PT 4.6.5

காளியன்மீது நடனமாடியவன் தங்கும் இடம்

1302 படவரவுச்சிதன்மேல் பாய்ந்துபன்னடங்கள்செய்து *
மடவரல்மங்கைதன்னை மார்வகத்திருத்தினானே *
தடவரைதங்குமாடத் தகுபுகழ்நாங்கைமேய *
கடவுளே! காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
PT.4.6.5
1302 paṭa aravu ucci-taṉmel *
pāyntu pal naṭaṅkal̤cĕytu *
maṭavaral maṅkai-taṉṉai *
mārvakattu iruttiṉāṉe **
taṭa varai taṅku māṭat *
taku pukazh nāṅkai meya *
kaṭavul̤e kāval̤am taṇ
pāṭiyāy * kal̤aikaṇ nīye-5

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1302. O lord, you climbed on the head of the snake Kālingan and danced on it and you embrace beautiful Lakshmi on your chest. You stay in Kāvalambādi in famous Nāngai filled with palaces as large as hills. Take away our troubles.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பட அரவு படங்களையுடைய; உச்சி தன் காளிய நாகத்தின் தலை; மேல் பாய்ந்து மேல் பாய்ந்து; பல் நடங்கள் செய்து பல நடனங்கள் ஆடி; மடவரல் மடமைக் குணம் வாய்ந்த; மங்கை தன்னை திருமகளை; மார்வகத்து மார்பில்; இருத்தினானே! இருத்தினவனே!; தட வரை பெரிய மலைகள் போன்ற; தங்கு மாட மாளிகைகளையுடையதும்; தகு புகழ் தகுந்த புகழையுடையதுமான; நாங்கை மேய நாங்கை திருநாங்கூரின்; தண் குளிர்ந்த சோலைகளையுடைய; காவளம் பாடியாய்! திருக்காவளம்பாடியிலிருக்கும்; கடவுளே! கடவுளே!; களைகண் நீயே நீயே காப்பாற்ற வேண்டும்
padam having (expanded) hoods; aravu kāl̤iyan-s; uchchi than mĕl on the head; pāyndhu jumped; pal nadangal̤ many different types of dances; seydhu performed; madavaral having humility; mangai thannai eternally youthful periya pirātti; mārvagaththu on his divine chest; iruththinānĕ oh you who have eternally placed!; thadam vast; varai like mountains; mādam mansions; thangu present; thagu apt; pugazh glory; mĕya is present; nāngai in thirunāngūr; kāval̤am thaṇ pādiyāi ŏh one who is present in the dhivyadhĕṣam named thirukkāval̤ambādi!; kadavul̤ĕ ŏh lord of all!; nīyĕ kal̤aigaṇ ẏou should be the protector.