PAT 4.9.5

பறவைகள் கருடனின் புகழ் கூறும் இடம் திருவரங்கம்

416 ஆமையாய்க்கங்கையாய் ஆழ்கடலா
யவனியாய்அருவரைகளாய் *
நான்முகனாய்நான்மறையாய் வேள்வியாய்த்
தக்கணையாய்த்தானுமானான் *
சேமமுடைநாரதனார் சென்றுசென்று
துதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில் *
பூமருவிப்புள்ளினங்கள் புள்ளரையன்
புகழ்குழறும்புனலரங்கமே.
416 āmaiyāyk kaṅkaiyāy * āzh kaṭalāy avaṉiyāy aru varaikal̤āy *
nāṉmukaṉāy nāṉmaṟaiyāy * vel̤viyāyt takkaṇaiyāyt tāṉum āṉāṉ **
cemam uṭai nārataṉār * cĕṉṟu cĕṉṟu tutittu iṟaiñcak kiṭantāṉ koyil *
pū maruvip pul̤ iṉaṅkal̤ * pul̤ araiyaṉ pukazh kuzhaṟum puṉal araṅkame (5)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

416. The matchless lord who took the form of a turtle, who is the Ganges, the deep ocean, earth, large mountains, Nānmuhan, the four Vedās and both sacrifice and offering stays in Srirangam surrounded by rippling water where all the birds embrace the flowers and praise His name, who rides on the bird Garudā. Sage Narada, giving goodness to all, often goes there and worships him with love.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புள் இனங்கள் பறவை இனங்கள்; பூமருவி பூக்களை அணைத்துக் கொண்டு நின்று; புள் அரையன் தலைமைப் பறவை கருடனின்; புகழ் குழறும் கீர்த்தியைப் பேசும்; புனல் நீர் வளப்பமிக்க; அரங்கமே அரங்க நகரே; ஆமையாய் கங்கையாய் ஆமையாயும் கங்கையாயும்; ஆழ் கடலாய் ஆழமான கடலாயும்; அவனியாய் பூமியாயும்; அரு வரைகளாய் மலைகளாயும்; நான்முகனாய் நான்முகனாயும்; நான்மறையாய் நான்கு வேதங்களாயும்; வேள்வியாய் யாகங்களாயும்; தக்கணையாய் தக்ஷணையாயும்; தானும் ஆனான் தக்ஷணை கொடுக்கும் பிரானான; சேமம் உடை ரக்ஷகனாகவும்; நாரதனார் நாரதர்; சென்று சென்று மீண்டும் மீண்டும் சென்று; துதித்து இறைஞ்ச துதித்து இறைஞ்ச; கிடந்தான் கோயில் கண் வளர்பவன் கோவில்
araṅkame its the city of Sri Rangam that is; puṉal water-rich; pul̤ iṉaṅkal̤ and where species of birds; pūmaruvi stand and embrace the flowers; pukaḻ kuḻaṟum and talk about the glories of; pul̤ araiyaṉ the leader bird, Garuda; kiṭantāṉ koyil its the temple of the Lord who; āmaiyāy kaṅkaiyāy took the form of tortoise and is the Ganges; āḻ kaṭalāy is the deep ocean; avaṉiyāy is the Earth; aru varaikal̤āy is the mountain; nāṉmukaṉāy is the four-faced one (Brahma); nāṉmaṟaiyāy is the four Vedas; vel̤viyāy is the sarcifice; takkaṇaiyāy is the offfering; tāṉum āṉāṉ and the One who gives the offering; cemam uṭai is the protector; tutittu iṟaiñca is the One who is praised; cĕṉṟu cĕṉṟu again and again; nārataṉār by Narada