PT 4.6.7

பாண்டவ தூதனானவன் உறைவிடம் இது

1304 மூத்தவற்குஅரசுவேண்டி முன்புதூதெழுந்தருளி *
மாத்தமர்பாகன்வீழ மதகரிமருப்புஒசித்தாய் *
பூத்தமர்சோலையோங்கிப் புனல்பரந்தொழுகும்நாங்கை *
காத்தனே! காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
PT.4.6.7
1304 mūttavaṟku aracu veṇṭi *
muṉpu tūtu ĕzhuntarul̤i *
māttu amar pākaṉ vīzha *
mata kari maruppu ŏcittāy **
pūttu amar colai oṅkip *
puṉal parantu ŏzhukum nāṅkai *
kāttaṉe kāval̤am taṇ
pāṭiyāy * kal̤aikaṇ nīye-7

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1304. O lord, you went to Duryodhanā's assembly as a messenger and asked for a part of the kingdom for the Pāndavās. You killed the mahout and broke the tusks of the angry elephant Kuvalayābeedam. You stay in Kāvalambādi in Nāngai where groves flourish and bloom with abundant flowers that spread their fragrance everywhere and the water of the Kāviri flows all over the land. Take away our troubles.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன்பு முன்பொரு சமயம்; மூத்தவற்கு தருமபுத்திரனுக்கு; அரசு வேண்டி அரசளிக்க விரும்பி; தூது எழுந்தருளி தூது சென்றவனே!; மாத்து அமர் யானையின் மீது அமர்ந்த; பாகன் வீழ பாகன் கீழே விழ; மத கரி யானையின் கொம்பை; மருப்பு ஒசித்தாய் முறித்தவனே!; பூத்து அமர் பூத்துக் குலுங்கும்; சோலை ஓங்கி சோலைகள் ஓங்கி வளர; புனல் பரந்து நீர் நாலாபக்கமும்; ஒழுகும் பாய்ந்து ஓடும்; நாங்கை திருநாங்கூரின்; தண் குளிர்ந்த சோலைகளையுடைய; காவளம் பாடியாய்! திருக்காவளம்பாடியிலிருக்கும்; கடவுளே! கடவுளே!; களைகண் நீயே நீயே காப்பாற்ற வேண்டும்
mūththavaṛku for dharma puthra, who is the eldest; arasu vĕṇdi desired for (to give) kingdom; munbu previously; thūdhu ezhundharul̤i went as messenger; māththu on elephant; amar sitting firm; pāgan mahout; vīzha to fall down and die; madham fleshy; kari kuvalayāpīdam-s; maruppu tusk; osiththāy oh one who broke!; pū amar filled with flowers; sŏlai gardens; ŏngi being tall; punal water; parandhu spread (all over the garden); ozhugum flowing; nāngai in thirunāngūr; kāval̤am thaṇ pādiyāi ŏh one who is present in the dhivyadhĕṣam named thirukkāval̤ambādi!; kāththanĕ ŏh protector!; nīyĕ kal̤aigaṇ ẏou should be the protector.