PAT 4.9.3

அடியவரை ஆட்கொள்வான் ஊர் அணியரங்கம்

414 கருளுடையபொழில்மருதும்
கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும் *
உருளுடையசகடரையும்மல்லரையும்
உடையவிட்டுஓசைகேட்டான் *
இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு
ஏற்றிவைத்துஏணிவாங்கி *
அருள்கொடுத்திட்டுஅடியவரை
ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே.
414 karul̤ uṭaiya pŏzhil marutum * katak kal̤iṟum pilampaṉaiyum kaṭiya māvum *
urul̤ uṭaiya cakaṭaraiyum mallaraiyum * uṭaiya viṭṭu ocai keṭṭāṉ **
irul̤ akaṟṟum ĕṟi katiroṉ * maṇṭalattūṭu eṟṟi vaittu eṇi vāṅki *
arul̤ kŏṭuttiṭṭu aṭiyavarai * āṭkŏl̤vāṉ amarum ūr aṇi araṅkame (3)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

414. Our lord destroyed the Asurans when they came as marudu trees in the dark groves, the rutting elephant Kuvalayāpeedam, the Asuran Pilamban, the Rakshasā Kesi who came as a wild horse, Sakatāsuran who came as a cart, and the wrestlers He resides in the beautiful Srirangam where he makes the bright sun rise in the sky and removes the darkness of the earth, giving his grace to his devotees, as they worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கருள் உடைய சீற்றத்தையுடைய; பொழில் அடர்ந்த சோலைகளாக நிற்கும்; மருதும் மருதமரங்களையும்; கத கோபமோடு வந்த; களிறும் யானை குவலயாபீடமும்; பிலம்பனையும் மற்றும் பிலம்பனையும்; கடிய குரூரமான; மாவும் குதிரை வடிவமாக வந்த கேசியையும்; உருள் உடைய சக்கரமாக வந்த; சகடரையும் சகடாசுரரையும்; மல்லரையும் மல்லரையும்; உடைய விட்டு சின்னாபின்னமாக்கி; ஓசை கேட்டான் பாராட்டுமொழி கேட்டான்; இருள் அகற்றும் இருளை அகற்றி; எறி ஒளி எறியும்; கதிரோன் சூரிய; மண்டலத் தூடு மண்டலத்தின் ஊடே; ஏற்றி வைத்து தூக்கி வைத்து; ஏணி வாங்கி ஏணி தந்து ஏற்றி; அருள் கொடுத்திட்டு அருள் கொடுத்திட்டு; அடியவரை அடியவர்களை ஆட்கொள்ளும்; அமரும் ஊர் பெருமான் வீற்றிருக்கும் ஊர்; அணி அரங்கமே அழகிய அரங்க நகரே!
uṭaiya viṭṭu the Lord destroyed; marutum the asuras who came as maruda trees; pŏḻil in dense groves; ocai keṭṭāṉ and received praises; karul̤ uṭaiya that were ferocious; kal̤iṟum and destroyed the elephant called 'Kuvalayapeetam'; kata that came angrily; pilampaṉaiyum and Pilambam; kaṭiya and the cruel; māvum horse shaped Kesi; cakaṭaraiyum Sakatasuran who; urul̤ uṭaiya came as a cart; mallaraiyum and also the wrestlers; aṇi araṅkame beautiful Srirangam; amarum ūr is the residing place of the Lord; irul̤ akaṟṟum who dispels darkness; eṇi vāṅki who gives a ladder; eṟṟi vaittu and lifts; katiroṉ the Sun; ĕṟi and the fire that lights up from it; maṇṭalat tūṭu through the realm of the skies; aṭiyavarai who takes care of His devotees; arul̤ kŏṭuttiṭṭu and blesses with His grace