NAT 5.9

சிரீதரனிடம் மையல் கொண்டேன்: அவனை வரக் கூவாய்

553 பைங்கிளிவண்ணன்சிரீதரனென்பதோர்
பாசத்தகப்பட்டிருந்தேன் *
பொங்கொளிவண்டிரைக்கும்பொழில்வாழ்குயிலே!
குறிக்கொண்டிதுநீகேள் *
சங்கொடுசக்கரத்தான்வரக்கூவுதல்
பொன்வளைகொண்டுதருதல் *
இங்குள்ளகாவினில்வாழக்கருதில்
இரண்டத்தொன்றேல்திண்ணம்வேண்டும்.
553 paiṅkil̤i vaṇṇaṉ cirītaraṉ ĕṉpatu or *
pācattu akappaṭṭirunteṉ *
pŏṅku ŏl̤i vaṇṭu iraikkum pŏḻil vāḻ kuyile! *
kuṟikkŏṇṭu itu nī kel̤ **
caṅkŏṭu cakkarattāṉ varak kūvutal *
pŏṉval̤ai kŏṇṭu tarutal *
iṅku ul̤l̤a kāviṉil vāḻak karutil *
iraṇṭattu ŏṉṟel tiṇṇam veṇṭum (9)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

553. I have fallen in love with Sridharan who has the color of a green parrot. O cuckoo bird living in a grove that swarms with shining bees, give me your attention and listen. Either you should coo and call, asking him with the conch and the discus to come to me, or you should find the golden bangles that I have lost and bring them to me. If you want to live in this grove, you should do one of these things.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொங்கு ஒளி ஒளி மிக்க; வண்டு வண்டுகள்; இரைக்கும் இசைந்துபாடும்; பொழில் வாழ் சோலையிலே வாழும்; குயிலே குயிலே; இது நீ இதை நீ; குறிக்கொண்டு கேள் கவனமாகக் கேள்; பைங்கிளி வண்ணன் பசுங்கிளி நிறத்தவன்; சிரீதரன் சிரீதரன் என்னும்; என்பது ஓர் பாசத்து பாசவலையிலே; அகப்பட்டு சிக்கிக்கொண்டு; இருந்தேன் கிடக்கிறேன்; இங்கு உள்ள காவினில் இந்தச் சோலையிலே; வாழக் கருதில் நீ வாழ நினைத்தால்; சங்கொடு சங்கு; சக்கரத்தான் சக்கரத்தையுடைய பெருமான்; வரக் கூவுதல் வரும்படி கூவவேண்டும்; பொன் நான் இழந்த; வளை பொன் வளையல்களை; கொண்டு கொண்டு வந்து; தருதல் தரவேண்டும்; இரண்டத்து இவையிரண்டில்; ஒன்றேல் ஒன்றையாவது; திண்ணம் கட்டாயம்; வேண்டும் செய்யவேண்டும்

Detailed WBW explanation

O Cuckoo, dwelling joyously in the garden where luminous beetles hum their melodies, heed my words with utmost attention. I find myself ensnared in the exquisite web of Thirumāl, whose complexion mirrors that of a verdant parrot. Should you wish to continue your blissful residence in this verdant sanctuary, you are bestowed with two choices:

  1. Summon forth the
+ Read more