PT 3.1.7

இராவணனைக் கொன்றவன் இடம் இது

1154 மின்னின்நுண்ணிடைமடக்கொடிகாரணம்
விலங்கலின்மிசைஇலங்கை
மன்னன் * நீண்முடிபொடிசெய்தமைந்தனதிடம்
மணிவரைநீழல் *
அன்னமாமலரரவிந்தத் தமளியில்
பெடையொடும்இனிதமர *
செந்நெலார்க்கவரிக்குலைவீசு தண்
திருவயிந்திரபுரமே.
PT.3.1.7
1154 miṉṉiṉ nuṇ iṭai maṭak kŏṭi kāraṇam *
vilaṅkaliṉmicai ilaṅkai
maṉṉaṉ * nīl̤ muṭi pŏṭicĕyta maintaṉatu
iṭam * maṇi varai nīzhal **
aṉṉam mā malar aravintattu amal̤iyil *
pĕṭaiyŏṭum iṉitu amara *
cĕnnĕl ār kavarik kulai vīcu * taṇ
tiruvayintirapurame-7 **

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1154. Our lord who, as Rāma, fought and destroyed the ten crowns of the king of Lankā to bring back his beautiful vine-like Sita with a waist as thin as lightning stays in cool Thiruvayindirapuram where a male swan with his mate sits sweetly on a lovely bed of lotuses under the shadow of a shining mountain and the fine paddy plants fan them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின்னின் மின்னல் போன்ற; நுண் இடை நுண்ணிய இடயுடைய; மடக்கொடி மடப்பத்தையுடைய கொடி போன்ற; காரணம் ஸீதைக்காக; விலங்கலின் ஸுவேல மலையின்; மிசை மீது அமைக்கப்பட்ட; இலங்கை மன்னன் இலங்கைக்கு மன்னன் ராவணனின்; நீள் முடி முடிகள் பத்தையும்; பொடி செய்த பொடி செய்த; மைந்தனது இடம் பெருமானுக்கு இருப்பிடம்; மணி வரை அழகிய ரத்தின மலையின்; நீழல் நிழலிலே; அன்னம் அன்னங்கள்; மா மலர் பெரிய தாமரைப் பூ; அரவிந்தத்து அமளியில் படுக்கையில்; பெடையொடும் தங்கள் பெடைகளுடன்; இனிது அமர இன்பம் நுகர்ந்து பொருந்தி வாழ்வதற்குத் தகுந்த; செந்நெல் ஆர் கவரி செந்நெல் நிறைந்த; குலை வீசு தண் குலைகள் சாமரம் போல் வீசும்; திருவயிந்திரபுரமே திருவயிந்திரபுரமே
minnil like lightning; nuṇ slender; idai waist; madam and having humility; kodi kāraṇam for the creeper like pirātti; vilangalin misai built on the suvĕlā mountain; ilangai for lankā; mannan the king, rāvaṇa-s; nīl̤ mudi ten tall crowns/heads; podi seydha turned to dust; maindhanadhu strong one-s; idam abode is; maṇi varai gem mountain-s; nīzhal in the shade; annam swans; big; aravindha malar lotus flower; amal̤iyil on the bed; pedaiyodum with their female counterparts; inidhu sweetly; amara to resting; sennel ār kulai the crop filled with red paddy; kavari vīsu like fanning with whisk; thaṇ cool; thiruvayindhirapuramĕ thiruvahindhrapuram.