Chapter 5

Āṇḍāl asks the cuckoo to call Kannan - (மன்னு பெரும்புகழ்)

குயிற் பத்து
Āṇḍāl asks the cuckoo to call Kannan - (மன்னு பெரும்புகழ்)
"O cuckoo living in the grove! You are with me! You know how I suffer from Krishna's separation! What is the use of your sweet voice? You know where Krishna is. Call him and bring him to me! Call the virtuous one to come!" Andal pleads with the cuckoo. Those who recite these ten verses with devotion will attain the benefits equivalent to reciting the Thirumanthiram.
சோலையில் வாழும் குயிலே! நீ என்னோடு இருக்கிறாய்! கண்ணனின் பிரிவால் நான் துன்புறுவது உனக்கே தெரியும்! நீ இனிய குரலைப் பெற்று என்ன பயன்? கண்ணன் எங்கு இருக்கிறான் என்பது உனக்குத் தெரியும். அவனைக் கூவி என்னிடம் அழைத்துக்கொண்டு வா! புண்ணியனை வரக் கூவாய்! என்று ஆண்டாள் குயிலை வேண்டுகிறாள். இப்பத்துப் பாடல்களைப் பக்தியோடு கூறுவோர் திருமந்திரத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனை அடைவர்.
Verses: 545 to 555
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will reach the Lord
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

NAT 5.1

545 மன்னுபெரும்புகழ்மாதவன்
மாமணிவண்ணன் மணிமுடிமைந்தன்
தன்னை * உகந்ததுகாரணமாக
என்சங்கிழக்கும்வழக்குண்டே? *
புன்னைகுருக்கத்திஞாழல்செருந்திப்
பொதும்பினில்வாழும்குயிலே! *
பன்னியெப்போதுமிருந்துவிரைந்து என்
பவளவாயன்வரக்கூவாய். (2)
545 ## மன்னு பெரும்புகழ் மாதவன் * மா மணி
வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை * உகந்தது காரணமாக * என்
சங்கு இழக்கும் வழக்கு உண்டே? **
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் *
பொதும்பினில் வாழும் குயிலே! *
பன்னி எப்போதும் இருந்து விரைந்து * என்
பவள வாயன் வரக் கூவாய் (1)
545 ## maṉṉu pĕrumpukazh mātavaṉ * mā maṇi
vaṇṇaṉ maṇi-muṭi maintaṉ
taṉṉai * ukantatu kāraṇamāka * ĕṉ
caṅku izhakkum vazhakku uṇṭe? **
puṉṉai kurukkatti ñāzhal cĕruntip *
pŏtumpiṉil vāzhum kuyile! *
paṉṉi ĕppotum iruntu viraintu * ĕṉ
paval̤a-vāyaṉ varak kūvāy (1)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-31

Simple Translation

545. O Madhava! beautiful sapphire-colored lord the king decorated with a crown studded with jewels and praised by all in the world!. My conch bangles have become loose, yearning for you Is this fair ? O cuckoo bird living in holes in punnai, kurukkathi, nyāzhal and cherundi trees, won’t you coo and call at all times of the day for the one with the coral lips to come quickly to me?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புன்னை புன்னை; குருக்கத்தி குருக்கத்தி மரங்கள்; ஞாழல் கோங்கு; செருந்தி சுரபுன்னை மரங்களும்; பொதும்பினில் ஆகிய சோலையிலே; வாழும் வாழும்; குயிலே! குயிலே; மன்னு நித்தியமாய்; பெரும் புகழ் அளவற்ற புகழையுடைய; மாதவன் மாதவன்; மா மணி வண்ணன் மணிவண்ணன்; மணி முடி மணிகள் பதித்த முடியுடைய; மைந்தன் தன்னை எம்பெருமானை; உகந்தது ஆசைப்பட்டது; காரணமாக காரணமாக; என் சங்கு என்னுடைய கைவளைகள்; இழக்கும் கழன்று போக; வழக்கு உண்டே? நியாயம் உண்டோ?; என் பவள பவளம் போன்ற; வாயன் அதரத்தையுடையவன்; வர என்னிடம் என்னிடம் வந்து சேரும்படி; எப்போதும் எப்போதும்; பன்னி அவன் நாமங்களை; இருந்து ஸ்மரித்துக் கொண்டே; விரைந்து சீக்கிரமாக வர; கூவாய் கூவிடுவாய்

NAT 5.2

546 வெள்ளைவிளிசங்கிடங்கையிற்கொண்ட
விமலனெனக்குருக்காட்டான் *
உள்ளம்புகுந்தென்னைநைவித்து
நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக்காணும் *
கள்ளவிழ்செண்பகப்பூமலர்கோதிக்
களித்திசைபாடுங்குயிலே! *
மெள்ளவிருந்துமிழற்றிமிழற்றாது என்
வேங்கடவன்வரக்கூவாய்.
546 வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட *
விமலன் எனக்கு உருக் காட்டான் *
உள்ளம் புகுந்து என்னை நைவித்து * நாளும்
உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும் **
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக் *
களித்து இசை பாடும் குயிலே ! *
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது * என்
வேங்கடவன் வரக் கூவாய் (2)
546 vĕl̤l̤ai vil̤icaṅku iṭaṅkaiyil kŏṇṭa *
vimalaṉ ĕṉakku uruk kāṭṭāṉ *
ul̤l̤am pukuntu ĕṉṉai naivittu * nāl̤um
uyirppĕytu kūttāṭṭuk kāṇum **
kal̤ aviḻ cĕṇpakappū malar kotik *
kal̤ittu icai pāṭum kuyile ! *
mĕl̤l̤a iruntu miḻaṟṟi miḻaṟṟātu * ĕṉ
veṅkaṭavaṉ varak kūvāy (2)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

546. O! The faultless one who carries a sounding white conch in his left hand does not show His form to me. He has entered my heart and makes me pine for his love. See, he is taking my life away and playing with my feelings. O cuckoo bird, you drink the honey that drips from the blooming shenbaga flowers and sing happily. Don’t be lazy and prattle, just sing and be happy. Coo the names of the lord of Venkatam hill to come to me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கள் அவிழ் தேன் பெருகும்; செண்பக பூ செண்பகப் பூ; மலர் கோதி மலரை கோதி எடுத்து; களித்து மகிழ்ந்து; இசை பாடும் இசை பாடும்; குயிலே! குயிலே!; வெள்ளை வெண்மையான; விளிசங்கு அடியாரை அழைக்கும் சங்கை; இடங்கையில் இடது கையில்; கொண்ட வைத்திருக்கும்; விமலன் எனக்கு பெம்மான் எனக்கு; உரு தன் உருவத்தை; காட்டான் காட்டவில்லை; உள்ளம் என்னுடைய இருதயத்தினுள்; புகுந்து புகுந்து; என்னை நைவித்து என்னை இம்சித்து; நாளும் தினமும்; உயிர்ப்பெய்து உயிரை வாங்கி; கூத்தாட்டு வேடிக்கை; காணும் பார்க்கிறான்; மெள்ள இருந்து என் அருகே இருந்து; மிழற்றி உன் மழலையால்; மிழற்றாது துன்புறுத்தாது; என் வேங்கடவன் என் வேங்கடமுடையான்; வரக் கூவாய் இங்கே வரும்படி கூவுவாய்

NAT 5.3

547 மாதலிதேர்முன்புகோல்கொள்ள
மாயன்இராவணன் மேல் * சரமாரி
தாய்தலையற்றற்றுவீழத் தொடுத்த
தலைவன்வரவெங்குங்காணேன்! *
போதலர்காவில்புதுமணம்நாறப்
பொறிவண்டின்காமரங்கேட்டு * உன்
காதலியோடுடன்வாழ்குயிலே! என்
கருமாணிக்கம்வரக்கூவாய்.
547 மாதலி தேர் முன்பு கோல்கொள்ள * மாயன்
இராவணன் மேல் * சர மாரி
தாய் தலை அற்று அற்று வீழத் * தொடுத்த
தலைவன் வர எங்கும் காணேன் **
போது அலர் காவில் புதுமணம் நாறப் *
பொறி வண்டின் காமரம் கேட்டு * உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே ! * என்
கருமாணிக்கம் வரக் கூவாய் (3)
547 mātali ter muṉpu kolkŏl̤l̤a * māyaṉ
irāvaṇaṉ mel * cara-māri
tāy talai aṟṟu aṟṟu vīḻat * tŏṭutta
talaivaṉ vara ĕṅkum kāṇeṉ **
potu alar kāvil putumaṇam nāṟap *
pŏṟi vaṇṭiṉ kāmaram keṭṭu * uṉ
kātaliyoṭu uṭaṉ vāḻ kuyile ! * ĕṉ
karumāṇikkam varak kūvāy (3)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

547. O!My master! As Rāma he fought with Rāvanan and with Madali as the charioteer, drove into Ravanā's kingdom. Shooting his arrows like rain He cut off Rāvana's ten heads, I don’t see him coming to me. O cuckoo bird, you live with your beloved mate in the groves where fragrant flowers bloom and spread their smell, listening to the kāmaram music of the bees that have dots on their bodies Coo and call the dark-colored one shining like a diamond to come to me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
போது அலர் பூக்கள் மலரும்; காவில் சோலையிலே; புதுமணம் நாற புதிதான நறுமணம் வீச; பொறி வண்டின் அழகிய வண்டினுடைய; காமரம் ரீங்காரத்தை; கேட்டு கேட்டுக் கொண்டு; உன் காதலியோடு உன் பேடையோடு; உடன் சேர்ந்து; வாழ்குயிலே! வாழ்கிற குயிலே!; மாதலி மாதலியானவன் இராமபிரானின் தேர்ப்பாகன்; தேர் முன்பு இராவணனின் தேரின் முன்பு; கோல் கோலால் தன்; கொள்ள தேரை நடத்த; மாயன் மாயாவியான; இராவணன் மேல் ராவணன் மேலே; சர மாரி அம்பு மழையால்; தாய் தலை பிரதானமான தலை; அற்று அற்று அற்று அற்று; வீழ தொடுத்த விழும்படித் தொடுத்த; தலைவன் எம்பெருமான்; வர எங்கும் காணேன் வரவில்லையே; என் கருமாணிக்கம் கருமாணிக்கம் போன்றவன்; இங்கே வர இங்கு வரும்படியாக; கூவாய் நீ கூவுவாய்

NAT 5.4

548 என்புருகியினவேல்நெடுங்கண்கள்
இமைபொருந்தாபலநாளும் *
துன்பக்கடல்புக்குவைகுந்தனென்பது ஒர்
தோணிபெறாதுஉழல்கின்றேன் *
அன்புடையாரைப்பிரிவுறுநோயது
நீயுமறிதிகுயிலே! *
பொன்புரைமேனிக்கருளக்கொடியுடைப்
புண்ணியனைவரக்கூவாய்.
548 என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள் *
இமை பொருந்தா பல நாளும் *
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது * ஓர்
தோணி பெறாது உழல்கின்றேன் **
அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது
நீயும் அறிதி குயிலே *
பொன் புரை மேனிக் கருளக் கொடி உடைப் *
புண்ணியனை வரக் கூவாய் (4)
548 ĕṉpu uruki iṉa vel nĕṭuṅ kaṇkal̤ *
imai pŏruntā pala nāl̤um *
tuṉpak kaṭal pukku vaikuntaṉ ĕṉpatu * or
toṇi pĕṟātu uḻalkiṉṟeṉ **
aṉpu uṭaiyāraip pirivu uṟu noyatu
nīyum aṟiti kuyile *
pŏṉ purai meṉik karul̤ak kŏṭi uṭaip *
puṇṇiyaṉai varak kūvāy (4)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

548. My bones melt, My long spear-like eyes do not close. I have entered an ocean of sorrow and cannot find the boat that is the Vaikuntan to escape my suffering. O cuckoo bird, you know the pain of separation Coo and call the virtuous one with a golden body and an eagle flag and make him come to me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குயிலே! குயிலே!; என்பு எலும்புகள்; உருகி உருகியதுமல்லாமல்; இன வேல் வேல் போன்ற; நெடும் விசாலமான; கண்கள் கண்களும்; இமை தூக்கமில்லாததால்; பொருந்தா மூடவில்லை; பல நாளும் நெடுங்காலமாக; துன்ப பிரிவுத் துன்பமாகிய; கடல் புக்கு கடலிலே அழுந்தி; வைகுந்தன் வைகுந்தன்; என்பது ஓர் என்கிற; தோணி ஒரு தோணியை; பெறாது அடையப் பெறாமல்; உழல்கின்றேன் தவிக்கின்றேன்; அன்பு அன்பு; உடையாரை உடையவர்களை; பிரிவு உறு பிரிவதால் உண்டாகும்; நோயது துக்கத்தை; நீயும் அறிதி? நீயும் அறிவாயன்றோ?; பொன்புரை மேனி பொன் மேனியும்; கருள கருடனை; கொடி உடை கொடியாக உடையவனுமான; புண்ணியனை புண்ணியனை; வரக் கூவாய் இங்கே வரும்படி கூவுவாய்

NAT 5.5

549 மென்னடையன்னம்பரந்துவிளையாடும்
வில்லிபுத்தூருறைவான்றன் *
பொன்னடிகாண்பதோராசையினால் என்
பொருகயற்கண்ணிணை துஞ்சா *
இன்னடிசிலொடுபாலமுதூட்டி
எடுத்தவென்கோலக்கிளியை *
உன்னொடுதோழமைகொள்ளுவன்குயிலே!
உலகளந்தான்வரக்கூவாய். (2)
549 * மென்னடை அன்னம் பரந்து விளையாடும் *
வில்லிபுத்தூர் உறைவான் தன் *
பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் * என்
பொரு கயல் கண்ணினை துஞ்சா **
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி *
எடுத்த என் கோலக் கிளியை *
உன்னொடு தோழமைக் கொள்ளுவன் குயிலே ! *
உலகு அளந்தான் வரக் கூவாய் (5)
549 * mĕṉṉaṭai aṉṉam parantu vil̤aiyāṭum *
villiputtūr uṟaivāṉ taṉ *
pŏṉṉaṭi kāṇpatu or ācaiyiṉāl * ĕṉ
pŏru kayal kaṇṇiṉai tuñcā **
iṉ aṭicilŏṭu pāl-amutu ūṭṭi *
ĕṭutta ĕṉ kolak kil̤iyai *
uṉṉŏṭu toḻamaik kŏl̤l̤uvaṉ kuyile ! *
ulaku al̤antāṉ varak kūvāy (5)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

549. He resides in SriVillipputhur where the swans that walk softly, play. My fish-like eyes do not close to sleep because they wish to see His golden feet. O cuckoo bird, I will make the beautiful parrot that I raised feeding it sweet rice and milk, be your friend. Coo and call him, so that who measured the world will come to me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மென்னடை மென்மையான நடையோடு; அன்னம் அன்னங்கள்; பரந்து பரந்து; விளையாடும் விளையாடும்; வில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூரில்; உறைவான் தன் உறைபவனின்; பொன்னடி பொன் போன்ற திருவடிகளை; காண்பது காணவேண்டுமெனும்; ஓர் ஆசையினால் ஆசையினாலே; என் என்னுடைய; பொரு கயல் கயல் மீன்கள் போன்ற; கண் இணை கண் இணைகள்; துஞ்சா தூங்கவில்லை; குயிலே! ஓ குயிலே!; உலகு உலகங்களை; அளந்தான் அளந்தவன்; வரக் கூவாய் இங்கே வரக் கூவுவாய்; இன் இனிப்பான; அடிசிலொடு பொங்கலையும்; பால்அமுது பாலமுதையும்; ஊட்டி எடுத்த ஊட்டி வளர்த்த; என் கோல எனது அழகிய; கிளியை கிளியை; உன்னொடு உன்னுடன்; தோழமை தோழமை; கொள்வன் கொள்ளச்செய்வேன்

NAT 5.6

550 எத்திசை யுமமரர்பணிந்தேத்தும்
இருடீகேசன்வலிசெய்ய *
முத்தன்னவெண்முறுவற்செய்யவாயும்
முலயுமழகழிந்தேன்நான் *
கொத்தலர்காவில்மணித்தடம் கண்படை
கொள்ளுமிளங்குயிலே! * என்
தத்துவனை வரக்கூகிற்றியாகில்
தலையல்லால்கைம்மாறிலேனே.
550 எத் திசையும் அமரர் பணிந்து ஏத்தும் *
இருடீகேசன் வலி செய்ய *
முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும் *
முலையும் அழகு அழிந்தேன் நான் **
கொத்து அலர் காவில் மணித்தடம் * கண்படை
கொள்ளும் இளங் குயிலே! * என்
தத்துவனை வரக் கூகிற்றியாகில் *
தலை அல்லால் கைம்மாறு இலேனே (6)
550 ĕt ticaiyum amarar paṇintu ettum *
iruṭīkecaṉ vali cĕyya *
muttu aṉṉa vĕṇ muṟuval cĕyya vāyum *
mulaiyum aḻaku aḻinteṉ nāṉ **
kŏttu alar kāvil maṇittaṭam * kaṇpaṭai
kŏl̤l̤um il̤aṅ kuyile! * ĕṉ
tattuvaṉai varak kūkiṟṟiyākil *
talai allāl kaimmāṟu ileṉe (6)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

550. Rishikesān, worshipped by the gods in all the directions, made me unhappy and pine for him The beauty of the white pearl-like smile of my red mouth and of my breasts is lost. O young cuckoo bird, you sleep in a beautiful place in a grove blooming with flowers. If you coo and call for him, the true one, to come to me, I will bow my head to you. I don’t know any other way to pay you back.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொத்து அலர் கொத்தாக பூக்கள் மலரும்; காவில் சோலையிலே; மணித்தடம் அழகான இடத்திலே; கண்படை கொள்ளும் உறங்குகின்ற; இளங் குயிலே! இளங் குயிலே!; எத்திசையும் எல்லா திக்குகளிலும்; அமரர் தேவர்கள்; பணிந்து ஏத்தும் வணங்கிப் போற்றும்; இருடீகேசன் எம்பெருமான்; வலி செய்ய என்னை துன்புறுத்த; நான் அதனால் நான்; முத்து அன்ன முத்துப்போன்ற; வெண் வெண்மையான; முறுவல் முறுவலும்; செய்ய வாயும் சிவந்த அதரமும்; முலையும் மார்பும் ஆகியவற்றின்; அழகு அழிந்தேன் அழகு அழிந்தேன்; என் தத்துவனை என் எம்பிரானை; வர வரச்சொல்லி; கூகிற்றியாகில் கூவினால்; தலை தலையால்; அல்லால் வணங்குவதைத் தவிர; கைம்மாறு வேறொரு கைம்மாறு; இலேனே செய்ய இயலேன்

NAT 5.7

551 பொங்கியபாற்கடல்பள்ளிகொள்வானைப்
புணர்வதோராசயினால் * என்
கொங்கைகிளர்ந்துகுமைத்துக்குதுகலித்
தாவியையாகுலஞ்செய்யும் *
அங்குயிலே! உனக்கென்னமறைந்துறைவு ?
ஆழியும்சங்குமொண்தண்டும் *
தங்கியகையவனைவரக்கூவில் நீ
சாலத்தருமம்பெறுதி.
551 பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப் *
புணர்வது ஓர் ஆசையினால் * என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து *
ஆவியை ஆகுலம் செய்யும்
அம் குயிலே ** உனக்கு என்ன மறைந்து உறைவு? *
ஆழியும் சங்கும் ஒண் தண்டும் *
தங்கிய கையவனை வரக் கூவில் * நீ
சாலத் தருமம் பெறுதி (7)
551 pŏṅkiya pāṟkaṭal pal̤l̤ikŏl̤vāṉaip *
puṇarvatu or ācaiyiṉāl * ĕṉ
kŏṅkai kil̤arntu kumaittuk kutukalittu *
āviyai ākulam cĕyyum
am kuyile ** uṉakku ĕṉṉa maṟaintu uṟaivu? *
āḻiyum caṅkum ŏṇ taṇṭum *
taṅkiya kaiyavaṉai varak kūvil * nī
cālat tarumam pĕṟuti (7)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

551. With the desire of uniting with Him, my bosom rejoices, giving me immense distress. O beautiful cuckoo bird, why do you hide? Coo and call Him Make the One with the discus, the conch and the strong club to come to me, You will have the good karmā of doing many generous acts.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அம் குயிலே! அழகிய குயிலே!; பொங்கிய அலை பொங்கும்; பாற்கடல் பாற்கடலில்; பள்ளி பள்ளி; கொள்வானை கொண்டுள்ள பெருமானுடன்; புணர்வது சேர வேண்டும் என்ற; ஓர் ஆசையினால் ஓர் ஆசையினால்; என் கொங்கை என் மார்பு; கிளர்ந்து களித்து; குமைத்துக் உற்சாகம் கொண்டு; குதுகலித்து குதூகலித்து; ஆவியை உயிரை உருக்கி; ஆகுலம் செய்யும் துன்புறுத்துகின்றன; மறைந்து கண்ணுக்குப் படாமல் நீ மறைந்து; உறைவு இருப்பதனால்; உனக்கு என்ன உனக்கு என்ன பயன்; ஆழியும் சங்கும் சங்கு சக்கரம்; ஒண் தண்டும் கதை ஆகியவற்றை; தங்கிய கையிலேந்திய; கையவனை பெருமானை; வரக் கூவில் நீ வரும்படி நீ கூவுவாயாகில்; சாலத் தருமம் பெறுதி தர்மம் செய்தவளாவாய்

NAT 5.8

552 சார்ங்கம்வளையவலிக்கும்தடக்கைச்
சதுரன்பொருத்தமுடையன் *
நாங்களெம்மில்லிருந்தொட்டியகச்சங்கம்
நானுமவனுமறிதும் *
தேங்கனிமாம்பொழில்செந்தளிர்கோதுஞ்
சிறுகுயிலே! * திருமாலை
ஆங்குவிரைந்தொல்லைக்கூகிற்றியாகில்
அவனைநான்செய்வனகாணே.
552 சார்ங்கம் வளைய வலிக்கும் * தடக்கைச்
சதுரன் பொருத்தம் உடையன் *
நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் *
நானும் அவனும் அறிதும் **
தேம் கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் *
சிறு குயிலே! * திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்றியாகில் *
அவனை நான் செய்வன காணே (8)
552 cārṅkam val̤aiya valikkum * taṭakkaic
caturaṉ pŏruttam uṭaiyaṉ *
nāṅkal̤ ĕm illiruntu ŏṭṭiya kaccaṅkam *
nāṉum avaṉum aṟitum **
tem kaṉi mām pŏḻil cĕntal̤ir kotum *
ciṟu kuyile! * tirumālai
āṅku viraintu ŏllaik kūkiṟṟiyākil *
avaṉai nāṉ cĕyvaṉa kāṇe (8)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

552. The clever one who is loved by all, shoots arrows from his bow with his strong hands. Only He and I know the promises we made when we stayed in our home. O small cuckoo bird who pluck the tender shoots of the sweet mango tree in the grove, if you coo and call for Thirumāl to come here quickly, you will see what I will do for him with my love.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேம் கனி இனிப்பான பழங்களையுடைய; மாம் பொழில் மாந்தோப்பிலே; செந்தளிர் சிவந்த துளிர்களை; கோதும் அலகால் கொத்துகிற; சிறு குயிலே! அழகிய இளங்குயிலே!; சார்ங்கம் வளைய வில்லை வளைத்து; தடக்கை சக்தியையுடைய; சதுரன் மிக்க சாமர்த்தியமுடையவனான எம்பிரான்; பொருத்தம் பொருத்தம்; உடையன் உடையவன்; நாங்கள் இருந்து நாங்கள் இணைந்து; எம்மில் எங்களுக்குள்; ஒட்டிய செய்து கொண்ட; கச்சங்கம் ஒப்பந்தம்; நானும் அவனும் நானும் அவனுமே; அறிதும் அறிவோம்; ஆங்கு தூரத்திலிருக்கும்; திருமாலை எம்பெருமானை; ஒல்லை விரைந்து மிகவும் சீக்கிரமாக வர; கூகிற்றியாகில் கூவுவாயாகில்; அவனை நான் அவனை நான்; செய்வன காணே! என்ன செய்கிறேன் என்று பார்

NAT 5.9

553 பைங்கிளிவண்ணன்சிரீதரனென்பதோர்
பாசத்தகப்பட்டிருந்தேன் *
பொங்கொளிவண்டிரைக்கும்பொழில்வாழ்குயிலே!
குறிக்கொண்டிதுநீகேள் *
சங்கொடுசக்கரத்தான்வரக்கூவுதல்
பொன்வளைகொண்டுதருதல் *
இங்குள்ளகாவினில்வாழக்கருதில்
இரண்டத்தொன்றேல்திண்ணம்வேண்டும்.
553 பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது ஓர் *
பாசத்து அகப்பட்டிருந்தேன் *
பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயிலே! *
குறிக்கொண்டு இது நீ கேள் **
சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல் *
பொன்வளை கொண்டு தருதல் *
இங்கு உள்ள காவினில் வாழக் கருதில் *
இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் (9)
553 paiṅkil̤i vaṇṇaṉ cirītaraṉ ĕṉpatu or *
pācattu akappaṭṭirunteṉ *
pŏṅku ŏl̤i vaṇṭu iraikkum pŏḻil vāḻ kuyile! *
kuṟikkŏṇṭu itu nī kel̤ **
caṅkŏṭu cakkarattāṉ varak kūvutal *
pŏṉval̤ai kŏṇṭu tarutal *
iṅku ul̤l̤a kāviṉil vāḻak karutil *
iraṇṭattu ŏṉṟel tiṇṇam veṇṭum (9)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

553. I have fallen in love with Sridharan who has the color of a green parrot. O cuckoo bird living in a grove that swarms with shining bees, give me your attention and listen. Either you should coo and call, asking him with the conch and the discus to come to me, or you should find the golden bangles that I have lost and bring them to me. If you want to live in this grove, you should do one of these things.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொங்கு ஒளி ஒளி மிக்க; வண்டு வண்டுகள்; இரைக்கும் இசைந்துபாடும்; பொழில் வாழ் சோலையிலே வாழும்; குயிலே குயிலே; இது நீ இதை நீ; குறிக்கொண்டு கேள் கவனமாகக் கேள்; பைங்கிளி வண்ணன் பசுங்கிளி நிறத்தவன்; சிரீதரன் சிரீதரன் என்னும்; என்பது ஓர் பாசத்து பாசவலையிலே; அகப்பட்டு சிக்கிக்கொண்டு; இருந்தேன் கிடக்கிறேன்; இங்கு உள்ள காவினில் இந்தச் சோலையிலே; வாழக் கருதில் நீ வாழ நினைத்தால்; சங்கொடு சங்கு; சக்கரத்தான் சக்கரத்தையுடைய பெருமான்; வரக் கூவுதல் வரும்படி கூவவேண்டும்; பொன் நான் இழந்த; வளை பொன் வளையல்களை; கொண்டு கொண்டு வந்து; தருதல் தரவேண்டும்; இரண்டத்து இவையிரண்டில்; ஒன்றேல் ஒன்றையாவது; திண்ணம் கட்டாயம்; வேண்டும் செய்யவேண்டும்

NAT 5.10

554 அன்றுலகம்மளந்தானையுகந்து
அடிமைக்கணவன்வலிசெய்ய *
தென்றலுந்திங்களுமூடறுத்தென்னை
நலியும்முறைமையறியேன் *
என்றுமிக்காவிலிருந்திருந்து
என்னைத் ததர்த்தாதேநீயும் குயிலே *
இன்றுநாராயணனைவரக்கூவாயேல்
இங்குற்றுநின்றும்துரப்பன்.
554 அன்று உலகம் அளந்தானை உகந்து *
அடிமைக்கண் அவன் வலி செய்ய *
தென்றலும் திங்களும் ஊடறுத்து * என்னை
நலியும் முறைமை அறியேன் **
என்றும் இக் காவில் இருந்திருந்து * என்னைத்
ததர்த்தாதே நீயும் குயிலே *
இன்று நாராயணனை வரக் கூவாயேல் *
இங்குற்று நின்றும் துரப்பன் (10)
554 aṉṟu ulakam al̤antāṉai ukantu *
aṭimaikkaṇ avaṉ vali cĕyya *
tĕṉṟalum tiṅkal̤um ūṭaṟuttu * ĕṉṉai
naliyum muṟaimai aṟiyeṉ **
ĕṉṟum ik kāvil iruntiruntu * ĕṉṉait
tatarttāte nīyum kuyile *
iṉṟu nārāyaṇaṉai varak kūvāyel *
iṅkuṟṟu niṉṟum turappaṉ (10)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

554. I fell in love with Him who measured the world and became his devotee, but He only makes me sad because I love him and have not seen him. I can’t describe the sorrow that the breeze and the moon give me. O cuckoo bird, don’t make me suffer staying in this grove and cooing always. If you don’t call today Nārāyanān to come, I will chase you away from here.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று அக்காலத்தில்; உலகம் மூவுலகங்களையும்; அளந்தானை அளந்தவனை; உகந்து விரும்பி; அடிமைக்கண் அந்தக் கைங்கரியத்திலே; அவன் அவன்; வலி செய்ய வஞ்சனை பண்ண; தென்றலும் தென்றலும்; திங்களும் சந்திரனும்; ஊடறுத்து என்னைப் பிளந்து; நலியும் துன்புறுத்தும்; முறைமை நியாயத்தை நான்; அறியேன் அறியேன்; குயிலே! நீயும் ஓ குயிலே! நீயும்; என்றும் எந்நாளும்; இக்காவில் இச் சோலையிலே; இருந்திருந்து இருந்துகொண்டு; என்னை என்னை; ததைத்தாதே துன்புறுத்தாதே; இன்று இன்று; நாராயணனை நாராயணனை; வர வர; கூவாயேல் கூவாமல் இருந்தால்; இங்குத்தை இந்தச் சோலையிலிருந்து; நின்றும் உன்னை; துரப்பன் துரத்தி விடுவேன்

NAT 5.11

555 விண்ணுறநீண்டடிதாவியமைந்தனை
வேற்கண்மடந்தைவிரும்பி *
கண்ணுறவென்கடல்வண்ணனைக் கூவு
கருங்குயிலே! என்றமாற்றம் *
பண்ணுறுநான்மறையோர்புதுவைமன்னன்
பட்டர்பிரான்கோதைசொன்ன *
நண்ணுறுவாசகமாலைவல்லார்
நமோநாராயணாயவென்பாரே. (2)
555 ## விண் உற நீண்டு அடி தாவிய மைந்தனை *
வேற்கண் மடந்தை விரும்பி *
கண்ணுற என் கடல் வண்ணனைக் * கூவு
கருங்குயிலே ! என்ற மாற்றம் **
பண் உறு நான்மறையோர் புதுவைமன்னன் *
பட்டர்பிரான் கோதை சொன்ன *
நண் உறு வாசக மாலை வல்லார் * நமோ
நாராயணாய என்பாரே (11)
555 ## viṇ uṟa nīṇṭu aṭi tāviya maintaṉai *
veṟkaṇ maṭantai virumpi *
kaṇṇuṟa ĕṉ kaṭal-vaṇṇaṉaik * kūvu
karuṅkuyile ! ĕṉṟa māṟṟam **
paṇ uṟu nāṉmaṟaiyor putuvaimaṉṉaṉ *
paṭṭarpirāṉ kotai cŏṉṉa *
naṇ uṟu vācaka mālai vallār * namo
nārāyaṇāya ĕṉpāre (11)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

555. Kodai, the daughter of Pattarpiran, the chief of Puduvai where Vediyars recite with music the four Vedās, composed ten pāsurams about how a woman with spear-like eyes asked a cuckoo bird to call for Him who grew into the sky and measured the world to come, saying, “O dark cuckoo bird, coo and call my ocean-colored beloved. ” Those who learn these pāsurams and recite them, will be blessed with divine thoughts on Nārāyanā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேல் வேல்போன்ற; கண் கண்களையுடைய; மடந்தை பெண்மைக் குணங்கள் நிறைந்த; பண்உறு இசையுடன்; நான்மறையோர் நான்கு வேதங்களை ஒதும்; புதுவைமன்னன் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியோன்; பட்டர்பிரான் பட்டர்பிரானின்; கோதை மகள் ஆண்டாள்; அடி விண் உற ஆகாசம் வரை; நீண்டு தாவிய நீண்டு தாவி; மைந்தனை அளந்த பெருமானை; கருங்குயிலே! கருங்குயிலே!; விரும்பி ஆசைப்பட்டு; கண்ணுற என் நான் காணும்படியாக என்; கடல் வண்ணனை! கடல் வண்ணனை!; கூவு பிரானை கூவி அழைத்திடு; என்ற மாற்றம் என்று பாசுரமாக; சொன்ன கூறிய; நண் உறு நன்றாக அமைந்த; வாசக மாலை இந்தச் சொல் மாலையில்; வல்லார் தேர்ந்தவர்; நமோ நாராயணாய நமோ நாராயணாய என்று; என்பாரே தியானிக்கத்தக்க பாக்யம் பெறுவர்