PT 3.1.5

ஏழு எருதுகளை அடக்கியவன் இடம் இது

1152 ஆங்குமாவலிவேள்வியில்இரந்துசென்று
அகலிடமளந்து * ஆயர்
பூங்கொடிக்குஇனவிடைபொருதவனிடம்
பொன்மலர்திகழ் * வேங்கை
கோங்குசெண்பகக்கொம்பினில்
குதிகொடுகுரக்கினம்இரைத்தோடி *
தேன்கலந்தண்பலங்கனிநுகர்த்தரு
திருவயிந்திரபுரமே.
PT.3.1.5
1152 āṅku māvali vel̤viyil irantu cĕṉṟu *
akal iṭam al̤antu * āyar
pūṅ kŏṭikku iṉa viṭai pŏrutavaṉ iṭam *
-pŏṉ malar tikazh ** veṅkai
koṅku cĕṇpakak kŏmpiṉil * kutikŏṭu
kurakkiṉam iraittu oṭi *
teṉ kalanta taṇ palaṅkaṉi nukartaru *
tiruvayintirapurame-5 **

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1152. Our lord who went to the sacrifice of Mahabali, asked for three feet of land and measured the wide earth and the sky with his feet, and fought seven bulls to marry Nappinnai, the lovely vine-like daughter of a cowherd stays in Thiruvayindirapuram where monkeys searching for food, jump from one branch to an another on vengai, kongu and shenbaga trees blooming with golden flowers and eat sweet jack fruits that taste as if they were mixed with honey.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாவலி வேள்வியில் மஹாபலியின் யாகத்தில்; இரந்து சென்று யாசித்துப்பெற்ற; ஆங்கு அகல் பரந்த பூமியை; இடம் அளந்து அங்கேயே அளந்தவனும்; ஆயர் இடைப்பெண்ணான; பூங் கொடிக்கு நப்பின்னைக்காக; இன விடை ஏழு ரிஷபங்களையும்; பொருதவன் அடக்கினவனுமான; இடம் பெருமான் இருக்குமிடம்; குரக்கினம் குரங்குகளின் கூட்டமானது; பொன் பொன்னிறமான; மலர் திகழ் மலர்கள் இருக்கும்; வேங்கை வேங்கை; கோங்கு கோங்கு; செண்பகக் செண்பகம் ஆகிய; கொம்பினில் மரங்களின் கொம்புகளில்; குதிகொடு குதித்துக் கொண்டும்; இரைத்து ஓடி அங்குமிங்கும் ஓடிக்கொண்டும்; தேன் கலந்த தண் தேன் கலந்த குளிர்ந்த; பலங்கனி நுகர்தரு பலாப் பழங்களை உண்டு மகிழும்; திருவயிந்திரபுரமே திருவயிந்திரபுரமே
māvali mahābali-s; vĕl̤viyil in sacrificial arena; senṛu reached; irandhu begged (for three feet of land); āngu there itself; agal idam vast earth; al̤andhu measured and accepted; āyar cowherds-; pūm kodikku for nappinnaip pirātti who is like a blossomed creeper; ina vidai collection of the seven bulls; porudhavan for the one who fought and destroyed; idam abode is; kurakkinam troop of monkeys; pon malar like golden flower; thigazh shining; vĕngaik kŏngu seṇbagam trees such as vĕngai, kŏngu, sheṇbagam; kombinil on the branches; kudhikodu jumping; iraiththu with great noise; ŏdi came running; thĕn kalandha with abundant honey; thaṇ beautiful; palam kani jackfruit; nugartharu eating; thiruvayindhirapuramĕ thiruvahindhrapuram