Thiruppallāṇḍu

திருப்பல்லாண்டு

Thiruppallāṇḍu
As he is being honored by King Sri Vallaba Devā, Periyāzhvār performs mangalāsāsanam to Lord Sriman Nārāyanā
In the royal court of the Pāndyā King Vallabha Deva, Vishnuchittar established Paratattvā, (The Omnipresent State) as ordained by the Paramātmā (the Supreme Lord) himself. The king and the assembly of scholars and ministers were wonder struck when Vishnuchittā quoted extensively and emphatically from the Vedās, the Upanishads and the Puranas and established + Read more
பாண்டிய குல மன்னன் வல்லப தேவனின் அரசவையில் எம்பெருமான் நியமித்தருளியபடி பெரியாழ்வார் பரதத்வத்தை (உண்மை பொருள்) நிலைநாட்டி பொற்கிழியைப் பெற்றதால் அரசன் மகிழ்ந்து, அவருக்கு 'பட்டர்பிரான்' என்று விருது அளித்து, யானை மீது நகர்வலம் அழைத்து விழா எடுத்தான். அந்த விழாவைக் காண மஹாலக்ஷ்மியுடன் + Read more
Group: 1st 1000
Verses: 1 to 12
Glorification: Krishna Avatar (க்ருஷ்ணாவதாரம்)
āzhvār: Periya Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TPL 1

1 பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு *
பலகோடிநூறாயிரம் *
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா * உன்
சேவடிசெவ்விதிருக்காப்பு (1)
1 ## பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு *
பல கோடி நூறாயிரம் *
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! *
உன் சேவடி செவ்வி திருக்காப்பு (1)
1 ## pallāṇṭu pallāṇṭu pallāyirattāṇṭu *
pala koṭi nūṟāyiram *
mallāṇṭa tiṇtol̤ maṇivaṇṇā! *
uṉ cevaṭi cĕvvi tirukkāppu (1)

Ragam

Nāṭṭai / நாட்டை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
TPL.1

Simple Translation

1. Manivannā (colored like blue sapphire), may You live long (be eternal) for several years (human years), more years (celestial years), thousands of celestial years (Brahmā's years) and for many crores (of Brahmā's) of years. Strong shouldered, blue hued victor of the wicked wrestlers, let your reddish feet be protected.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மல்லாண்ட சாணூரன் முஷ்டிகன்ஆகிய மல்லர்களை வீழ்த்திய; திண்தோள் வலிமைமிக்கத் தோள்களையுடைய; மணி மாணிக்கம் போன்ற நிறமும்; வண்ணா சுபாவமும் உடைய; உன் உன்; சேவடி சிவந்த திருவடியின்; செவ்வி அழகுக்கு; பல்லாண்டு பல்லாண்டு பல பல வருஷங்கள்; பல்லாயிரத்து ஆண்டு பல ஆயிரம் வருஷங்கள்; பலகோடி நூறாயிரம் பல கோடி நூறாயிரம் வருஷங்கள்; திருக்காப்பு எக்குறையும் ஏற்படாததாக!
mal mallars (wrestlers) like chāṇūran, mushtikan; āṇda one who controlled and killed them; thiṇ with strong and most powerful; thol̤ shoulders; maṇivaṇṇā one who has the color of dark gem; un your; chĕvadi reddish feet’s; chevvith beauty; pallāṇdu many (countless) years (denotes year count in human); pallāṇdu many (countless) years (denotes year count in dhĕva); pallāyiraththāṇdu many (countless) years (denotes year count in brahmā); palakŏti nūṛayiram many years of countless brahmās; thirukkāppu let there be protection

TPL 2

2 அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு *
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு *
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு *
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே.(2)
2 ## அடியோமோடும் நின்னோடும் * பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு *
வடிவாய் நின் வல மார்பினில் * வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு **
வடிவார் சோதி வலத்து உறையும் * சுடர் ஆழியும் பல்லாண்டு *
படைபோர் புக்கு முழங்கும் * அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே (2)
2 ## aṭiyomoṭum niṉṉoṭum * pirivu iṉṟi āyiram pallāṇṭu *
vaṭivāy niṉ vala mārpiṉil * vāzhkiṉṟa maṅkaiyum pallāṇṭu **
vaṭivār coti valattu uṟaiyum * cuṭar āzhiyum pallāṇṭu *
paṭaipor pukku muzhaṅkum * ap pāñca caṉṉiyamum pallāṇṭe (2)

Ragam

Nāṭṭai / நாட்டை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
TPL.2

Simple Translation

2. We devoutly pray that we be inseparable from you for thousands of years. Let your divine consort residing in your right chest be eternal. Let the glowing discus in your right hand that vanquishes enemies, continue for several years. Let the conch Pānchajanyam that blows aloud in wars, live for several years

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடியோமோடும் அடியவர்களான எங்களோடும்; நின்னோடும் ஸ்வாமியான உன்னோடும்; பிரிவின்றி பிரிவில்லாமல்; ஆயிரம் பல்லாண்டு எந்நாளும் நித்தியமாய்; வடிவாய் அழகே உருவெடுத்தவளான; நின் வல மார்பினில் உன் வலது மார்பினில்; வாழ்கின்ற வாழ்கின்ற; மங்கையும் ஸ்ரீதேவி நித்தியமாய்; பல்லாண்டு இருக்க வேண்டும்; வடிவார் சோதி சோதி மயமான வடிவுடைய உனது; வலத்து உறையும் வலக்கையில் இருக்கும்; சுடர் ஆழியும் எதிரிகளை அழிக்கும் சக்ராயுதம்; பல்லாண்டு நீடூழி வாழ்க!; படைபோர் புக்கு ஆயுதமாய் போரிலே புகுந்து; முழங்கும் சப்திக்கும்; அந்த; பாஞ்ச சன்னியமும் பாஞ்ச சன்னியம் என்னும் சங்கும்; பல்லாண்டே நீடூழி வாழ்க
adiyŏmŏdum adiyen and all other chĕthanas who are servants for you; ninnŏdum and yourself who is the master for all of us; pirivinṛi should be always together; āyiram pallāṇdu this relationship should exist forever; vadivāy Beautiful and one who is decorated with jewels; nin valamārbinil vāzhkinṛa one who always dwells in right side of your chest; mangaiyum mangai denotes nangai (denotes completeness/wholeness of srī mahālakshmi); um (also) – denotes bhūmi and neel̤ā dhĕvis; pallāṇdu should be present always; vadivārchŏthi chakkaraththāzhwān’s thĕjas (radiance) surrounds the divine form of perumāl̤ himself; valaththuṛaiyum one who eternally resides in right hand; chudarāzhiyum chakkaraththāzhwān who destroys the enemies; pallāṇdu long live – should always exist; padai that serves as weapon; pŏr pukku muzhangum in battle by its sound; appānjasanniyamum the conch by name pānchajanya; pallāṇdĕ should also be there with you always

TPL 3

3 வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின் *
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோம் *
ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை *
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.
3 வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் * வந்து மண்ணும் மணமும் கொண்மின் *
கூழாட்பட்டு நின்றீர்களை * எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் **
ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள் * இராக்கதர் வாழ் * இலங்கை
பாழாள் ஆகப் படை பொருதானுக்குப் * பல்லாண்டு கூறுதுமே (3)
3 vāzhāṭpaṭṭu niṉṟīr ul̤l̤īrel * vantu maṇṇum maṇamum kŏṇmiṉ *
kūzhāṭpaṭṭu niṉṟīrkal̤ai * ĕṅkal̤ kuzhuviṉil pukutalŏṭṭom **
ezhāṭkālum pazhippu ilom nāṅkal̤ * irākkatar vāzh * ilaṅkai
pāzhāl̤ ākap paṭai pŏrutāṉukkup * pallāṇṭu kūṟutume (3)

Ragam

Nāṭṭai / நாட்டை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
TPL.3

Simple Translation

3. O devotees, if you wish to serve him, come and carry sand and fragrance for his festivals. If you associate yourself only with material gains, we will not allow you in our devout group of devotees. We hail from families that carry no stains for seven generations. The Lord fought and annihilated Lankā, the land of the Rakshasās. Let us praise him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாழ் ஆள் கைங்கர்யம் பண்ண; பட்டு தகுதியுடையவர்களாக; நின்றீர் அடிமையாகி; உள்ளீரேல் வந்து இருக்க விரும்பினீர்களானால்; மண்ணும் மணமும் உற்சவத்திற்கு மண் சுமந்து; கொண்மின் மணமும் சேருங்கள்; கூழாட்பட்டு உணவுக்காக அடிமைகளாக; நின்றீர்களை நிற்கும் உங்களை; எங்கள் குழுவினில் எங்கள் கூட்டத்தில்; புகுதலொட்டோம் நுழைய விட மாட்டோம்; நாங்கள் நாங்களோவெனில்; ஏழு ஆள் காலும் ஏழு தலைமுறைகளிலும்; பழிப்பு இலோம் பழிப்பு இல்லாமலிருப்பவர்கள்; இராக்கதர் வாழ் அரக்கர்கள் வாழும்; இலங்கை இலங்கை; பாழ் ஆள் ஆக பாழ் ஆகும்படி; படை பொருதானுக்கு போர் செய்த பெருமானுக்கு; பல்லாண்டு கூறுதுமே பல்லாண்டு பாடுகிறோம்
vāzhāl̤ pattu if you are engrossed in bhagavath kainkaryam; ninṛīrul̤l̤īrĕl and stand on that nishtai (intention/ways); vanthu join with us (āzhvār); maṇṇum maṇamum koṇmin and for the uthsavams for emperumān, please take soil (thirumul̤aith thirunāl̤ – sprouting ritual which is done before the uthsavam) and get immersed in the uthsavam; kūzhāl̤ pattu ninṛīrkal̤ai if you are serving other people to fulfill your worldly needs,; engal̤ kuzhuvinil puguthalottŏm we won’t allow you to join us; nāngal̤ us; ĕzhātkālum pazhippilŏm We are flawless/faultless for 21 generations; irākkathar vāzh ilangai lankā which is filled with demons; pāzhāl̤āga getting destroyed; padai poruthānukku who went to battle field; pallāṇdu kūṛuthum we are singing pallāṇdu now

TPL 4

4 ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து *
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ *
நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று *
பாடுமனமுடைப்பத்தருள்ளீர் வந்துபல்லாண்டுகூறுமினே.
4 ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து * எங்கள் குழாம் புகுந்து *
கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி * வந்து ஒல்லைக் கூடுமினோ **
நாடும் நகரமும் நன்கு அறிய * நமோ நாராயணாய என்று *
பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் * வந்து பல்லாண்டு கூறுமினே (4)
4 eṭu nilattil iṭuvataṉ muṉṉam vantu * ĕṅkal̤ kuzhām pukuntu *
kūṭu maṉam uṭaiyīrkal̤ varampu ŏzhi * vantu ŏllaik kūṭumiṉo **
nāṭum nakaramum naṉku aṟiya * namo nārāyaṇāya ĕṉṟu *
pāṭu maṉam uṭaip pattarul̤l̤īr * vantu pallāṇṭu kūṟumiṉe (4)

Ragam

Nāṭṭai / நாட்டை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
TPL.4

Simple Translation

4. Come and join our group before this body is cast off on earth. Oh like minded devotees, rise above the temporal barriers and join us quickly. Let the town and the country resound with the chant ‘Namo Nārāyanāya’. Join together and sing His praise 'Live Long (Pallāndu!)'

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏடு நிலத்தில் மயானத்தில் இந்த உடலை; இடுவதன் முன்னம் சேர்ப்பதற்கு முன்; வந்து எங்கள் குழாம் வந்து எங்கள் கோஷ்டியில்; புகுந்து கூடு சேர்ந்து கூடுவோம்; மனம் என்ற மனம்; உடையீர்கள்! உடையவர்களாகில்; வரம்பு ஒழி வரம்பை விட்டு; வந்து ஒல்லைக் வந்து விரைவாக; கூடுமினோ எங்கள் கோஷ்டியில் கூடுங்கள்; நாடும் நாட்டிலுள்ளவர்களும்; நகரமும் நகரத்திலுள்ளவர்களும்; நன்கு அறிய நன்கு அறியும்படி; நமோ நாராயணாய என்று திருமந்திரத்தை அனுசந்தித்து; பாடும் மனம் உடைப் பாடக்கூடிய மனம் உடைய; பத்தர் உள்ளீர்! வந்து பக்தர்களாகில் வந்து; பல்லாண்டு கூறுமினே மங்களாசாசனம் பண்ணுங்கள்
ĕdu nilaththil iduvathan munnam Before you are put in the graveyard/crematory ground; vanthu engal̤ kuzhām pugunthu come, join our ghŏshti (group); kūdu manam udaiyīrgal̤ if you have that thought (of joining us),; varambozhi vanthu giving up kaivalyam; ollai soon/immediately; kūduminŏ come and join our ghŏsti; nādum people living in country-side; nagaramum people living in cities; nangaṛiya for both to be cogniśance of your good,; namŏ nārāyaṇā enṛu chanting thirumanthram; pādu manam udaip paththar ul̤l̤īr vanthu if you have the bhakthi to sing thirumanthram; pallānṇdu kūṛuminĕ come and sing thirupallāṇdu.

TPL 5

5 அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை *
இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு *
தொண்டைக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி *
பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே.
5 அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி * அசுரர் இராக்கதரை *
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த * இருடீகேசன் தனக்கு **
தொண்டைக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது * ஆயிர நாமம் சொல்லிப் *
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து * பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே (5)
5 aṇṭak kulattukku atipati āki * acurar irākkatarai *
iṇṭak kulattai ĕṭuttuk kal̤ainta * iruṭikecaṉ taṉakku **
tŏṇṭaik kulattil ul̤l̤īr vantu aṭitŏzhutu * āyira nāmam cŏllip *
paṇṭaik kulattait tavirntu * pallāṇṭu pallāyirattāṇṭu ĕṉmiṉe (5)

Ragam

Nāṭṭai / நாட்டை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
TPL.5

Simple Translation

5. O devotees, who are subservient to Him, worship and praise Rishikesā, the king of the whole earth, who destroyed the Rakshasās and their large clan. Give up your old ways and join us and recite His names a thousand. Bow to his feet and say, “Pallāndu! Pallāndu!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அண்டக் குலத்துக்கு அகிலத்திற்கு; அதிபதி ஆகி அதிபதி ஆகி; அசுரர் அசுரர்களும்; இராக்கதரை ராக்ஷஸர்களுமாகிய; இண்டைக் குலத்தை நெருக்கமான கூட்டத்தை; எடுத்துக் களைந்த நிர்மூலமாக்கின; இருடீகேசன் தனக்கு ரிஷிகேசனான பகவானுக்கு; தொண்டக் குலத்தில் அடிமைசெய்யும் குலத்தவரான; உள்ளீர் வந்து நீங்கள் வந்து; அடி தொழுது பகவானுடைய திருவடிகளை வணங்கி; ஆயிரம் அவனது ஆயிரம்; நாமம் சொல்லி நாமங்களையும் துதித்து; பண்டைக் குலத்தைத் பழைய ஜன்மத்தை; தவிர்ந்து ஒழித்து; பல்லாண்டு பல வருஷங்கள்; பல்லாயிரத்து ஆண்டு பல ஆயிரம் வருஷங்கள்; என்மினே துதித்திடுங்கள்
aṇdakkulaththukku collection of all the aṇdams (worlds); adhipathiyāki one who is the master of such collection; asurar irākkatharai demons and asuras; iṇdak kulaththai assemblage of demons and asuras; yeduththuk kal̤aintha garner such assemblage and abolish them; irudīkĕchan one who is master of all iṇdhriyas (senses); thoṇdak kulaththil ul̤l̤īr who is present in dhāsya kulam (clan of servitors of emperumān); vanthu adithozhuthu come to our ghŏshti and invoke lotus feet of achchuthan; āyira nāmam cholli singing ḥis thousand nāmas (divine names); paṇdaik kulaiththai you were in a clan, where you would go to purushŏththaman and desire for other purushārththams (goals) than bhagavān himself; thavirnthu give up that clan; pallāyiraththāṇdu enminĕ and perform mangal̤āsāsanam

TPL 6

6 எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி *
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் * திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை *
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதுமே.
6 எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் * ஏழ்படிகால் தொடங்கி *
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் ** திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரி உரு ஆகி * அரியை அழித்தவனை *
பந்தனை தீரப் பல்லாண்டு * பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே (6)
6 ĕntai tantai tantai tantai tam mūttappaṉ * ezhpaṭikāl tŏṭaṅki *
vantu vazhivazhi āṭcĕykiṉṟom ** tiru voṇat tiruvizhavil
antiyam potil ariyuru āki * ariyai azhittavaṉai *
pantaṉai tīrap pallāṇṭu * pallāyirattāṇṭu ĕṉṟu pāṭutume (6)

Ragam

Nāṭṭai / நாட்டை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
TPL.6

Simple Translation

6. My father, his father, and his great grandfather, since seven generations we have been serving Him who took the form of Narasimhā on the evening of SRavanā Nakshatra and destroyed Hiranyan and to efface our cares, let us praise and sing 'Live long for years a thousand and many thousands'.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எந்தை நானும் என் தகப்பனும்; தந்தை அவன் தகப்பனும்; தந்தை தந்தை அவன் தகப்பனும் அவனுடைய தகப்பனும்; தம் மூத்தப்பன் அவன் தகப்பனும் பாட்டனுமாகிய; ஏழ்படிகால் தொடங்கி ஏழு தலைமுறை தொடங்கி; வந்து வழிவழி வந்து முறை முறையாக; ஆட்செய்கின்றோம் கைங்கரியம் செய்கிறோம்; திருவோண திருவோணம் என்கிற; திருவிழவில் திருநாளிலே; அந்தியம் போதில் அந்தி வேளையில்; அரியுரு ஆகி நரசிம்மமூர்த்தியாகத் தோன்றி; அரியை சத்ருவான இரணியனை; அழித்தவனை அழித்தவனை; பந்தனை தீர ஆயாசம் தீரும்படி; பல்லாண்டு பலகாலம்; பல்லாயிரத்துஆண்டு என்று பல ஆயிரம் ஆண்டுகள்; பாடுதுமே மங்களாசாசனம் செய்வோம்
enthai me and my father; thanthai his father; thanthai his father; tham mūththappan his father (and ancestor); ĕzh padi kāl thodangi starting from seven generations before; vanthu having come (at appropriate time to perform mangal̤āsāsanam); vazhi vazhi in proper manner; āl̤ cheyginṛŏm serving; thiruvŏṇath thiruvizhavil on the auspicious day of sravaṇam (star of the thamizh month); anthi am pŏthil beautiful sun-set time (when the strength of asuras increase); ari uru āgi assuming the form of lion-man; ariyai hiraṇyakasipu who is the enemy (of prahlādha who is his devotee); azhiththavanai one who destroyed him; panthanai thīra to eliminate his fatigue (from killing hiraṇya); pallāṇdu pallāyiraththāṇdu enṛu pāduthum we will perform mangal̤āsāsanam to him for eternity

TPL 7

7 தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின் *
கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம் *
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி
பாய * சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.
7 தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி * திகழ் திருச்சக்கரத்தின் *
கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று * குடிகுடி ஆட்செய்கின்றோம் **
மாயப் பொருபடை வாணனை * ஆயிரந் தோளும் பொழி குருதி
பாய * சுழற்றிய ஆழி வல்லானுக்குப் * பல்லாண்டு கூறுதுமே (7)
7 tīyiṟ pŏlikiṉṟa cĕñcuṭar āzhi * tikazh tiruccakkarattiṉ *
koyiṟ pŏṟiyāle ŏṟṟuṇṭu niṉṟu * kuṭikuṭi āṭcĕykiṉṟom **
māyap pŏrupaṭai vāṇaṉai * āyiran tol̤um pŏzhi kuruti
pāya * cuzhaṟṟiya āzhi vallāṉukkup * pallāṇṭu kūṟutume (7)

Ragam

Nāṭṭai / நாட்டை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
TPL.7

Simple Translation

7. On our shoulders, we bear the divine symbol of the discus that glows brighter than sun and fire. We are serving Him for generations. He attacked Bānasuran and his magical army, slew him with his discus making his thousand arms bleed. Let us praise Him, the one who wields the discus with might. Let us say, “Live Long, Live Long ! (Pallāndu! Pallāndu!”)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தீயில் அக்னி சூரியன் ஆகியவைகளைக்காட்டிலும்; பொலிகின்ற பொலிவுடைய; செஞ்சுடர் ஆழி சிவந்த ஒளியுடைய வட்டமாக; திகழ் பிரகாசிக்கின்ற; திருச் சக்கரத்தின் திருச்சக்கரத்தின்; கோயிற் பொறியாலே இருப்பிடத்தின் சின்னத்தாலே; ஒற்றுண்டு அடையாளம் செய்யப்பட்டவராய்; நின்று இருந்து; குடிகுடி தலைமுறை தலைமுறையாக; ஆள் பிரானுக்கு கைங்கரியம்; செய்கின்றோம் செய்து வருகிறோம்; மாயப் வஞ்சனையாக போரிடும்; பொருபடை சேனையையுடைய; வாணனை பாணாசுரனை; ஆயிரம் தோளும் ஆயிரம் தோள்களிலிருந்தும்; பொழி குருதி வெளிக்கிளம்புகிற ரத்தமானது; பாய வெள்ளமாகப் பாய்ந்தோடும்படியாக; சுழற்றிய சுழற்றிய; ஆழி சக்கரத்தை; வல்லானுக்குப் ஏந்தி நிற்பவனுக்கு; பல்லாண்டு கூறுதுமே மங்களாசாசனம் செய்வோம்
thīyil even greater than fire, sun, etc; poliginṛa greatly shining; sem sudar having reddish radiance; āzhi circular in shape; thigazh shining; thiruchchakkaraththin kŏyil the abode of srī sudharasana; poṛiyālĕ with the symbol; oṝuṇdu ninṛu having marked with; kudi kudi generation after generation; āl̤ seyginṛŏm came to serve; māyap poru padai having an army which is able to engage in cunning warfare; vāṇanai bāṇāsuras; āyiram thŏl̤um from the 1000 shoulders; pozhi kurudhi pāya blood flowing like a flood; suzhaṝiya circling; āzhi sudharasana chakram; vallānukku the capable one who holds it; pallāṇdu kūṛuthum we are singing thiruppallāṇdu

TPL 8

8 நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும் *
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும் *
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல *
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே.
8 நெய்யிடை நல்லதோர் சோறும் * நியதமும் அத்தாணிச் சேவகமும் *
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு * காதுக்குக் குண்டலமும் **
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து * என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல *
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் * பல்லாண்டு கூறுவனே (8)
8 nĕyyiṭai nallator coṟum * niyatamum attāṇic cevakamum *
kai aṭaikkāyum kazhuttukkup pūṇŏṭu * kātukkuk kuṇṭalamum **
mĕyyiṭa nallator cāntamum tantu * ĕṉṉai vĕl̤l̤uyir ākkavalla *
paiyuṭai nākappakaik kŏṭiyāṉukkup * pallāṇṭu kūṟuvaṉe (8)

Ragam

Nāṭṭai / நாட்டை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
TPL.8

Simple Translation

8. O divine lord, you gave me prasadam soaked in good ghee, betel leaves and nuts, ornaments for my neck, earrings for my ears and sandal paste to smear on my body. You gave me your grace so that I would become pure and wise and serve you. Your flag carries Garudā- the hooded serpent's enemy. I shall sing your praise and say Live Long, Live Long (Pallāndu! Pallāndu!”)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெய்யிடை நெய் நடுவிலிருக்கும்; நல்லதோர் சோறும் நல்ல சோறும்; நியதமும் எப்போதும்; அத்தாணி பிரிவில்லாது செய்யும்; சேவகமும் கைங்கர்யமும்; கை திருக்கையால் இட்ட; அடைக் காயும் வெற்றிலைப் பாக்கையும்; கழுத்துக்கு கழுத்துக்கு அணியும்; பூணொடு ஆபரணமும்; காதுக்கு காதுக்கு அணியும்; குண்டலமும் குண்டலமும்; மெய்யிட உடம்பில் பூசிக்கொள்ளும்; நல்லதோர் பரிமளம் நிறைந்த; சாந்தமும் தந்து சந்தனமும் கொடுத்து; என்னை என்னை; வெள்ளுயிர் சுத்த ஸ்வபாவமுள்ளவனாக; ஆக்கவல்ல ஆக்கவல்ல; பையுடை படங்களையுடைய; நாகப் பகை ஸர்ப்பத்துக்கு விரோதியான கருடனை; கொடியானுக்கு கொடியாக உடையவனுக்கு; பல்லாண்டு கூறுவனே மங்களாசாசனம் செய்வோம்
ney idai in between ghee; nallathu ŏr sŏṛum rice which is seen in there, that which is placed with pure heart and that which tastes delicious; niyathamum always; aththāṇich chĕvakamum inseparable service; kai placed by (emperumān with his own) hand; adaik kāyum betel leaves and nuts; kazhuththukkup pūṇodu kādhukkuk kuṇdalamum ornaments for the neck and ears; meyyida fit to be applied on the body; nallathu ŏr sānthamum very fragrant sandalwood paste; thanthu given; ennai (most lowly) me; vel̤ uyir ākka valla to transform me to be pure natured; pai udai having hoods; nāgam for the serpent; pagai garuda who is the enemy of (serpent); kodiyānukku one who has it (garuda) in his flag; pallāṇdu kūruvan will perform mangal̤āsāsanam

TPL 9

9 உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு *
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம் *
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில் *
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.
9 உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை * உடுத்து கலத்தது உண்டு *
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன * சூடும் இத்தொண்டர்களோம் **
விடுத்த திசைக் கருமம் திருத்தித் * திருவோணத் திருவிழவில் *
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் * பல்லாண்டு கூறுதுமே (9)
9 uṭuttuk kal̤ainta niṉ pītaka āṭai * uṭuttu kalattatu uṇṭu *
tŏṭutta tuzhāy malar cūṭik kal̤aintaṉa * cūṭum ittŏṇṭarkal̤om **
viṭutta ticaik karumam tiruttit * tiruvoṇat tiruvizhavil *
paṭutta painnākaṇaip pal̤l̤i kŏṇṭāṉukkup * pallāṇṭu kūṟutume (9)

Ragam

Nāṭṭai / நாட்டை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
TPL.9

Simple Translation

9. We, your devotees, wear the silk clothes You wore, put on the thulasi garlands that adorned You, eat the food (prasadam) that is left over after You eat and carry out your orders everywhere as You desire from us. On the auspicious SRavanā day, let us praise Him, who rests on the snake bed and say Pallāndu!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உடுத்து உடுத்தி; களைந்த களைந்த; நின் பீதக ஆடை உன் பீதாம்பரத்தை; உடுத்து உடுத்தியும்; கலத்தது உண்டு நீ உண்ட மீதத்தை உண்டும்; தொடுத்த தொடுக்கப்பட்ட; துழாய் மலர் துளசி மாலை; சூடிக் களைந்தன சூடிக்களைந்ததாகவும் மாலைகளை; சூடும் சூட்டிக்கொள்ளும்; இத் தொண்டர்களோம் தாசர்களான நாங்கள்; விடுத்த திசை ஏவின திசையிலுள்ள; கருமம் பணிகளை; திருத்தி நன்றாகச் செய்து; படுத்த படுத்திருக்கும்; பைந் படங்களையுடைய; நாகணை நாகமாகிற படுக்கையில்; பள்ளி கொண்டானுக்கு கண்வளருகிற உனக்கு; திருவோண திருவோணம்; திருவிழவில் என்னும் திருநாளில்; பல்லாண்டு கூறுதுமே மங்களாசாசனம் செய்வோம்
uduththu worn in the sacred waist; kal̤aintha discarded; nin your (being the master); pīthaga ādai yellowish cloth; uduththu wearing it; kalaththathu remainder in the vessel (from which you ate); uṇdu eating it; sūdik kal̤ainthana that which where worn by you and discarded; thoduththa prepared by (us, your servitors); thuzhāy malar thul̤asi flowers; sūdum wearing it; ith thoṇdargal̤ŏm us who are such servitors;; viduththa sent out to; thisaik karumam the targets in the particular direction; thiruththi complete it properly; paduththa in a lying down position; pai (due to that) having raised hoods; nāga aṇai in the bed named thiruvananthāzhwān (ādhi sĕshan); pal̤l̤i koṇdānukku you who is resting on it; thiruvŏṇath thiruvizhavil on the auspicious sravaṇam day; pallāṇdu kūṛuthum we will sing thiruppallāṇdu

TPL 10

10 எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
அந்நாளே * அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண் *
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து * ஐந்தலைய
பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே.
10 எந்நாள் எம்பெருமான் * உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே * அடியோங்கள் அடிக்குடில் * வீடுபெற்று உய்ந்தது காண் **
செந்நாள் தோற்றித் * திரு மதுரையில் சிலை குனித்து * ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே * உன்னைப் பல்லாண்டு கூறுதுமே (10)
10 ĕnnāl̤ ĕmpĕrumāṉ * uṉtaṉakku aṭiyom ĕṉṟu ĕzhuttuppaṭṭa
annāl̤e * aṭiyoṅkal̤ aṭikkuṭil vīṭupĕṟṟu uyntatu kāṇ **
cĕnnāl̤ toṟṟit * tiru maturaiyil cilai kuṉittu * aintalaiya
painnākat talaip pāyntavaṉe * uṉṉaip pallāṇṭu kūṟutume (10)

Ragam

Nāṭṭai / நாட்டை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
TPL.10

Reference Scriptures

BG. 8-13

Simple Translation

10. The day when we declared our subservience to You, our master, is the day of our deliverance and bliss. Lord! You were born on an auspicious day at northern Mathura. You broke Kamsa's bow in his weaponry, and danced on Kālingan the five-headed snake. We pray that you live long, (“Pallāndu, Pallāndu!”)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம்பெருமான் ஸ்வாமியே!; உன் தனக்கு உமக்கு; அடியோம் என்று தாசர்கள் நாங்கள் என்று; எழுத்துப்பட்ட அடிமை ஓலை எழுதிக் கொடுத்த; எந்நாள் அந்நாளே நாள் எதுவோ அந்த நாளே; அடியோங்கள் தாசர்களான எங்களுடைய; குடில் வீட்டிலுள்ள அனைவரும்; அடி அடிமைப்பட்டவர்களாய்; வீடுபெற்று நல்லகதியை; உய்ந்தது காண் அடைந்து விட்டோம்; செந்நாள் தோற்றி நல்ல நாளில் அவதரித்து; திருமதுரையின் அழகிய வட மதுரையில்; சிலை குனித்து கம்சனின் ஆயுதசாலையில் வில்லை முறித்து; ஐந்தலைய ஐந்து தலைகளையுடைய; பை பரந்த படங்களையுடைய; நாக காளியன் என்னும் நாகத்தின்; தலைப் பாய்ந்தவனே! தலை மேல் குதித்தவனே!; உன்னைப் உனக்கு; பல்லாண்டு கூறுதுமே மங்களாசாசனம் செய்வோம்
emperumān ŏh our master!; un thanakku to you (who is the master of all); adiyŏm enṛu that we are servitors; ezhuththup patta when we gave that in writing; ennāl̤ which day; annāl̤ĕ that day; adiyŏngal̤ our (who are servitors); kudil sons, grand-sons, etc., who are in the house; adi being surrendered to you; vīdu peṝu being freed from kaivalya mŏksham; uynthathu got liberated/uplifted; sem nāl̤ on that beautiful day; thŏṝi descended; thiru mathurai ul̤ in the beautiful mathurā (of north bhāratham); silai kuniththu broke the bow (in kamsas weapons court); ain thalaiya having five heads; pai having well expanded hoods; nāgam kāl̤iya the serpent; thalai on the head; pāynthavanĕ sarvĕsvaran (you) who mercifully landed on it; unnai for you; pallāṇdu kūṛuthum we will perform mangal̤āsāsanam

TPL 11

11 அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் * அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே நானும்உனக்குப்பழவடியேன் *
நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி *
பல்வகையாலும்பவித்திரனே உன்னைப்பல்லாண்டுகூறுவனே. (2)
11 ## அல்வழக்கு ஒன்றும் இல்லா * அணி கோட்டியர் கோன் * அபிமான துங்கன்
செல்வனைப் போல * திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன் **
நல் வகையால் நமோ நாராயணா என்று * நாமம் பல பரவி *
பல் வகையாலும் பவித்திரனே * உன்னைப் பல்லாண்டு கூறுவனே (11)
11 ## alvazhakku ŏṉṟum illā * aṇi koṭṭiyar koṉ * apimāṉatuṅkaṉ
cĕlvaṉaip pola * tirumāle nāṉum uṉakkup pazha aṭiyeṉ **
nal vakaiyāl namo nārāyaṇā ĕṉṟu * nāmam pala paravi *
pal vakaiyālum pavittiraṉe * uṉṉaip pallāṇṭu kūṟuvaṉe (11)

Ragam

Nāṭṭai / நாட்டை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
TPL.11

Simple Translation

11. Dearest god, I am an old devotee of yours, like Abhimānadungan, the king of beautiful Kottiyur where there is no injustice. Devotees praise you, who are pure in all ways with many names and say, “Namo Nārāyana” with love. I will praise you and say, “Pallāndu Pallāndu”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமாலே! லக்ஷ்மீபதியே!; அல்வழக்கு தவறான வழக்குகள்; ஒன்றும் இல்லா ஒன்றுமில்லாத; அணிகோட்டியர் திருக்கோட்டியூரில்; கோன் உள்ளவர்களுக்குத் தலைவராக; அபிமான நான் அடியவன் என்ற அபிமானத்தால்; துங்கன் சிறந்த; செல்வனைப் போல செல்வ நம்பியைப் போல; நானும் உனக்கு அடியேனும் உனக்கு; பழ அடியேன் பழமையான தாசனாகி விட்டேன்; பல் வகையாலும் பலவிதங்களிலும்; பவித்திரனே! பரிசுத்தமான பெருமானே!; நல்வகையால் நல்ல வகையில்; நமோ நாராயணா என்று திருமந்திரத்தை அனுசந்தித்து; நாமம் பல பரவி அநேக திருநாமங்களை சொல்லி; உன்னை உனக்கு; பல்லாண்டு கூறுவனே மங்களாசாசனம் செய்வோம்
thirumālĕ ŏh master of srī mahālakshmi!; al vazhakku bad manners/habits; onṛum illā one who is not having even a tinge of it; aṇi being an ornament (for the samsāram (material realm)); kŏttiyūr for the residents of thirukkŏshtiyūr; kŏn being the leader; abhimāna thungan being great due to considering himself as ī am a servant of emperumān; selvanaip pŏla like selva nambi; nānum me too; unakku for you who is the master; pazha adiyĕn am being an eternal servitor;; pal vagaiyālum paviththiranĕ ŏh the one who can eliminate [my/our] sins in many ways (through his nature, form, qualities, wealth, etc)!; nal vagaiyāl through beautiful ways; namŏ nārāyaṇā enṛu meditating upon the thirumanthram and reciting the same; pala nāmam your many auspicious names; paravi saying in different improper ways; unnaip pallāṇdu kūṛuvan ī will perform mangal̤āsāasnam to you

TPL 12

12 பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை * சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல் *
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று *
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. (2)
12 ## பல்லாண்டு என்று பவித்திரனைப் * பர மேட்டியைச் * சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை * வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல் **
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் * நமோ நாராயணாய என்று *
பல்லாண்டும் பரமாத்மனைச் * சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே (12)
12 ## pallāṇṭu ĕṉṟu pavittiraṉaip * para meṭṭiyaic * cārṅkam ĕṉṉum
vil āṇṭāṉ taṉṉai * villiputtūr viṭṭu cittaṉ virumpiya cŏl **
nal āṇṭu ĕṉṟu naviṉṟu uraippār * namo nārāyaṇāya ĕṉṟu *
pallāṇṭum paramātmaṉaic * cūzhntiruntu ettuvar pallāṇṭe (12)

Ragam

Nāṭṭai / நாட்டை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
TPL.12

Simple Translation

12. Thus praises Vishnuchithan of Villiputhur through his pious verses, the Impeccable, the Supreme Lord who holds the bow Sārangam, Those devotees who recite these hymns (pāsurams) and worship him saying, “Namo Nārāyanaya” they will be with the highest lord, praising him always and saying, “Pallāndu! Pallāndu!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பவித்திரனை இயற்கையாகவே பவித்திரனும்; பரமேட்டியை பரமபத வாசனும்; சார்ங்கம் என்னும் வில் சார்ங்கம் என்னும் வில்லை; ஆண்டான்தன்னை அடக்கி ஆள்பவனுமான எம்பெருமானை; வில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூரில்; விட்டு சித்தன் பெரியாழ்வார்; பல்லாண்டு நித்தியமாய் மங்களம்; என்று உண்டாக வேண்டும் என்று; விரும்பிய சொல் விருப்பத்துடன் அருளிய பாசுரங்கள்; நல் ஆண்டு நமக்குக் கிடைத்தது; என்று நம் நல்ல காலம் என்று; நவின்று இடைவிடாமல்; உரைப்பார் சொல்லுபவர்களுக்கு; நமோ நாராயணாய என்று திருமந்திரத்தை அனுசந்தித்து; பரமாத்மனை பரமாத்மனை; சூழ்ந்திருந்து சூழ்ந்து பலகாலம்; பல்லாண்டும் கணக்கற்ற பல காலம்; பல்லாண்டே ஏத்துவர் பல்லாண்டு பாடுவார்கள்
paviththiranai being the one who is (naturally) super pure; paramĕttiyai being the one who is seated in the highest abode of srīvaikuṇtam; sārngam ennum having the auspicious name sārngam; vil bow; āṇdān thannai towards emperumān who has complete control over that; villipuththūr one who is born in srīvillipuththūr; vittuchiththan periyāzhvār who has the auspicious name of vishṇuchiththan; pallāṇdu enṛu saying eternally being auspicious; virumbiya mercifully spoken with (such) desire; sol srīsūkthi (divine words); nal āṇdu enṛu feeling that this is auspicious time (suitable to sing thiruppallāṇdu); navinṛu uraippār who says repeatedly; namŏ nārāyaṇāya enṛu meditating upon the thirumanthram; paramāthmanai srīman nārāyaṇan who is the paramāthmā; chūzhnthu irunthu surrounding him; pal āṇdum countless time (in future); pallāṇdu ĕththuvar will sing thirupallāṇdu