NAT 5.8

சிறுகுயிலே! திருமாலை விரைந்து கூவாய்

552 சார்ங்கம்வளையவலிக்கும்தடக்கைச்
சதுரன்பொருத்தமுடையன் *
நாங்களெம்மில்லிருந்தொட்டியகச்சங்கம்
நானுமவனுமறிதும் *
தேங்கனிமாம்பொழில்செந்தளிர்கோதுஞ்
சிறுகுயிலே! * திருமாலை
ஆங்குவிரைந்தொல்லைக்கூகிற்றியாகில்
அவனைநான்செய்வனகாணே.
552 cārṅkam val̤aiya valikkum * taṭakkaic
caturaṉ pŏruttam uṭaiyaṉ *
nāṅkal̤ ĕm illiruntu ŏṭṭiya kaccaṅkam *
nāṉum avaṉum aṟitum **
tem kaṉi mām pŏḻil cĕntal̤ir kotum *
ciṟu kuyile! * tirumālai
āṅku viraintu ŏllaik kūkiṟṟiyākil *
avaṉai nāṉ cĕyvaṉa kāṇe (8)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

552. The clever one who is loved by all, shoots arrows from his bow with his strong hands. Only He and I know the promises we made when we stayed in our home. O small cuckoo bird who pluck the tender shoots of the sweet mango tree in the grove, if you coo and call for Thirumāl to come here quickly, you will see what I will do for him with my love.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தேம் கனி இனிப்பான பழங்களையுடைய; மாம் பொழில் மாந்தோப்பிலே; செந்தளிர் சிவந்த துளிர்களை; கோதும் அலகால் கொத்துகிற; சிறு குயிலே! அழகிய இளங்குயிலே!; சார்ங்கம் வளைய வில்லை வளைத்து; தடக்கை சக்தியையுடைய; சதுரன் மிக்க சாமர்த்தியமுடையவனான எம்பிரான்; பொருத்தம் பொருத்தம்; உடையன் உடையவன்; நாங்கள் இருந்து நாங்கள் இணைந்து; எம்மில் எங்களுக்குள்; ஒட்டிய செய்து கொண்ட; கச்சங்கம் ஒப்பந்தம்; நானும் அவனும் நானும் அவனுமே; அறிதும் அறிவோம்; ஆங்கு தூரத்திலிருக்கும்; திருமாலை எம்பெருமானை; ஒல்லை விரைந்து மிகவும் சீக்கிரமாக வர; கூகிற்றியாகில் கூவுவாயாகில்; அவனை நான் அவனை நான்; செய்வன காணே! என்ன செய்கிறேன் என்று பார்
ciṟu kuyile! o beautiful young cuckoo!; kotum with the beak that pecks; cĕntal̤ir on red tender sprouts; mām pŏḻil in the orchard full of; tem kaṉi sweet fruits; caturaṉ my Lord, rich in great skill and strength; taṭakkai full of might; cārṅkam val̤aiya bends the bow; pŏruttam is the perfect match; uṭaiyaṉ for me; nāṅkal̤ iruntu we came together and; ŏṭṭiya made an; kaccaṅkam agreement; ĕmmil between us; nāṉum avaṉum only He and I; aṟitum know it; kūkiṟṟiyākil call; tirumālai my Lord; āṅku who is far away; ŏllai viraintu to come swiftly; cĕyvaṉa kāṇe! I will show what I will do; avaṉai nāṉ to Him

Detailed WBW explanation

O youthful cuckoo, delicately pecking at tender red leaves amidst a grove abundant with mango fruits! The supremely capable Emperumān, whose vast divine hands wield the mighty bow Śārṅga with ease, is also profoundly adept in the matters of love. We both hold dear the secret pact we once forged together. Should you fail to summon that distant Emperumān, behold how I shall mete out my torment upon Him.