PT 3.1.1

வராகாவதாரம் எடுத்தவன் ஊர் திருவயிந்திரபுரம்

1148 இருந்தண்மாநிலம்ஏனமதாய்
வளைமருப்பினில் அகத்தொடுக்கி *
கருந்தண்மாகடல்கண்துயின்றவனிடம்
கமலநன்மலர்த்தேறல்
அருந்தி * இன்னிசைமுரன்றெழும்அளிகுலம்பொதுளி
அம்பொழிலூடே *
செருந்திநாண்மலர்சென்றணைந்துஉழிதரு
திருவயிந்திரபுரமே. (2)
PT.3.1.1
1148 ## irun taṇ mā nilam eṉam-atu āy *
val̤ai maruppiṉil akattu ŏṭukki *
karun taṇ mā kaṭal kaṇ tuyiṉṟavaṉ iṭam- *
kamala nal malart teṟal
arunti ** iṉ icai muraṉṟu ĕzhum al̤i kulam
pŏtul̤i * am pŏzhilūṭe *
cĕrunti nāl̤ malar cĕṉṟu aṇaintu uzhitaru *
tiruvayintirapurame-1 **

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1148. The god who rests on the dark ocean on Adisesha took the form of a boar went to the underworld and brought up the cool earth goddess on his curving tusk, embracing her. He stays in everlasting Thiruvayindirapuram where bees drink honey from lotus flowers, sing sweet music and go to fresh cherundi flowers, embracing them and flying around in the beautiful grove.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
இருந் தண் குளிர்ந்த; மா நிலம் பெரிய பூமியை பிரளய காலத்தில்; ஏனம் அது ஆய் வராஹமாய் வந்து; வளை வளைந்த; மருப்பினில் அகத்து கொம்பினிடத்தில்; ஒடுக்கி அடக்கி; கருந் தண் கருத்த குளிர்ந்த; மா கடல் பெரும் கடலில்; கண் துயின்றவன் இடம் துயின்றவன் இருக்குமிடம்; அம் பொழில் ஊடே அழகிய சோலைகளினுள்ளே; கமல நல் மலர்த் நல்ல தாமரைப்பூவின்; தேறல் அருந்தி தேனைக் குடித்து; இன் இசை முரன்று இன்னிசை செய்யும்; எழும் அளி குலம் வண்டுகளின் கூட்டங்கள்; பொதுளி திரண்டு; செருந்தி நாள் புன்னை மரத்தின்; மலர் சென்று மலர்களை; அணைந்து உழி தரு அணைந்து ஸஞ்சரிக்கும்; திருவயிந்திரபுரமே திருவஹீந்த்ரபுரமாம்
irum thaṇ very cool; mā nilam vast earth (while deluge had consumed it); ĕnam adhāy in the form of varāha [wild boar]; val̤ai maruppu agaththinil on the bent tusk; odukki secured (then); karum thaṇ mā kadal in the great ocean which is black and cool; kaṇ thuyinṛavan for the one who performed yŏga nidhrā; idam the abode; kamalam lotus-; nal beautiful; malar in the flower; thĕṛal honey; arundhi drank; in isai beautiful tune; muranṛu sang; ezhum joyfully dance; al̤i kulam swarms of beetles; podhul̤i gathered; am beautiful; pozhil ūdĕ in the middle of the garden; serundhi serundhi tree-s; nāl̤ malar in the freshly blossomed flower; senṛu aṇaindhu went and reached; uzhi tharu roaming; thiruvayindhirapuramĕ is the dhivyadhĕṣam known as thiruvahindhrapuram