1)
688. ##
tharu thuyaram thadāyEl * un saraNallāl saraNillai *
viraikuzhuvu malar pozhil soozh * viRRuvakkOttu ammānE *
arisinatthāl eenRa thāy * ahaRRitinum * maRRavaL than-
aruL n^inaindhE azhum kuzhavi * athuvE pOnRirundhEnE (2) 5.1

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

688. O! beloved lord of Vithuvakkodu surrounded with fragrant blooming groves. If you don't redeem my sorrows, I have no other refuge but You. I am like a crying child that seeks the love of the mother who gave birth to it, even if she goes away in anger.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விரை குழுவும் மணம் மிக்க; மலர்ப்பொழில் சூழ் மலர்ச் சோலை சூழப்பட்ட; வித்துவக்கோட்டு வித்துவக் கோட்டு; அம்மானே ஸ்வாமியே; தரு துயரம் தரப்படும் துன்பத்தை; தடாயேல் களைந்திடாவிட்டால்; உன் சரண் அல்லால் உனது திருவடிகளை அன்றி; சரண் இல்லை எனக்கு வேறு புகலில்லை; ஈன்ற தாய் பெற்ற தாய்; அரி சினத்தால் மிக்க கோபத்தால்; அகற்றிடினும் வெறுத்துத் தள்ளினாலும்; மற்று அவள் தன் பின்பும் அந்த தாயின்; அருள் நினைந்தே பரிவைக் கருதியே; அழும் அழுகின்ற; குழவி அதுவே இளங்குழந்தையையே; போன்று இருந்தேனே ஒத்திருந்தேனே

PMT 5.2

689 கண்டாரிகழ்வனவே காதலன்தான்செய்திடினும் *
கொண்டானையல்லால் அறியாக்குலமகள்போல் *
விண்டோய்மதிள்புடைசூழ் விற்றுவக்கோட்டம்மா! நீ *
கொண்டாளாயாகிலும் உன்குரைகழலேகூறுவனே.
689 கண்டார் இகழ்வனவே * காதலன்தான் செய்திடினும் *
கொண்டானை அல்லால் * அறியாக் குலமகள் போல் **
விண் தோய் மதில் புடை சூழ் * வித்துவக்கோட்டு அம்மா * நீ
கொண்டாளாயாகிலும் * உன் குரைகழலே கூறுவனே (2)
689
kaNdār ihazhvanavE * kādhalan thān seythitinum *
koNdānai allāl * aRiyā kula mahaL pOl *
viNthOy madhiL pudaisoozh * viRRuvakkOttu ammā * n^ee-
koNdāLāyāhilum * un kurai kazhalE kooRuvanE 5.2

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

689.O lord of Vithuvakkodu surrounded by forts that touch the sky! Even if the husband does condemnable acts, a woman of noble birth doesn't know anyone else other than him. I am like the wife . Even if You don't possess me, I will surrender only at your feet decorated with jingling anklets.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விண் தோய் மதிள் வானளாவிய மதில்களால்; புடை சூழ் சுற்றிலும் சூழப்பட்ட; வித்துவக்கோட்டு வித்துவக்கோட்டு; அம்மா! அம்மானே!; காதலன் காதலனானவன்; கண்டார் பார்ப்பவர் அனைவரும்; இகழ்வனவே இகழத் தக்க செயல்களையே; தான் செய்திடினும் செய்தாலும்; கொண்டானை மணந்த கணவனை; அல்லால் தவிர ஒருவனை; அறியா அறியாதவளான; குலமகள் உயர் குலத்து மகள்; போல் போல்; நீ நீ என்னை; கொண்டாளாயாகிலும் ஏற்காவிட்டாலும்; உன் குரை உன்னுடைய ஒலிக்கும்; கழலே கழலணிந்த திருவடிகளையே; கூறுவனே சரணமடைவேன்

PMT 5.3

690 மீன்நோக்கும்நீள்வயல்சூழ் விற்றுவக்கோட்டம்மா! * என்
பால்நோக்காயாகிலும் உன்பற்றல்லால்பற்றில்லேன் *
தான்நோக்காது எத்துயரம்செய்திடினும் * தார்வேந்தன்
கோல்நோக்கிவாழும் குடிபோன்றிருந்தேனே.
690 மீன் நோக்கும் நீள் வயல் சூழ் * வித்துவக்கோட்டு அம்மா * என்-
பால் நோக்காயாகிலும் * உன் பற்று அல்லால் பற்று இலேன் **
தான் நோக்காது * எத்துயரம் செய்திடினும் * தார்-வேந்தன்
கோல் நோக்கி வாழும் * குடி போன்று இருந்தேனே (3)
690
meen n^Okkum neeL vayal soozh * viRRuvakkOttu ammā * en-
pāl n^Okkāy āhilum * un paRRallāl paRRillEn *
thān n^Okkāthu * eththuyaram seythidinum * thār vEndhan-
kOl n^Okki vāzhum * kudi pOnRu irundhEnE 5.3

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

690.O! god of Vithuvakkodu surrounded by fertile fields where fish swim ! Even if you don't look at me, I have no refuge except you. I am like the people, who depend on their king's authority and scepter even if he gives them trouble.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மீன் மீன்கள்; நோக்கும் எதிர் நோக்கும்; நீள் வயல் பரந்த வயல்களால்; சூழ் சூழ்ந்த; வித்துவக்கோட்டு வித்துவக்கோட்டு; அம்மா! பெருமானே!; என் பால் என் பக்கலில்; நோக்காயாகிலும் பார்க்காவிடினும்; உன் பற்றல்லால் உன்னைப் பற்றுவதைவிட்டு; பற்று இலேன் வேரொருவரைப் பற்றிலேன்; தார் வேந்தன் மாலை சூடிய அரசன்; தான் தானே மக்களை; நோக்காது காப்பாற்றாமல்; எத்துயரம் எவ்வித துன்பங்களைச்; செய்திடினும் செய்தாலும்; கோல் அவனது செங்கோலையே; நோக்கி நோக்கி; வாழும் வாழும்; குடி போன்று மக்களை; இருந்தேனே ஒத்திருந்தேனே

PMT 5.4

691 வாளாலறுத்துச்சுடினும் மருத்துவன்பால் *
மாளாதகாதல் நோயாளன்போல் * மாயத்தால்
மீளாத்துயர்தரினும் விற்றுவக்கோட்டம்மா! * நீ
ஆளாவுனதருளே பார்ப்பனடியேனே.
691 வாளால் அறுத்துச் சுடினும் * மருத்துவன்பால் *
மாளாத காதல் * நோயாளன் போல் மாயத்தால் **
மீளாத் துயர் தரினும் * வித்துவக்கோட்டு அம்மா * நீ
ஆளா உனது அருளே * பார்ப்பன் அடியேனே (4)
691
vāLāl aRutthu chudinum * marutthuvan pāl *
māLātha kāthal * n^OyāLan pOl māyatthāl *
meeLā thuyar tharinum * viRRuvakkOttammā * n^ee-
āLā unatharuLE * pārppan adiyEnE 5.4

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

691. O my god of Vithuvakkodu! I am like the patient who trusts the doctor and doesn't leave him even if he cuts with a knife and scars him. Even if you cause me pain that I must bear, I am enthralled by you. I am your slave and look only for your grace. and think you are my only friend.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வித்துவக்கோட்டு அம்மா! வித்துவக்கோட்டு அம்மா!; வாளால் அறுத்துச் கத்தியால் அறுத்தாலும்; சுடினும் சூடுபோட்டாலும்; மருத்துவன்பால் அவ்வைத்தியனிடத்தில்; மாளாத காதல் நீங்காத அன்பையுடைய; நோயாளன் போல் நோயாளியைப் போல; மாயத்தால் உன் மாயையினால்; நீ மீளா நீ நீங்காத; துயர் தரினும் துன்பத்தை தந்தாலும்; அடியேனே அடியவனான நான்; ஆளா அடிமை செய்வதற்காக; உனது அருளே உன் கருணையையே; பார்ப்பன் நோக்கியிருப்பேன்

PMT 5.5

692 வெங்கண்திண்களிறடர்த்தாய்! விற்றுவக்கோட்டம்மானே! *
எங்குப்போயுய்கேன்? உன்னிணையடியேயடையலல்லால் *
எங்கும்போய்க்கரைகாணாது எறிகடல்வாய்மீண்டேயும் *
வங்கத்தின்கூம்பேறும் மாப்பறவைபோன்றேனே.
692 வெங்கண்-திண்களிறு அடர்த்தாய் * வித்துவக்கோட்டு அம்மானே *
எங்குப் போய் உய்கேன்? * உன் இணையடியே அடையல் அல்லால் **
எங்கும் போய்க் கரை காணாது * எறிகடல்வாய் மீண்டு ஏயும் *
வங்கத்தின் கூம்பு ஏறும் * மாப் பறவை போன்றேனே (5)
692
veNGgaN thiN kaLiRatartthāy * viRRuvakkOttu ammānE *
eNGguppOy uyhEn * un iNaiyadiyE adaiyalallāl *
eNGgum pOy karai kāNādhu * eRikadalvāy meeNdEyum *
vaNGgatthin koombERum * māppaRavai pOnREnE 5.5

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

692. O my father, lord of Vithuvakkodu who conquered the strong cruel-eyed elephant, where can I go and be saved except beneath your feet? I am like a huge bird that wanders in search of the shore, in all four directions, among the rolling waves of the ocean and, unable to find it, comes back to the mast of a ship.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெங்கண் பயமூட்டும் கண்களையுடைய; திண் களிறு வலிய யானையை; அடர்த்தாய்! வென்றவனே!; வித்துவக்கோட்டு வித்துவக்கோட்டு; அம்மானே! அம்மானே!; உன் இணையடியே உன் இரு திருவடிகளை; அடையல் அல்லால் சரணமடைவதல்லாமல்; எங்குப் போய் எங்கு போய்; உய்கேன்? உய்வேன்?; எறிகடல்வாய் அலை வீசும் கடல் நடுவில்; எங்கும் போய் நான்கு திக்கிலும் பார்த்து; கரைகாணாது கரையைக் காண முடியாமல்; மீண்டு ஏயும் திரும்பி வந்து அங்குள்ள; வங்கத்தின் கப்பலினுடைய; கூம்பு ஏறும் கொடிமரத்தின் மீது அமரும்; மாப் பறவை பெரிய பறவையை; போன்றேனே ஒத்திருந்தேன்

PMT 5.6

693 செந்தழலேவந்து அழலைச்செய்திடினும் * செங்கமலம்
அந்தரஞ்சேர்வெங்கதிரோற்கல்லால் அலராவால் *
வெந்துயர்வீட்டாவிடினும் விற்றுவக்கோட் டம்மா! * உன்
அந்தமில்சீர்க்கல்லால் அகங்குழையமாட்டேனே.
693 செந்தழலே வந்து * அழலைச் செய்திடினும் * செங்கமலம்
அந்தரம் சேர் * வெங்கதிரோற்கு அல்லால் அலராவால் **
வெந்துயர் வீட்டாவிடினும் * வித்துவக்கோட்டு அம்மா * உன்
அந்தமில் சீர்க்கு அல்லால் * அகம் குழைய மாட்டேனே (6)
693
senthazhalE vandhu * azhalai seythitinum * seNGgamalam-
andharam sEr * veNGgathirORku allāl alarāvāl *
vendhuyar veettāvidinum * viRRuvakkOttammā * un-
andhamil seerkkallāl * aham kuzhaiya māttEnE 5.6

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

693. You are my father, the lord of Vithuvakkodu! red lotuses don't bloom if the red-hot fire comes close and emits heat but they open their petals only to the warm rays of the glowing sun. I am like those lotuses. Even if you do not take away my sins and sorrows, my heart only melts for your endless grace and for nothing else.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செந்தழலே சிவந்த நெருப்பு; வந்து அருகில் வந்து; அழலை உஷ்ணத்தை; செய்திடினும் உண்டாக்கினாலும்; செங்கமலம் செந்தாமரை மலர்; அந்தரம் சேர் ஆகாயத்தில் தோன்றும்; வெம் சூடான கிரணங்களுடைய; கதிரோற்கு சூரியனுக்கு; அல்லால் மலருமே யல்லாது; அலராவால் அந்த நெருப்புக்கு மலராது; வித்துவக்கோட்டு வித்துவக்கோட்டு; அம்மா! அம்மா!; வெந்துயர் கொடிய துயரங்களை; வீட்டாவிடினும் நீ போக்காவிட்டாலும்; உன் அந்தமில் உனது எல்லையில்லாத; சீர்க்கு உத்தம குணங்கள்; அல்லால் அல்லாதவற்றுக்கு; அகம் குழைய நெஞ்சுருக; மாட்டேனே மாட்டேன்

PMT 5.7

694 எத்தனையும் வான்மறந்தகாலத்தும் பைங்கூழ்கள் *
மைத்தெழுந்தமாமுகிலே பார்த்திருக்கும்மற்றவைபோல் *
மெய்த்துயர்வீட்டாவிடினும் விற்றுவக்கோட்டம்மா! * என்
சித்தம்மிகவுன்பாலே வைப்பனடியேனே.
694 எத்தனையும் வான் மறந்த * காலத்தும் பைங்கூழ்கள் *
மைத்து எழுந்த மா முகிலே * பார்த்திருக்கும் மற்று அவை போல் **
மெய்த் துயர் வீட்டாவிடினும் * வித்துவக்கோட்டு அம்மா * என்
சித்தம் மிக உன்பாலே * வைப்பன் அடியேனே (7)
694
etthanaiyum vān maRantha * kālatthum paiNGgoozhhaL *
maiththezhuntha māmuhilE * pārtthirukkum maRRavaippOl *
meytthuyar veettāvitinum * viRRuvakkOttammā * en--
sittham miha unpālE * vaippan adiyEnE 5.7

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

694. O my father, lord of Vithuvakkodu, even when it has not rained for a long time, the green crops look at the huge dark clouds floating in the sky hoping it will rain. I am like them. I am your slave. Even if you don't efface my troubles away, my heart will look only for you.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வித்துவக்கோட்டு அம்மா! வித்துவக்கோட்டு அம்மா!; எத்தனையும் வான் எவ்வளவு காலம் வானம்; மறந்த காலத்தும் மழை பெய்யாத காலத்திலும்; பைங்கூழ்கள் பசுமையான பயிர்கள்; மைத்து எழுந்த கருமை நிறத்துடன் எழுகின்ற; மாமுகிலே மேகங்களையே; பார்த்திருக்கும் எதிர்பார்த்திருக்கும்; மற்று அவைபோல் அப்பயிர்கள் போல; மெய்த்துயர் கொடிய துயரங்களை; வீட்டாவிடினும் நீ வீழ்த்தா விட்டாலும்; அடியேனே அடியேனான நான்; என் சித்தம் மிக என் மனதை மிகவும்; உன் பாலே உன்னிடத்திலேயே; வைப்பன் செலுத்துவேன்

PMT 5.8

695 தொக்கிலங்குயாறெல்லாம் பரந்தோடி * தொடுகடலே
புக்கன்றிப்புறம்நிற்கமாட்டாத மற்றவைபோல் *
மிக்கிலங்குமுகில்நிறத்தாய்! விற்றுவக்கோட்டம்மா! * உன்
புக்கிலங்குசீரல்லால் புக்கிலன்காண்புண்ணியனே!
695 தொக்கு இலங்கி யாறெல்லாம் * பரந்து ஓடி * தொடுகடலே
புக்கு அன்றிப் புறம்நிற்க * மாட்டாத மற்று அவை போல் **
மிக்கு இலங்கு முகில்-நிறத்தாய் * வித்துவக்கோட்டு அம்மா * உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் * புக்கிலன் காண் புண்ணியனே (8)
695
thokkilaNGgi yāRellām * parandhOdi * thodu kadalE-
pukkanRi puRam n^iRka * māttādha maRRavai pOl *
mikkilaNGgu muhil n^iRatthāy * viRRuvakkOttammā * un-
pukkilaNGgu seerallāl * pukkilan kāN puNNiyanE 5.8

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

695. O my father, lord of Vithuvakkodu, the rivers that swell, flood and flow everywhere cannot stay where they are but must join the ocean. I wish to join you as those rivers join the ocean. O virtuous one who have the color of a dark shining cloud. See, I have no way to find refuge except to come to you for your grace.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொக்கு இலங்கி திரண்டு வருகிற; ஆறெல்லாம் நதிகளெல்லாம்; பரந்து ஓடி பரவியோடி; தொடுகடலே ஆழ்ந்த கடலிலே; புக்கு சேர்வதன்றி; அன்றிப் புறம் வேறிடத்தே; நிற்க மாட்டாத புகுந்து நிற்கமாட்டாதவை; மிக்கு இலங்கு மிகவும் பிரகாசமான; முகில் மேகம் போன்ற கரிய; நிறத்தாய்! நிறத்தவனே!; வித்துவக்கோட்டு வித்துவக்கோட்டு; அம்மா! அம்மா!; புண்ணியனே! புண்ணிய பிரானே!; மற்று அவை போல் அந்த ஆறுகள் போல; புக்கு இலங்கு புகுந்து பிரகாசிக்கின்ற; உன் சீர் உன் சீர்மையான குணங்கள்; அல்லால் அல்லாதவை எதிலும்; புக்கிலன் காண் ஈடுபடேன்

PMT 5.9

696 நின்னையேதான்வேண்டி நீள்செல்வம்வேண்டாதான்
தன்னையே * தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால் *
மின்னையேசேர்திகிரி விற்றுவக்கோட்டம்மா! *
நின்னையேதான்வேண்டி நிற்பனடியேனே.
696 நின்னையே தான் வேண்டி * நீள் செல்வம் வேண்டாதான் *
தன்னையே தான் வேண்டும் * செல்வம்போல் மாயத்தால் **
மின்னையே சேர் திகிரி * வித்துவக்கோட்டு அம்மானே *
நின்னையே தான் வேண்டி * நிற்பன் அடியேனே (9)
696
ninnaiyE thān vENdi * neeL selvam vENdāthān *
thannaiyE thān vENdum * selvam pOl māyaththāl *
minnaiyE sEr thihiri * viRRuvakkOttammāne *
ninnaiyE thān vENdi * niRpan adiyEnE 5.9

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

696. O lord of Vithuvakkodu, with a glowing discus (chakra) bright as lightning in your hand! Wealth seeks the one who doesn't desire riches but seeks only You. I am like the riches a true seeker ignores. Even if You ignore me, I will come to You. You are my refuge.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின்னையே சேர் மின்னலைப் போல் ஒளிரும்; திகிரி சக்கராயுதத்தையுடைய; வித்துவக்கோட்டு வித்துவக்கோட்டு; அம்மானே! அம்மானே!; நின்னையேதான் உன்னையே; வேண்டி விரும்பி; நீள் செல்வம் அழிவற்ற செல்வத்தை; வேண்டாதான் விரும்பாதவனை; தன்னையே தான் தானாகவே; வேண்டும் வந்து சேர விரும்பும்; செல்வம் போல் செல்வம் போல; மாயத்தால் என்னை நீ புறக்கணித்தாலும்; நின்னையே உன்னையே; தான் வேண்டி அடையவேண்டி; நிற்பன் அடியேனே நிற்பேன் அடியேன்

PMT 5.10

697 விற்றுவக்கோட்டம்மா! நீவேண்டாயேயாயிடினும் *
மற்றாரும்பற்றிலேனென்று அவனைத்தாள்நயந்த *
கொற்றவேல்தானைக் குலசேகரன்சொன்ன *
நற்றமிழ்பத்தும்வல்லார் நண்ணார்நரகமே. (2)
697 ## வித்துவக்கோட்டு அம்மா * நீ வேண்டாயே ஆயிடினும் *
மற்று ஆரும் பற்று இலேன் என்று * அவனைத் தாள் நயந்து **
கொற்ற வேல்-தானைக் * குலசேகரன் சொன்ன *
நற்றமிழ் பத்தும் வல்லார் * நண்ணார் நரகமே (10)
697. ##
viRRuva kOttammā * n^ee vENdāyE āyidinum *
maRRārum paRRillEn enRu * avanai thāL n^ayandha *
koRRa vEl thānai * kulasEkaran sonna *
naRRamizh paththum vallār * naNNār narahamE (2) 5.10

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

697 Kulasekharan, with a victorious spear composed ten good Tamil pāsurams, expressing his deep love for Thirumāl , the lord of Vithuvakkodu, saying " Even if you do not give me your grace I have no other refuge than your feet. ” Those who learn and recite these ten excellent Tamil pāsurams of Kulasekharan will never go to hell.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வித்துவக்கோட்டு வித்துவக்கோட்டு; அம்மா! அம்மா!; நீ வேண்டாயே நீ என்னை; ஆயிடினும் விரும்பாவிடினும்; மற்று ஆரும் மற்ற எவரிடமும்; பற்று பற்று; இலேன் என்று கொள்ளமாட்டேன் என்று; அவனை அப்பிரானது; தாள் பாதங்களிலேயே; நயந்து ஆசை கொண்டு; கொற்ற வெற்றியைத் தரும்; வேல் வேலையும்; தானை சேனையையுமுடைய; குலசேகரன் குலசேகரர்; சொன்ன அருளிச்செய்த; நற்றமிழ் நல்ல தமிழ்ப்பாடல்கள்; பத்தும் பத்தையும்; வல்லார் அனுஸந்திப்பவர்கள்; நரகமே நரகம்; நண்ணார் சேரமாட்டார்கள்