NAT 5.2

குயிலே! என் வேங்கடவன் வரக் கூவாய்

546 வெள்ளைவிளிசங்கிடங்கையிற்கொண்ட
விமலனெனக்குருக்காட்டான் *
உள்ளம்புகுந்தென்னைநைவித்து
நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக்காணும் *
கள்ளவிழ்செண்பகப்பூமலர்கோதிக்
களித்திசைபாடுங்குயிலே! *
மெள்ளவிருந்துமிழற்றிமிழற்றாது என்
வேங்கடவன்வரக்கூவாய்.
546 vĕl̤l̤ai vil̤icaṅku iṭaṅkaiyil kŏṇṭa *
vimalaṉ ĕṉakku uruk kāṭṭāṉ *
ul̤l̤am pukuntu ĕṉṉai naivittu * nāl̤um
uyirppĕytu kūttāṭṭuk kāṇum **
kal̤ aviḻ cĕṇpakappū malar kotik *
kal̤ittu icai pāṭum kuyile ! *
mĕl̤l̤a iruntu miḻaṟṟi miḻaṟṟātu * ĕṉ
veṅkaṭavaṉ varak kūvāy (2)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

546. O! The faultless one who carries a sounding white conch in his left hand does not show His form to me. He has entered my heart and makes me pine for his love. See, he is taking my life away and playing with my feelings. O cuckoo bird, you drink the honey that drips from the blooming shenbaga flowers and sing happily. Don’t be lazy and prattle, just sing and be happy. Coo the names of the lord of Venkatam hill to come to me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கள் அவிழ் தேன் பெருகும்; செண்பக பூ செண்பகப் பூ; மலர் கோதி மலரை கோதி எடுத்து; களித்து மகிழ்ந்து; இசை பாடும் இசை பாடும்; குயிலே! குயிலே!; வெள்ளை வெண்மையான; விளிசங்கு அடியாரை அழைக்கும் சங்கை; இடங்கையில் இடது கையில்; கொண்ட வைத்திருக்கும்; விமலன் எனக்கு பெம்மான் எனக்கு; உரு தன் உருவத்தை; காட்டான் காட்டவில்லை; உள்ளம் என்னுடைய இருதயத்தினுள்; புகுந்து புகுந்து; என்னை நைவித்து என்னை இம்சித்து; நாளும் தினமும்; உயிர்ப்பெய்து உயிரை வாங்கி; கூத்தாட்டு வேடிக்கை; காணும் பார்க்கிறான்; மெள்ள இருந்து என் அருகே இருந்து; மிழற்றி உன் மழலையால்; மிழற்றாது துன்புறுத்தாது; என் வேங்கடவன் என் வேங்கடமுடையான்; வரக் கூவாய் இங்கே வரும்படி கூவுவாய்

Detailed WBW explanation

O cuckoo, reveler in the nectar of the champaka flowers, whose melodies resonate with joy, heed my lament! The Supreme Being, who gracefully holds the divine śaṅkha in His celestial left hand—a symbol calling forth the pure-hearted—is yet to reveal His divine form to me. Rather, He chooses to dwell within my heart, causing an internal decay. To intensify my torment,

+ Read more