PT 4.6.9

திருக்காவளந்தண்பாடியானே நமக்குக் கதி

1306 சந்தமாய்ச்சமயமாகிச் சமயவைம்பூதமாகி *
அந்தமாய்ஆதியாகி அருமறையவையும் ஆனாய்! *
மந்தமார்பொழில்கள்தோறும் மடமயிலாலும்நாங்கை *
கந்தமார்காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
PT.4.6.9
1306 cantam āyc camayam ākic *
camaya aim pūtam āki *
antam āy āti āki *
aru maṟai-avaiyum āṉāy **
mantam ār pŏzhilkal̤toṟum *
maṭa mayil ālum nāṅkai *
kantam ār kāval̤am taṇ
pāṭiyāy * kal̤aikaṇ nīye-9

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1306. O lord, you are the beginning, the end, the sky, wind, water, fire and religion, the rhythm in music and all the wonderful Vedās. You stay in the Kāvalambādi temple in Nāngai where beautiful peacocks dance in the fragrant groves. Take away our troubles.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சந்தமாய் சந்தங்களுக்கும் அவைகளின்; சமயமாகி இலக்கணங்களுக்கும் காரணமானவனே!; சமய ஐம் பூதம் பஞ்ச பூதங்களுக்கும்; ஆகி காரணமானவனே!; அந்தமாய் உலக முடிவுக்கும்; ஆதி யாகி உற்பத்திக்கும் காரணமானவனே!; அருமறை அவையும் வேதங்களுக்கும்; ஆனாய் காரணமானவனே!; மந்தமார் பாரிஜாத மரங்களின்; பொழில்கள் தோறும் சோலைகளில்; மடமயில் ஆலும் பெண் மயில்களாடும்; கந்தமார் மணம் மிக்க; நாங்கை திருநாங்கூரின்; தண் குளிர்ந்த சோலைகளையுடைய; காவளம் பாடியாய்! திருக்காவளம்பாடியிலிருக்கும்; கடவுளே! கடவுளே!; களைகண் நீயே நீயே காப்பாற்ற வேண்டும்
sandhamāy being the controller of chandhas (meter in poems); samayamāgi being the controller of the order (that is, count of letters) matching that chandhas; samayam the orderly nature; aimbūdhamāgi being the controller of the five elements; andhamāy being the cause of deluge; ādhiyāgi being the cause of creation; avai revealing those principles; aru difficult to know the meanings; maṛaiyum ānāy ŏh you who are the controller of vĕdhams!; mandham mandhāra trees; ār filled; pozhilgal̤ thŏṛum in all the gardens; madam mayil humble peahens; ālum dancing; nāngai in thirunāngūr; gandham ār very fragrant; kāval̤am thaṇ pādiyāi ŏh one who is present in the dhivyadhĕṣam named thirukkāval̤ambādi!; nīyĕ kal̤aigaṇ ẏou should be the protector.