PT 4.8.10

வைகுந்தம் இன்பம் பெறுவர்

1327 பாருள்நல்லமறையோர்நாங்கைப் பார்த்தன்பள்ளிச்செங்கண்மாலை *
வார்கொள்நல்லமுலைமடவாள்பாடலைத் தாய்மொழிந்தமாற்றம் *
கூர்கொள்நல்லவேல்கலியன் கூறுதமிழ்பத்தும்வல்லார் *
ஏர்கொள்நல்லவைகுந்தத்துள் இன்பம்நாளும் எய்துவாரே. (2)
PT.4.8.10
1327 ## pārul̤ nalla maṟaiyor nāṅkaip *
pārttaṉpal̤l̤ic cĕṅ kaṇ mālai *
vār kŏl̤ nalla mulai maṭavāl̤
pāṭalait * tāy mŏzhinta māṟṟam **
kūr kŏl̤ nalla vel kaliyaṉ *
kūṟu tamizh pattum vallār *
er kŏl̤ nalla vaikuntattul̤ *
iṉpam nāl̤um ĕytuvāre-10

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

1327. Kaliyan, the poet with a sharp spear, composed ten Tamil pāsurams describing how a mother spoke of the love of her daughter for the god of the Parthānpalli temple where good Vediyars live, learned in the four Vedās and praised by the world. If devotees learn and recite these ten pāsurams well they will go to divine Vaikundam and live happily.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாருள் நல்ல உலகில் நல்ல; மறையோர் வைதிகர்கள் வாழும்; நாங்கை திருநாங்கூரில்; பார்த்தன் பார்த்தன்; பள்ளி பள்ளியிலிருக்கும்; செங்கண் செந்தாமரைக்; மாலை கண்ணனைக் குறித்து; வார் கொள் கச்சணிந்த அழகிய; நல்ல முலை மார்பகங்களையுடைய; மடவாள பெண் பாடின; பாடலைத் தாய் பாடலைத் தாயானவள்; மொழிந்த மாற்றம் சொன்ன வார்த்தையாக; கூர் கொள் கூர்மையான நல்ல; நல்ல வேல் வேற்படையையுடைய; கலியன் திருமங்கையாழ்வார்; கூறு தமிழ் அருளிச்செய்த; பத்தும் இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்; வல்லார் ஓத வல்லார்கள்; ஏர் கொள் மிகச்சிறந்த; நல்ல வைகுந்தத்துள் திருநாட்டிலே; நாளும் ஒவ்வொரு நாளும்; இன்பம் இன்பம்; எய்துவாரே அனுபவிக்கப்பெருவார்
pārul̤ on earth; nalla distinguished; maṛaiyŏr best among brāhmaṇas are residing; nāngai in thirunāngūr; pārththan pal̤l̤i one who is mercifully residing in the dhivyadhĕṣam named pārththan pal̤l̤i; sem kaṇ having reddish eyes (due to motherly love); mālai on sarvĕṣvaran who is having great love towards his devotees; vār kol̤ being covered by a cloth; nalla distinguished; mulai having bosoms; madavāl̤ the girl (sang); pādalai divine words; thāy her mother; mozhindha spoke; māṝam the way; kūr kol̤ sharp; nalla best; vĕl having spear as the weapon; kaliyan thirumangai āzhvār; kūṛum mercifully explained; thamizh in thamizh; paththum these ten pāsurams; vallār those who can recite; ĕr kol̤ beautiful; vaigundhaththu in ṣrīvaikuṇtam; nāl̤um everyday; inbam eydhuvār will be joyful.