Chapter 7

Āzhvār calling himself as a servant's servant of the devotee of the Lord - (பயிலும் சுடர்)

அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்
Āzhvār extols those with the attribute to surrender to Bhagavān and are a servant to Him. Even better than that is to serve those devotees who are in servitude to Him. Āzhvār explains paramapurushārtham known as bhagāvatha seshattavam through these hymns.
பகவானுக்கு அடிமை செய்துகொண்டு அடியவராக இருப்பது மிகவும் ஏற்றம். அவனடியார்களுக்கு அடிமை செய்துகொண்டு அடியவராக இருப்பது அதைவிட ஏற்றம். பாகவத சேஷத்வம் என்கிற பரமபுருஷார்த்தத்தை ஆழ்வார் இப்பகுதியில் அருளிச்செய்கிறார். பகவானிடம் அடியார்க்கு அடியாரை வணங்குவதில் விசேஷம் எனல்
Verses: 3079 to 3089
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: நாட்டம்
Timing: 12-1.12 PM
Recital benefits: will not be born again
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 3.7.1

3079 பயிலுஞ்சுடரொளிமூர்த்தியைப் பங்கயக்கண்ணனை *
பயிலவினிய நம்பாற்கடல்சேர்ந்தபரமனை *
பயிலுந்திருவுடையார் யவரேலுமவர்கண்டீர் *
பயிலும்பிறப்பிடைதோறு எம்மையாளும்பரமரே. (2)
3079 ## பயிலும் சுடர் ஒளி மூர்த்தியைப் * பங்கயக் கண்ணனை
பயில இனிய * நம் பாற்கடல் சேர்ந்த பரமனை **
பயிலும் திரு உடையார் * எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு * எம்மை ஆளும் பரமரே (1)
3079 ## payilum cuṭar ŏl̤i mūrttiyaip * paṅkayak kaṇṇaṉai
payila iṉiya * nam pāṟkaṭal cernta paramaṉai **
payilum tiru uṭaiyār * ĕvarelum avar kaṇṭīr
payilum piṟappiṭai toṟu * ĕmmai āl̤um paramare (1)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-30

Divya Desam

Simple Translation

Those who are endowed with the eternal wealth of God-love, regardless of their descent, meditate on our Supreme Lord, who rests on the milk-ocean. The Lord is lotus-eyed and possesses a form of solid splendor and growing sweetness. Such devotees will hold me as their vassal in all the births to come.

Explanatory Notes

(i) The Āzhvār says that all those who are steeped in the enjoyment of the Supreme Lord’s auspicious traits and enthralling form, are his masters, irrespective of their parentage. These devotees have now been accorded by the Āzhvār the position of eminence attributed earlier to the Supreme Lord alone.

(ii) The lotus-eyed: This special feature proclaims the Lord’s transcendent + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பயிலும் சுடர் ஒளி ஒளியையுடைய; மூர்த்தியை ஒளிப்பிழம்பானவனும்; பங்கயக் கண்ணனை தாமரைக்கண்ணனும்; பயில அடியார்களுக்குப் பழக; இனிய மிக இனியவனானவனும்; நம் பாற்கடல் நமக்காகப் பாற்கடலில்; சேர்ந்த பரமனை கண்வளர்ந்த பரமனை; பயிலும் பெரும் செல்வமாகப் பெற; திரு உடையார் அடியார்கள் பாக்யமுடையவர்கள்; எவரேலும் அப்படிப்பட்டவர்களே எவராகிலும்; பிறப்பிடைதோறு எப்பிறவியையுடையவராகிலும்; பயிலும் எங்களுக்கு மேன்மேலும் செறிந்து வரும்; எம்மை ஆளும் எங்களை அடிமை கொள்ளும்; பரமரே அவர் கண்டீர் சிறந்த தலைவர்கள் ஆவர்
payilum abundant; sudar having radiance (such as saundharyam (overall beauty), lāvaṇyam (beauty of specific parts) etc); ol̤i mūrththiyai having divine form which is an embodiment of splendour; pangayak kaṇṇanai having pūṇdarīkākshathvam (being lotus-eyed which is indication of supremacy over all); payila iniya being perfectly enjoyable for those who are fully engaged (in this beauty); nam for the devotees; pāṛkadal in the divine milk ocean; sĕrndha one who mercifully rests; paramanai having supremacy in the enjoyable nature of form and qualities; payilum being together and eternally engaged in; thiru wealth; udaiyār those who have; evarĕlum even if they lack (high birth, knowledge, actions); avar in that same state; payilum (for us, in ever repeating) many; piṛappidai thŏṛu in births; emmai us; āl̤um having as servitors; paramar kaṇdīr they are the supreme masters

TVM 3.7.2

3080 ஆளும்பரமனைக்கண்ணனை ஆழிப்பிரான்தன்னை *
தோளுமோர்நான்குடைத் தூமணிவண்ணனெம்மான் தன்னை *
தாளும்தடக்கையும்கூப்பிப் பணியுமவர்கண்டீர் *
நாளும்பிறப்பிடைதோறு எம்மையாளுடைநாதரே.
3080 ஆளும் பரமனைக் கண்ணனை * ஆழிப் பிரான் தன்னை
தோளும் ஓர் நான்கு உடைத் * தூ மணி வண்ணன் எம்மான் தன்னை **
தாளும் தடக் கையும் கூப்பிப் * பணியும் அவர் கண்டீர்
நாளும் பிறப்பிடைதோறு * எம்மை ஆளுடை நாதரே (2)
3080 āl̤um paramaṉaik kaṇṇaṉai * āzhip pirāṉ taṉṉai
tol̤um or nāṉku uṭait * tū maṇi vaṇṇaṉ ĕmmāṉ taṉṉai **
tāl̤um taṭak kaiyum kūppip * paṇiyum avar kaṇṭīr
nāl̤um piṟappiṭaitoṟu * ĕmmai āl̤uṭai nātare (2)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

They are the Masters who enslave me daily and throughout lifetimes. They prostrate themselves with joined palms and legs before Kaṇṇaṉ, the Supreme Lord and great Benefactor. He holds the discus and possesses the hue of an immaculate blue gem, with unmatched four shoulders, reigning as the Chief.

Explanatory Notes

(i) The Āzhvār affirms that those that are swayed by the Lord’s exquisite charm, in all its details, are his perennial masters.

(ii) Reigning Chief: If the Lord’s devotees are the Āzhvār’s masters, how could the Lord be called the reigning Chief? This prima facie contradiction is resolved by holding that the Lord’s reign over His subjects is directed towards reclaiming + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆளும் பரமனை நம்மை ஆளும் பரமனை; கண்ணனை கண்ணனை; ஆழி சக்கரத்தை; பிரான் தன்னை கையிலுடையவனை; ஒர் நான்கு உடை ஒப்பற்ற நான்கு; தோளும் தோள்கள் உடையவனை; தூமணி தூய நீலரத்தினம் போன்ற; வண்ணன் வடிவையுடையவனை; எம்மான் தன்னை எம்பெருமானை; தாளும் தடக் கையும் காலையும் கையையும்; கூப்பிப் பணியும் கூப்பி வணங்கும்; அவர் கண்டீர் அடியார்களே; நாளும் என்றும்; பிறப்பிடைதோறு பிறவி தோறும்; எம்மை ஆளுடை எம்மை அடிமையாக உடைய; நாதரே தலைவர்கள் ஆவர்
āl̤um paramanai being the one who has the superior qualities such as ṣeelam (disposition) etc to enslave (his devotees); kaṇṇanai being the one who has simplicity in his incarnations which reveal that; āzhip pirān thannai (to protect his devotees, even in his incarnations) being the one who has the sudharṣana chakra (disc); ŏr unparalleled; nāngu thŏl̤um udai being the one with four shoulders; thū enjoyable (for them); maṇi distinguished like a blue gem stone (which can be tied in one-s cloth and controlled); vaṇṇan being the one with the form; emmān thannai my lord who enslaved me (by manifesting such form); thadam thāl̤um kaiyum kūppi folding their hands and legs revealing their submissive nature; paṇiyum avar kaṇdīr those who offer their obeisances; nāl̤um forever; piṛappidai thŏru in many births to come; emmai āl̤ udai those who have me as their servant; nādhar nāthabhūthar (lord)

TVM 3.7.3

3081 நாதனைஞாலமும்வானமுமேத்தும் நறுந்துழாய்ப்
போதனை * பொன்நெடுஞ்சக்கரத்து எந்தைபிரான் தன்னை *
பாதம்பணியவல்லாரைப் பணியுமவர்கண்டீர் *
ஓதும்பிறப்பிடைதோறு எம்மையாளுடையார்களே.
3081 நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் * நறும் துழாய்ப் போதனை
பொன் நெடும் சக்கரத்து * எந்தை பிரான் தன்னை **
பாதம் பணிய வல்லாரைப் * பணியும் அவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு * எம்மை ஆளுடையார்களே (3)
3081 nātaṉai ñālamum vāṉamum ettum * naṟum tuzhāyp potaṉai
pŏṉ nĕṭum cakkarattu * ĕntai pirāṉ taṉṉai **
pātam paṇiya vallāraip * paṇiyum avar kaṇṭīr
otum piṟappiṭaitoṟu * ĕmmai āl̤uṭaiyārkal̤e (3)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-1, 18-67

Simple Translation

Birth after birth, they will be my masters, prostrating at the feet of my Liege-Lord, who holds the magnificent golden Discus and wears a fragrant tuḷaci garland. He is adored by those in both SriVaikuntam and Earth.

Explanatory Notes

(i) The Āzhvār declares that those God-lovers, who are lost in enjoyment of the Lord’s sinewy shoulders and the lovely tuḷaci garland adorning them, are his perpetual masters.

As a matter of fact, this fascinating combination of shoulder and garland attracts the denizens of spiritual world and Earth alike. Even those who are out to denigrate Godhead, get enthralled + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாதனை எல்லோர்க்கும் ஸ்வாமியான எம்பெருமானை; ஞாலமும் உலகத்தவர்களும்; வானமும் நித்யஸூரிகளும்; ஏத்தும் துதித்து வணங்கும்; நறுந்துழாய் மணம் கமழும் துளசி; போதனை மாலை அணிந்தவனை; பொன் நெடும் பொன் போன்ற அழகிய; சக்கரத்து எந்தை சக்கரத்தை உடைய; பிரான் தன்னை எம்பெருமானின்; பாதம் பணிய திருவடிகளை வணங்கும்; வல்லாரை வல்லவர்களை; பணியும் அவர் வணங்குபவர்களுக்கு; கண்டீர் அடிமைப்பட்ட பாகவதர்களே; ஓதும் சாஸ்த்திரங்களில் கூறப்பட்ட; பிறப்பிடை தோறு பிறவிகள் தோறும்; எம்மை எமக்கு; ஆளுடையார்களே தலைவர்கள் ஆவர்
nādhanai being the unconditional master; gyālamum (the ignorant) samsāris [worldly people who are residents of the material realm]; vānamum (the wise) nithyasūris [eternally free souls who are residents of the spiritual realm], without any distinction; ĕththum as glorified by; naṛum thuzhāyp pŏdhanai being decorated with very fragrant thiruththuzhāy (thul̤asi) garland; pon good-looking; nedum overwhelming (with sweetness); chakkaraththu with the beauty of his divine hands and sudharṣana chakra (disc); endhai pirān thannai one who is my infinite lord; pādham in the lotus feet; paṇiya vallārai those who bow; paṇiyum avar kaṇdīr those who bow and serve them; ŏdhum spoken (in ṣāsthram); piṛappu idai thŏṛu in various births; emmai us; āl̤udaiyārgal̤ who have as servitors

TVM 3.7.4

3082 உடையார்ந்தவாடையன் கண்டிகையன் உடை நாணினன் *
புடையார்பொன்னூலினன் பொன்முடியன், மற்றும் பல்கலன் *
நடையாவுடைத்திருநாரணன் தொண்டர்தொண்டர் கண்டீர் *
இடையார்பிறப்பிடைதோறு எமக்கெம்பெருமக்களே.
3082 உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் * உடை நாணினன்
புடை ஆர் பொன் நூலினன் * பொன் முடியன் மற்றும் பல்கலன் **
நடையா உடைத் திருநாரணன் * தொண்டர் தொண்டர் கண்டீர்
இடை ஆர் பிறப்பிடைதோறு * எமக்கு எம் பெருமக்களே (4)
3082 uṭai ārnta āṭaiyaṉ kaṇṭikaiyaṉ * uṭai nāṇiṉaṉ
puṭai ār pŏṉ nūliṉaṉ * pŏṉ muṭiyaṉ maṟṟum palkalaṉ **
naṭaiyā uṭait tirunāraṇaṉ * tŏṇṭar tŏṇṭar kaṇṭīr
iṭai ār piṟappiṭaitoṟu * ĕmakku ĕm pĕrumakkal̤e (4)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

In every birth without exception, they are far superior to us, the vassals of the vassals of Tiru Nāraṇaṉ. He is exquisitely charming, smartly clad, and adorned with many jewels, including a golden waistband, necklace, sacred thread, and a beautiful crown. These and many other natural and fitting adornments highlight His splendor.

Explanatory Notes

Here the Āzhvār avers that the vassals of the vassals of the Lord, lost in admiration of His natural beauty, imparting special lustre to the numerous jewels on His person, each one of which, from head to foot, steals the hearts of the beholders, are any day superior to him not only in this birth but in all future births also.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உடை ஆர்ந்த பொருந்திய உடைகள்; ஆடையன் அணிந்தவனும்; கண்டிகையன் ஆபாரணங்கள் அணிந்தவனும்; உடை உடைகளின் மேல்; நாணினன் ஒரு நாண் அணிந்தவனும்; புடையார் ஒரு பக்கத்தில்; பொன் நூலினன் பொன் பூணூல் அணிந்தவனும்; பொன் முடியன் பொன் கிரீடமணிந்தவனும்; மற்றும் மேலும் பல; பல்கலன் அணிகலன்களை உடையவனும்; நடையா உடை இயற்கையாகத் தோன்றுபவனும்; திருநாரணன் எம்பெருமானான திருநாராயணனின்; தொண்டர் அடியவர்களுக்கு; தொண்டர் கண்டீர் அடியவர்களே; இடையார் நிரந்தரமான; பிறப்பிடை தோறு பிறவி தோறும்; எமக்கு எம் பெருமக்களே நான் ஆட்படும் தலைவர்
udai ārndha fitting with the waist; ādaiyan having divine garment; kaṇdigaiyan being the one wearing ornaments in the neck; udai nāṇinan being the one who is wearing a waist string on top of the garment; pudai ār placed on one side; pon nūlinan being the one with golden yagyŏpavītham (sacred thread); pon mudiyan wearing an attractive crown; maṝum and; pal kalan many different ornaments; nadaiyā udai having them naturally; thirunāraṇan nārāyaṇan who is ṣrīmān; thoṇdar for those who are servitors; thoṇdar kaṇdīr those who are servitors of; idai ār permanent; piṛappu idai thŏṛu in every moment of every birth; emakku for us; em perumakkal̤ distinguished supreme lords

TVM 3.7.5

3083 பெருமக்களுள்ளவர்தம்பெருமானை * அமரர்கட்கு *
அருமையொழிய அன்றாரமுதூட்டியவப்பனை *
பெருமைபிதற்றவல்லாரைப் பிதற்றுமவர்கண்டீர் *
வருமையுமிம்மையும் நம்மையளிக்கும்பிராக்களே.
3083 பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை * அமரர்கட்கு *
அருமை ஒழிய அன்று * ஆர் அமுது ஊட்டிய அப்பனை **
பெருமை பிதற்ற வல்லாரைப் * பிதற்றும் அவர் கண்டீர்
வருமையும் இம்மையும் * நம்மை அளிக்கும் பிராக்களே (5)
3083 pĕrumakkal̤ ul̤l̤avar tam pĕrumāṉai * amararkaṭku *
arumai ŏzhiya aṉṟu * ār amutu ūṭṭiya appaṉai **
pĕrumai pitaṟṟa vallāraip * pitaṟṟum avar kaṇṭīr
varumaiyum immaiyum * nammai al̤ikkum pirākkal̤e (5)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-30

Simple Translation

Those who ecstatically and incoherently proclaim the great glory of the Lord who once fed the Devas with nectar, and is the Chief of the exalted Nithyasuris, are truly our grand saviors both in this world and beyond.

Explanatory Notes

(i) Chief of the exaḻted Celestials: The Nityasūris (ever free angels in spiritual world) stand on a high pedestal of their own and the Lord, as their Chief, is higher than the highest.

(ii) The Devas sought from the Lord the ambrosia in order to become deathless. No doubt, the Lord felt very much that the Devas should have been so short-sighted and under-evolved as + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெருமக்கள் உள்ளவர் நித்யஸூரிகளின்; தம் பெருமானை தலைவனான பெருமானை; அமரர்கட்கு தேவர்களுக்கு; அருமை ஒழிய எளிதாக கிடைக்கும்படி; அன்று ஆர் அமுது அமுதத்தை அன்று; ஊட்டிய அப்பனை அளித்த பெருமானின்; பெருமை பிதற்ற பெருமையைப் பிதற்ற; வல்லாரை பிதற்றும் வல்லார்களை பிதற்றும்; அவர் கண்டீர் அடியார்களே நம் தலைவர்; வருமையும் அவர்களே வரும் பிறவிகளிலும்; இம்மையும் இப்பிறவியிலும்; நம்மை அளிக்கும் நம்மைக் காக்கும்; பிராக்களே உபகாரகர்கள் ஆவர்
peru makkal̤ ul̤l̤avar for the nithyasūris who have greatness of having parama sāmyāpaththi (having similar qualities that are of bhagavān-s); tham perumānai the distinguished emperor; amarargatku for the dhĕvas (celestial beings) who desire for immortality; arumai ozhiya eliminating difficulty; anṛu previously (when they were cursed by dhurvāsa muni); ār amudhu ūttiya feeding them the nectar fully; appanai towards the one who ensured their existence; perumai his greatness of favouring others; pidhaṝa vallārai those who can speak about it (in a disorderly manner due to overflowing love); pidhaṝum avar kaṇdīr those who speak about them (in turn being overwhelmed with love); varumaiyum immaiyum in aihika (of this world- material realm- samsāram) and āmushmika (belonging to the other world- spiritual realm- paramapadham); pirākkal̤ those who provide us favours

TVM 3.7.6

3084 அளிக்கும்பரமனைக்கண்ணனை ஆழிப்பிரான்தன்னை *
துளிக்கும்நறுங்கண்ணித் தூமணிவண்ணனெம்மான் தன்னை *
ஒளிக்கொண்டசோதியை உள்ளத்துக்கொள்ளுமவர் கண்டீர் *
சலிப்பின்றியாண்டெம்மைச் சன்மசன்மாந்தரம் காப்பரே.
3084 அளிக்கும் பரமனைக் கண்ணனை * ஆழிப் பிரான் தன்னை
துளிக்கும் நறும் கண்ணித் * தூ மணி வண்ணன் எம்மான் தன்னை **
ஒளிக் கொண்ட சோதியை * உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்
சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச் * சன்ம சன்மாந்தரம் காப்பரே (6)
3084 al̤ikkum paramaṉaik kaṇṇaṉai * āzhip pirāṉ taṉṉai
tul̤ikkum naṟum kaṇṇit * tū maṇi vaṇṇaṉ ĕmmāṉ taṉṉai **
ŏl̤ik kŏṇṭa cotiyai * ul̤l̤attuk kŏl̤l̤um avar kaṇṭīr
calippu iṉṟi āṇṭu ĕmmaic * caṉma caṉmāntaram kāppare (6)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

They will be my saviors and guide me in all my births without interruption. They hold Kaṇṇaṉ, the most generous benefactor of radiant form, in their hearts. His form is like the flawless blue gem, and He wields the discus and wears the fragrant tulacī garland, which sheds abundant honey.

Explanatory Notes

(i) Donor superfine: The Lord is not merely the Donor Supreme but also the Donor Superfine in that He gifts Himself away as He did during His Avatāra as Kṛṣṇa.

(ii) The (beneficent) discus: The Lord would not only give of Himself to His devotees but also give them His extraordinary weapons as He did in the case of King Ambarīṣa. The Lord’s alert discus served as the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அளிக்கும் பரமனை நம்மை காக்கும் பரமனை; கண்ணனை கண்ணனை; ஆழி சக்கரக்கையுடைய; பிரான் தன்னை பெருமானை; துளிக்கும் நறும் தேன் துளிர்க்கும் மணம் கமழும்; கண்ணி மாலையணிந்தவனும்; தூமணி தூய்மையான; வண்ணன் வடிவுடையவனுமான; எம்மான் தன்னை எம்பெருமானை; ஒளிக் கொண்ட ஒளிமயமான; சோதியை சோதியை உடையவனை; உள்ளத்து கொள்ளும் வாழ்த்தி வணங்கும்; அவர் கண்டீர் அந்த பாகவதர்களே; எம்மை சலிப்பு இன்றி எம்மை சலிப்பு இன்றி; சன்ம சன்மாந்தரம் எல்லாப் பிறவிகளிலும்; ஆண்டு காப்பரே அடிமை கொண்டு காப்பார்கள்
al̤ikkum paramanai (while helping others) there is none greater than him in giving (himself); kaṇṇanai being subservient (to be at the disposal of his devotees); āzhip pirān thannai the beautiful combination of his divine hand and the sudharṣana chakra (disc); thul̤ikkum naṛum kaṇṇi the beauty of the fragrant garland with flowing honey; thū maṇi like a flawless precious stone; vaṇṇam form; pirān thannai bestowing (manifesting); emmān thannai being the master who enslaved me; ol̤ik koṇda acquiring shine (as a result of that); sŏdhiyai one who is having splendour; ul̤l̤aththu through the heart; kol̤l̤umavar kaṇdīr those who enjoy; emmai us; salippu inṛi firmly (ensuring that we don-t seek ulterior benefits); āṇdu engaging us in their service; sanmam in this birth; sanmāntharam in the subsequent births; kāppar they will protect

TVM 3.7.7

3085 சன்மசன்மாந்தரம்காத்து அடியார்களைக்கொண்டுபோய் *
தன்மைபொறுத்தித் தன்தாளிணைக்கீழ்க்கொள்ளும் அப்பனை *
தொன்மைபிதற்றவல்லாரைப் பிதற்றுமவர்கண்டீர் *
நம்மைபெறுத்தெம்மை நாளுய்யக்கொள்கின்றநம்பரே.
3085 சன்ம சன்மாந்தரம் காத்து * அடியார்களைக் கொண்டு போய்
தன்மை பெறுத்தித் * தன் தாளிணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை **
தொன்மை பிதற்ற வல்லாரைப் * பிதற்றும் அவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை * நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே (7)
3085 caṉma caṉmāntaram kāttu * aṭiyārkal̤aik kŏṇṭu poy
taṉmai pĕṟuttit * taṉ tāl̤iṇaikkīzhk kŏl̤l̤um appaṉai **
tŏṉmai pitaṟṟa vallāraip * pitaṟṟum avar kaṇṭīr
naṉmai pĕṟuttu ĕmmai * nāl̤ uyyak kŏl̤kiṉṟa nampare (7)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

They are our eternal saviors, upon whom we can safely rely for our salvation. They profusely praise the Lord's spontaneous grace, which ends His devotees' cycle of births and instills true knowledge in them. This knowledge allows them to serve at His feet in the eternal SriVaikuntam.

Explanatory Notes

The Āzhvār has been spot-lighting the Lord’s magnanimity in the last two songs, and he continues to dwell on the Lord’s generosity in this song also, by extolling those lost in admiration of this great trait of the Lord. It is the Lord’s extreme generosity that cuts out an otherwise interminable cycle of births and rebirths through which one’s ethical accounts, hopelessly unbalanced as they are, have to be settled with the ever-increasing risk of losing merit faster than acquiring it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சன்ம சன்மாந்தரம் எல்லாப் பிறவிகளிலும்; காத்து அடியார்களை அடியார்களை காத்து; கொண்டு போய் கொண்டு போய்; தன்மை பெறுத்தி ஞானத்தைப் பிறப்பித்து; தன் தாள் இணை தன் திருவடிகளின்; கீழ்க்கொள்ளும் கீழ் அடிமைகொண்டருளும்; அப்பனை பெருமானின்; தொன்மை பிதற்ற உபகாரத்தைச் சொல்லி; வல்லாரை புகழ வல்லார்களை; பிதற்றும் அவர் கண்டீர் புகழும் அடியார்களே; நம்மை பெறுத்து நன்மை பெறும்படி பண்ணி; எம்மை நாள் எம்மை எப்போதும்; உய்ய கொள்கின்ற உய்யக் கொள்ளுதலுக்கு; நம்பரே நம்பத் தகுந்தவர்க்ள்
sanma sanmāntharam many births; kāththu (protecting by) relieving them; adiyārgal̤ai those who have the knowledge about servitude; koṇdu pŏy carry them (to paramapadham); thanmai peṛuththi making them realiśe their true nature; than thāl̤iṇaik kīzh under his divine feet; kol̤l̤um mercifully accepting service; appanai one who is the master; thonmai natural helping tendency; pidhaṝa vallārai those who can praise in a disorderly manner; pidhaṝumavar kaṇdīr those who glorify them being overwhelmed with love; emmai us; nanmai peṛuththu making us acquire the excellence (of being in paramapadham with devotees as said in thiruvāimozhi 10.9.11 -andhamil pĕr inbaththu adiyarŏdu-); nāl̤ forever; uyyak kol̤ginṛa one who would uplift; nambar would be believed

TVM 3.7.8

3086 நம்பனைஞாலம்படைத்தவனைத் திருமார்பனை *
உம்பருலகினில்யார்க்கும் உணர்வரியான்தன்னை *
கும்பிநரகர்களேத்துவரேலும் அவர்கண்டீர் *
எம்பல்பிறப்பிடைதோறு எம்தொழுகுலம்தாங்களே.
3086 நம்பனை ஞாலம் படைத்தவனைத் * திரு மார்பனை *
உம்பர் உலகினில் யார்க்கும் * உணர்வு அரியான் தன்னை **
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் * அவர் கண்டீர் *
எம் பல் பிறப்பிடைதோறு * எம் தொழுகுலம் தாங்களே (8)
3086 nampaṉai ñālam paṭaittavaṉait * tiru mārpaṉai *
umpar ulakiṉil yārkkum * uṇarvu ariyāṉ taṉṉai **
kumpi narakarkal̤ ettuvarelum * avar kaṇṭīr *
ĕm pal piṟappiṭaitoṟu * ĕm tŏzhukulam tāṅkal̤e (8)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-30

Simple Translation

Even if they were cruel sinners destined for hell, they are revered as apostles in all my births. These apostles sing the glory of our safe haven, the Lord who inseparably holds 'Tiru' (Lakṣmī) on His chest. He ordained the universe, yet is beyond the comprehension of everyone, even those in the upper region.

Explanatory Notes

The Āzhvār avers that those adoring the blissful conjunction of the Lord and the Divine Mother, are his spiritual mentors for generations, although they might be cruel sinners either fit to be condemned to the dastardly abyss, known as ‘Kumbhīpāka [kumbhīpākam]’, or even those actually drudging there. This only shows the extreme lengths to which the Āzhvār is prepared + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நம்பனை நம்பத்தகுந்தவனும்; ஞாலம் உலகத்தை; படைத்தவனை படைத்தவனும்; திருமார்பனை திருமகளை மார்பிலுடையவனும்; உம்பர் உலகினில் மேல் உலகங்களில்; யார்க்கும் இருக்கும் ஞானிகளாலும்; உணர்வு அரியான் உணர்ந்து அறியமுடியாத; தன்னை பெருமானை; கும்பி கும்பி என்னும்; நரகர்கள் நரகத்திலுள்ளவர்கள்; ஏத்துவரேலும் வாழ்த்தி வணங்கினாலும்; அவர் கண்டீர் அந்த அடியார்களே; எம் பல் எங்கள் பல; பிறப்பிடை தோறு பிறவிகளுக்கும்; எம் தொழு எங்களால் வணங்கப்படும்; குலம் தாங்களே எங்கள் குலத் தலைவர்கள்
nambanai being the refuge (unconditionally); gyālam padaiththavanai one who performs creation of the universe (to let others take refuge of him and enjoy him); thirumārbanai having ṣrīya:pathithvam (at all stages such as during creation, while taking refuge and while being enjoyed as the goal); umbar ulaginil in higher worlds (which were created by him); yārkkum even for the most knowledgeable persons; uṇarvu aṛiyān thannai one who is too great to be known by them; kumbi naragargal̤um even the most sinful persons who reside in kumbī naraka (a region in the hell which is gruesome); ĕththuvarĕl if (they) glorify; avar thāngal̤ kaṇdīr those persons; em pal piṛappidai thŏṛu in our many different births; em thozhu kulam the clan which is the recipient of our servitude

TVM 3.7.9

3087 குலந்தாங்குசாதிகள் நாலிலுங்கீழிழிந்து * எத்தனை
நலந்தானிலாத சண்டாளசண்டாளர்களாகிலும் *
வலந்தாங்குசக்கரத்தண்ணல் மணிவண்ணற்காளென்று உள்
கலந்தார் * அடியார்தம்அடியார் எம்மடிகளே.
3087 குலம் தாங்கு சாதிகள் * நாலிலும் கீழ் இழிந்து
எத்தனை நலம் தான் இலாத * சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் **
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் * மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் * அடியார் தம் * அடியார் எம் அடிகளே (9)
3087 kulam tāṅku cātikal̤ * nālilum kīzh izhintu
ĕttaṉai nalam tāṉ ilāta * caṇṭāl̤a caṇṭāl̤arkal̤ ākilum **
valam tāṅku cakkarattu aṇṇal * maṇivaṇṇaṟku āl̤ ĕṉṟu ul̤
kalantār * aṭiyār tam * aṭiyār ĕm aṭikal̤e (9)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-29, 32

Simple Translation

They are my masters who serve as vassals to the vassals of those who, as loving servitors, mingle with the Lord of sapphire hue, who holds the bright discus in His right hand. This is true even if they are born into a lowly caste, worse than the Caṇṭāḷa and lacking in repute.

Explanatory Notes

(i) The servants of the servants of those devotees, enthralled by the bewitching beauty of the Lord holding the charming discus in hand, are said to be the Āzhvār’s masters, even though the said devotees are otherwise terribly depraved, and worse than the ‘Caṇṭāḷa’, outside the Ken of the four prescribed, time-honoured castes. While devotion to the Lord’s devotees is the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குலம் ஸகல குலங்களுக்கும்; தாங்கு ஆதாரபூர்வமான; நாலிலும் நான்கு; சாதிகள் ஜாதிகளைக் காட்டிலும்; கீழ் இழிந்து கீழான ஜாதியினராயினும்; எத்தனை எத்தனை; நலம் தான் இலாத அறிவற்றவராயினும்; சண்டாள சண்டாளர்கள் சண்டாள சண்டாளர்கள்; ஆகிலும் ஆக இருந்தாலும்; வலம்தாங்கு வலக்கையில்; சக்கரத்து சக்கரத்தையுடைய; அண்ணல் பெருமானான; மணி நீல மணி போன்ற; வண்ணற்கு வடிவுடையவர்க்கு; ஆள் என்று உள் அடியவர் என்று; கலந்தார் கலந்த; அடியார் தம் அடியார்களுக்கு; அடியார் அடியார்களே; எம் அடிகளே எமக்கு தலைவர்களாவர்
kulam (by anulŏma vivāham (brāhmaṇa man marrying khsathriya/vaiṣya/ṣūdhra woman, kshathriya man marrying vaiṣya/ṣūdhra woman, vaiṣya man marrying ṣūdhra woman) and prathilŏma vivāham (ṣūdhra man marrying vaiṣya/kshathriya/brāhmaṇa woman, vaiṣya man marrying kshathriya/brāhmaṇa woman, kshathriya man marrying brāmaṇa woman)) for all clans; thāngu being the anchor; sādhigal̤ varṇams (classes); nālilum in four of them; kīzh izhindhu below them; eththanai nalam thān ilādha being totally ignorant (that -we are very low by birth-); saṇdāl̤ar chaṇdāl̤a (considering this first chaṇdāl̤a to be brāhmaṇa); saṇdāl̤argal̤ āgilum those who are abandoned by (even such chaṇdāl̤a highlighted in previous word); valam thāngu being carried on the right side; sakkaraththu (ās said in -ṣaraṇam pavithram- (pure refuge)) very pure/sacred [sudharṣana] āzhwān-s; aṇṇal being the lord; maṇi pure like a precious gem (which will purify others who come into contact with it); vaṇṇaṛku for the who is having (radiant) form; āl̤ (we are) ṣĕshabhūthar (servitors); enṛu thinking that; ul̤ kalandhār united with him as ananyaprayŏjanar; adiyār tham for their servitors; adiyār those who are servitors; em for us; adigal̤ lords

TVM 3.7.10

3088 அடியார்ந்தவையமுண்டு ஆலிலையன்னவசஞ்செய்யும் *
படியாதுமில்குழவிப் படியெந்தைபிரான்றனக்கு *
அடியாரடியார்தம் அடியாரடியார் தமக்கு *
அடியாரடியார்தம்அடியாரடியோங்களே.
3088 அடி ஆர்ந்த வையம் உண்டு * ஆல் இலை அன்னவசம் செய்யும் *
படி யாதும் இல் குழவிப்படி * எந்தை பிரான் தனக்கு **
அடியார் அடியார் தம் * அடியார் அடியார் தமக்கு *
அடியார் அடியார் தம் * அடியார் அடியோங்களே (10)
3088 aṭi ārnta vaiyam uṇṭu * āl ilai aṉṉavacam cĕyyum *
paṭi yātum il kuzhavippaṭi * ĕntai pirāṉ taṉakku **
aṭiyār aṭiyār tam * aṭiyār aṭiyār tamakku *
aṭiyār aṭiyār tam * aṭiyār aṭiyoṅkal̤e (10)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-30

Simple Translation

We are vassals of the last in the chain of vassals of the devotees of our Liege-Lord. As an unparalleled baby, He reclined on a fig leaf, holding the seven worlds in His stomach, which He previously spanned.

Explanatory Notes

(i) The Āzhvār affirms that he is the vassal unto those that stand last in the chain of the Lord’s devotees, sure and steadfast, lost in admiration of His once spanning all the worlds in just three strides and then sustaining, in His stomach, all the worlds, during the period of deluge.

(ii) The worlds devoured by the Lord during the period of deluge are just those + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடி ஆர்ந்த திருவடிகளோடு சேர்ந்த; வையம் உண்டு உலகம் உண்டு; ஆலிலை ஆலிலையில்; அன்னவசம் செய்யும் கண்வளரும்; படி யாதும் இல் ஒப்பில்லாத; குழவிப்படி பிள்ளைத்தனம் உடைய; எந்தை பிரான் தனக்கு எம்பெருமானுக்கு; அடியார் அடியார் தம் அடியாரின் அடியாரின்; அடியார் அடியாரின்; அடியார் தமக்கு அடியாரின்; அடியார் தம் அடியாரின் அடியாரின்; அடியார் ஏழு ஏழு தலைமுறை வரை வரும்; அடியார் அடியார்களுக்கு; அடியோங்களே நாங்கள் அடிமைப்பட்டவர்கள்
adi with his divine feet; ārndha united/merged; vaiyam bhūmi (earth); uṇdu consuming it (when the danger of deluge occurred); ālilai in a banyan leaf; anna vasam seyyum resting (ensuring that the consumed world does not get digested); padi yādhum il incomparable; kuzhavip padi having the form of a toddler; pirān endhai thanakku (due to that nature) one who is master for us; adiyār adiyār tham adiyār adiyār thamakku adiyār adiyār tham adiyār to the lowest level in the descendants of those who are servitors; adiyŏngal̤ servitors (us).

TVM 3.7.11

3089 அடியோங்குநூற்றுவர்வீய அன்றுஐவர்க்கருள்செய்த
நெடியோனை * தென்குருகூர்ச்சடகோபன் குற்றேவல்கள் *
அடியார்ந்தவாயிரத்துள் இவைபத்துஅவன்தொண்டர் மேல்
முடிவு * ஆரக்கற்கிற்கில் சன்மஞ்செய்யாமை முடியுமே. (2)
3089 ## அடி ஓங்கு நூற்றுவர் வீய * அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனை தென் குருகூர்ச் சடகோபன் * குற்றேவல்கள் **
அடி ஆர்ந்த ஆயிரத்துள் * இவை பத்து அவன் தொண்டர்மேல்
முடிவு ஆரக் கற்கிற்கில் * சன்மம் செய்யாமை முடியுமே (11)
3089 ## aṭi oṅku nūṟṟuvar vīya * aṉṟu aivarkku arul̤cĕyta
nĕṭiyoṉai tĕṉ kurukūrc caṭakopaṉ * kuṟṟevalkal̤ **
aṭi ārnta āyirattul̤ * ivai pattu avaṉ tŏṇṭarmel
muṭivu ārak kaṟkiṟkil * caṉmam cĕyyāmai muṭiyume (11)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Those who earnestly learn these ten songs, which expound the great glory of godly men, from the thousand chaste and elegant songs composed by Caṭakōpaṉ of Teṉkurukūr in a spirit of dedication to the Lord, who shed His grace on the five (Pāṇḍavas) and put an end to the hundred (vicious cousins), will bring their cycle of births to a close.

Explanatory Notes

(i) This end-stanza reveals the benefit accruing to those learning this decad without skipping over any stanza. They will not have to be reborn and caught up in the unenviable meshes of worldly life militating against service unto the Lord’s devotees.

(ii) The Kauravas’ advancement was at the expense of their five cousins, the Pāṇḍavas, who were, however, very dear to Lord Kṛṣṇa. The vicious hundred naturally met their doom.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடி ஓங்கு சிறந்த ராஜ்யத்தையுடைய; நூற்றவர் வீய துர்யோதனாதிகள் மடிய; அன்று ஐவர்க்கு அன்று பாண்டவர்களுக்கு; அருள் செய்த அருள் செய்த; நெடியோனை எம்பெருமானைக் குறித்து; தென் குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார் அருளிச்செய்த; குற்றேவல்கள் குற்றமற்ற தம் பணியாக; அடிஆர்ந்த இலக்கண விதி முறைப்படி; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவை பத்து இவை பத்தும்; அவன் அந்தப் பெருமானின்; தொண்டர் மேல் அடியார்களைப்பற்றி; முடிவு ஆர முடிவான இவற்றை மனமுவந்து; கற்கிற்கில் கற்பர்களாகில்; சன்மம் செய்யாமை பிறவி எடுக்காமல்; முடியுமே உய்ந்து போவர்
adi ŏngu the rise of their kingdom/reign; nūṝuvar the hundred brothers starting with dhuryŏdhana; vīya to be finished; anṛu at that time (when they were banished); aivarkku for the five pāṇdavas; arul̤ seydha helping them in all ways; nediyŏnai on the one who remained very eager (as if he has done nothing); then kurugūr the leader of the orderly āzhvārthirunagari; ṣatakŏpan nammāzhvār-s; kuṝĕvalgal̤ in the form of confidential activity; adi ārndha being complete due to the pādha bhandham (connection with the divine feet of emperumān. īt can also mean, the proper sequence/connection of the words/lines); āyiraththul̤l̤um among the thousand pāsurams; avan thoṇdar mĕl on his servitors; mudivu focussed; ivai paththu these ten pāsurams; āra to grasp it well (in the heart); kaṛkiṛkil if one can practice it well; sanmam seyyāmai birth (which blocks one-s servitude); mudiyum will be finished