PAT 4.9.6

யாவரும் வந்து தொழுமிடம் திருவரங்கம்

417 மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து
அவர்களையேமன்னராக்கி *
உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட
உயிராளன்உறையும்கோயில் *
பத்தர்களும்பகவர்களும் பழமொழிவாய்
முனிவர்களும்பரந்தநாடும் *
சித்தர்களும்தொழுதிறைஞ்சத்
திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே.
417 maittuṉaṉmār kātaliyai * mayir muṭippittu avarkal̤aiye maṉṉar ākki *
uttaraitaṉ ciṟuvaṉaiyum uyyakkŏṇṭa * uyirāl̤aṉ uṟaiyum koyil **
pattarkal̤um pakavarkal̤um * pazhamŏzhivāy muṉivarkal̤um paranta nāṭum *
cittarkal̤um tŏzhutu iṟaiñcat * ticai-vil̤akkāy niṟkiṉṟa tiruvaraṅkame (6)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-1

Divya Desam

Simple Translation

417. He crowned his brothers-in-law(Pāndavās) as Kings, made Draupathi tie up her loosened hair and gave life to Uthara's son and He resides in Srirangam that brightens all the directions and serves as the guiding light where devotees, sages, the wise rishis, the people of the world and the siddhas worship him with love.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பத்தர்களும் பக்தர்களும்; பகவர்களும் துறவிகளும்; பழமொழி பழமையான வேத; வாய் மொழிகளை ஓதும்; முனிவர்களும் முனிவர்களும்; பரந்த நாடும் பரந்த நாட்டிலுள்ளவர்களும்; சித்தர்களும் சித்தர்களும்; தொழுது இறைஞ்ச தொழுது வணங்க; திசை திசை அனைத்திலும்; விளக்காய் வழிகாட்டும் விளக்காய்; நிற்கின்ற நிற்கின்ற; திருவரங்கமே திருவரங்கமானது; மைத்துனன்மார் மைத்துனர்களான பாண்டவர்களின்; காதலியை அன்பிற்குரிய திரௌபதியின்; மயிர் கூந்தலை; முடிப்பித்து முடித்திடச்செய்து; அவர்களையே பாண்டவர்களையே; மன்னராக்கி மன்னராக்கி; உத்தரை தன் உத்தரையின்; சிறுவனையும் மகனையும்; உய்யக் கொண்ட உயிர்ப்பித்த; உயிராளன் உயிர்களின் நாதன்; உறையும் கோயில் வாசம் செய்யும் கோவில்
tiruvaraṅkame Sri Rangam is; niṟkiṉṟa standing; vil̤akkāy as a guiding light; ticai in all directions for; pattarkal̤um the devotees; pakavarkal̤um the ascetics; muṉivarkal̤um and the munis; vāy who recite; paḻamŏḻi the vedas; paranta nāṭum for the people in wide spread land; cittarkal̤um and the siddhas; tŏḻutu iṟaiñca to worship and bow; uyirāl̤aṉ the Lord of life; uṟaiyum koyil resides in Sri Rangam; kātaliyai for Draupathi, the love of His; maittuṉaṉmār brothers-in-laws (Pāndavās); muṭippittu made her tie up her; mayir loosened hair; maṉṉarākki made; avarkal̤aiye Pandavas, the kings; uyyak kŏṇṭa gave life to; uttarai taṉ Uthara's; ciṟuvaṉaiyum son