PT 2.5.3

உலகுய்ய நின்றான் இடம் கடல்மல்லை

1090 உடம்புருவில்மூன்றொன்றாய் மூர்த்திவேறாய்
உலகுய்யநின்றானை * அன்றுபேய்ச்சி
விடம்பருகுவித்தகனைக் கன்றுமேய்த்து
விளையாடவல்லானை, வரைமீகானில் *
தடம்பருகுகருமுகிலைத் தஞ்சைக்கோயில்
தவநெறிக்குஓர்பெருநெறியை, வையங்காக்கும் *
கடும்பரிமேல்கற்கியைநான் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.
PT.2.5.3
1090 uṭampu uruvil mūṉṟu ŏṉṟāy mūrtti veṟu āy * ulaku uyya niṉṟāṉai aṉṟu peycci *
viṭam paruku vittakaṉaik kaṉṟu meyttu * vil̤aiyāṭa vallāṉai varaimī kāṉil **
taṭam paruku karu mukilait tañcaik koyil * tava nĕṟikku or pĕru nĕṟiyai vaiyam kākkum *
kaṭum parimel kaṟkiyai nāṉ kaṇṭukŏṇṭeṉ * kaṭi pŏzhil cūzh kaṭalmallait talacayaṉatte-3

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1090. The dark cloud-colored lord, the protector of the world who drank milk from the breasts of Putanā and killed her and grazed the calves and played with them, is himself the three gods, Nānmuhan, Shivā and Indra, but different than them. He will show the divine path for his devotees so they can go to the Thanjai Māmani temple and worship him. I saw the lord who will come to the earth on a horse as Kalki in Kadalmallai Thalasayanam surrounded with thick groves

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகு ஸ்ருஷ்டி (பிரம்மா) ஸ்திதி (விஷ்ணு) லயம் (சிவன்) ஆகிய காலங்களில் உலகை; உய்ய காப்பாற்றுபவனாய்; உடம்பு சரீரம்; உருவில் என்று பார்த்தால்; மூன்று ஒன்றாய் மூவரையும் தனக்கு சரீரமாய்; மூர்த்தி ஆத்மா என்று பார்த்தால்; வேறு ஆய் பிரம்மாவும் சிவனும் வேறு வேறு ஆத்மாக்களாக; நின்றானை நின்றவனை; அன்று கிருஷ்ணாவதாரத்தில்; பேய்ச்சி பூதனையின்; விடம் பருகு விஷம் கலந்த பாலை குடித்த; வித்தகனை ஆச்சர்ய சேஷ்டிதனை; கன்று கன்றுகளை; மேய்த்து மேய்த்து; விளையாட விளையாடுவதற்காக அவதரித்த; வல்லானை கண்ணனை; வரைமீ மலைமேலுள்ள; கானில் காடுகளிலே; தடம் குளங்களில் கன்றுகளுக்கு நீர் குடிக்க; பருகு கற்றுகொடுத்து தானும் நீர் குடித்தவனும்; கரு முகிலை காளமேகம் போன்றவனும்; தஞ்சைக் தஞ்சை; கோயில் மாமணிக்கோயிலிலே இருக்கும்; தவ நெறிக்கு தன்னை அடைய; ஓர் பெரு சிறந்த பெரிய; நெறியை உபாயமென தானாக நிற்பவனும்; வையம் உலகத்தை; காக்கும் காப்பதற்காக; கடும் பரிமேல் மிகுந்த வேகத்தையுடைய குதிரையின் மீது; கற்கியை கல்கியவதாரம் செய்யும் எம்பெருமானை; நான் நான்; கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்; கடி மணம்மிக்க; பொழில் சோலைகள்; சூழ் சூழ்ந்த; கடல்மல்லைத் திருக்கடல் மல்லை; தலசயனத்தே தலசயனத்தில்
udambu body-s; uruvil in the form; mūnṛu three; ulagu uyya for the protection of the world; onṛāy in a singular form; mūrththi true nature; vĕṛāy being different; ninṛānai one who stands; anṛu during krishṇāvathāram; pĕychchi pūthanā-s; vidam poisonous milk; parugu one who drank; viththaganai amaśing; kanṛu calves; mĕyththu tended; vil̤aiyāda vallānai one who incarnated to play; varaimī atop the hill; kānil in the forests; thadam in the ponds, to train the calves to drink water, he would demonstrate that by folding his hands in the back; parugu one who mercifully drinks water; karumugilai one who resembles a dark cloud; thanjaik kŏyil one who is mercifully present in thanjaimāmaṇikkŏyil; thava neṛikku among the upāyams (means) (which are pursued to attain him); ŏr peru neṛiyai one who remains the greatest means; vaiyam all the worlds; kākkum to protect; kadu having great speed; pari mĕl on the horse; kaṛkiyai one who mercifully incarnated as kalki; kadi guarded; pozhil garden; sūzh surrounded; thalasayanam sthala sayanam (where he rests on the ground); kadal mallai in thirukkadalmallai; nān kaṇdu koṇdĕn ī got to see