Thiruppallāṇḍu
திருப்பல்லாண்டு

As he is being honored by King Sri Vallaba Devā, Periyāzhvār performs mangalāsāsanam to Lord Sriman Nārāyanā
In the royal court of the Pāndyā King Vallabha Deva, Vishnuchittar established Paratattvā, (The Omnipresent State) as ordained by the Paramātmā (the Supreme Lord) himself. The king and the assembly of scholars and ministers were wonder struck when Vishnuchittā quoted extensively and emphatically from the Vedās, the Upanishads and the Puranas and established
+ Read moreபாண்டிய குல மன்னன் வல்லப தேவனின் அரசவையில் எம்பெருமான் நியமித்தருளியபடி பெரியாழ்வார் பரதத்வத்தை (உண்மை பொருள்) நிலைநாட்டி பொற்கிழியைப் பெற்றதால் அரசன் மகிழ்ந்து, அவருக்கு 'பட்டர்பிரான்' என்று விருது அளித்து, யானை மீது நகர்வலம் அழைத்து விழா எடுத்தான். அந்த விழாவைக் காண மஹாலக்ஷ்மியுடன்
+ Read moreGroup: 1st 1000
Verses: 1 to 12
Glorification: Krishna Avatar (க்ருஷ்ணாவதாரம்)
- தனியன் / Taniyan
- TPL 1
1 ## பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு *
பல கோடி நூறாயிரம் *
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! *
உன் சேவடி செவ்வி திருக்காப்பு (1) - TPL 2
2 ## அடியோமோடும் நின்னோடும் * பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு *
வடிவாய் நின் வல மார்பினில் * வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு **
வடிவார் சோதி வலத்து உறையும் * சுடர் ஆழியும் பல்லாண்டு *
படைபோர் புக்கு முழங்கும் * அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே (2) - TPL 3
3 வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் * வந்து மண்ணும் மணமும் கொண்மின் *
கூழாட்பட்டு நின்றீர்களை * எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் **
ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள் * இராக்கதர் வாழ் * இலங்கை
பாழாள் ஆகப் படை பொருதானுக்குப் * பல்லாண்டு கூறுதுமே (3) - TPL 4
4 ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து * எங்கள் குழாம் புகுந்து *
கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி * வந்து ஒல்லைக் கூடுமினோ **
நாடும் நகரமும் நன்கு அறிய * நமோ நாராயணாய என்று *
பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் * வந்து பல்லாண்டு கூறுமினே (4) - TPL 5
5 அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி * அசுரர் இராக்கதரை *
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த * இருடீகேசன் தனக்கு **
தொண்டைக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது * ஆயிர நாமம் சொல்லிப் *
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து * பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே (5) - TPL 6
6 எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் * ஏழ்படிகால் தொடங்கி *
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் ** திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரி உரு ஆகி * அரியை அழித்தவனை *
பந்தனை தீரப் பல்லாண்டு * பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே (6) - TPL 7
7 தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி * திகழ் திருச்சக்கரத்தின் *
கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று * குடிகுடி ஆட்செய்கின்றோம் **
மாயப் பொருபடை வாணனை * ஆயிரந் தோளும் பொழி குருதி
பாய * சுழற்றிய ஆழி வல்லானுக்குப் * பல்லாண்டு கூறுதுமே (7) - TPL 8
8 நெய்யிடை நல்லதோர் சோறும் * நியதமும் அத்தாணிச் சேவகமும் *
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு * காதுக்குக் குண்டலமும் **
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து * என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல *
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் * பல்லாண்டு கூறுவனே (8) - TPL 9
9 உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை * உடுத்து கலத்தது உண்டு *
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன * சூடும் இத்தொண்டர்களோம் **
விடுத்த திசைக் கருமம் திருத்தித் * திருவோணத் திருவிழவில் *
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் * பல்லாண்டு கூறுதுமே (9) - TPL 10
10 எந்நாள் எம்பெருமான் * உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே * அடியோங்கள் அடிக்குடில் * வீடுபெற்று உய்ந்தது காண் **
செந்நாள் தோற்றித் * திரு மதுரையில் சிலை குனித்து * ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே * உன்னைப் பல்லாண்டு கூறுதுமே (10) - TPL 11
11 ## அல்வழக்கு ஒன்றும் இல்லா * அணி கோட்டியர் கோன் * அபிமான துங்கன்
செல்வனைப் போல * திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன் **
நல் வகையால் நமோ நாராயணா என்று * நாமம் பல பரவி *
பல் வகையாலும் பவித்திரனே * உன்னைப் பல்லாண்டு கூறுவனே (11) - TPL 12
12 ## பல்லாண்டு என்று பவித்திரனைப் * பர மேட்டியைச் * சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை * வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல் **
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் * நமோ நாராயணாய என்று *
பல்லாண்டும் பரமாத்மனைச் * சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே (12)