Chapter 3

Adhikāri Niṣṭhā Krama- Upāyāntara Dōṣam

அதிகாரி நிஷ்டா க்ரமம் - உபாயாந்தர தோஷம்
Bāshyam
Translation

verse 83

83. பசியராயிருப்பார் அட்டசோறுமுண்ணவேணும் அடுகிறசோறும் உண்ணவேணு மென்னுமாப் போலே காட்டுக்குப் போகிறபோது இளைய பெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு, அடிமை செய்யவேணும் எல்லாவடிமையும் செய்யவேணும் ஏவிக்கொள்ளவும் வேணும் என்றார்; படைவீட்டில் புகுந்த பின்பு, காட்டில் தனியிடத்தில் ஸ்வயம் பாகத்திலே வயிற்றை பெருக்கினபடியாலே, ஒப்பூணுண்ணமாட்டாதே, ஒரு திருக்கையாலே திருவெண்கொற்றக்குடையையும், ஒரு திருக்கையாலே திருவெண் சாமரத்தையும் தரித்து அடிமை செய்தார்.

verse 243

243. இப்படி ஸர்வப்ரகாரத்தாலும் நாசஹேதுவான அஹங்காரத்துக்கும் அதினுடைய கார்யமான விஷயப்ராவண்யத்துக்கும் விளைநிலம் தானாகையாலே தன்னைக் கண்டால் சத்ருவைக் கண்டாற்போலேயும்; அவற்றுக்கு வர்த்தகரான ஸம்ஸாரிகளைக் கண்டால் ஸர்ப்பத்தைக் கண்டாற்போலேயும், அவற்றுக்கு நிவர்த்தகரான ஸ்ரீவைஷ்ணவர்களைக்

கண்டால் பந்துக்களைக் கண்டாற்போலேயும், ஈச்வரனைக் கண்டால் பிதாவைக் கண்டாற்போலேயும், ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டாற்போலேயும்; சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தைக் கண்டாற்போலேயும் நினைத்து, அஹங்காரார்த்த காமங்கள் மூன்றும் அநுகூலர்பக்கல் அநாதரத்தையும் ப்ரதிகூலர்பக்கல் ப்ராவண்யத்தையும் உபேக்ஷிக்குமவர்கள் பக்கலபேக்ஷையையும் பிறப்பிக்குமென்றஞ்சி,

ஆத்மகுணங்கள் நம்மாலும் பிறராலும் பிறப்பித்துக் கொள்ளவொண்ணாது, ஸதாசார்ய ப்ரஸாதமடியாக வருகிற பகவத் ப்ரஸாதத்தாலே பிறக்குமத்தனை யென்று துணிந்து தேஹயாத்ரையி லுபேக்ஷையும் ஆத்மயாத்ரையி லபேக்ஷையும் ப்ராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்திநிவ்ருத்தியும் தேஹதாரணம் பரமாத்ம ஸமாராதன ஸமாப்தி ப்ரஸாத ப்ரதிபத்தி யென்கிற புத்திவிசேஷமும், தனக்கொரு க்லேசமுண்டானால் பலமென்றாதல் க்ருபா பலமென்றாதல் பிறக்கும் ப்ரீதியும், ஸ்வாநுஷ்டானத்தில் ஸாதநத்வ புத்திநிவ்ருத்தியும்; விலக்ஷணருடைய ஜ்ஞாநாநுஷ்டானங்களில் வாஞ்சையும்,

உகந்தருளின நிலங்களி லாதராதிசயமும், மங்களாசாஸநமும், இதர விஷயங்களில் அருசியும், ஆர்த்தியும், அநுவர்த்தந நியதியும், ஆஹாரநியதியும் அநுகூலஸஹவாஸமும், ப்ரதிகூல ஸஹவாஸ நிவ்ருத்தியும் ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக்கடவன்.

verse 265

265. தேஹாத்மாபிமானிகளுக்கு உத்தேச்யர் தேஹவர்த்தகரான மநுஷ்யர்கள், உபாயம் அர்த்தம், உபேயம் ஐஹிகபோகம்; ஸ்வதந்த்ரர்க்கு உத்தேச்யர் ஸ்வர்க்காதி போகப்ரதர், உபாயம் கர்மாநுஷ்டாநம், உபேயம் ஸ்வர்க்காதி போகம் அந்யசேஷபூதர்க்கு உத்தேச்யர் ப்ரஹ்மருத்ராதிகள், உபாயம் தத்ஸமாச்ரயணம், உபேயம் தத்ஸாயுஜ்யம்; உபாயாந்தர நிஷ்டர்க்கு உத்தேச்யன் தேவதாந்தர்யாமியான ஸர்வேச்வரன், உபாயம் கர்ம ஜ்ஞாந பக்திகள், உபேயம் பகவதநுபவம்; ஸ்வப்ரயோஜநபரர்க்கு உத்தேச்யன் நெஞ்சினால் நினைப்பான் யவனென்கிறவன், உபாயம் ஸ்வகீய ஸ்விகாரம், உபேயம் ஸ்வார்த்த கைங்கர்யம்.

verse 274

274. இப்படி யிவை யித்தனையும் ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு வஸ்தவ்ய மாசார்ய ஸந்நிதியும் பகவத் ஸந்நிதியும்; வக்தவ்ய மாசார்ய வைபவமும் ஸ்வநிகர்ஷமும்; ஜப்தவ்யம் குருபரம்பரையும் த்வயமும்; பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசனமு மநுஷ்டாநமும்; பரித்யாஜ்ய மவைஷ்ணவ ஸஹவாஸமு மபிமாநமும்; கர்த்தவ்ய மாசார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும்.

Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo