PT 4.8.1

என் மகள் பார்த்தன்பள்ளியையே பாடுவாள்

1318 கவளயானைக்கொம்பொசித்த கண்ணனென்றும் * காமருசீர்க்
குவளைமேகமன்னமேனிகொண்டகோன் என்னானை யென்றும் *
தவளமாடநீடுநாங்கைத் தாமரையாள்கேள்வனென்றும் *
பவளவாயாள்என்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே. (2)
PT.4.8.1
1318 ## kaval̤a yāṉaik kŏmpu ŏcitta *
kaṇṇaṉ ĕṉṟum kāmaru cīrk *
kuval̤ai mekam aṉṉa meṉi *
kŏṇṭa koṉ ĕṉ āṉai ĕṉṟum **
taval̤a māṭam nīṭu nāṅkait *
tāmaraiyāl̤ kel̤vaṉ ĕṉṟum *
paval̤a vāyāl̤ ĕṉ maṭantai *
pārttaṉpal̤l̤i pāṭuvāl̤e-1

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

1318. My daughter says, “He is Kannan, the king whose body has the color of a dark cloud or a kuvalai flower, who broke the tusks of the elephant that eats balls of rice and he stays in Nāngai where tall palaces are studded with pearls. ” My innocent daughter's mouth, as precious as coral, sings the praises of his Pārthanpalli temple where he abides with Lakshmi, his beloved wife.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பவள பவழம்போற் சிவந்த; வாயாள் அதரத்தையுடைய; என் மடந்தை என் பெண்; கவள கவளம் கவளமாக; யானை உண்ணும் யானையின்; கொம்பு ஒசித்த கொம்பை முறித்த; கண்ணன் என்றும் கண்ணன் என்றும்; காமரு சீர் ஆசைப்படத் தகுந்த அழகையுடைய; குவளை கருநெய்தற்பூ போன்றும்; மேகம் அன்ன மேகம் போன்றும்; மேனி கொண்ட திருமேனியையுடைய; கோன் ஸ்வாமியென்றும்; என் ஆனை என்றும் என்னுடைய யானை என்றும்; தவள வெண்மையான; மாடம் மாடமாளிகைகளினால்; நீடு உயர்ந்திருக்கிற; நாங்கை திருநாங்கூரில் வாழும்; தாமரையாள் கேள்வன் லக்ஷ்மீநாதன் என்றும்; பார்த்தன் பார்த்தன்பள்ளி; பள்ளி யென்னும் ஸ்தலத்தை; பாடுவாளே பாடுவாளே
paval̤am beautiful like coral; vāyāl̤ having lips; en madandhai my daughter; kaval̤am which can eat a lot; yānai kuvalayāpīdam-s; kombu tusks; osiththa who broke; kaṇṇan enṛum saying -krishṇa-; kāmaru desirable; sīr having beauty; kuval̤ai anna matching karuneydhal [blue īndian water-lily] flower; mĕgam anna matching cloud; mĕni form; koṇda accepted; kŏn being the lord; en ānai enṛum saying -my strong elephant- (one who is having such activities); thaval̤am whitish; mādam houses-; nīdu being tall; nāngai eternally residing in thirunāngūr; thāmaraiyāl̤ kĕl̤van beloved the consort of periya pirāttiyār; enṛum blabbering in this manner; (further) ; pārththan pal̤l̤i dhivyadhĕṣam named pārththan pal̤l̤i; pāduvāl̤ she sings.