PT 7.3.9

என் மனம் திருமாலையே போற்றும்

1576 என்செய்கேன்அடியேன்? உரையீர்இதற்குஎன்றும்
என்மனத்தேஇருக்கும்புகழ் *
தஞ்சையாளியைப்பொன்பெயரோன்
நெஞ்சம்அன்றுஇடந்தவனைத்தழலேபுரை *
மிஞ்செய்வாளரக்கன்நகர்பாழ்படச்
சூழ்கடல்சிறைவைத்து, இமையோர்தொழும் *
பொன்செய்மால்வரையைமணிக்குன்றினை அன்றி
என்மனம்போற்றியென்னாதே.
1576 ĕṉ cĕykeṉ aṭiyeṉ uraiyīr * itaṟku
ĕṉṟum ĕṉ maṉatte irukkum pukazh *
tañcai āl̤iyaip pŏṉpĕyaroṉ * nĕñcam
aṉṟu iṭantavaṉai tazhale purai **
miṉ cĕy vāl̤ arakkaṉ nakar pāzhpaṭa *
cūzh kaṭal ciṟai vaittu imaiyor tŏzhum *
pŏṉ cĕy māl varaiyai maṇik kuṉṟiṉai
aṉṟi * ĕṉ maṉam poṟṟi ĕṉṉāte-9

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1576. Tell me, for I am his slave, what can I give back to him for everything he has done for me? The famous lord of Naraiyur, the ruler of Thanjai, who split open the chest of Hiranyan, and who built a bridge on the ocean, went to Lankā the land of the king Rāvana, with a shining sword like lightning and destroyed it - stays in my heart. He is a large golden mountain and a diamond hill and my mind will not praise anyone except him

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடியேன் இதற்கு என் உள்ளத்தில் என்றும் வாழும்; என் பெருமானுக்கு நான் என்ன; செய்கேன் கைம்மாறு செய்வேன்; உரையீர் சொல்லுங்கள்; என் மனத்தே என்னுள்ளத்திலேயே; என்றும் இருக்கும் என்றுமிருக்கும்; புகழ் தஞ்சை புகழுடையவனும்; ஆளியை தஞ்சையை ஆள்பவனும்; பொன் பெயரோன் இரணியனின்; நெஞ்சம் நெஞ்சை; அன்று இடந்தவனை அன்று பிளந்தவனும்; தழலே புரை நெருப்புப் போன்ற; மின் செய் ஒளியுடைய; வாள் வாள் படையுடைய; அரக்கன் அரக்கனின் இலங்கை; நகர் பாழ் பட நகரம் பாழாகும்படி; சூழ் கடல் அந்த நகரைச் சூந்திருந்த கடலில்; சிறை வைத்து அணைகட்டினவனும்; இமையோர் தேவர்களால்; தொழும் வணங்கப்படுபவனும்; பொன் செய் பொன்னாலான; மால் வரையை மலைபோன்றவனும்; மணி நீலமணிமயமான; குன்றினை மலைபோன்றவனுமான; அன்றி பெருமானைத் தவிர; என் மனம் என் மனம் வேறு ஒருவரை; போற்றி என்னாதே போற்றி வாழ்த்தாது