PT 2.9.5

தென்னவனை வென்றவன் பணிந்த கோயில் இது

1132 தூம்புடைத்திண்கைவன்தாள்களிற்றின்
துயர்தீர்த்து, அரவம்வெருவ * முனநாள்
பூம்புனல்பொய்கைபுக்கானவனுக்குஇடந்தான்
தடம்சூழ்ந்துஅழகாயகச்சி *
தேம்பொழில்குன்றெயில்தென்னவனைத்
திசைப்பச்செருமேல்வியந்துஅன்றுசென்ற *
பாம்புடைப்பல்லவர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே.
PT.2.9.5
1132 tūmpu uṭait tiṇ kai vaṉ tāl̤ kal̤iṟṟiṉ *
tuyar tīrttu aravam vĕruva * muṉa nāl̤
pūm puṉal pŏykai pukkāṉ-avaṉukku *
iṭam-tāṉ-taṭam cūzhntu azhaku āya kacci **
tem pŏzhil kuṉṟu ĕyil tĕṉṉavaṉait *
ticaippac cĕrumel viyantu aṉṟu cĕṉṟa *
pāmpu uṭaip pallavar-koṉ paṇinta *
parameccuraviṇṇakaram-atuve-5 **

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1132. Our lord who saved the long-trunked elephant Gajendra from the crocodile that caught it when it went to get flowers in the pond, and who entered the water and danced on the heads of the snake Kālingan stays in sacred Paramechura Vinnagaram temple in beautiful Kachi filled with lovely palaces where the Pallava king who fought and conquered the Pandyan king of the southern land surrounded with hill-like forts and groves dripping with honey worshiped him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன நாள் முன்பொரு சமயம்; தூம்பு உடைத் திண் கை துதிக்கையையும்; வன் தாள் வலிமையான கால்களையுமுடைய; களிற்றின் துயர் கஜேந்திரனின் துயர்; தீர்த்து தீர்த்தவனும்; பூம் புனல் பொய்கை அழகிய பொய்கையிலே; அரவம் வெருவ காளிய நாகம் அஞ்சும்படியாக; புக்கான் அவனுக்கு பாய்ந்தவனுமான எம்பெருமான்; இடம் தான் இருக்குமிடம்; தடம் சூழ்ந்து தடாகங்கள் சூழ்ந்த; அழகு ஆய கச்சி அழகிய காஞ்சீபுரத்தில்; தேம் பொழில் தேன் நிறைந்த சோலைகளையும்; குன்று எயில் மலைபோன்ற மதிள்களையுமுடைய; தென்னவனை பாண்டிய நாட்டின் அரசன்; திசைப்ப அன்று அறிவு கலங்கும்படி முன்பு; செருமேல் போர்க்களத்திலே; வியந்து சென்ற விருப்பத்துடனே போய்ச் சேர்ந்தவனும்; பாம்பு உடை நாகத்தைக் கொடியாகவுடையவனுமான; பல்லவர் கோன் பணிந்த பல்லவ அரசன் வணங்கிய; பரமேச்சுரவிண்ணகரம் அதுவே அதுவே பரமேச்சுரவிண்ணகரம்
thūmbudai having hole; thiṇ strong; kai trunk; val strong; thāl̤ leg; kal̤iṝin ṣrī gajĕndhrāzhwān-s; thuyar sorrow; thīrththu eliminated; aravam kāl̤iya, the snake; veruva to fear; muna nāl̤ previously; pūm punal poygai into the pond which is filled with beautiful water; pukkānavanukku for the one who jumped; idam abode; thadam by ponds; sūzhndhu surrounded by; azhagāya kachchi in beautiful kānchīpuram; thĕn having honey; pozhil garden; kunṛu like a mountain; eyil having fort; thennavan pāṇdiyan; thisaippa to become bewildered; anṛu previously; seru mĕl in battle; viyandhu with great desire; senṛa who arrived; pāmbu udai having snake as his flag; pallavarkŏn pallava king; paṇindha surrendered; paramĕchchura viṇṇagaram paramĕṣvara viṇṇagaram