PT 3.1.9

அருச்சுனனுக்குத் தேரோட்டியவன் இடம் இது

1156 வேல்கொள்கைத்தலத்துஅரசர்வெம்போரினில்
விசயனுக்காய், மணித்தேர் *
கோல்கொள்கைத்தலத்துஎந்தைபெம்மானிடம்
குலவுதண்வரைச்சாரல் *
கால்கொள்கண்கொடிக்கையெழக்
கமுகிளம்பாளைகள்கமழ்சாரல் *
சேல்கள்பாய்தருசெழுநதிவயல்புகு
திருவயிந்திரபுரமே.
PT.3.1.9
1156 vel kŏl̤ kait talattu aracar vĕm poriṉil *
vicayaṉukku āy * maṇit ter
kol kŏl̤ kait talattu ĕntai pĕmmāṉ iṭam- *
kulavu taṇ varaic cāral **
kāl kŏl̤ kaṇ kŏṭik kaiĕzhak * kamuku il̤am
pāl̤aikal̤ kamazh cāral *
celkal̤ pāytaru cĕzhu nati vayal puku *
tiruvayintirapurame-9 **

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1156. Our father who drove the chariot for Arjunā in the cruel Bhārathā war and killed the Kauravās with strong spears in their hands stays in Thiruvayindirapuram where on the cool slopes of the hills betel leaves grow abundantly and the young kamugu trees with branches spread their fragrance while fish frolic in the flourishing rivers that flow to the fields.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கைத் தலத்து கையிலே; வேல் கொள் வேலாயுதம் உடைய; அரசர் வெம் துர்யோதனாதிகளின்; போரினில் கடும் பாரத யுத்தத்தில்; விசயனுக்கு ஆய் அர்ஜூனனுடைய; மணித்தேர் அழகிய தேர் முன்; கைத் தலத்து கையில்; கோல் கொள் கோல்பிடித்து நின்ற; எந்தை பெம்மான் இடம் எம்பெருமானுக்கு இருப்பிடம்; குலவு தண் கொண்டாடத்தக்க; வரைச் சாரல் குளிர்ந்த மலைச்சாரலில்; கால் கொள் வெற்றிலைக் கொடிகள் மிகுதியாக; கண் கொடி கைஎழ வளரப் பெற்றதும்; கமுகு பாக்கு மரங்களின்; இளம் பாளைகள் இளங்குருத்துகள்; கமழ் மணம் வீசும்; சாரல் சுற்றுப்புறம் உடையதும்; சேல்கள் மீன்கள்; பாய்தரு துள்ளி விளையாடுகிற; செழு நதி அழகிய ஆறானது; வயல் புகு வயல்களிலே பெருகப் பெற்றதுமான; திருவயிந்திரபுரமே திருவயிந்திரபுரமே
kaiththalaththu in the hand; vĕl kol̤ having spear; arasar dhuryŏdhana et al, their; vem fearsome; pŏrinil in mahābhāratha battle; visayanukku āy being exclusively favourable towards arjuna (his); maṇith thĕr in the front portion of the beautiful chariot; kŏl stick; kaiththalaththu in the hand; kol̤ held and stood; endhai lord of my clan; pemmān for sarvĕṣvaran; idam abode is; kulavu praised by everyone; thaṇ cool; varaich chāral on the surroundings of the mountain; kāl pole on which the creeper spreads; kaṇ kol̤ growing in every branch; kodi creeper; kai ezha to nurture; kamugu areca trees; il̤am pāl̤aigal̤ young swathes; kamazh spreading fragrance; sāral having surroundings; sĕlgal̤ sĕl fish; pāy tharu jumping; sezhu nadhi beautiful river; vayal pugu flowing into the fertile field; thiruvayindhirapuramĕ thiruvahindhrapuram