PT 4.8.5

இராமன் வீரத்தையே என் மகள் பாடுவாள்

1322 அரக்கராவிமாளஅன்று ஆழ்கடல்சூழிலங்கைசெற்ற *
குரக்கரசனென்றும் கோலவில்லியென்றும் * மாமதியை
நெருக்குமாடநீடுநாங்கை நின்மலன்தானென்றென்றோதி *
பரக்கழிந்தாள்என்மடந்தை பார்த்தன்பள்ளிபாடுவாளே.
PT.4.8.5
1322 arakkar āvi māl̤a aṉṟu *
āzh kaṭal cūzh ilaṅkai cĕṟṟa *
kurakkaracaṉ ĕṉṟum * kola
villi ĕṉṟum ** mā matiyai
nĕrukkum māṭam nīṭu nāṅkai *
niṉmalaṉ-tāṉ ĕṉṟu ĕṉṟu oti *
parakkazhintāl̤ ĕṉ maṭantai *
pārttaṉpal̤l̤i pāṭuvāl̤e-5

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

1322. My daughter says, “The faultless one became the king of the monkeys, went to Lankā surrounded by the deep ocean and destroyed the Rākshasas with his heroic bow. He stays in ancient Nāngai filled with abundant tall palaces that touch the shining moon. ” She only sings and praises his Pārthanpalli temple, but the people of the village gossip about my innocent girl. .

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் மடந்தை என் பெண்; அன்று முன்பொரு சமயம்; அரக்கர் ஆவி மாள அரக்கர்கள் அழிய; ஆழ்கடல் சூழ் ஆழ்கடலால் சூழ்ந்த; இலங்கை இலங்கையை; செற்ற அழித்த; குரக்கரசன் வாநர வீரர்களுக்கு அரசன்; என்றும் என்றும்; கோல வில்லி அழகிய வில்லையுடையவன்; என்றும் என்றும்; மா மதியை சந்திரனை; நெருக்கும் திரியவொட்டாமல்; மாடம் மாடமாளிகைகள்; நீடு ஓங்கியிருக்கும்; நாங்கை திருநாங்கூரிலிருப்பவன்; நின்மலன் தான் புனிதமானவன்; என்று என்று என்று பலகாலம்; ஓதி சொல்லிக்கொண்டு; பரக்கழிந்தாள் பெரும்பழிக்கு இடமானவளாய்; பார்த்தன் பார்த்தன்பள்ளி யென்னும்; பள்ளி கோவிலை; பாடுவாளே பாடுவாளே
en madandhai my daughter; anṛu when rāvaṇa came to fight; arakkar demons-; āvi lives; māl̤a to be destroyed; āzh deep; kadal by ocean; sūzh surrounded; ilangai lankā; seṝa destroyed; kurakku for monkeys; arasan enṛum as the lord; kŏlam beautiful; villi enṛum as the one who holds the bow; māmadhiyai beautiful moon; nerukkum blocking the movement; mādam by the mansions; nīdu being tall; nāngai mercifully present in thirunāngūr; ninmalan enṛu very pure natured one, as he does not have any expectation; enṛu ŏdhi repeatedly saying in this manner; parakku azhindhāl̤ having lost her femininity; pārththan pal̤l̤i pāduvāl̤ĕ sings about the dhivyadhĕṣam named pārththan pal̤l̤i