Chapter 8
Āzhvār wants to enjoy emperumān through all his sense organs in all manner - (முடியானே மூவுலகும்)
கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்
Āzhvār yearns to attain Bhagavān and enjoy Him. Āzhvār’s five senses crave to meditate, see and sing His praises and feel proud doing so. These hymns focus on Āzhvār calling out to Bhagavān citing his powerlessness to attain Him.
பகவானை அடைந்து அனுபவிக்கவேண்டும் என்று ஆழ்வாருக்கு ஆசை. அவருடைய ஐம்புலன்களும் பரமனை நினைத்துக்கண்டு பாடிப் பெருமைப்படவேண்டும் என்று ஆசைப்படுகின்றன. இவ்வாறு ஆற்றாமையால் நோவுபட்டுப் பகவானை ஆழ்வார் கூப்பிடும் முறையை இப்பகுதி கூறுகிறது.
மூன்றாம் பத்து -எட்டாந்திருவாய்மொழி – ‘முடியானே’-பிரவேசம் + Read more
Verses: 3090 to 3100
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: இந்தளம்
Timing: 9.37-10.48 AM
Recital benefits: will reach the highest place
- TVM 3.8.1
3090 ## முடியானே மூவுலகும் தொழுது ஏத்தும் * சீர்
அடியானே * ஆழ் கடலைக் கடைந்தாய் * புள் ஊர்
கொடியானே ** கொண்டல் வண்ணா * அண்டத்து உம்பரில்
நெடியானே * என்று கிடக்கும் என் நெஞ்சமே (1) - TVM 3.8.2
3091 நெஞ்சமே நீள் நகர் ஆக * இருந்த என்
தஞ்சனே * தண் இலங்கைக்கு * இறையைச் செற்ற
நஞ்சனே ** ஞாலம் கொள்வான் * குறள் ஆகிய
வஞ்சனே * என்னும் எப்போதும் * என் வாசகமே (2) - TVM 3.8.3
3092 வாசகமே ஏத்த அருள் செய்யும் * வானவர் தம்
நாயகனே * நாள் இளம் திங்களைக் * கோள் விடுத்து **
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு உண்ட * ஆன் ஆயர்
தாயவனே * என்று தடவும் என் கைகளே (3) - TVM 3.8.4
3093 கைகளால் ஆரத் * தொழுது தொழுது உன்னை
வைகலும் மாத்திரைப் * போதும் ஓர் வீடு இன்றி **
பை கொள் பாம்பு ஏறி * உறை பரனே * உன்னை
மெய்கொள்ளக் காண * விரும்பும் என் கண்களே (4) - TVM 3.8.5
3094 கண்களால் காண வருங்கொல்? * என்று ஆசையால்
மண் கொண்ட வாமனன் * ஏற மகிழ்ந்து செல் **
பண் கொண்ட புள்ளின் * சிறகு ஒலி பாவித்து *
திண் கொள்ள ஓர்க்கும் * கிடந்து என் செவிகளே (5) - TVM 3.8.6
3095 செவிகளால் ஆர * நின் கீர்த்திக் கனி என்னும்
கவிகளே * காலப் பண் தேன் * உறைப்பத் துற்று **
புவியின்மேல் * பொன் நெடும் சக்கரத்து உன்னையே *
அவிவு இன்றி ஆதரிக்கும் * எனது ஆவியே (6) - TVM 3.8.7
3096 ஆவியே ஆர் அமுதே * என்னை ஆளுடை
தூவி அம் புள் உடையாய் * சுடர் நேமியாய் **
பாவியேன் நெஞ்சம் * புலம்பப் பலகாலும் *
கூவியும் காணப்பெறேன் * உன கோலமே (7) - TVM 3.8.8
3097 கோலமே தாமரைக் கண்ணது ஓர் * அஞ்சன
நீலமே * நின்று எனது ஆவியை * ஈர்கின்ற
சீலமே ** சென்று செல்லாதன * முன் நிலாம்
காலமே * உன்னை எந் நாள் * கண்டுகொள்வனே? (8) - TVM 3.8.9
3098 கொள்வன் நான் மாவலி * மூவடி தா என்ற
கள்வனே * கஞ்சனை வஞ்சித்து * வாணனை
உள் வன்மை தீர ** ஓர் ஆயிரம் தோள் துணித்த *
புள் வல்லாய் * உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே? (9) - TVM 3.8.10
3099 பொருந்திய மா மருதின் இடை போய * எம்
பெருந்தகாய் * உன் கழல் காணிய பேதுற்று **
வருந்தி நான் * வாசகமாலை கொண்டு * உன்னையே
இருந்து இருந்து * எத்தனை காலம் புலம்புவனே? (10) - TVM 3.8.11
3100 ## புலம்பு சீர்ப் * பூமி அளந்த பெருமானை *
நலம் கொள் சீர் * நன் குருகூர்ச் சடகோபன் ** சொல்
வலம் கொண்ட ஆயிரத்துள் * இவையும் ஓர் பத்து
இலங்கு வான் * யாவரும் ஏறுவர் சொன்னாலே (11)