PT 4.8.2

கண்ணனின் செயல்களையே என் மகள் பாடுவாள்

1319 கஞ்சன்விட்டவெஞ்சினத்த களிறடர்த்தகாளையென்றும் *
வஞ்சமேவிவந்தபேயின் உயிரையுண்டமாயனென்றும் *
செஞ்சொலாளர்நீடுநாங்கைத் தேவதேவனென்றென்றோதி *
பஞ்சியன்னமெல்லடியாள் பார்த்தன்பள்ளிபாடுவாளே.
PT.4.8.2
1319 kañcaṉ viṭṭa vĕm ciṉatta *
kal̤iṟu aṭartta kāl̤ai ĕṉṟum *
vañcam mevi vanta peyiṉ *
uyirai uṇṭa māyaṉ ĕṉṟum **
cĕñcŏlāl̤ar nīṭu nāṅkait *
teva-tevaṉ ĕṉṟu ĕṉṟu oti *
pañci aṉṉa mĕl aṭiyāl̤ *
pārttaṉpal̤l̤i pāṭuvāl̤e-2

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

1319. My daughter sings his praise and says, “Strong as a bull, he defeated the elephant Kuvalayābeedam sent by Kamsan, and he, the Māyan, killed the devil Putanā when she came to cheat him taking the form of a mother. He, the lord of the gods, stays in ancient Nāngai where Vediyars live, skilled in the sastras. ” My daughter with feet as soft as cotton sings the praise of his Pārthanpalli temple.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பஞ்சி அன்ன பஞ்சுபோன்று; மெல் மென்மையான; அடியாள் பாதங்களையுடைய என்மகள்; கஞ்சன் விட்ட கம்ஸனால் ஏவப்பட்ட; வெம் சினத்த கோபமுடைய குவலயாபீட; களிறு அடர்த்த யானையை அடக்கிய; காளை என்றும் காளை என்றும்; வஞ்சம் மேவி வஞ்சனையுடன்; வந்த பேயின் வந்த பூதனையின்; உயிரை உண்ட உயிரை பரித்த; மாயன் என்றும் மாயன் என்றும்; செஞ்சொலாளர் செம்மையான சொற்களைக் கற்ற; நீடு நாங்கை திருநாங்கூரிலிருக்கும்; தேவ தேவன் தேவாதி தேவன் என்று; என்று என்று ஓதி பலகாலம் சொல்லிக்கொண்டும்; பார்த்தன் பார்த்தன்பள்ளி யென்னும்; பள்ளி ஸ்தலத்தை; பாடுவாளே பாடுவாளே
panji anna like cotton; mel soft; adiyāl̤ this girl, parakāla nāyaki who is having divine feet; kanjan by kamsa; vitta sent by; vem cruel; sinaththa having anger; kal̤iṛu kuvalayāpīdam; adarththa killed; kāl̤ai enṛum as youth; vanjam with mischief; mĕvi fixed (having such mind); vandha approached; pĕyin pūthanā-s; uyirai life; uṇda consumed (finished); māyan enṛum as the amaśing person; sem beautiful; sol āl̤ar brāhmaṇas who have the truthful words; nīdu eternally inhabited; nāngai mercifully residing in thirunāngūr; dhĕva dhĕvan enṛu as dhĕvādhi dhĕvan; enṛu ŏdhi repeatedly saying in this manner; pārththan pal̤l̤i pāduvāl̤ĕ sings about the dhivyadhĕṣam named pārththan pal̤l̤i