PAT 4.9.11

எம்பெருமான் இணையடிக்கீழ் இருப்பர்

422 கைந்நாகத்திடர்கடிந்த கனலாழிப்
படையுடையான்கருதும்கோயில் *
தென்னாடும்வடநாடும்தொழநின்ற
திருவரங்கம்திருப்பதியின்மேல் *
மெய்ந்நாவன்மெய்யடியான் விட்டுசித்தன்
விரித்ததமிழுரைக்கவல்லார் *
எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ்
இணைபிரியாதிருப்பர்தாமே. (2)
422 ## kainnākattu iṭar kaṭinta * kaṉal āzhip paṭai uṭaiyāṉ karutum koyil *
tĕṉnāṭum vaṭanāṭum tŏzhaniṉṟa * tiruvaraṅkat tiruppatiyiṉ mel **
mĕynnāvaṉ mĕy aṭiyāṉ viṭṭucittaṉ * viritta tamizh uraikka vallār *
ĕññāṉṟum ĕmpĕrumāṉ iṇaiyaṭikkīzh * iṇai piriyātu iruppar tāme (11)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

422. Vishnuchithan, the true devotee, composed ten Tamil pāsurams on divine Srirangam that is worshiped by southern and northern lands where our god stays who carries a fire-like discus and removed the suffering of Gajendra. If devotees recite these ten Tamil pāsurams they will abide under his two feet always.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கை நாகத்து துதிக்கையுடைய யானையின்; இடர் கடிந்த துன்பத்தை நீக்கிய; கனல் ஆழி கனல் போன்ற சக்கரத்தை; படை உடையான் ஆயுதமாக உடையவன்; கருதும் கோயில் விரும்பும் கோவில்; தென்னாடும் வடநாடும் தெற்கு வடக்கு மக்கள்; தொழ நின்ற தொழும்; திருவரங்கம் திருவரங்கம் என்னும்; திருப்பதியின் மேல் திருப்பதியைக் குறித்து; மெய் மெய்யே பேசும்; நாவன் நாவுடையவராயும்; மெய் அடியான் உண்மையான பக்தருமான; விட்டுசித்தன் பெரியாழ்வார்; விரித்த இயற்றிய; தமிழ் தமிழ் பாசுரங்களை; உரைக்க வல்லார் ஓத வல்லவர்கள்; எஞ்ஞான்றும் எக்காலத்துக்கும்; எம்பெருமான் பெருமாளின்; இணையடிக் கீழ் பாதங்களின் கீழ்; இணை பிரியாது இணை பிரியாது; இருப்பர் தாமே இருந்திடுவார்கள்!
uraikka vallār those who recite; tamiḻ these tamil hymns; viritta composed by; viṭṭucittaṉ Periazhwar; mĕy aṭiyāṉ the true devotee; nāvaṉ and the one who speaks only; mĕy truth; tiruppatiyiṉ mel about the Tirupathi called; tiruvaraṅkam Sri Rangam; tĕṉṉāṭum vaṭanāṭum where the people of north and south; tŏḻa niṉṟa worship; karutum koyil which is the favorite temple of the Lord; iṭar kaṭinta who removed the suffering of; kai nākattu the elephant with a trunk; kaṉal āḻi who has the blazing discus; paṭai uṭaiyāṉ as His weapon; iruppar tāme will remain; iṇaiyaṭik kīḻ under the holy feet; ĕmpĕrumāṉ of the Lord; ĕññāṉṟum at all times; iṇai piriyātu without separation