PT 4.6.1

திருக்காவம்பாடி:கோபாலஸ்வாமி விஷயம்

1298 தாவளந்துஉலகமுற்றும் தடமலர்ப்பொய்கைபுக்கு *
நாவளம்நவின்றிங்கேத்த நாகத்தின்நடுக்கந்தீர்த்தாய் *
மாவளம்பெருகி மன்னும்மறையவர்வாழும்நாங்கை *
காவளம்பாடிமேய கண்ணனே! களைகண்நீயே. (2)
PT.4.6.1
1298 ## tā al̤antu ulakam muṟṟum *
taṭa malarp pŏykai pukku *
nā val̤am naviṉṟu aṅku etta *
nākattiṉ naṭukkam tīrttāy **
mā val̤am pĕruki maṉṉum *
maṟaiyavar vāzhum nāṅkai *
kāval̤ampāṭi meya *
kaṇṇaṉe kal̤aikaṇ nīye-1

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1298. O Kannā, you measured the earth and the sky with your feet at the sacrifice of king Mahabali. You came to the large blooming pond, killed the crocodile and saved Gajendra the elephant when he worshiped you and called you. You stay in Kāvalambādi where wealth flourishes and Vediyars recite the Vedās. Take away our troubles.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகம் முற்றும் உலகமெல்லாம்; தா அளந்து சுற்றித்திரிந்து; தட மலர் பெரிய பூக்களையுடைய; பொய்கை ஒரு தடாகத்தில்; புக்கு இறங்கி; நா வளம் நாவுக்கு இனிய; நவின்று திருநாமங்களை சொல்லி; அங்கு ஏத்த துதிக்க; நாகத்தின் யானையின்; நடுக்கம் அச்சத்தை; தீர்த்தாய்! போக்கினவனே!; மா வளம் அதிக செல்வம்; பெருகி மன்னும் பெருகி இருக்கும்; மறையவர் வாழும் வைதிகர்கள் வாழும்; நாங்கை திருநாங்கூரின்; காவளம்பாடி மேய திருக்காவளம்பாடியிலிருக்கும்; கண்ணனே! கண்ணனே!; களைகண் நீயே நீயே காப்பாற்ற வேண்டும்
ualgam muṝum (ṣrī gajĕndhrāzhwān) all worlds; thāval̤andhu hopped around (seen at that time); thadam huge; malar having flower; poygai in the pond; pukku entered; angu in that pond; for the tongue; val̤am divine name which is decoration; navinṛu recited; ĕththa as it praised; nāgaththin (that) elephant-s; nadukkam fear; thīrththāy oh one who eliminated!; mā val̤am great wealth; perugi grew; mannu remaining fixed; maṛaiyavar brāhmaṇas; vāzhum living joyfully; nāngai in thirunāngūr; kāval̤ambādi in the dhivyadhĕṣam named thirukkāval̤ambādi; mĕya one who is residing firmly; kaṇṇanĕ ŏh krishṇa!; nīyĕ you who are partial towards devotees; kal̤aigaṇ should be the protector