PT 4.8.9

பார்த்தன்பள்ளிப் பெருமானையே பாடுவாள் என் மகள்

1326 கண்ணனென்றும் வானவர்கள்காதலித்துமலர்கள்தூவும் *
எண்ணனென்றும் இன்பனென்றும்ஏழுலகுக்காதிஎன்றும் *
திண்ணமாடநீடுநாங்கைத் தேவதேவனென்றென்றோதி *
பண்ணினன்னமென்மொழியாள் பார்த்தன்பள்ளிபாடுவாளே.
PT.4.8.9
1326 kaṇṇaṉ ĕṉṟum vāṉavarkal̤ *
kātalittu malarkal̤ tūvum *
ĕṇṇaṉ ĕṉṟum iṉpaṉ ĕṉṟum *
ezh ulakukku āti ĕṉṟum **
tiṇṇa māṭam nīṭu nāṅkait *
teva-tevaṉ ĕṉṟu ĕṉṟu oti *
paṇṇiṉ aṉṉa mĕṉ-mŏzhiyāl̤ *
pārttaṉpal̤l̤i pāṭuvāl̤e-9

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

1326. My daughter says, “Kannan, is the joy of the gods and the ancient one of all the seven worlds. All the gods sprinkle flowers on him, loving and worshiping him in their hearts. He, the lord of the gods, stays in Nāngai that is filled with tall mighty palaces. ” She speaks with soft words as sweet as music and sings and praises his Pārthanpalli temple.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பண்ணின் அன்ன இசையோடு பண்ணோடு ஒத்த; மென் மிருதுவான; மொழியாள் பேச்சை உடைய என் பெண்; கண்ணன் என்றும் கண்ணன் என்றும்; வானவர்கள் காதலித்து தேவர்கள் பக்தியோடு; மலர்கள் மலர்கள்; தூவும் ஸமர்ப்பிக்கும் படியாக; எண்ணன் அவர்களுடய எண்ணத்தில்; என்றும் இருப்பவன் என்றும்; இன்பன் என்றும் இன்பம் அளிப்பவனென்றும்; ஏழ் உலகுக்கு எல்லா உலகங்களுக்கும்; ஆதி என்றும் காரணபூதன் என்றும்; திண்ண மாடம் திடமான மாடமாளிகைகள்; நீடு உயர்ந்திருக்கும்; நாங்கை திருநாங்கூரிலிருக்கும்; தேவ தேவன் தேவாதி தேவன் என்று; என்று என்று ஓதி சொல்லிக்கொண்டு பலகாலம்; பார்த்தன் பார்த்தன்பள்ளி யென்னும்; பள்ளி கோவிலை; பாடுவாளே பாடுவாளே
paṇ anna like a song; mel soft; mozhiyāl̤ this girl who is having speech; kaṇṇan enṛum as -krishṇa-; vānavargal̤ dhĕvathās; kādhaliththu having love; malargal̤ flowers; thūvum to sprinkle; eṇṇan enṛum as -the one who resides in their thoughts-; inban enṛum one who gives joy; ĕzh ulagukku for all the seven worlds; ādhi enṛum as -the cause-; thiṇṇam firm; mādam having mansions; nīdu nāngai mercifully residing in thirunāngūr; dhĕva dhĕvan enṛu as dhĕvādhi dhĕvan; enṛu ŏdhi repeatedly saying in this manner; pārththan pal̤l̤i pāduvāl̤ĕ sings about the dhivyadhĕṣam named pārththan pal̤l̤i