PT 2.9.1

Paramēccura Viṇṇakaram, Worshipped by the Pallava King

பல்லவன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம்

1128 சொல்லுவன்சொற்பொருள்தானவை யாய்ச்
சுவைஊறுஒலிநாற்றமும்தோற்றமுமாய் *
நல்லரன் நான்முகன்நாரணனுக்குஇடந்தான்
தடம்சூழ்ந்துஅழகாயகச்சி *
பல்லவன்வில்லவனென்றுலகில்
பலராய்ப்பலவேந்தர் வணங்குகழல்
பல்லவன் * மல்லையர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே. (2)
PT.2.9.1
1128 ## cŏllu vaṉ cŏl pŏrul̤ tāṉ avai āyc *
cuvai ūṟu ŏli nāṟṟamum toṟṟamum āy *
nal araṉ nāraṇaṉ nāṉmukaṉukku *
iṭam-tāṉ-taṭam cūzhntu azhaku āya kacci **
pallavaṉ villavaṉ ĕṉṟu ulakil *
palarāyp pala ventar vaṇaṅku kazhal
pallavaṉ * mallaiyar-koṉ paṇinta
parameccuraviṇṇakaram-atuve-1 **

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1128. He is the source of all words, And the Vedas with their profound meaning rest in Him. He is the essence of taste, touch, sound, fragrance, and form, the very root of the five senses. He is the indwelling Lord of Brahma, who creates, And of Shiva, who destroys. He is Narayana, the supreme protector of all. His abode is Kanchipuram, surrounded by clear ponds, A city of beauty. There, kings of many names and dynasties, Known as Pallavas and Villavas, the mighty chiefs of Thirukadalamallai, have bowed at His sacred feet. This is Paramēchura Viṇṇagaram.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
சொல்லு வன் சொல் சொல்லும் வேதமும் இவற்றின்; பொருள் தான் அவை ஆய் பொருளும் தானேயாயும்; சுவை ஊறு ஒலி நாற்றமும் ரஸம் ஸ்பர்சம் சப்தம் கந்தம்; தோற்றமும் ஆய் ரூபம் ஆகிய ஐம்புலன்களும் தானேயாயும்; நல் அரன் நான்முகனுக்கு சிவனுக்கும் பிரமனுக்கும்; நாரணன் அந்தர்யாமியாயிருப்பவனுக்கு நாராயணனுக்கு; இடம் தான் தடம் சூழ்ந்து இருப்பிடம் தடாகங்கள் சூழ்ந்த; அழகு ஆய கச்சி அழகிய காஞ்சீபுரத்திலே; பல்லவன் வில்லவன் பல்லவன் வில்லவன்; என்று உலகில் என்று உலகில்; பலர் ஆய்ப் பல வேந்தர் பல பெயர்களாலே பல அரசர்களால்; வணங்கு கழல் வணங்கும் பாதத்தையுடையவனும்; மல்லையர் கோன் திருக்கடல் மல்லைக்குத் தலைவனுமான; பல்லவன் பணிந்த பல்லவன் வணங்கிய; பரமேச்சுரவிண்ணகரம் அதுவே அதுவே பரமேச்வர விண்ணகரமாம்
sollu word; van sol (more than that) the vĕdham which is difficult to attain; porul̤ meanings of vĕdham; avai for those; thān āy being the controller; suvaiyum taste; ūṛum touch; oliyum sound; nāṝamum fragrance; thŏṝamum for form which is seen by eyes; āy being the controller; nal being the benefactor; aran being the antharyāmi for rudhra who destroys; nāraṇan being nārāyaṇa (who protects in his original form); nānmuganukku for sarvĕṣvaran who is the antharyāmi of brahmā who creates; idam thān the abode; thadam by ponds; sūzhndhu being surrounded; azhagāya being beautiful; kachchi in kānchi town; pallavan enṛu known as pallavan; villavan enṛu and known as villavan; palarāy countless; ulagil who ruled in this world; pala vĕndhar many kings; vaṇangu worship; kazhal having brave feet; mallaiyar for the residents of thirukkadalmallai which is known as mallāpuri; kŏn king; pallavan one who is known as pallavan; paṇindha surrendered; paramĕchchura viṇṇagaram paramĕṣvara viṇṇagaram

Detailed Explanation

He, the supreme Lord, Sarveśvaran, is the absolute master and inner controller of all existence. He is the very source and substance of sollu, the revealed words which alone can illuminate the transcendent truths that lie beyond the grasp of ordinary sense perception. He is equally the master of van sol, the mighty and eternal Vedam, which stands in stark contrast

+ Read more