PT 4.6.3

சுக்கிரீவனுக்கு அரசு அளித்தவன் இடம் இது

1300 உருத்தெழுவாலிமார்வில் ஓருகணை உருவவோட்டி *
கருத்துடைத்தம்பிக்கு இன்பக்கதிர்முடியரசு அளித்தாய் *
பருத்தெழுபலவும்மாவும் பழம்விழுந்தொழுகும்நாங்கை *
கருத்தனே! காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
PT.4.6.3
1300 uruttu ĕzhu vāli mārvil *
ŏru kaṇai uruva oṭṭi *
karuttu uṭait tampikku * iṉpak
katir muṭi aracu al̤ittāy **
paruttu ĕzhu palavum māvum *
pazham vizhuntu ŏzhukum nāṅkai *
karuttaṉe kāval̤am taṇ
pāṭiyāy * kal̤aikaṇ nīye-3

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1300. You shot your arrow through Vāli’s chest when he came to fight with you angrily and killed him and you gave the kingdom and the shining crown of Kishkinda to his brother, good-natured Sugrivan. You stay in Kāvalambādi in Nāngai where mango fruits ripening on the trees fall on jackfruits and the juice of both fruits flows on the ground. Take away our troubles.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உருத்து கோபத்துடன்; எழு வாலி வந்த வாலியின்; மார்வில் மார்பிலே தைக்கும்படி; ஓரு கணை ஒரு பாணத்தை; உருவ ஓட்டி பிரயோகித்து; கருத்து உடை கருத்து உடைய; தம்பிக்கு அவன் தம்பிக்கு; இன்ப இன்பமயமான; கதிர் ஒளிபொருந்திய; முடி அரசு கிரீடத்தையும் ராஜ்யத்தையும்; அளித்தாய் அளித்தாய்; பருத்து எழு பருத்த; பலவும் பலாப்பழங்களும்; மாவும் பழம் மாம்பழங்களும்; விழுந்து கீழேவிழுந்து; ஒழுகும் தேன் வெள்ளமிடும்; நாங்கை திருநாங்கூரின்; தண் குளிர்ந்த சோலைகளையுடைய; காவளம் பாடியாய்! திருக்காவளம்பாடியிலிருக்கும்; கருத்தனே! கர்த்தாவானவனே!; களைகண் நீயே நீயே காப்பாற்ற வேண்டும்
ezhu rising; uruththu having anger; vāli vāli-s; mārvil on the chest; oru kaṇai an arrow; uruva to pierce well; ŏtti shot; karuththudai being the target of your divine heart; thambikku sugrīva mahārajar who is the brother (of such vāli); inbam to cause joy; kadhir radiant; mudi crown; arasu and the kingdom; al̤iththāy oh you who mercifully granted!; paruththu being stout; ezhu sprouting; palavum jack fruit tree-s; māvum mango trees-; pazham fruits; vizhundhu fell down; ozhugum honey is flooding; nāngai in thirunāngūr; kāval̤am thaṇ pādiyāi ŏh one who is present in the dhivyadhĕṣam named thirukkāval̤ambādi!; karuththanĕ ŏh you who are skillful!; nīyĕ kal̤aigaṇ ẏou should be the protector.