Chapter 7

Āzhvār calling himself as a servant's servant of the devotee of the Lord - (பயிலும் சுடர்)

அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்
Āzhvār extols those with the attribute to surrender to Bhagavān and are a servant to Him. Even better than that is to serve those devotees who are in servitude to Him. Āzhvār explains paramapurushārtham known as bhagāvatha seshattavam through these hymns.
பகவானுக்கு அடிமை செய்துகொண்டு அடியவராக இருப்பது மிகவும் ஏற்றம். அவனடியார்களுக்கு அடிமை செய்துகொண்டு அடியவராக இருப்பது அதைவிட ஏற்றம். பாகவத சேஷத்வம் என்கிற பரமபுருஷார்த்தத்தை ஆழ்வார் இப்பகுதியில் அருளிச்செய்கிறார். பகவானிடம் அடியார்க்கு அடியாரை வணங்குவதில் விசேஷம் எனல்.

மூன்றாம் + Read more
Verses: 3079 to 3089
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: நாட்டம்
Timing: 12-1.12 PM
Recital benefits: will not be born again
  • TVM 3.7.1
    3079 ## பயிலும் சுடர் ஒளி மூர்த்தியைப் * பங்கயக் கண்ணனை
    பயில இனிய * நம் பாற்கடல் சேர்ந்த பரமனை **
    பயிலும் திரு உடையார் * எவரேலும் அவர் கண்டீர்
    பயிலும் பிறப்பிடை தோறு * எம்மை ஆளும் பரமரே (1)
  • TVM 3.7.2
    3080 ஆளும் பரமனைக் கண்ணனை * ஆழிப் பிரான் தன்னை
    தோளும் ஓர் நான்கு உடைத் * தூ மணி வண்ணன் எம்மான் தன்னை **
    தாளும் தடக் கையும் கூப்பிப் * பணியும் அவர் கண்டீர்
    நாளும் பிறப்பிடைதோறு * எம்மை ஆளுடை நாதரே (2)
  • TVM 3.7.3
    3081 நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் * நறும் துழாய்ப் போதனை
    பொன் நெடும் சக்கரத்து * எந்தை பிரான் தன்னை **
    பாதம் பணிய வல்லாரைப் * பணியும் அவர் கண்டீர்
    ஓதும் பிறப்பிடைதோறு * எம்மை ஆளுடையார்களே (3)
  • TVM 3.7.4
    3082 உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் * உடை நாணினன்
    புடை ஆர் பொன் நூலினன் * பொன் முடியன் மற்றும் பல்கலன் **
    நடையா உடைத் திருநாரணன் * தொண்டர் தொண்டர் கண்டீர்
    இடை ஆர் பிறப்பிடைதோறு * எமக்கு எம் பெருமக்களே (4)
  • TVM 3.7.5
    3083 பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை * அமரர்கட்கு *
    அருமை ஒழிய அன்று * ஆர் அமுது ஊட்டிய அப்பனை **
    பெருமை பிதற்ற வல்லாரைப் * பிதற்றும் அவர் கண்டீர்
    வருமையும் இம்மையும் * நம்மை அளிக்கும் பிராக்களே (5)
  • TVM 3.7.6
    3084 அளிக்கும் பரமனைக் கண்ணனை * ஆழிப் பிரான் தன்னை
    துளிக்கும் நறும் கண்ணித் * தூ மணி வண்ணன் எம்மான் தன்னை **
    ஒளிக் கொண்ட சோதியை * உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்
    சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச் * சன்ம சன்மாந்தரம் காப்பரே (6)
  • TVM 3.7.7
    3085 சன்ம சன்மாந்தரம் காத்து * அடியார்களைக் கொண்டு போய்
    தன்மை பெறுத்தித் * தன் தாளிணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை **
    தொன்மை பிதற்ற வல்லாரைப் * பிதற்றும் அவர் கண்டீர்
    நன்மை பெறுத்து எம்மை * நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே (7)
  • TVM 3.7.8
    3086 நம்பனை ஞாலம் படைத்தவனைத் * திரு மார்பனை *
    உம்பர் உலகினில் யார்க்கும் * உணர்வு அரியான் தன்னை **
    கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் * அவர் கண்டீர் *
    எம் பல் பிறப்பிடைதோறு * எம் தொழுகுலம் தாங்களே (8)
  • TVM 3.7.9
    3087 குலம் தாங்கு சாதிகள் * நாலிலும் கீழ் இழிந்து
    எத்தனை நலம் தான் இலாத * சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் **
    வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் * மணிவண்ணற்கு ஆள் என்று உள்
    கலந்தார் * அடியார் தம் * அடியார் எம் அடிகளே (9)
  • TVM 3.7.10
    3088 அடி ஆர்ந்த வையம் உண்டு * ஆல் இலை அன்னவசம் செய்யும் *
    படி யாதும் இல் குழவிப்படி * எந்தை பிரான் தனக்கு **
    அடியார் அடியார் தம் * அடியார் அடியார் தமக்கு *
    அடியார் அடியார் தம் * அடியார் அடியோங்களே (10)
  • TVM 3.7.11
    3089 ## அடி ஓங்கு நூற்றுவர் வீய * அன்று ஐவர்க்கு அருள்செய்த
    நெடியோனை தென் குருகூர்ச் சடகோபன் * குற்றேவல்கள் **
    அடி ஆர்ந்த ஆயிரத்துள் * இவை பத்து அவன் தொண்டர்மேல்
    முடிவு ஆரக் கற்கிற்கில் * சன்மம் செய்யாமை முடியுமே (11)