Chapter 9

The divine Srirangam - 2 - (மரவடியைத் தம்பிக்கு)

திருவரங்கம் (2)
The divine Srirangam - 2 - (மரவடியைத் தம்பிக்கு)
Arangan, the beloved of his devotees, does not consider their faults as faults. Even if Piratti points out their mistakes, he does not accept it. He is the protector. He is the one who has taken all incarnations. He entrusted his precious and all-merciful sandals to his dear brother Bharata as a symbol of trust and protection. Such compassion! He grants grace and takes his devotees under his fold! His abode is Thiruvarangam.
அடியார்களின் அன்பன் அரங்கன்; அவர்கள் குற்றம் செய்தாலும் அதைக் குற்றமாகவே நினைக்கமாட்டான்; குற்றம் செய்தான் என்று பிராட்டியே கூறினாலும் ஒப்புகொள்ள மாட்டான். இவனே ரக்ஷகன். இவனே எல்லா அவதாரங்களையும் மேற்கொண்டவன். அருமைத் தம்பியான பரதனுக்கு எல்லாம் அருளவல்ல பாதுகைகளை நம்பிக்கைக்காக இராமன் அளித்துச் சென்றானே! என்ன பரிவு! அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் இவனே! இவன் வாழுமிடம் திருவரங்கம்.
Verses: 412 to 422
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will reach the ankled lotus feet of dark ocean hued Lord Krishna
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 4.9.1

412 மரவடியைத்தம்பிக்குவான்பணையம்
வைத்துப்போய்வானோர்வாழ *
செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்
துலகாண்டதிருமால்கோயில் *
திருவடிதன்திருவுருவும் திருமங்கை
மலர்கண்ணும்காட்டிநின்று *
உருவுடையமலர்நீலம் காற்றாட்ட
ஓசலிக்கும்ஒளியரங்கமே. (2)
412 ## மரவடியைத் தம்பிக்கு * வான்பணையம் வைத்துப்போய் * வானோர் வாழ *
செரு உடைய திசைக்கருமம் * திருத்திவந்து உலகாண்ட திருமால் கோயில் **
திருவடிதன் திருஉருவும் * திருமங்கை மலர்க்கண்ணும் காட்டி நின்று *
உரு உடைய மலர்நீலம் * காற்று ஆட்ட ஒலிசலிக்கும் ஒளி அரங்கமே (1)
412 ## maravaṭiyait tampikku * vāṉpaṇaiyam vaittuppoy * vāṉor vāzha *
cĕru uṭaiya ticaikkarumam * tiruttivantu ulakāṇṭa tirumāl koyil **
tiruvaṭitaṉ tiruuruvum * tirumaṅkai malarkkaṇṇum kāṭṭi niṉṟu *
uru uṭaiya malarnīlam * kāṟṟu āṭṭa ŏlicalikkum ŏl̤i araṅkame (1)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

412. The lustrous Srirangam is the divine abode of Thirumāl, who gave his brother Bharatha the kingdom, went to the forest, lived as a sage and destroyed the arrogant southern king Rāvana to relieve the troubles of the gods in the sky and returned to rule his kingdom, Srirangam is the place where beautiful Neelam flowers swaying in the breeze have the color of His divine feet and of the lovely lotus eyes of beautiful Lakshmi.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உரு உடைய அழகிய; நீலம் மலர் கரு நெய்தல் மலரானது; திருவடிதன் பெரிய பெருமாளின்; திருவுருவும் அழகிய உருவமும்; திருமங்கை பெரிய பிராட்டியாரின்; மலர்க் கண்ணும் மலர்ந்த கண்களின்; காட்டி நின்று அழகையும் காட்டிநிற்கும்; காற்று ஆட்ட காற்று அசைக்க; ஓசலிக்கும் அசையும்; ஒளி அரங்கமே ஒளிமிக்க திருவரங்கமே!; மரவடியை தனது திருவடிகளைத்; தம்பிக்கு தம்பி பரதனிடம்; வான் பணையம் வைத்து அடகாக வைத்து; வானோர் தேவர்கள்; வாழ நிம்மதியாக வாழ்ந்திட; போய் சித்திரக்கூடத்திலிருந்து அங்கே போய்; செரு உடைய போர் செய்ய உகந்த; திசைக் தெற்கு திசைலே சென்று; கருமம் முறைப்படி; திருத்தி விபீஷணனை அரசனாக்கி; வந்து அயோத்திக்கு வந்து; உலகு ஆண்ட உலகத்தை ஆண்ட; திருமால் கோயில் எம்பெருமானுக்கு இருப்பிடம்
ŏl̤i araṅkame its the radiant Sri Rangam!; kāṭṭi niṉṟu stands and shows; tiruvuruvum the beautiful form; tiruvaṭitaṉ Periya Perumal which is like; uru uṭaiya a beautiful; nīlam malar dark cloud-like blooming flower; malark kaṇṇum and the blossomed eyes; tirumaṅkai of the great mother (Sri Lakshmi); ocalikkum that moves; kāṟṟu āṭṭa when the wind blows; tirumāl koyil its the residing place of the Lord; vāṉ paṇaiyam vaittu who gave; maravaṭiyai His footwears; tampikku to brother Bharatha; vāṉor and to allow the gods; vāḻa nimmatiyāka to live; poy He went; ticaik in the southern direction; cĕru uṭaiya fought the war; tirutti and made Vibhishena the king; karumam as per the customs; vantu then returned to Ayodhya; ulaku āṇṭa and ruled the world

PAT 4.9.2

413 தன்னடியார்திறத்தகத்துத் தாமரை
யாளாகிலும்சிதகுரைக்குமேல் *
என்னடியார்அதுசெய்யார் செய்தாரேல்
நன்றுசெய்தாரென்பர்போலும் *
மன்னுடையவிபீடணற்கா மதிளிலங்கைத்
திசைநோக்கிமலர்கண்வைத்த *
என்னுடையதிருவரங்கற்கன்றியும்
மற்றொருவர்க்குஆளாவரே (2)
413 தன் அடியார் திறத்தகத்துத் * தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் *
என் அடியார் அது செய்யார் * செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் **
மன் உடைய விபீடணற்கா மதிள் இலங்கைத் திசைநோக்கி மலர்க்கண் வைத்த *
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் * மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரே? (2)
413 taṉ aṭiyār tiṟattakattut * tāmaraiyāl̤ ākilum citaku uraikkumel *
ĕṉ aṭiyār atu cĕyyār * cĕytārel naṉṟu cĕytār ĕṉpar polum **
maṉ uṭaiya vipīṭaṇaṟkā matil̤ ilaṅkait ticainokki malarkkaṇ vaitta *
ĕṉṉuṭaiya tiruvaraṅkaṟku aṉṟiyum * maṟṟu ŏruvarkku āl̤ āvare? (2)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-30

Divya Desam

Simple Translation

413. Even if Lakshmi( Thāyār) complains to her beloved that His devotees do things that are wrong he answers her, “My devotees will not do wrong, and even if they do, it is for good reason. ” He graces Vibhishana from Srirangam surrounded by walls. How can the devotees think of praying to other gods?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாமரையாள் ஆகிலும் பிராட்டியாரேயாகிலும்; தன் அடியார் தனக்கு அடிமைப்பட்டவர்; திறத்தகத்து விஷயத்திலே; சிதகு அவர்கள் குற்றங்களை; உரைக்கும் சொல்லத்; ஏல் தொடங்கினாளேயாகில்; என் அடியார் என் அடியார்; அது செய்யார் அப்படி குற்றங்களை செய்ய மாட்டார்கள்; செய்தாரேல் அப்படிச் செய்தார்களேயானாலும்; நன்று செய்தார் அவை எனக்கு போக்கியங்களே; என்பர் போலும் என்று சொல்பவர் போலும்; மன் உடைய செல்வம் மாறாத; விபீடணற்கா விபீஷணனனுக்காக; மதிள் இலங்கை மதிள்களையுடைய இலங்கை; திசைநோக்கி முகமாக நோக்கி; மலர்க்கண் மலர் கண்களால் பார்த்தபடி சயனித்துள்ளார்; என்னுடைய திருவரங்கற்கு என்னுடைய அரங்கற்கு; அன்றியும் அல்லால்; மற்று ஒருவர்க்கு வேறு ஒருவருக்கு; ஆள் ஆவரே? அடிமை செய்யலாகுமோ?
tāmaraiyāl̤ ākilum even if the great mother; el begins to; uraikkum talk about; citaku the sins; taṉ aṭiyār of those who have surrendered to Him; tiṟattakattu in that matter; ĕṉpar polum the Lord will say; ĕṉ aṭiyār My devotees; atu cĕyyār will not commit sins; cĕytārel even if they did; naṉṟu cĕytār those are still offerings to Me; vipīṭaṇaṟkā for Vibhishena; maṉ uṭaiya to have properous country; malarkkaṇ He lies with his eyes; ticainokki facing; matil̤ ilaṅkai the well secured Sri Lanka; āl̤ āvare? is it right to be a devotee?; maṟṟu ŏruvarkku to anyone else; aṉṟiyum other than; ĕṉṉuṭaiya tiruvaraṅkaṟku my Lord (Sri Ranganathar)

PAT 4.9.3

414 கருளுடையபொழில்மருதும்
கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும் *
உருளுடையசகடரையும்மல்லரையும்
உடையவிட்டுஓசைகேட்டான் *
இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு
ஏற்றிவைத்துஏணிவாங்கி *
அருள்கொடுத்திட்டுஅடியவரை
ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே.
414 கருள் உடைய பொழில் மருதும் * கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும் *
உருள் உடைய சகடரையும் மல்லரையும் * உடைய விட்டு ஓசை கேட்டான் **
இருள் அகற்றும் எறி கதிரோன் * மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி *
அருள் கொடுத்திட்டு அடியவரை * ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே (3)
414 karul̤ uṭaiya pŏzhil marutum * katak kal̤iṟum pilampaṉaiyum kaṭiya māvum *
urul̤ uṭaiya cakaṭaraiyum mallaraiyum * uṭaiya viṭṭu ocai keṭṭāṉ **
irul̤ akaṟṟum ĕṟi katiroṉ * maṇṭalattūṭu eṟṟi vaittu eṇi vāṅki *
arul̤ kŏṭuttiṭṭu aṭiyavarai * āṭkŏl̤vāṉ amarum ūr aṇi araṅkame (3)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

414. Our lord destroyed the Asurans when they came as marudu trees in the dark groves, the rutting elephant Kuvalayāpeedam, the Asuran Pilamban, the Rakshasā Kesi who came as a wild horse, Sakatāsuran who came as a cart, and the wrestlers He resides in the beautiful Srirangam where he makes the bright sun rise in the sky and removes the darkness of the earth, giving his grace to his devotees, as they worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கருள் உடைய சீற்றத்தையுடைய; பொழில் அடர்ந்த சோலைகளாக நிற்கும்; மருதும் மருதமரங்களையும்; கத கோபமோடு வந்த; களிறும் யானை குவலயாபீடமும்; பிலம்பனையும் மற்றும் பிலம்பனையும்; கடிய குரூரமான; மாவும் குதிரை வடிவமாக வந்த கேசியையும்; உருள் உடைய சக்கரமாக வந்த; சகடரையும் சகடாசுரரையும்; மல்லரையும் மல்லரையும்; உடைய விட்டு சின்னாபின்னமாக்கி; ஓசை கேட்டான் பாராட்டுமொழி கேட்டான்; இருள் அகற்றும் இருளை அகற்றி; எறி ஒளி எறியும்; கதிரோன் சூரிய; மண்டலத் தூடு மண்டலத்தின் ஊடே; ஏற்றி வைத்து தூக்கி வைத்து; ஏணி வாங்கி ஏணி தந்து ஏற்றி; அருள் கொடுத்திட்டு அருள் கொடுத்திட்டு; அடியவரை அடியவர்களை ஆட்கொள்ளும்; அமரும் ஊர் பெருமான் வீற்றிருக்கும் ஊர்; அணி அரங்கமே அழகிய அரங்க நகரே!
uṭaiya viṭṭu the Lord destroyed; marutum the asuras who came as maruda trees; pŏḻil in dense groves; ocai keṭṭāṉ and received praises; karul̤ uṭaiya that were ferocious; kal̤iṟum and destroyed the elephant called 'Kuvalayapeetam'; kata that came angrily; pilampaṉaiyum and Pilambam; kaṭiya and the cruel; māvum horse shaped Kesi; cakaṭaraiyum Sakatasuran who; urul̤ uṭaiya came as a cart; mallaraiyum and also the wrestlers; aṇi araṅkame beautiful Srirangam; amarum ūr is the residing place of the Lord; irul̤ akaṟṟum who dispels darkness; eṇi vāṅki who gives a ladder; eṟṟi vaittu and lifts; katiroṉ the Sun; ĕṟi and the fire that lights up from it; maṇṭalat tūṭu through the realm of the skies; aṭiyavarai who takes care of His devotees; arul̤ kŏṭuttiṭṭu and blesses with His grace

PAT 4.9.4

415 பதினாறாமாயிரவர் தேவிமார்
பணிசெய்ய * துவரையென்னும்
அதில்நாயகராகிவீற்றிருந்த
மணவாளர்மன்னுகோயில் *
புதுநாண்மலர்க்கமலம் எம்பெருமான்
பொன்வயிற்றில்பூவேபோல்வான் *
பொதுநாயகம்பாவித்து இருமாந்து
பொன்சாய்க்கும்புனலரங்கமே.
415 பதினாறாம் ஆயிரவர் * தேவிமார் பணிசெய்ய * துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்றிருந்த * மணவாளர் மன்னு கோயில் **
புது நாள்மலர்க் கமலம் * எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் *
பொது நாயகம் பாவித்து * இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே (4)
415 patiṉāṟām āyiravar * tevimār paṇicĕyya * tuvarai ĕṉṉum
atil nāyakarāki vīṟṟirunta * maṇavāl̤ar maṉṉu koyil **
putu nāl̤malark kamalam * ĕmpĕrumāṉ pŏṉ vayiṟṟil pūve polvāṉ *
pŏtu-nāyakam pāvittu * iṟumāntu pŏṉ cāykkum puṉal araṅkame (4)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

415. Sixteen thousand wives serve Him who stays in Dwaraka like a new bridegroom He resides in lovely Srirangam surrounded by water precious as gold where fresh lotuses bloom and shine like the lotus on the golden navel of our god.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துவரை துவாரகை; என்னும் அதில் என்னும் ஊரில்; பதினாறாம் ஆயிரவர் பதினாறாயிரம்; தேவிமார் தேவியர்; பணி செய்ய பணி புரிய; நாயகராகி நாயகனாய்; வீற்றிருந்த வீற்றிருந்த; மணவாளர் அழகிய பிரான்; மன்னு வாசம் செய்யும்; கோயில் கோவிலானது; புது நாள்மலர் அன்றாடம் மலரும்; கமலம் தாமரை; எம் பெருமான் எம்பெருமானின்; பொன் வயிற்றில் பொன் வயிற்றில்; பூவே பூக்கும்; போல்வான் பூவைப் போல் மலர; பொது நாயகம் தன்னைவிட; பாவித்து சிறந்த மலர் இல்லை; இறுமாந்து என்ற கர்வத்துடன்; பொன் மற்ற தாமரைகளின்; சாய்க்கும் அழகை மதியாது; புனல் நீர்வளத்தையுடைய; அரங்கமே அரங்கமே
maṇavāl̤ar the beautiful Lord; maṉṉu resides in; koyil the temple; vīṟṟirunta who once lived in; ĕṉṉum atil in a place called; tuvarai Dwaraka; patiṉāṟām āyiravar where sixteen thousand; tevimār wives; paṇi cĕyya served; nāyakarāki Him; araṅkame it is Sri Rangam with; puṉal water bodies containing; putu nāl̤malar daily blossoming; kamalam lotusus; polvāṉ thinks of themselves as flowers that; pūve blossoms from; pŏṉ vayiṟṟil the golden belly; ĕm pĕrumāṉ of our Lord; iṟumāntu and have pride; pāvittu that there are no superior flowers; pŏtu nāyakam than them; cāykkum and put down the beauty of; pŏṉ other lotuses

PAT 4.9.5

416 ஆமையாய்க்கங்கையாய் ஆழ்கடலா
யவனியாய்அருவரைகளாய் *
நான்முகனாய்நான்மறையாய் வேள்வியாய்த்
தக்கணையாய்த்தானுமானான் *
சேமமுடைநாரதனார் சென்றுசென்று
துதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில் *
பூமருவிப்புள்ளினங்கள் புள்ளரையன்
புகழ்குழறும்புனலரங்கமே.
416 ஆமையாய்க் கங்கையாய் * ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் *
நான்முகனாய் நான்மறையாய் * வேள்வியாய்த் தக்கணையாய்த் தானும் ஆனான் **
சேமம் உடை நாரதனார் * சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில் *
பூ மருவிப் புள் இனங்கள் * புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே (5)
416 āmaiyāyk kaṅkaiyāy * āzh kaṭalāy avaṉiyāy aru varaikal̤āy *
nāṉmukaṉāy nāṉmaṟaiyāy * vel̤viyāyt takkaṇaiyāyt tāṉum āṉāṉ **
cemam uṭai nārataṉār * cĕṉṟu cĕṉṟu tutittu iṟaiñcak kiṭantāṉ koyil *
pū maruvip pul̤ iṉaṅkal̤ * pul̤ araiyaṉ pukazh kuzhaṟum puṉal araṅkame (5)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

416. The matchless lord who took the form of a turtle, who is the Ganges, the deep ocean, earth, large mountains, Nānmuhan, the four Vedās and both sacrifice and offering stays in Srirangam surrounded by rippling water where all the birds embrace the flowers and praise His name, who rides on the bird Garudā. Sage Narada, giving goodness to all, often goes there and worships him with love.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புள் இனங்கள் பறவை இனங்கள்; பூமருவி பூக்களை அணைத்துக் கொண்டு நின்று; புள் அரையன் தலைமைப் பறவை கருடனின்; புகழ் குழறும் கீர்த்தியைப் பேசும்; புனல் நீர் வளப்பமிக்க; அரங்கமே அரங்க நகரே; ஆமையாய் கங்கையாய் ஆமையாயும் கங்கையாயும்; ஆழ் கடலாய் ஆழமான கடலாயும்; அவனியாய் பூமியாயும்; அரு வரைகளாய் மலைகளாயும்; நான்முகனாய் நான்முகனாயும்; நான்மறையாய் நான்கு வேதங்களாயும்; வேள்வியாய் யாகங்களாயும்; தக்கணையாய் தக்ஷணையாயும்; தானும் ஆனான் தக்ஷணை கொடுக்கும் பிரானான; சேமம் உடை ரக்ஷகனாகவும்; நாரதனார் நாரதர்; சென்று சென்று மீண்டும் மீண்டும் சென்று; துதித்து இறைஞ்ச துதித்து இறைஞ்ச; கிடந்தான் கோயில் கண் வளர்பவன் கோவில்
araṅkame its the city of Sri Rangam that is; puṉal water-rich; pul̤ iṉaṅkal̤ and where species of birds; pūmaruvi stand and embrace the flowers; pukaḻ kuḻaṟum and talk about the glories of; pul̤ araiyaṉ the leader bird, Garuda; kiṭantāṉ koyil its the temple of the Lord who; āmaiyāy kaṅkaiyāy took the form of tortoise and is the Ganges; āḻ kaṭalāy is the deep ocean; avaṉiyāy is the Earth; aru varaikal̤āy is the mountain; nāṉmukaṉāy is the four-faced one (Brahma); nāṉmaṟaiyāy is the four Vedas; vel̤viyāy is the sarcifice; takkaṇaiyāy is the offfering; tāṉum āṉāṉ and the One who gives the offering; cemam uṭai is the protector; tutittu iṟaiñca is the One who is praised; cĕṉṟu cĕṉṟu again and again; nārataṉār by Narada

PAT 4.9.6

417 மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து
அவர்களையேமன்னராக்கி *
உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட
உயிராளன்உறையும்கோயில் *
பத்தர்களும்பகவர்களும் பழமொழிவாய்
முனிவர்களும்பரந்தநாடும் *
சித்தர்களும்தொழுதிறைஞ்சத்
திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே.
417 மைத்துனன்மார் காதலியை * மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி *
உத்தரைதன் சிறுவனையும் உய்யக்கொண்ட * உயிராளன் உறையும் கோயில் **
பத்தர்களும் பகவர்களும் * பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும் *
சித்தர்களும் தொழுது இறைஞ்சத் * திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே (6)
417 maittuṉaṉmār kātaliyai * mayir muṭippittu avarkal̤aiye maṉṉar ākki *
uttaraitaṉ ciṟuvaṉaiyum uyyakkŏṇṭa * uyirāl̤aṉ uṟaiyum koyil **
pattarkal̤um pakavarkal̤um * pazhamŏzhivāy muṉivarkal̤um paranta nāṭum *
cittarkal̤um tŏzhutu iṟaiñcat * ticai-vil̤akkāy niṟkiṉṟa tiruvaraṅkame (6)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-1

Divya Desam

Simple Translation

417. He crowned his brothers-in-law(Pāndavās) as Kings, made Draupathi tie up her loosened hair and gave life to Uthara's son and He resides in Srirangam that brightens all the directions and serves as the guiding light where devotees, sages, the wise rishis, the people of the world and the siddhas worship him with love.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பத்தர்களும் பக்தர்களும்; பகவர்களும் துறவிகளும்; பழமொழி பழமையான வேத; வாய் மொழிகளை ஓதும்; முனிவர்களும் முனிவர்களும்; பரந்த நாடும் பரந்த நாட்டிலுள்ளவர்களும்; சித்தர்களும் சித்தர்களும்; தொழுது இறைஞ்ச தொழுது வணங்க; திசை திசை அனைத்திலும்; விளக்காய் வழிகாட்டும் விளக்காய்; நிற்கின்ற நிற்கின்ற; திருவரங்கமே திருவரங்கமானது; மைத்துனன்மார் மைத்துனர்களான பாண்டவர்களின்; காதலியை அன்பிற்குரிய திரௌபதியின்; மயிர் கூந்தலை; முடிப்பித்து முடித்திடச்செய்து; அவர்களையே பாண்டவர்களையே; மன்னராக்கி மன்னராக்கி; உத்தரை தன் உத்தரையின்; சிறுவனையும் மகனையும்; உய்யக் கொண்ட உயிர்ப்பித்த; உயிராளன் உயிர்களின் நாதன்; உறையும் கோயில் வாசம் செய்யும் கோவில்
tiruvaraṅkame Sri Rangam is; niṟkiṉṟa standing; vil̤akkāy as a guiding light; ticai in all directions for; pattarkal̤um the devotees; pakavarkal̤um the ascetics; muṉivarkal̤um and the munis; vāy who recite; paḻamŏḻi the vedas; paranta nāṭum for the people in wide spread land; cittarkal̤um and the siddhas; tŏḻutu iṟaiñca to worship and bow; uyirāl̤aṉ the Lord of life; uṟaiyum koyil resides in Sri Rangam; kātaliyai for Draupathi, the love of His; maittuṉaṉmār brothers-in-laws (Pāndavās); muṭippittu made her tie up her; mayir loosened hair; maṉṉarākki made; avarkal̤aiye Pandavas, the kings; uyyak kŏṇṭa gave life to; uttarai taṉ Uthara's; ciṟuvaṉaiyum son

PAT 4.9.7

418 குறட்பிரமசாரியாய் மாவலியைக்
குறும்பதக்கிஅரசுவாங்கி *
இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை
கொடுத்துகந்தஎம்மான்கோயில் *
எறிப்புடையமணிவரைமேல் இளஞாயி
றெழுந்தாற்போல்அரவணையின்வாய் *
சிறப்புடையபணங்கள்மிசைச்
செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே.
418 குறள் பிரமசாரியாய் * மாவலியைக் குறும்பு அதக்கி அரசுவாங்கி *
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை * கொடுத்து உகந்த எம்மான் கோயில் **
எறிப்பு உடைய மணிவரைமேல் * இளஞாயிறு எழுந்தாற்போல் அரவு அணையின் வாய்
சிறப்பு உடைய பணங்கள்மிசைச் * செழுமணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே (7)
418 kuṟal̤ piramacāriyāy * māvaliyaik kuṟumpu atakki aracuvāṅki *
iṟaippŏzhutil pātāl̤am kalavirukkai * kŏṭuttu ukanta ĕmmāṉ koyil **
ĕṟippu uṭaiya maṇivaraimel * il̤añāyiṟu ĕzhuntāṟpol aravu-aṇaiyiṉ vāy
ciṟappu uṭaiya paṇaṅkal̤micaic * cĕzhumaṇikal̤ viṭṭu ĕṟikkum tiruvaraṅkame (7)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

418. Srirangam is the divine abode of the lord who took the form of a dwarf, tricking king Mahābali, took his kingdom and at once happily granted him a kingdom in the underworld In Srirangam where our god rests on Adishesha, that spits from its mouth precious diamonds as bright as the morning sun rising from a lovely shining hill.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எறிப்பு உடைய ஒளி மிக்க; மணி வரை மேல் ரத்ன மலை மீது; இளஞாயிறு காலைக் கதிரவன்; எழுந்தாற்போல் உதித்தாற்போல்; அரவு அணையின்வாய் ஆதிசேஷனின்; சிறப்பு உடைய அழகான; பணங்கள்மிசை படங்கள் மீதுள்ள; செழுமணிகள் செழுமையான ரத்னங்கள்; விட்டு எறிக்கும் ஜொலிக்கும்; திருவரங்கமே திரு அரங்கம்; குறள் சிறு உருவில்; பிரமசாரியாய் வாமனனாகி; மாவலியை மகாபலியின்; குறும்பு அதக்கி செறுக்கை அடக்கி; அரசு ராஜ்யத்தை; வாங்கி அவனிடமிருந்து நீரேற்று கையில் வாங்கி; இறைப் பொழுதில் கணப் பொழுதில்; பாதாளம் பாதாளத்தை; கலவிருக்கை அவனது இருப்பிடமாகக்; கொடுத்து உகந்த கொடுத்து மகிழ்ந்த; எம்மான் கோயில் என் ஸ்வாமியின் கோவில்
tiruvaraṅkame it is Sri Rangam; cĕḻumaṇikal̤ where precious gems; paṇaṅkal̤micai on the; ciṟappu uṭaiya beautiful heads of; aravu aṇaiyiṉvāy Adisesha; viṭṭu ĕṟikkum shine; ĕḻuntāṟpol like the rising; il̤añāyiṟu morning sun that; ĕṟippu uṭaiya shines with bright light; maṇi varai mel on top of a mountain of gems; ĕmmāṉ koyil its the temple of my Lord who; piramacāriyāy came as Vamana; kuṟal̤ the dwarf; kuṟumpu atakki and subdued the arrogance of; māvaliyai Mahabali; vāṅki by taking away; aracu his kingdom; iṟaip pŏḻutil and in a moment; kŏṭuttu ukanta happily made; pātāl̤am a lower world as; kalavirukkai his residence

PAT 4.9.8

419 உரம்பற்றிஇரணியனை
உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி *
சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க
வாயலரத்தெழித்தான்கோயில் *
உரம்பெற்றமலர்க்கமலம்
உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட *
வரம்புற்றகதிர்ச்செந்நெல்
தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே.
419 உரம் பற்றி இரணியனை * உகிர் நுதியால் ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றி *
சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க * வாய் அலரத் தெழித்தான் கோயில் **
உரம் பெற்ற மலர்க்கமலம் * உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட *
வரம்பு உற்ற கதிர்ச்செந்நெல் * தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண் அரங்கமே (8)
419 uram paṟṟi iraṇiyaṉai * ukir-nutiyāl ŏl̤l̤iya mārvu uṟaikka ūṉṟi *
ciram paṟṟi muṭi iṭiyak kaṇ pituṅka * vāy alarat tĕzhittāṉ koyil **
uram pĕṟṟa malarkkamalam * ulaku al̤anta cevaṭi pol uyarntu kāṭṭa *
varampu uṟṟa katirccĕnnĕl * tāl̤cāyttut talaivaṇakkum taṇ araṅkame (8)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

419. The Thiruppadi of the lord who grasped the chest of Hiranyan, split it open with his sharp nails, pulled his hair, gouged out his eyes and made him scream is Srirangam where flourishing lotus plants grow to the sky like the divine feet of him who measured the sky and good paddy plants bend their heads worshipping his feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உரம் பெற்ற செழிப்புடைய; மலர்க் கமலம் தாமரை மலர் போல்; உலகு திருவிக்கிரமனாக உலகை; அளந்த அளந்தபோது; சேவடி போல் திருவடி போல்; உயர்ந்து காட்ட உயர்ந்து காட்ட; வரம்பு உற்ற வயல் வரம்பு வரை; கதிர்ச் செந்நெல் கதிர்களையுடைய நெற்பயிர்; தாள் சாய்த்து தாள்களை நீட்டி; தலைவணக்கும் தலை வணங்கி நிற்கும்; தண் அரங்கமே குளிர்ந்த திருவரங்கம்; உரம் பற்றி வரம் பெற்ற; இரணியனை இரணியனை; உகிர் நுதியால் கூர்மையான நகங்களால்; ஒள்ளிய மார்வு அழகிய மார்பில்; உறைக்க ஊன்றி அழுத்தமாக ஊன்றி; சிரம் பற்றி தலையைப் பற்றி; முடி இடிய கிரீடம் பொடியாகும்படி; கண் பிதுங்க கண் பிதுங்க; வாய் அலர வாய் அலர; தெழித்தான் கோயில் ஆர்ப்பரிப்பவன் கோவில்
taṇ araṅkame it is Sri Rangam where; katirc cĕnnĕl the rice crops; tāl̤ cāyttu stretch; varampu uṟṟa up to the boundary of the field; talaivaṇakkum and then bow in reverence; uram pĕṟṟa like how flourishing; malark kamalam lotus plants grow; al̤anta He measured (as Thiruvikraman); ulaku the earth; cevaṭi pol with His holy feet; uyarntu kāṭṭa rising; tĕḻittāṉ koyil its the temple of the Lord; uṟaikka ūṉṟi who laid and squeezed; ŏl̤l̤iya mārvu the beautiful chest; iraṇiyaṉai of Hiranyan; uram paṟṟi who had boons; ukir nutiyāl with His sharp nails; ciram paṟṟi and grasped his head; muṭi iṭiya while the crown shattered; kaṇ pituṅka eyes bulged; vāy alara and mouth screamed

PAT 4.9.9

420 தேவுடையமீனமாய்ஆமையாய்
ஏனமாய் அரியாய்க்குறளாய் *
மூவுருவிலிராமனாய்க் கண்ணனாய்க்
கற்கியாய்முடிப்பான்கோயில் *
சேவலொடுபெடையன்னம்
செங்கமலமலரேறிஊசலாடி *
பூவணைமேல்துதைந்தெழு செம்
பொடியாடிவிளையாடும்புனலரங்கமே.
420 தேவு உடைய மீனமாய் ஆமையாய் * ஏனமாய் அரியாய்க் குறளாய்
மூ உருவில் இராமனாய்க் * கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் **
சேவலொடு பெடை அன்னம் * செங்கமல மலர் ஏறி ஊசல் ஆடி *
பூ அணைமேல் துதைந்து எழு * செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே (9)
420 tevu uṭaiya mīṉamāy āmaiyāy * eṉamāy ariyāyk kuṟal̤āy
mū-uruvil irāmaṉāyk * kaṇṇaṉāyk kaṟkiyāy muṭippāṉ koyil **
cevalŏṭu pĕṭai aṉṉam * cĕṅkamala malar eṟi ūcal āṭi *
pū-aṇaimel tutaintu ĕzhu * cĕmpŏṭi āṭi vil̤aiyāṭum puṉal araṅkame (9)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

420. His forms are a shining fish, a turtle, a boar, a lion, a dwarf, ParasuRāman, BalaRāman, Rāma, Kannan and Kalki, the form that will end the world. His Thiruppadi is Srirangam surrounded with rippling water where a male swan with its mate climbs on a lovely lotus, swings on it and jumps on a flower bed, plunging into it and playing in the beautiful pollen.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சேவலொடு சேவலொடு; பெடை அன்னம் பெண் அன்னம்; செங்கமல மலர் ஏறி தாமரை மலர் மேலேறி; ஊசல் ஆடி லேசாக அசைத்து ஆடி; பூ அணை மேல் மலரின் மீது; துதைந்து எழு நெருங்கிக் கிளர்ந்து எழும்; செம்பொடி ஆடி சிவப்புப் பொடியில் மூழ்கி; விளையாடும் விளையாடுவது; புனல் அரங்கமே நீர்வளமிக்க திருவரங்கம்; தேவு உடைய மீனமாய் தேஜஸ் மிக்க மீனாக; ஆமையாய் கூர்மமாக; ஏனமாய் வராகமாக; அரியாய் நரசிம்மமாய்; குறளாய் வாமனனாக; மூ உருவில் இராமனாய் பரசுராமன் பலராமன் ஸ்ரீராமன் என்று மூன்று விதமான ராமனாக; கண்ணனாய் கண்ணனாய்; கற்கியாய் கல்கியாக அவதரித்து; முடிப்பான் அசுரர்களை அழித்தவன்; கோயில் கோவில்
puṉal araṅkame it is Sri Rangam where in the waters; vil̤aiyāṭum play; pĕṭai aṉṉam female swan; cevalŏṭu and hen; cĕṅkamala malar eṟi that climb onto the lotus flow; ūcal āṭi gently sway and dance; cĕmpŏṭi āṭi and dip into the red pollen; tutaintu ĕḻu that rise; pū aṇai mel on the top of the flower; koyil it is the temple of the Lord who came as; tevu uṭaiya mīṉamāy a radiant fish; āmaiyāy a tortoise; eṉamāy a boar; ariyāy a lion-man; kuṟal̤āy a dwarf; mū uruvil irāmaṉāy as three forms of Rama (Parashurama, Balarama, and Sri Rama); kaṇṇaṉāy as Krishna; kaṟkiyāy as Kalki; muṭippāṉ and destroyed the Asuras

PAT 4.9.10

421 செருவாளும்புள்ளாளன்மண்ணாளன்
செருச்செய்யும்நாந்தகமென்னும்
ஒருவாளன் * மறையாளன்ஓடாத
படையாளன் விழுக்கையாளன் *
இரவாளன்பகலாளன்என்னையாளன்
ஏழுலகப்பெரும்புரவாளன் *
திருவாளன்இனிதாகத் திருக்கண்கள்
வளர்கின்றதிருவரங்கமே. (2)
421 செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் * செருச்செய்யும் நாந்தகம் என்னும் *
ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் * விழுக்கை யாளன் **
இரவு ஆளன் பகலாளன் என்னையாளன் * ஏழு உலகப் பெரும் புரவாளன் *
திருவாளன் இனிதாகத் * திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே (10)
421 cĕru āl̤um pul̤l̤āl̤aṉ maṇṇāl̤aṉ * cĕruccĕyyum nāntakam ĕṉṉum *
ŏru vāl̤aṉ maṟaiyāl̤aṉ oṭāta paṭaiyāl̤aṉ * vizhukkai yāl̤aṉ **
iravu āl̤aṉ pakalāl̤aṉ ĕṉṉaiyāl̤aṉ * ezhu ulakap pĕrum puravāl̤aṉ *
tiruvāl̤aṉ iṉitākat * tirukkaṇkal̤ val̤arkiṉṟa tiruvaraṅkame (10)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

421. The generous lord rides on an eagle, defeats his enemies and rules the world. As bright as the sun, he carries the sword Nāndagam, creates the Vedās and protects the world. With the goddess Lakshmi on his chest he rests sweetly on the ocean in Srirangam, his Thiruppadi.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செரு ஆளும் தானே போரிட வல்லவனும்; புள்ளாளன் கருடபிரானை ஆள்பவனும்; மண்ணாளன் இந்த பூமியை ஆள்பவனும்; செருச் செயும் யுத்தமிடும் திறனையுடைய; நாந்தகம் என்னும் நாந்தகம் என்னும்; ஒருவாளன் வாளை உடையவனும்; மறையாளன் வேத பிரானும்; ஓடாத தோற்று ஓடாத; படையாளன் படையுடைவனும்; விழுக்கையாளன் கொடையாளனும்; இரவாளன் இரவு பகலாகிய; பகலாளன் காலங்களானவனும்; என்னையாளன் என்னை ஆள்பவனும்; ஏழு உலக ஏழுலகையும்; பெரும் புரவாளன் உன்னதமாகக் காப்பவனும்; திருவாளன் திருமகளின் நாயகனுமான பெருமான்; இனிதாக உள்ளத்தில் உகப்போடு; திருக் கண்கள் வளர்கின்ற துயில் அமரும் ஊர்; திருவரங்கமே திருவரங்க நகரமே
tiruvaraṅkame It is Sri Rangam; tiruk kaṇkal̤ val̤arkiṉṟa where resides; iṉitāka with great happiness; tiruvāl̤aṉ the Lord of Sri Mahalakshmi; pĕrum puravāl̤aṉ who protects; eḻu ulaka the seven worlds; pul̤l̤āl̤aṉ He is the Lord of Garuda; cĕru āl̤um and the One who can fight; maṇṇāl̤aṉ the Ruler of the world; cĕruc cĕyum He who possesses the ability to wage war; ŏruvāl̤aṉ He is the One with sword; nāntakam ĕṉṉum called Nandhagam; maṟaiyāl̤aṉ He is the Lord of the vedas; paṭaiyāl̤aṉ He has an army; oṭāta that doesnt flee; viḻukkaiyāl̤aṉ He is benevolent; pakalāl̤aṉ He is the time; iravāl̤aṉ like day and night; ĕṉṉaiyāl̤aṉ and He rules me

PAT 4.9.11

422 கைந்நாகத்திடர்கடிந்த கனலாழிப்
படையுடையான்கருதும்கோயில் *
தென்னாடும்வடநாடும்தொழநின்ற
திருவரங்கம்திருப்பதியின்மேல் *
மெய்ந்நாவன்மெய்யடியான் விட்டுசித்தன்
விரித்ததமிழுரைக்கவல்லார் *
எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ்
இணைபிரியாதிருப்பர்தாமே. (2)
422 ## கைந்நாகத்து இடர் கடிந்த * கனல் ஆழிப் படை உடையான் கருதும் கோயில் *
தென்நாடும் வடநாடும் தொழநின்ற * திருவரங்கத் திருப்பதியின் மேல் **
மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன் * விரித்த தமிழ் உரைக்க வல்லார் *
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் * இணை பிரியாது இருப்பர் தாமே (11)
422 ## kainnākattu iṭar kaṭinta * kaṉal āzhip paṭai uṭaiyāṉ karutum koyil *
tĕṉnāṭum vaṭanāṭum tŏzhaniṉṟa * tiruvaraṅkat tiruppatiyiṉ mel **
mĕynnāvaṉ mĕy aṭiyāṉ viṭṭucittaṉ * viritta tamizh uraikka vallār *
ĕññāṉṟum ĕmpĕrumāṉ iṇaiyaṭikkīzh * iṇai piriyātu iruppar tāme (11)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

422. Vishnuchithan, the true devotee, composed ten Tamil pāsurams on divine Srirangam that is worshiped by southern and northern lands where our god stays who carries a fire-like discus and removed the suffering of Gajendra. If devotees recite these ten Tamil pāsurams they will abide under his two feet always.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கை நாகத்து துதிக்கையுடைய யானையின்; இடர் கடிந்த துன்பத்தை நீக்கிய; கனல் ஆழி கனல் போன்ற சக்கரத்தை; படை உடையான் ஆயுதமாக உடையவன்; கருதும் கோயில் விரும்பும் கோவில்; தென்னாடும் வடநாடும் தெற்கு வடக்கு மக்கள்; தொழ நின்ற தொழும்; திருவரங்கம் திருவரங்கம் என்னும்; திருப்பதியின் மேல் திருப்பதியைக் குறித்து; மெய் மெய்யே பேசும்; நாவன் நாவுடையவராயும்; மெய் அடியான் உண்மையான பக்தருமான; விட்டுசித்தன் பெரியாழ்வார்; விரித்த இயற்றிய; தமிழ் தமிழ் பாசுரங்களை; உரைக்க வல்லார் ஓத வல்லவர்கள்; எஞ்ஞான்றும் எக்காலத்துக்கும்; எம்பெருமான் பெருமாளின்; இணையடிக் கீழ் பாதங்களின் கீழ்; இணை பிரியாது இணை பிரியாது; இருப்பர் தாமே இருந்திடுவார்கள்!
uraikka vallār those who recite; tamiḻ these tamil hymns; viritta composed by; viṭṭucittaṉ Periazhwar; mĕy aṭiyāṉ the true devotee; nāvaṉ and the one who speaks only; mĕy truth; tiruppatiyiṉ mel about the Tirupathi called; tiruvaraṅkam Sri Rangam; tĕṉṉāṭum vaṭanāṭum where the people of north and south; tŏḻa niṉṟa worship; karutum koyil which is the favorite temple of the Lord; iṭar kaṭinta who removed the suffering of; kai nākattu the elephant with a trunk; kaṉal āḻi who has the blazing discus; paṭai uṭaiyāṉ as His weapon; iruppar tāme will remain; iṇaiyaṭik kīḻ under the holy feet; ĕmpĕrumāṉ of the Lord; ĕññāṉṟum at all times; iṇai piriyātu without separation