Chapter 9

Āzhvār sings on the warm welcome he received upon reaching paramapadam - (சூழ் விசும்பு)*

பரமபதத்தில் தமக்குக் கிடைத்த நல் வரவேற்பை ஆழ்வார் அனுபவித்துப் பாடுதல்
When a prince of royal lineage is on a procession, auspicious musical instruments are sounded as part of the protocol; similarly, when Āzhvār proceeds to go towards paramapadam, sounds rang out from the clouds. The waves of the sea danced with joy. Renowned vocalists such as the kinnarar and kerudar (celestial beings) sang beautifully. Conches and brass pipe horns were blown. Celestial women gave their blessings and praise. This chapter elaborates on this festivity.
அரசகுமரர் செல்லும்போது மங்கள வாத்தியங்கள் முழங்குவது வழக்கம்., அதுபோல் ஆழ்வார் பரமபதத்திற்கு எழுந்தருளும்போது மேகங்கள் முழங்கின. கடலலைகள் அசைந்தாடின. பாடுவதில் வல்லவர்களான கின்னரர் கெருடர்கள் கீதங்கள் பாடினார்கள். காளங்களும் வலம் புரியும் இசைந்தன. தேவமடந்தையர் வாழ்த்தினர். இச்செய்தியைக் கூறுகிறது இத்திருவாய்மொழி.
Verses: 3871 to 3881
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: கொல்லி
Timing: 10.30 PM - 12.00 AM
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 10.9.1

3871 சூழ்விசும்பணிமுகில் தூரியம்முழக்கின *
ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின *
ஏழ்பொழிலும் வளமேந்தியஎன்னப்பன் *
வாழ்புகழ்நாரணன்தமரைக் கண்டுகந்தே. (2)
3871 ## சூழ் விசும்பு அணி முகில் * தூரியம் முழக்கின *
ஆழ் கடல் அலை திரை * கை எடுத்து ஆடின **
ஏழ் பொழிலும் * வளம் ஏந்திய என் அப்பன் *
வாழ் புகழ் நாரணன் * தமரைக் கண்டு உகந்தே (1)
3871 ## cūzh vicumpu aṇi mukil * tūriyam muzhakkiṉa *
āzh kaṭal alai tirai * kai ĕṭuttu āṭiṉa **
ezh pŏzhilum * val̤am entiya ĕṉ appaṉ *
vāzh pukazh nāraṇaṉ * tamaraik kaṇṭu ukante (1)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The comely clouds in the sprawling sky resonated with music, while the surging waves of the deep seas danced in joy. The inhabitants of the seven islands held gifts in their hands to greet with great joy the incoming devotees of my Lord, the beneficent Nāraṇaṉ of undying fame.

Explanatory Notes

(i) This song describes the ecstatic manner in which even the inanimate clouds, which decorate the sprawling sky and the surging waves of the deep seas, came forward to greet the devotees of Lord Śrīman Nārāyaṇa of undying fame, during their ascent to the high spiritual worlds. All the seven islands wore a festive appearance and their inhabitants, one and all, held, in + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
என் அப்பன் என்னுடைய ஸ்வாமியும்; வாழ் புகழ் நித்ய கீர்த்தியுடையவனுமான; நாரணன் தமரை நாரணனின் அடியார்களை; கண்டு உகந்தே கண்டு மகிழ்ந்து; சூழ் விசும்பு எங்கும் பரந்த ஆகாசத்திலே; அணி முகில் அழகிய மேகங்கள்; தூரியம் முழக்கின முரசொலியை எழுப்புவது போலிருந்தது; ஆழ் கடல் ஆழமான கடல்கள்; அலை திரை அவர்களைப் பார்த்து அலைந்து; கை எடுத்து ஆடின ஆடும் கைகளாகத் தோன்றின; ஏழ் பொழிலும் ஏழு உலகங்களும் நன்றி மிகுந்து; வளம் ஏந்திய வளமையுடன் ஆதரித்தன
nāraṇan thamarai the devotees who are distinguished relatives of nārāyaṇa; kaṇdu ugandhu becoming pleased on seeing; sūzh visumbu in ākāsa (sky) which surrounds all areas; aṇi mugil the clouds which are gathered; thūriyam muzhakkina made tumultuous sound of a musical instrument;; āzh kadal the bottomless oceans; alai thirai the rising tides; kai eduththu ādina danced having as hands;; ĕzh pozhilum seven islands (of earth); val̤am wonderful objects in the form of gifts; ĕndhiya presented.; nāraṇan thamaraik kaṇdu seeing the devotees of nārāyaṇa who is natural lord [of me/all]; ugandhu being pleased

TVM 10.9.2

3872 நாரணன்தமரைக்கண்டுகந்து நல்நீர்முகில் *
பூரணபொற்குடம் பூரித்ததுஉயர்விண்ணில் *
நீரணிகடல்கள் நின்றார்த்தன * நெடுவரைத்
தோரணம்நிரைத்து எங்கும்தொழுதனருலகே.
3872 நாரணன் தமரைக் கண்டு உகந்து * நல் நீர் முகில் *
பூரண பொன் குடம் * பூரித்தது உயர் விண்ணில் **
நீர் அணி கடல்கள் * நின்று ஆர்த்தன * நெடு வரைத்
தோரணம் நிரைத்து * எங்கும் தொழுதனர் உலகே (2)
3872 nāraṇaṉ tamaraik kaṇṭu ukantu * nal nīr mukil *
pūraṇa pŏṉ kuṭam * pūrittatu uyar viṇṇil **
nīr aṇi kaṭalkal̤ * niṉṟu ārttaṉa * nĕṭu varait
toraṇam niraittu * ĕṅkum tŏzhutaṉar ulake (2)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Up in the sky, the joyous clouds, heavy with fine water, honored Lord Nārāyaṇa's devotees. They presented them with gold vessels filled with water, topped with coconuts. Meanwhile, the deep waters of the oceans applauded with standing ovation, and beings from all worlds raised festive banners high in celebration.

Explanatory Notes

Not satisfied with mere roaring with joy, as set out in the last song, the clouds present the ceremonial ‘Pūrṇa Kumba’ (vessel containing water, having coconut as the lid) to the distinguished sojourners; likewise, the oceanic waves, that danced, keep on expressing their joy. The denizens of the upper worlds vie with each other in setting up mammoth banners and buntings for greeting the Lord’s votaries, during their ascent to spiritual world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
நாரணன் தமரை நாரணனின் அடியார்களை; கண்டு உகந்து கண்டு மகிழ்ந்து; நல் நீர் முகில் நல்ல நீர் நிறைந்த மேகங்கள்; உயர் விண்ணில் உயர்ந்த ஆகாசத்தில்; பூரண பொற் குடம் பூரண நிறைந்த பொற்குடங்கள்; பூரித்தது போல் தோன்றியது; நீர் அணி கடல்கள் நீர் நிறைந்த அழகிய கடல்கள்; நின்று ஆர்த்தன நின்று ஆரவாரித்தன; உலகே நெடு அந்தந்த உலகத்திலுள்ளோர் நெடிய; வரை மலைகளை; தோரணம் நிரைத்து தோரணங்களாக நிரைத்து; எங்கும் தொழுதனர் எங்கும் தொழுதார்கள்
nal nīr mugil clouds which are filled with pure water; uyar high (as in pots with spout); viṇṇil in sky; puṛaṇam perfect; pon kudam golden pots; pūriththadhu filled;; nīr aṇi having water; kadalgal̤ oceans; ninṛu standing (in a stable manner); ārththana made tumultuous sound;; nedu varai tall mountains; thŏraṇam niraiththu filling with welcome arches; ulagu residents of the world; engum everywhere; thozhudhanar worshipped.; anṛu when mahābali claimed as -mine-; būmi al̤andhavan one who measured the earth to remain exclusively for him, his

TVM 10.9.3

3873 தொழுதனருலகர்கள் தூபநல்மலர்மழை
பொழிவனர் * பூழியன்றளந்தவன்தமர்முன்னே *
எழுமினென்று இருமருங்கிசைத்தனர்முனிவர்கள் *
வழியிதுவைகுந்தற்குஎன்று வந்தெதிரே.
3873 தொழுதனர் உலகர்கள் * தூப நல் மலர் மழை
பொழிவனர் * பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே **
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் * முனிவர்கள் *
வழி இது வைகுந்தர்க்கு என்று * வந்து எதிரே (3)
3873 tŏzhutaṉar ulakarkal̤ * tūpa nal malar mazhai
pŏzhivaṉar * pūmi aṉṟu al̤antavaṉ tamar muṉṉe **
ĕzhumiṉ ĕṉṟu irumaruṅku icaittaṉar * muṉivarkal̤ *
vazhi itu vaikuntarkku ĕṉṟu * vantu ĕtire (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 8-26

Divya Desam

Simple Translation

The devotees of the Lord, who once spanned the worlds, were greeted with incense and showers of fine flowers by the denizens of SriVaikuntam. The sages broke their silence to adore these marchers to SriVaikuntam, welcoming them all the way. Arrayed on both sides, they duly escorted these dignitaries with honor and reverence.

Explanatory Notes

There are certain upper worlds, charged with the special responsibility of guiding and conducting the released souls in their onward march to spiritual world. Those denizens are shown here as revering the new-comers by burning incense before them and showering on them choice flowers of outstanding fragrance. Even the sages came forward, breaking their normal vow of silence, to welcome these spiritual world-bound souls and escort them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
அன்று பூமி அன்று உலகங்களை; அளந்தவன் தமர் அளந்தவனின் அடியார்கள்; முன்னே முன்னே; தூப தூபம் ஸமர்ப்பித்ததோடு; நல் மலர் மழை நல்ல மலர் மழையும்; பொழிவனர் பொழிந்து; உலகர்கள் அந்தந்த உலகங்களிலுள்ளவர்கள்; தொழுதனர் வாழ்த்தி வணங்கினர்; முனிவர்கள் அங்குள்ள முனிவர்கள்; வைகுந்தற்கு வைகுந்தம் போவதற்கு; வழி இது இதுதான் வழி என்று சொல்லி; எதிரே வந்து எதிரே வந்து; எழுமின் என்று எழுந்தருள வேண்டும் என்று; இருமருங்கு இரண்டு பக்கங்களிலும் நின்று; இசைத்தனர் பணிவன்புடன் சொன்னார்கள்
thamar devotees-; munnĕ in the presence; dhūbam starting with incense; nal malar mazhai rain of good flowers; pozhivanar showering; ulagargal̤ the residents of those [higher] worlds; thozhudhanar performed anjali (joined palms in reverence) matching their servitude; munivargal̤ those munivars who restrain their speech; vaigundharkku to those who are ascending to ṣrīvaikuṇtam; vazhi idhu enṛu saying -this is the path-; edhirĕ vandhu coming towards them; ezhumin enṛu saying -could you mercifully come?-; iru marungu standing on both sides; isaiththanar eagerly said; madhu viri dripping honey; thuzhāy mudi having thiruththuzhāy (thul̤asi) on the divine crown

TVM 10.9.4

3874 எதிரெதிரிமையவர் இருப்பிடம்வகுத்தனர் *
கதிரவரவரவர் கைந்நிரைகாட்டினர் *
அதிர்குரல்முரசங்கள் அலைகடல்முழக்கொத்த *
மதுவிரிதுழாய்முடி மாதவன்தமர்க்கே.
3874 எதிர் எதிர் இமையவர் * இருப்பிடம் வகுத்தனர் *
கதிரவர் அவர் அவர் * கைந்நிரை காட்டினர் **
அதிர் குரல் முரசங்கள் * அலை கடல் முழக்கு ஒத்த *
மது விரி துழாய் முடி * மாதவன் தமர்க்கே (4)
3874 ĕtir ĕtir imaiyavar * iruppiṭam vakuttaṉar *
katiravar avar avar * kainnirai kāṭṭiṉar **
atir kural muracaṅkal̤ * alai kaṭal muzhakku ŏtta *
matu viri tuzhāy muṭi * mātavaṉ tamarkke (4)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The Nithyasuris led the way for the devotees of Mātavaṉ, adorned with His honey-studded tuḷaci garland, and arranged inns along their spiritual journey. They were accompanied by twelve Katiravars and other escorts who guided them, showcasing various sights and playing drums that echoed like the roaring of the seas with their surging waves.

Explanatory Notes

(i) The Devas in the upper regions, are said to manifest their great joy over the spiritual worldly ascent of the devotees of Mādhava, by playing music, en route, and putting up nice halting camps in enchanting surroundings, where the distinguished marchers might possibly alight and relax themselves. Even if these special camps, studiously set up by the Devas in their + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மது விரி தேன் பெருகும்; துழாய் முடி துளசியைத் திருமுடியில் உடைய; மாதவன் எம்பெருமானின்; தமர்க்கே அடியவர்களுக்கு; இமையவர் ஆதிவாஹிகளான தேவர்கள்; எதிர் எதிர் இவர்கள் போகிற வழிக்கு முன்னே; இருப்பிடம் தங்குமிடங்களை; வகுத்தனர் அமைத்தார்கள்; கதிரவர் அவர் அவர் பன்னிரண்டு சூரியர்கள்; கைந்நிரை பார்த்தருளீர் என்று; காட்டினர் கைகாட்டிக் கொண்டே சென்றார்கள்; அதிர் குரல் அதிரும் முழக்கத்தையுடைய; முரசங்கள் பேரிகைகள்; அலை கடல் அலை கடல் போன்று; முழக்கு ஒத்த கர்ஜனை செய்தன
mādhavan thamarkku for the servitors of ṣriya:pathi (lord of ṣrī mahālakshmi); imaiyavar (dhĕvathās) those who don-t blink their eyes; edhir edhir in the path of ṣrīvaishṇavas going to paramapadham; iruppidam palaces which are resting places; vaguththanar made;; kadhiravar the twelve ādhithyas; avaravar in their respective ability; kai nirai kāttinar gave their rays which are their hands as the decorative rows;; murasangal̤ the drums which they beat; adhir kural the tumultuous sound; alai kadal in ocean with tides; muzhakkoththana matched loud noise.; vānavar ādhivāhika dhĕvathās (those who guide the āthmā in their path to paramapadham) such as varuṇa, indhra, prajāpathi et al; vāsalil standing at the entrances of their respective abode

TVM 10.9.5

3875 மாதவன்தமரென்று வாசலில்வானவர் *
போதுமினெமதிடம் புகுதுகவென்றலும் *
கீதங்கள்பாடினர் கின்னரர்கெருடர்கள் *
வேதநல்வாயவர் வேள்வியுள்மடுத்தே.
3875 மாதவன் தமர் என்று * வாசலில் வானவர் *
போதுமின் எமது இடம் * புகுதுக என்றலும் **
கீதங்கள் பாடினர் * கின்னரர் கெருடர்கள் *
வேத நல் வாயவர் * வேள்வி உள்மடுத்தே (5)
3875 mātavaṉ tamar ĕṉṟu * vācalil vāṉavar *
potumiṉ ĕmatu iṭam * pukutuka ĕṉṟalum **
kītaṅkal̤ pāṭiṉar * kiṉṉarar kĕruṭarkal̤ *
veta nal vāyavar * vel̤vi ul̤maṭutte (5)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The Nithyasuris assembled in outer space to honor and revere the great marchers to the SriVaikuntam, acknowledging them as devotees of Mātavaṉ. They warmly welcomed them to their respective places. Vedic scholars from SriVaikuntam released and bestowed upon them the benefits earned through their rites and rituals. Meanwhile, the Kinnaras and Karuṭas sang many songs in celebration of their arrival.

Explanatory Notes

The Celestials came out into the open to greet the devotees of Lord Mādhava Who bears Śrī Mahālakṣmī on His chest, as the favourite wards of the Divine Mother. The distinguished marchers to spiritual world were accorded a warm reception by the Celestials who invited the former to visit their places and accept their hospitality. The Vedic Scholars of the upper worlds deemed + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வானவர் தேவர்கள்; வாசலில் வாசலில் வந்து; மாதவன் எம்பெருமானின்; தமர் என்று அடியார்கள் இவர்கள் என்றும்; போதுமின் பாகவதர்களே! இங்ஙனே; என்றலும் எழுந்தருளுங்கள் என்றும்; எமது இடம் எங்கள் ஸ்தலங்களில்; புகுதுக புக வேண்டும்; என்றலும் என்றும் கூறினர்; வேத நல் வாயவர் வேதவித்பன்னர்களான முனிவர்கள்; வேள்வி உள் வேள்விகளின் பலன்களை; மடுத்தே இவர்கள் திருவடிகளிலே ஸமர்ப்பித்தனர்; கின்னரர் கின்னரர்களும்; கெருடர்கள் கெருடர்களும்; கீதங்கள் பாடினர் கீதங்கள் பாடினர்
mādhavan thamar servitors of ṣriya:pathi (lord of ṣrī mahālakshmi); enṛu showing reverence; pŏdhumin -kindly come in this way-; emadhu idam pugudhuga please enter the places which are under our regime; enṛalum as they say these words and honour them with gifts; vĕdha nal vāyavar those who are having distinguished mouth/speech due to their recital of vĕdham; vĕl̤vi (their) karmas such as yāgam (fire sacrifice) etc; ul̤ with reverence thinking -our recitals have become purposeful-; maduththu offered (at the lotus feet of the ṣrīvaishṇavas); kinnarar kinnaras (celestial beings); gerudargal̤ garudas (celestial beings); gīdhangal̤ pādinar sang songs.; vĕl̤vi ul̤ maduththalum ās the vaidhikas offered all dharmas; virai kamazh emitting fragrance

TVM 10.9.6

3876 வேள்வியுள்மடுத்தலும் விரைகமழ்நறும்புகை *
காளங்கள்வலம்புரி கலந்தெங்குமிசைத்தனர் *
ஆண்மிங்கள்வானகம் ஆழியான்தமரென்று *
வாளொண்கண்மடந்தையர் வாழ்த்தினர்மகிழ்ந்தே.
3876 வேள்வி உள்மடுத்தலும் * விரை கமழ் நறும் புகை *
காளங்கள் வலம்புரி * கலந்து எங்கும் இசைத்தனர் **
ஆள்மின்கள் வானகம் * ஆழியான் தமர் என்று *
வாள் ஒண் கண் மடந்தையர் * வாழ்த்தினர் மகிழ்ந்தே (6)
3876 vel̤vi ul̤maṭuttalum * virai kamazh naṟum pukai *
kāl̤aṅkal̤ valampuri * kalantu ĕṅkum icaittaṉar **
āl̤miṉkal̤ vāṉakam * āzhiyāṉ tamar ĕṉṟu *
vāl̤ ŏṇ kaṇ maṭantaiyar * vāzhttiṉar makizhnte (6)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The savants offered the fruits of their Vedic rites, filling the air with the sweet smoke of incense. Chanks and bugles sounded loudly as bright-eyed damsels hailed the marchers. They joyously spoke to them, "You, devotees of our Lord who wields the discus, may you hold sway over our land."

Explanatory Notes

The bright-eyed ‘Apsaras’, the sweet damsels in the upper regions, cast their cool glances on the Lord’s devotees, passing along; Overcome by spontaneous joy, these ladies welcomed the distinguished travellers with the same warmth with which the elders would greet the home-coming of an youngster who had strayed away in distant lands quite long. Nampiḷḷai would just melt + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வேள்வி உள் வைதிகர்கள் வேள்வி பலன்களை; மடுத்தலும் ஸமர்ப்பித்தும்; விரை கமழ் நறுமணம் மிக்க; நறும் புகை மணம் கமழும் தூபங்களை; கலந்து எங்கும் வியாபிக்கச்செய்து; காளங்கள் திருச்சின்னங்களை; வலம்புரி வலம்புரிச் சங்குகளை; எங்கும் இசைத்தனர் எங்கும் இசைத்தனர்; வாள் ஒண் கண் ஒளிமிக்க கண்களையுடைய; மடந்தையர் தேவ மாதர்கள்; ஆழியான் எம்பெருமானின்; தமர் என்று அடியார்களான நீங்கள்; வானகம் இந்தப் பரமபதத்தை; ஆள்மின்கள் ஆள்வீர்களாக என்று; மகிழ்ந்தே மரியதையுடனும் மகிழ்ச்சியுடனும்; வாழ்த்தினர் வாழ்த்தினர்
naṛum fragrant; pugai incense; engum kalandhu spreading everywhere; kāl̤angal̤ wind instruments; valam puri conches with curl towards the right side; isaiththanar blew;; vāl̤ radiant; oṇ beautiful; kaṇ having eyes; madandhaiyar celestial women; āzhiyān for sarvĕṣvaran who has thiruvāzhi (divine chakra); thamar you who are servitors; vānagam these abodes such as svarga (heaven) etc; āṇmingal̤ should rule over; enṛu magizhndhu being joyful in this manner; vāzhththinar blessed.; thodu kadal kidandha mercifully resting in the deep ocean; em kĕsavan being kĕṣava who is the creator of everyone such as people like me, dhĕvas starting with brahmā, and nithyasūris

TVM 10.9.7

3877 மடந்தையர்வாழ்த்தலும் மருதரும்வசுக்களும் *
தொடர்ந்தெங்கும் தோத்திரஞ்சொல்லினர் * தொடுகடல்
கிடந்தவென்கேசவன் கிளரொளிமணிமுடி *
குடந்தையென்கோவலன் குடியடியார்க்கே.
3877 மடந்தையர் வாழ்த்தலும் * மருதரும் வசுக்களும் *
தொடர்ந்து எங்கும் * தோத்திரம் சொல்லினர் ** தொடுகடல்
கிடந்த எம் கேசவன் * கிளர் ஒளி மணிமுடி *
குடந்தை எம் கோவலன் * குடி அடியார்க்கே (7)
3877 maṭantaiyar vāzhttalum * marutarum vacukkal̤um *
tŏṭarntu ĕṅkum * tottiram cŏlliṉar ** tŏṭukaṭal
kiṭanta ĕm kecavaṉ * kil̤ar ŏl̤i maṇimuṭi *
kuṭantai ĕm kovalaṉ * kuṭi aṭiyārkke (7)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

When the ladies sang the glory of these great marchers who have faithfully served Kēcavaṉ, our Lord, across generations, and who now rest in Kuṭantai adorned with a gleaming gem-set crown, the ‘Marutars’ and ‘Vacus’ extolled their greatness. They continued to follow them as far as they were able, acknowledging their devotion and reverence towards Mātavaṉ.

Explanatory Notes

(i) Not satisfied with what they did, in their respective areas, unto the distinguished marchers to spiritual world, the ‘Maruth Gaṇas’ and ‘Aṣṭa Vasus’ went beyond their territorial limits, as far as they could, singing all the time the glory of these great souls on their upward journey. As a matter of fact, even these Devas, reputed for their rapid movements with immense + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தொடுகடல் அகாதமான கடலில்; கிடந்த பள்ளிகொண்டிருக்கும்; என் கேசவன் எம் கேசவனே; கிளர் ஒளி மிகுந்த ஒளி உடைய; மணி முடி ரத்தினக் கிரீடம் அணிந்தவனாக; குடந்தை திருக்குடந்தையில் சயனித்திருக்கும்; எம் கோவலன் எம் கோபாலனின்; குடி அடியார்க்கே அடியார்களை; மடந்தையர் தேவமாதர்; வாழ்த்தலும் வாழ்த்தியதும்; மருதரும் மருத்கணங்களும்; வசுக்களும் அஷ்டவசுக்களும்; எங்கும் போகுமிடம் எங்கும்; தொடர்ந்து தொடர்ந்து வந்து; தோத்திரம் பல்லாண்டு; சொல்லினர் பாடினார்கள்
kil̤ar ol̤i rising and radiant; maṇi mudi having the divine crown which has abundance of precious gems; kudandhaiyan one who is mercifully resting in thirukkudandhai; kŏvalan for krishṇa; kudi adiyārkku on the servitors who are serving for generations; madandhaiyar (respective) consort; vāzhththalum as they praised; marudharum maruths; vasukkal̤um ashta vasus (eight vasus); engum thodarndhu following everywhere; thŏththiram sollinar uttered praises.; gŏvindhan thanakku ḫor krishṇa who incarnated for the sake of his devotees; kudi adiyār devotees who belong to the clan which excusively exists

TVM 10.9.8

3878 குடியடியாரிவர் கோவிந்தன்தனக்கென்று *
முடியுடைவானவர் முறைமுறையெதிர்கொள்ள *
கொடியணிநெடுமதிள் கோபுரம்குறுகினர் *
வடிவுடைமாதவன் வைகுந்தம்புகவே.
3878 குடி அடியார் இவர் * கோவிந்தன் தனக்கு என்று *
முடி உடை வானவர் * முறை முறை எதிர்கொள்ள **
கொடி அணி நெடு மதிள் * கோபுரம் குறுகினர் *
வடிவு உடை மாதவன் * வைகுந்தம் புகவே (8)
3878 kuṭi aṭiyār ivar * kovintaṉ taṉakku ĕṉṟu *
muṭi uṭai vāṉavar * muṟai muṟai ĕtirkŏl̤l̤a **
kŏṭi aṇi nĕṭu matil̤ * kopuram kuṟukiṉar *
vaṭivu uṭai mātavaṉ * vaikuntam pukave (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The crowned inhabitants of SriVaikuntam spared no effort as they came forward to warmly welcome the devotees of Lord Kōvintaṉ, who had arrived at the main entrance of SriVaikuntam, the exquisite abode of Mātavaṉ. This sacred place was adorned with stately walls adorned with lovely banners.

Explanatory Notes

(i) The ‘Nityas’, in spiritual world, now come forward, in their strength, to greet the devotees from Earth, of Lord Govinda, who were enthralled by His amazing simplicity and loving condescension, during His advent on Earth. The venue where the two groups meet is just outside the main entrance to spiritual world (Śrī Vaikuṇṭa). It may be noted that, while the previous + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
இவர் கோவிந்தன் தனக்கு இவர்கள் கண்ணனின்; குடி அடியார் என்று குல அடியார்கள் என்று; முடி உடை அடிமை செய்கைக்கு முடி சூடிய; வானவர் நித்யஸூரிகள்; முறை முறை முறை முறையாக; எதிர் கொள்ள ஸ்வாகதம் என்று வரவேற்றனர்; வடி உடை அழகிய வடிவை உடைய; மாதவன் எம்பெருமான்; வைகுந்தம் வைகுந்தம்; புகவே பிரவேசிக்கும் கோபுர வாசல்; கொடி அணி அலங்காரமாகக் கட்டின கொடிகளுடன்; நெடு மதிள் உயர்ந்த மதிள்களை உடைய; கோபுரம் கோபுர வாசலை; குறுகினர் வந்து அடைந்தனர்
enṛu saying; mudi udai having similar form with crown etc as īṣvara; vānavar nithyasūris; muṛai as per their respective position; edhir kol̤l̤a come forward and welcome; vadivu udai having a decorated form; mādhavan sarvĕṣvaran-s (who is present with lakshmi as said in -ṣriyāsārdham-); vaigundham in ṣrīvaikuṇtam; puga to let them enter; kodi aṇi being decorated with flags (as a mark of welcoming them, as decoration); nedu madhil̤ having tall fort; gŏpuram kuṛuginar arrived at the main entrance.; vaigundham pugudhalum ās the ṣrīvaishṇavas entered ṣrīvaikuṇtam; vāsalil vānavar the divine gate keepers

TVM 10.9.9

3879 வைகுந்தம்புகுதலும் வாசலில்வானவர் *
வைகுந்தன்தமர்எமர் எமதிடம்புகுதென்று *
வைகுந்தத்தமரரும் முனிவரும்வியந்தனர் *
வைகுந்தம்புகுவது மண்ணவர்விதியே.
3879 வைகுந்தம் புகுதலும் * வாசலில் வானவர் *
வைகுந்தன் தமர் எமர் * எமது இடம் புகுது என்று **
வைகுந்தத்து அமரரும் * முனிவரும் வியந்தனர் *
வைகுந்தம் புகுவது * மண்ணவர் விதியே (9)
3879 vaikuntam pukutalum * vācalil vāṉavar *
vaikuntaṉ tamar ĕmar * ĕmatu iṭam pukutu ĕṉṟu **
vaikuntattu amararum * muṉivarum viyantaṉar *
vaikuntam pukuvatu * maṇṇavar vitiye (9)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The eternal Nithyasuris awaited in front of the gates of SriVaikuntam, greeting these great marchers with immense joy. They said to them, "May you, our masters, devotees of the Lord of Vaikunta, take over our duties and positions." The Nithyasuris, engaged in perpetual service to the Lord, and the deeply meditative sages considered it a privilege for humans from Earth to journey to SriVaikuntam.

Explanatory Notes

Tirumaṅkai Āzhvār was so steeped in the enjoyment of the Lord in His Arcā (Iconic) manifestation in the ‘Līlā Vibhūthi’ (Sportive Universe), easily worshipped in His image form of exquisite charm, that he even ridiculed the idea of men aspiring for spiritual world, like unto the senseless pursuit after the flying crow, letting go the rabbit on hand. And so, there lies + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வைகுந்தம் புகுதலும் வைகுந்தம் புகுந்ததும்; வாசலில் வானவர் வாசல் காக்கும் வானவர்கள்; வைகுந்தன் வைகுண்ட நாதனுடைய; தமர் எமர் அடியார்கள் எங்களுடைய ஸ்வாமிகள்; எமது இடம் ஆகையாலே எங்கள் பதவியில்; புகுத என்று அமருங்கள் என்று உகந்தார்கள்; வைகுந்தத்து வைகுந்தத்தில்; அமரரும் கைங்கரிய நிஷ்டராயும்; முனிவரும் குணாநுபவ நிஷ்டராயுமுள்ளவர்கள்; மண்ணவர் பூமியில் அடியவர்களாக இருந்தவர்கள்; வைகுந்தம் புகுவது பரமபதம் அடைவது; விதியே ஒரு பாக்யமே; வியந்தனர் என்று சொல்லி உகந்தார்கள்
vaigundhan thamar these ṣrīvaishṇavas, who have attained ṣrīvaikuṇtanātha; emar are desirable for us;; emadhu idam puga they should enter our dominion; enṛu considering this; viyandhanar became pleased;; vaigundhaththu in that abode; amararum munivarum amarars (those who engage in kainkaryam) and munivars (those who engage in meditating on bhagavān-s qualities); maṇṇavar those who were immersed in worldly pleasures on earth; vaigundham puguvadhu entering paramapadham; vidhiyĕ what a bhāgyam (fortune)!; enṛu viyandhanar became pleased.; vidhi vagai by the order of īṣvara, in the form of our fortune; pugundhanar the ṣrīvaishṇavas arrived and entered;

TVM 10.9.10

3880 விதிவகைபுகுந்தனரென்று நல்வேதியர் *
பதியினில்பாங்கினில் பாதங்கள்கழுவினர் *
நிதியுநற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும் *
மதிமுகமடந்தையர் ஏந்தினர்வந்தே.
3880 விதிவகை புகுந்தனர் என்று * நல் வேதியர் *
பதியினில் பாங்கினில் * பாதங்கள் கழுவினர் **
நிதியும் நல் சுண்ணமும் * நிறை குட விளக்கமும் *
மதி முக மடந்தையர் * ஏந்தினர் வந்தே (10)
3880 vitivakai pukuntaṉar ĕṉṟu * nal vetiyar *
patiyiṉil pāṅkiṉil * pātaṅkal̤ kazhuviṉar **
nitiyum nal cuṇṇamum * niṟai kuṭa vil̤akkamum *
mati muka maṭantaiyar * entiṉar vante (10)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The eternal Nithyasuris, revered in the sacred Vedas, considered it their great fortune that these men had come to SriVaikuntam. They welcomed them with grand honors, ceremonially washing their feet. Damsels with faces radiant like the moon came forward, carrying the Lord’s foot-rest, vermilion powder for the devotees’ foreheads, vessels filled with water topped with coconut lids, and auspicious lamps.

Explanatory Notes

(i) The ‘Nitya Sūrīs’, the Eternal Angels, who never passed through the gruelling mill of Saṃsāra and are, therefore, known as4 aspriṣṭa Samsārīs’, honour the ‘Released Souls’ just entering spiritual world on such a grand scale, without the slightest tinge of superiority complex. What makes them admire the new entrants and honour them, by enthroning them and washing their + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
விதிவகை நம்முடைய பாக்யத்தால்; புகுந்தனர் இவர்கள் இவ்விடம் வந்து சேர்ந்தார்கள்; என்று என்று சொல்லி; நல் வேதியர் நல்ல வேதம் அறிந்தவர்கள்; பதியினில் தம் தம் பதவிகளில்; பாங்கினில் உபசாரங்களுடன்; பாதங்கள் வந்தவர்களது திருவடிகளை; கழுவினர் விளக்கினார்கள்; நிதியும் திருவடி நிலைகளையும்; நல் சுண்ணமும் ஸ்ரீசூர்ணத்தையும்; நிறை குட பூரண கும்பங்களையும்; விளக்கமும் மங்கள தீபங்களையும்; மதி முக சந்திரன் போன்ற முகத்தை உடைய; மடந்தையர் மாதர்கள்; ஏந்தினர் வந்தே ஏந்தி வந்தனர்
enṛu being pleased; nal vĕdhiyar the nithyasūris who are well versed in vĕdham (as said in purusha sūktham -sādhyāssandhi dhĕvā:-) and having distinguished nature; padhiyinil in their respective abode; pānginil in an honourable manner; pādhangal̤ kazhuvinar cleansed the divine feet (of such ṣrīvaishṇavas);; nidhiyum bhagavān-s pādhukā which are said as the wealth for devotees as said in sthŏthra rathnam -dhanam madhīyam-; nal suṇṇamum distinguished thiruchchūrṇam (fragrance powder, which acquired its greatness due to the contact with the divine form of bhagavān); niṛai kudam pūrṇa kumbam (sacred pot filled with water); vil̤akkam mangal̤a dhīpams (auspicious lamps); madhi shining like a full moon; mugam having face; madandhaiyar divine damsels who have the humility revealing their subservience; vandhu coming forward; ĕndhinar carried.; avar he himself (who is with lakshmi); vandhu edhirkol̤l̤a as he comes forward and receives

TVM 10.9.11

3881 வந்தவரெதிர்கொள்ள மாமணிமண்டபத்து *
அந்தமில்பேரின்பத்து அடியரோடிருந்தமை *
கொந்தலர்பொழில் குருகூர்ச்சடகோபன் * சொல்
சந்தங்களாயிரத்து இவைவல்லார்முனிவரே. (2)
3881 ## வந்து அவர் எதிர் கொள்ள * மா மணி மண்டபத்து *
அந்தம் இல் பேரின்பத்து * அடியரோடு இருந்தமை **
கொந்து அலர் பொழில் * குருகூர்ச் சடகோபன் * சொல்
சந்தங்கள் ஆயிரத்து * இவை வல்லார் முனிவரே (11)
3881 ## vantu avar ĕtir kŏl̤l̤a * mā maṇi maṇṭapattu *
antam il periṉpattu * aṭiyaroṭu iruntamai **
kŏntu alar pŏzhil * kurukūrc caṭakopaṉ * cŏl
cantaṅkal̤ āyirattu * ivai vallār muṉivare (11)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-9

Divya Desam

Simple Translation

Those who can recite these ten songs, part of the thousand Vedic-inspired compositions by Caṭakōpaṉ of Kurukūr, amidst lush flower gardens, narrating his blissful experiences in SriVaikuntam. They were in the company of great devotees in a gem-set hall, greeted by the Supreme Lord and the Divine Mother. Such reciters will attain the status of eternal sages immersed in the Divine forever.

Explanatory Notes

(i) This end-song sets out the benefit, accruing to the chanters of this decad, as being their elevation on a par with the sages in the high spiritual world, immersed in incessant contemplation of the auspicious attributes of the Lord.

(ii) Oh, what a glorious ascent! How exciting, exhilarating and entertaining is this special spiritual world-bound route, exclusively + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
அவர் வந்து அந்த பெருமாளும் பிராட்டியும் வந்து; எதிர் கொள்ள எதிர் கொள்ள; மா மணி மண்டபத்து திருமாமணி மண்டபத்திலே; அந்தம் இல் முடிவில்லாத; பேரின்பத்து பேரானந்தம் உடைய; அடியரோடு பரமபாகவதர்களுடன் கூடி; இருந்தமை நித்யஸூரிகளுடன் இருந்ததைக் குறித்து; கொந்து அலர் பொழில் பூஞ்சோலைகள் உள்ள; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொல் அருளிச் செய்த; சந்தங்கள் வேதரூபமான; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுள்; இவை இந்தப் பத்துப் பாசுரங்களையும்; வல்லார் ஓத வல்லார் பகவத்குணங்களை; முனிவரே மனனம் பண்ணும் முனிவராவர்
mā maṇi maṇdabaththu in thirumāmaṇi maṇdapam (the divine assembly hall); andham il endless; pĕr boundless; inbaththu having bliss; adiyarŏdu being with sūris (nithyasūris, mukthāthmās); irundhamai in the way one is present; kondhu alar bunch of flowers blossoming; pozhil having garden; kurugūr controller of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; sol mercifully spoke; sandhangal̤ having different metres; āyiraththu among the thousand pāsurams; ivai this decad; vallār those who can practice well; munivar will become those who meditate upon bhagavān-s auspicious qualities (in paramapadham).; muniyĕ (being unqualified to be distinguished by name and form, being in an annihilated state without any difference between chith (sentient beings) and achith (insentient entities), in that singular state of all entities as said in chāndhŏgya upanishath -sadhĕva- and -ĕkamĕva-, as said in vishṇu thathvam -īṣvarāya nivĕdhithum-, with merciful heart, set out to bestow body and senses to chĕthanas, to make them surrender unto him) one who meditates upon the ways of creation; nānmuganĕ (after performing samashti srushti (initial creation up to creating the oval shaped universes) in transforming the primordial matter to mahath etc, to engage in vyashti srushti (variegated creation) inside the universes, as said in -srushtim thatha: karishyāmi thvāmāviṣya prajāpathĕ-) having four-headed brahmā as your body