PT 3.1.2

நான்மறைப் பொருளாக இருப்பவன் ஊர் இது

1149 மின்னும்ஆழியங்கையவன்
செய்யவள்உறைதருதிருமார்பன் *
பன்னுநான்மறைப்பலபொருளாகிய
பரனிடம், வரைச்சாரல் *
பின்னும்மாதவிப்பந்தலில்
பெடைவரப்பிணியவிழ்கமலத்து *
தென்னவென்றுவண்டுஇன்னிசைமுரல்தரு
திருவயிந்திரபுரமே.
PT.3.1.2
1149 miṉṉum āzhi aṅkaiyavaṉ * cĕyyaval̤
uṟai taru tiru mārpaṉ *
paṉṉu nāṉmaṟaip pal pŏrul̤ ākiya *
paraṉ iṭam-varaic cāral **
piṉṉum mātavip pantalil pĕṭai varap *
piṇi avizh kamalattu *
tĕṉṉa ĕṉṟu vaṇṭu iṉ icai muraltaru *
tiruvayintirapurame-2 **

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1149. The highest lord, the meaning of the four Vedās, who carries a shining discus in his hand and embraces beautiful Lakshmi on his chest stays in Thiruvayindirapuram where madhavi vines grow on the mountain slopes and female bees fly around blooming lotus buds swarming and singing with the sound “tena tena. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின்னும் ஆழி மின்னும் சக்கரத்தை; அங்கையவன் அழகிய கையிலுடையவன்; செய்யவள் மஹாலக்ஷ்மி; உறை தரு இருக்குமிடமான; திரு மார்பன் மார்பையுடையவன்; பன்னு நான்மறை வேதங்களில்; பல் சொல்லப்பட்ட பலவகைப்; பொருள் ஆகிய பொருள்களும் தானேயான; பரன் இடம் பரமன் இருக்குமிடம்; வரைச்சாரல் மலைச் சாரலில் நெருங்கி இருக்கும்; பின்னும் மாதவிப் பந்தலில் குருக்கத்திப் பந்தலில்; பெடை வர தம்மிடம் வந்து சேர்வதற்காக; பிணி அவிழ் மலரும் தாமரையில் ஆண்வண்டு; கமலத்து காத்துக் கொண்டு; தென்ன என்று வண்டு தென்னா தெனாவென்று; இன்னிசை முரல்தரு இனிய இசைகளை பாடும்; திருவயிந்திரபுரமே திருவயிந்திரபுரமே
minnum shining; āzhi divine chakra; am beautiful; kaiyavan having in divine hand; seyyaval̤ periya pirāttiyār; uṛai tharu eternally residing; thirumārvan one who has the divine chest; nānmaṛai by vĕdhams which are of four categories; pannu identified; pal porul̤ many entities; āgiya having as his prakāram (form); paran for greater than all; idam abode; varaich chāral in mountain slope; pinnum present densely; mādhavip pandhalil in the mādhavi creeper shed; vaṇdu beetles; pedai with their female counter-parts; vara to arrive; piṇi avizh blossoming; kamalaththu (entering) in the lotus; thenna enṛu saying -thennā! thenā!- (music); in isai mural tharu humming sweet songs; thiruvayindhirapuramĕ thiruvahindhrapuram.