PT 3.1.4

இரணியனைப் பிளந்தவன் இடம் திருவயிந்திரபுரம்

1151 மாறுகொண்டுடன்றெதிர்ந்தவல்லவுணன்தன்
மார்பகம்இருபிளவா *
கூறுகொண்டுஅவன்குலமகற்கு
இன்னருள்கொடுத்தவனிடம் * மிடைந்து
சாறுகொண்டமென்கரும்பிளங்கழை
தகைவிசும்புறமணிநீழல் *
சேறுகொண்டதண்பழனமதெழில்திகழ்
திருவயிந்திரபுரமே.
PT.3.1.4
1151 māṟu kŏṇṭu uṭaṉṟu ĕtirnta val avuṇaṉ-taṉ *
mārpu-akam iru pil̤avā *
kūṟu kŏṇṭu avaṉ kulamakaṟku * iṉ arul̤
kŏṭuttavaṉ iṭam ** miṭaintu
cāṟu kŏṇṭa mĕṉ karumpu il̤aṅ kazhai takai *
vicumpu uṟa maṇi nīzhal *
ceṟu kŏṇṭa taṇ pazhaṉam-atu ĕzhil tikazh *
tiruvayintirapurame-4 **

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1151. Our god who split open the chest of his enemy the strong Asuran Hiranyan and gave his divine grace to his son Prahladan, stays in famous Thiruvayindirapuram where flourishing cool wet fields have abundant water and mud and the soft juicy sugarcane plants growing there give cool shade and touch the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாறு கொண்டு கோபித்துக் கொண்டு; உடன்று எதிர்த்துப் போரிட; எதிர்ந்த வல் வந்த வலிய; அவுணன் தன் அரக்கன் இரணியனது; மார்பு அகம் மார்பு; இரு பிளவா இரு பிளவாகும்படி; கூறு கொண்டு கூறு செய்து; அவன் அவன்; குலமகற்கு குலமகனான ப்ரஹ்லாதனுக்கு; இன் அருள் இன் அருள் புரிந்த; கொடுத்தவன் இடம் பெருமான் இருக்குமிடம்; மிடைந்து நெருங்கி வளரும்; சாறு கொண்ட சாறு பெருகும்; மென் கரும்பு மெல்லிய கரும்பினுடைய; இளங் கழை தகை இளங்குருத்தின் நுனிகளானவை; விசும்பு உற ஆகாசத்தை நோக்கி வளர்ந்திருப்பதனால்; மணி நீழல் அழகிய நிழலையுடையதும்; சேறு கொண்ட தண் சேற்றையுடைய குளிர்ந்த; பழனம் அது நீர்நிலங்களின்; எழில் திகழ் அழகுடையதுமான; திருவயிந்திரபுரமே திருவயிந்திரபுரமே
māṛu koṇdu Considering -ī am an enemy-; udanṛu being angry; edhirndha one who came opposing; val very strong; avuṇan than the rākshasa, hiraṇya-s; mārvagam chest; iru pil̤avā to become two pieces; kūṛu koṇdu split him; avan kula magaṛku for prahlādhāzhwān who is his son; in arul̤ koduththavan for the one who showered his good mercy; idam abode; midaindhu being close to each other; sāṛu koṇda as the juice is flowing; mel tender; karumbu sugarcane-s; il̤angazhai the edge of the sprout; visumbu the sky; uṛa as it reaches; thagai stopped by (that sky) (that sugarcane-s); maṇi nīzhal having beautiful shade; sĕṛu koṇda having mud (created by the sugarcane juice); thaṇ cool; pazhanamadhu fertile fields-; ezhil beauty; thigazh shining; thiruvayindhrapuramĕ thiruvahindhrapuram.