Chapter 6

Deity Form - emperumān’s ultimate manifestation of simplicity - (செய்ய தாமரை)

அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்
Āzhvār feels merciful towards those who were chastised in the previous set of hymns; In a kind gesture, he wishes to guide them so as to hope for a change in their behavior by expounding on Bhagavān’s auspicious quality, saulabhyam (ease in approachability) in a way that could be grasped by all.
முன்பகுதியில் நிந்திக்கப்பட்டவர்களையும் கைவிடலாகாது என்ற கருணையினால், அவர்களையும் வழிப்படுத்திக்கொள்ள நினைத்த ஆழ்வார், யாவரும் நன்கு அறிந்து கொள்ளும்படி பகவானின் சவுலப்ய குணத்தை ஈண்டு விரிவாக எடுத்துக் கூறுகிறார்.

மூன்றாம் பத்து -ஆறாந்திருவாய்மொழி – ‘செய்ய தாமரை’-பிரவேசம் –

ஸ்ரீ + Read more
Verses: 3068 to 3078
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: தக்கராகம்
Timing: 6.00-7.30 PM
Recital benefits: will become the devotees of Kannan
  • TVM 3.6.1
    3068 ## செய்ய தாமரைக் கண்ணன் * ஆய் உலகு
    ஏழும் உண்ட அவன் கண்டீர் *
    வையம் வானம் மனிசர் தெய்வம் *
    மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய் **
    செய்ய சூழ் சுடர் ஞானம் ஆய் * வெளிப்
    பட்டு இவை படைத்தான் * பின்னும்
    மொய் கொள் சோதியோடு ஆயினான் * ஒரு
    மூவர் ஆகிய மூர்த்தியே (1)
  • TVM 3.6.2
    3069 மூவர் ஆகிய மூர்த்தியை * முதல்
    மூவர்க்கும் முதல்வன் தன்னை *
    சாவம் உள்ளன நீக்குவானைத் *
    தடங் கடல் கிடந்தான் தன்னை **
    தேவ தேவனைத் தென் இலங்கை *
    எரி எழச் செற்ற வில்லியை *
    பாவ நாசனைப் பங்கயத் தடங்
    கண்ணனைப் * பரவுமினோ (2)
  • TVM 3.6.3
    3070 பரவி வானவர் ஏத்த நின்ற *
    பரமனைப் பரஞ்சோதியை *
    குரவை கோத்த குழகனை * மணி
    வண்ணனைக் குடக் கூத்தனை **
    அரவம் ஏறி அலை கடல் அமரும் *
    துயில்கொண்ட அண்ணலை *
    இரவும் நன் பகலும் விடாது * என்றும்
    ஏத்துதல் மனம் வைம்மினோ (3)
  • TVM 3.6.4
    3071 வைம்மின் நும் மனத்து என்று * யான்
    உரைக்கின்ற மாயவன் சீர்மையை *
    எம்மனோர்கள் உரைப்பது என்? * அது நிற்க
    நாள்தொறும் ** வானவர்
    தம்மை ஆளும் அவனும் * நான்முகனும்
    சடைமுடி அண்ணலும் *
    செம்மையால் அவன் பாத பங்கயம் *
    சிந்தித்து ஏத்தித் திரிவரே (4)
  • TVM 3.6.5
    3072 திரியும் காற்றோடு அகல் விசும்பு *
    திணிந்த மண் கிடந்த கடல் *
    எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் *
    மற்றும் மற்றும் முற்றும் ஆய் **
    கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் *
    கண்ணன் விண்ணோர் இறை *
    சுரியும் பல் கருங் குஞ்சி * எங்கள்
    சுடர் முடி அண்ணல் தோற்றமே (5)
  • TVM 3.6.6
    3073 தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் *
    அவன் ஒரு மூர்த்தியாய் *
    சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்
    கீழ்ப் * புக நின்ற செங்கண்மால் **
    நாற்றத் தோற்றத் சுவை ஒலி * உறல்
    ஆகி நின்ற * எம் வானவர்
    ஏற்றையே அன்றி * மற்றொருவரை
    யான் இலேன் எழுமைக்குமே (6)
  • TVM 3.6.7
    3074 எழுமைக்கும் எனது ஆவிக்கு * இன்
    அமுதத்தினை எனது ஆர் உயிர் *
    கெழுமிய கதிர்ச் சோதியை * மணி
    வண்ணனைக் குடக் கூத்தனை **
    விழுமிய அமரர் முனிவர்
    விழுங்கும் * கன்னல் கனியினை *
    தொழுமின் தூய மனத்தர் ஆய் *
    இறையும் நில்லா துயரங்களே (7)
  • TVM 3.6.8
    3075 துயரமே தரு துன்ப இன்ப
    வினைகள் ஆய் * அவை அல்லன் ஆய் *
    உயர நின்றது ஓர் சோதி ஆய் * உலகு
    ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை **
    அயர வாங்கும் நமன் தமர்க்கு * அரு
    நஞ்சினை அச்சுதன் தன்னை *
    தயரதற்கு மகன் தன்னை அன்றி *
    மற்று இலேன் தஞ்சமாகவே (8)
  • TVM 3.6.9
    3076 தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு *
    தானும் ஆய் அவை அல்லன் ஆய் *
    எஞ்சல் இல் அமரர் குலமுதல் *
    மூவர் தம்முள்ளும் ஆதியை **
    அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் *
    அவன் இவன் என்று கூழேன்மின் *
    நெஞ்சினால் நினைப்பான் எவன் * அவன்
    ஆகும் நீள் கடல் வண்ணனே (9)
  • TVM 3.6.10
    3077 கடல் வண்ணன் கண்ணன் * விண்ணவர்
    கருமாணிக்கம் எனது ஆர் உயிர் *
    பட அரவின் அணைக்கிடந்த *
    பரஞ்சுடர் பண்டு நூற்றுவர் **
    அட வரும் படை மங்க * ஐவர்கட்கு
    ஆகி வெம் சமத்து * அன்று தேர்
    கடவிய பெருமான் * கனை கழல்
    காண்பது என்றுகொல் கண்களே (10)
  • TVM 3.6.11
    3078 ## கண்கள் காண்டற்கு அரியன்
    ஆய்க் * கருத்துக்கு நன்றும் எளியன் ஆய் *
    மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம்
    அருள் செய்யும் * வானவர் ஈசனை **
    பண் கொள் சோலை வழுதி நாடன் *
    குருகைக்கோன் சடகோபன் சொல் *
    பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் *
    பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே (11)