PT 4.8.3

என் மகளின் பாடல்களே மாறிவிட்டன

1320 அண்டர்கோன்என்னானையென்றும் ஆயர்மாதர்கொங்கைபுல்கு
செண்டனென்றும் * நான்மறைகள்தேடியோடும் செல்வனென்றும் *
வண்டுலவுபொழில்கொள்நாங்கை மன்னுமாயனென்றென்றோதி *
பண்டுபோலன்றுஎன்மடந்தை பார்த்தன்பள்ளிபாடுவாளே.
PT.4.8.3
1320 aṇṭar-koṉ ĕṉ āṉai ĕṉṟum *
āyar mātar kŏṅkai pulku
cĕṇṭaṉ ĕṉṟum * nāṉmaṟaikal̤
teṭi oṭum * cĕlvaṉ ĕṉṟum **
vaṇṭu ulāvu pŏzhil kŏl̤ nāṅkai *
maṉṉum māyaṉ ĕṉṟu ĕṉṟu oti * -
paṇṭupol aṉṟu-ĕṉ maṭantai *
pārttaṉpal̤l̤i pāṭuvāl̤e-3

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

1320. My daughter says, “The lord of Indra, the king of the gods. the dear one, the everlasting Māyan, who is sought always by the four Vedās, stays in Thirumāllai where bees swarm in the groves. embracing naughtily the breasts of the cowherd girls. ” She is not as before and she has changed and sings and praises his Pārthanpalli temple.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் மடந்தை என் பெண்; அண்டர் பிரம்மாண்டத்திலுள்ள; கோன் எல்லோருக்கும் ஸ்வாமி என்றும்; என் எனக்கு; ஆனை என்றும் ஆனை போன்றவன் என்றும்; ஆயர் மாதர் இடைப்பெண்களுடன்; கொங்கை புல்கு மார்புகளை அணையும்; செண்டன் என்றும் மலர்ச் செண்டே என்றும்; நான் மறைகள் நான்கு வேதங்களுக்குள்ளும் உன்னை; தேடி ஓடும் தேடிக்கொண்டு ஓடும்; செல்வன் என்றும் செல்வனே! என்றும்; வண்டு உலாவு வண்டுகள் உலவும்; பொழில் கொள் சோலைகளையுடைய; நாங்கை திருநாங்கூரிலிருக்கும்; மன்னும் மாயன் மாயனான தேவன் என்று பலகாலம்; என்று என்று ஓதி சொல்லிக்கொண்டும்; பண்டுபோல் அன்று முன்போல்; பார்த்தன் பார்த்தன்பள்ளி; பள்ளி யென்னும் ஸ்தலத்தை; பாடுவாளே பாடுவாளே
en madandhai my daughter; aṇdar kŏn being the controller of the residents of the universe; en ānai enṛum as one who is having acts of an enjoyable elephant for me; āyar mādhar cowherd girls-; kongai with bosoms; pulgum embracing; seṇdan enṛum as one who is having flower bouquet; nān maṛaigal̤ four vĕdhams; thĕdi analysed; ŏdum and chasing; selvan enṛum as one who is having wealth; vaṇdu ulavu beetles are roaming; pozhil kol̤ having gardens; nāngai in thirunāngūr; mannu eternally residing; māyan enṛu as amaśing person; enṛu ŏdhi saying repeatedly; paṇdu pŏl anṛu unlike previously; pārththan pal̤l̤i pāduvāl̤ĕ sings about the dhivyadhĕṣam named pārththan pal̤l̤i